கார்மேகம்
ஆதவனின் வெப்பத்தில்
அலை மோதும் மேகங்கள்
பார்ப்பதற்கு பஞ்சுக் கூட்டம்
கடல் மேல் கன்னம்வைத்து
கார்மேகம்நீர் கொண்டு
உருளுகின்ற வேளையிலே
கன்னம் வைத்த நீர் எல்லாம் மழையாக
கனிவுடனே வழங்கிடுமே கார்மேகம்
காய்ந்து போன பூமி எல்லாம்
கணப் பொழுதில் குளிர்ந்திடுமே
வாடி நிற்கும் மரங்கள் எல்லாம்
வாட்டமின்றி செழித்து
குளிர்முகம்தான் கொண்டிடுமே
வண்ண வண்ண பூக்கள் எல்லாம்
அழகழகாய் பூத்து நிற்க
வாடி நின்ற பயிர்கள் எல்லாம்
புத்துயிர்தான் பெற்றனவாய்
தளிர் பெற்று தழைத்து
தலை நிமிர்ந்து நின்றிடுமே
வெப்பத்தின் புழுக்கத்திலே
வியர்த்து வெதும்பி நின்ற மக்கள் எல்லாம்
மழைகண்டு மனம் மகிழ்ந்து
ஆடியும் பாடியும் மழை நீரில் நனைந்து
கும்மாளம் போட்டு குதூகலமாய்
மழையை வரவேற்றுக் கொண்டாடினரே
இத்தனைக்கும் காரணம்
கார்மேகம் கொண்டிருக்கும்
மழையென்னும் மன்மதனே
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro