எறும்பு
கதவை அடைத்து வைத்தும்
வீட்டில் நுழைகிறது
எறும்பு
கொட்டியது பூந்தி
வரவேற்பு தாம்பூலமென நினைத்து
உட்புகுந்தது எறும்பு
கூட்டித் தள்ளியும்
பெருகிக் கிடக்கிறது
எறும்பு
அளவு சிறிது
அலப்பரைகளோ பெரிது
எறும்பு
சண்டையோ சச்சரவோ
தனித்தே இருப்பதில்லை
எறும்பு
உடற்பயிற்சி செய்யா
உண்மையான பலசாலி
எறும்பு
பல ரகம் பல இனம்
உழைப்பே இதற்கு அடையாளம்
எறும்பு
எத்தனை மிதி எத்தனை அழிவு
இன்னும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறது
எறும்பு
மருந்து வைக்கும் மனிதனுக்கு
மறக்காமல் முத்தம் வைக்கும்
எறும்பு
யாராருக்கோ சிலை
எனக்கொன்று இல்லையே
கோபத்தில் எறும்பு
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro