பேராசைக் காதல்💕💕
நான் பலமுறை உன்னை மனதளவில் காயப்படுத்தியும் கோபம்
கொள்ளவில்லை நீ
காரணம் கேட்டேன்
குழந்தைகளின் மீது கோபம்
வருமா என்றாய்!!!!!!!
நான் உன் அருகினில் இல்லாதபோது அழாதே என்றாய்
காரணம் கேட்டேன்
உன் கண்ணீரைத் துடைக்க என் கரங்கள் இருக்காதே என்றாய்
நான் சிரித்தேன்
அப்படி அழுதால்
உன் கண்ணீரைத் துடைக்காத என் கரங்களைக் காயப்படுத்திக்
கொள்வேன் என்றாயடா!
தாயிடம் சண்டையிட்டு உன்னிடம் வந்து முறையிட்டேன்
பேச்சை மாற்றினாய்
நான் அறிவேனடா !
என் பெற்றோர் மீது நீ கொண்ட காதல்
வார்த்தைக்குக் கூட அவர்களைத் திட்ட மனமில்லாதது என்று!!!!!!
நான் உன்னை முதல் முறை நேரில் காணும் போது அழாதே என்றாய்
ஏன் என்றேன்
என் கண்ணீரைத் துடைக்க கரங்கள் வேண்டாமா என்றாய்!!!!
ஆண்கள் அழக்கூடாது என்றேன்
தனக்கான தேவதைகளின் முன் அழலாம் என்றாய்!
நீ அழைக்கும் செல்லப் பெயர்களால் என் பெயரையே மறக்கச் செய்தாய்
ஏனடா என்றேன்
எனக்காக புவியில் பிறந்த பொன்மகளே தினந்தினம் உனக்கு பெயர் சூட்டு விழா தான் என்றாயே!!!!
சமைக்கத் தெரியுமா என்றாய்
இல்லை என்றேன்
அப்பாடா என்றாய்
ஏன் என்றேன்
என் இளவரசியே உனக்காக பிறந்த இந்த இளவரசன் சமைப்பான் உனக்காக என்றாய்..
உலகம் முழுவதும் சுற்ற ஆசை என்றாய்
வாழ்த்துகள் என்றேன்
உன் கரங்கள் கோர்த்து என்றாய்!
பிறைநிலவை போல் உன்மேல் நான்
கொண்ட அன்பு இன்று முழுநிலவாகிறதே!!
புயல் ஏதும் வீசாமலே உன்பால் சாய்கிறேன் நான் உன் முகம் பாராமலே...
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ பேராசைக் காதல்💕💕💕 சும்மா சில வரிகள்😜😜😜😜
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro