நான் காதலித்தேன்
நான் காதலித்தேன்
கலைஞர்களை அல்ல
அவர்களை காண உதவும் தொலைக்காட்சியை.....
நான் காதலித்தேன்
கைபேசியை அல்ல
அதற்கு உதவும்
மின் அலைகளை....
நான் காதலித்தேன்
காதல் கவிதைகளை அல்ல
என் பாடத்தின்
சமன்பாடுகளை.....
நான் காதலித்தேன்
வாசலில் போடும் கோலங்களை அல்ல
என் புத்தகத்தில் உள்ள
மின் சுற்றுகளை....
நான் காதலித்தேன்
உலக நிறைபாடுகளை அல்ல
உலக குறைபாடுகளை...
நான் காதலித்தேன்
பிறர் கால் தடங்களில் நடக்க அல்ல
என் கால் தடங்களில்
பிறர் நடக்க.....
நான் காதலித்தேன்
என் காதலனை அல்ல
நான் பயிலும் பொறியியலை.....
கற்பனைகளின் பைத்தியம் நான்😝😝....
இது தான் என் கற்பனையில் ஒரு பகுதி...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro