இதயச் சிலிர்ப்பு
இளவேனிற் பருவத்தை
இனிதாய் வரவேற்க
செங்கொன்றை மரங்களின்
செம்பூ விரிப்பு ...!
தெம்மாங்கு பாடி
தென்றலுந் தாலாட்ட
சிந்தும் இதழ்களில்
செந்தேன் இனிப்பு ....!
மரகத மரமேனியை
முழுமையாய் மூடிய
பவள மலர்களில்
அழகின் சிரிப்பு ....!
சாலை யோரங்களில்
சாமரம் வீசிடும்
இயற்கை வனப்பினில்
இதயச் சிலிர்ப்பு .....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro