கண்ணாமூச்சி ஏனடா
முதல் அழைப்பு
இனம் புரியாத பயம்
ஒரு வித பதட்டம்
குதித்தி விடுமோ என்ற நிலையில் இதயம்
அனைத்தும் மாயமாகி போனது
அவனின் ஒற்றை ஹலோவில்...
நொடிகள் நிமிடங்களாக
நிமிடங்கள் நேரங்களாக
அவனை பேச விட்டு
வேடிக்கை பார்த்த மனது
நீ பேசு என்கையில் மட்டும்
மறுடியும் தண்டவாளத்தில் ஓடும்
தொடர்வண்டி போல் ஆகிவிடுகிறது...
நான் பேசுவதை கலாய்த்து
என்னைப் போல்
அவன் பேசுகையில்
என் பிஞ்சு இதயம்
பஞ்சாகி போகிறது
அவனின் இந்த செயலால்...
செல்ல சிணுங்கல்கள்
திகட்டும் தீண்டல்கள்
வார்த்தைகளால் மயிலிறகாய்
வருடும் மாயக்காரனோ!
நட்பா
காதலா
அதற்கும் மேலா
நான் அறியேன்...
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா என்ற பாடல் வேறு பிண்ணனியில் ஒலிக்க
நான் கட் பண்ணவா என்ற
அவனின் குரலில்
மனம் நொறுங்கி தான் போகிறது...
புயலாய் உள்நுழைந்து
தென்றலாய் மனதை வருடி
மின்னலாய் ஒரு உணர்வைத் தோற்றுவித்து
மாயமாய் மறைந்து போகிறான்
என் அம்மா அடியேய் எழுந்திடு என்ற நொடிதனில்...
ச்ச்ச கனவா என நானும்
வாடிய மலராய் சோர்ந்து போகிறேன்
காதல் கள்வனை ஒவ்வொரு நாளும்
கனவில் மட்டுமே சந்திக்கும் தருணத்தில்...
கண்ணாமூச்சி ஏனடா
எனதன்பு கள்வா!!
கவிதையா, உரைநடையா, கிறுக்கலா என்னனு தெரியல...
மனதில் தோன்றிய வரிகள்❤
ப்ரியமுடன்
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro