ஒரு மலரின் உரையாடல்
ம
லர்ந்து நின்ற மணம் வீசிய
தோட்டத்து மலர் ஒன்று
மெளனமாய் வாடிப் விளையாட்டு போயிருந்தது என்னவென்று காரணம் கேட்டேன்.
பதைப்புடன் பதில் சொன்னது மலர்…
சூல் கொண்ட தன்னிடம் மகரந்தம்
கொண்டு வந்து சேர்க்க
வண்ணத்துப்பூச்சி வரவில்லையாம்.
மலர்ந்து மணம் வீசிய மலரை
வட்டமிட வண்ணத்துப்பூச்சி வராமல்போனது மலரின் குற்றமா? - இல்லை வண்ணத்துப்பூச்சிகளை வராமல் செய்த வலியவரின் குற்றமா?
எனக்குள் எழுந்த வினாவிற்கான விடையையும் விளக்கிக் கூறியது
ஓரறிவு கொண்ட அந்தப் பூவினம்.
சுயநலம் கொண்ட மனித இனம்
செயற்கை பூசி இயற்கைக்கு இடையூறு செய்த கொடும்செயலே என்ற
விளக்கம் கேட்டு விக்கித்துப் போனேன்.
மெளனம் கலைத்த மலரின்
மனக்குமுறல் கண்டு முடிவுக்கு வந்தேன்
இப்பூமி நமக்கு மட்டுமல்ல புவி வாழும் ஜீவராசிகள் அனைத்துக்கும் சொந்தமென்று.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro