Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் இல்லை😍😘😘

இந்த வாரத்தில் மறக்க முடியாத நாட்கள்..
எதிர் பார்க்காத நாட்கள்..

தீபாவளிக்கு பிறகு வரேன்னு சொன்ன நீ இன்னும் தீபாவளி வரல போலயே என்று கோப பட்டு பல நாள் திட்டியது உண்டு..

என்ன மா தீபாவளி போச்சி.. உன் தோழியையும் காணோம், பலகாரத்தையும் காணோம்னு என என் அப்பா கிண்டலடித்தது பல..

ஹும்ம்.. உங்களுக்கு வேலை இல்லை.. அவ பிஸி.. கண்டிப்பா வருவா பாருங்க.. அப்படி இப்படி என சமாளித்து கொண்டிருந்தேன்..

அவளிடம் போய் சண்டை பிடிப்பேன்.
எனக்கே அளுத்து விட்டது..

எப்பொழுது வருவேனு சொன்னாலும் கண்டு கொள்ளாமல் "இந்த விஷயத்தில் மட்டும் நம்பிக்கை இல்லை" என கூறி விடுவேன்..

திடீரென ஒரு நாள் அட்ரெஸ் கேட்கவும்.. விளையாடுறாள் என விட்டு விட்டேன்..

ஊருக்கு வந்தாலும் வருவேன்.. கன்ஃபார்ம் இல்லை என கூறிய போது நான் நினைத்து ஒன்று... "வரேன்னு சொன்னாலே இவ வர மாட்டா.. இதுல கன்ஃபார்மே இல்லையாம்.. ஹு ஹும்ம்"..

பசங்களுக்கு ட்யூஷன் எடுத்து கொண்டிருக்கும் நேரம் திடீரென அழைத்து.."லொகேஷன் அனுப்பு" என கூறவும்.. சொல்ல முடியாத அதிர்ச்சி..

இன்பத்தில் ஒரு படப்படப்பு... அவளிடம் வழி சொல்லி விட்டு தொழுது கொண்டிருந்த நேரம் வந்தவள்.. வீட்டில் உள்ளவர்களிடம் பேசிகொண்டிருந்தாள்..

உள்ளே போக ஏனோ சிறிது கால் நடுங்கியது.. வார்த்தைகள் வரவில்லை.. கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்..

என்னை பார்த்து அவளும் கண்களை அலைபாய விட்டாள்.. அவள் தான்.. arunlovely 😍😍😘😘

சிறிது நேரத்தில் என் கண் முன்னாள் ஃபோனை காண்பித்தாள்..

வாயில் கையை வைத்து கண்களை விரித்து பார்த்தேன்..

வீடியோ காலில் என ரசக்குலா... salmasasikumar "சர்ப்ரைஸ் எப்படி இருக்கு.. உன் ஆளு எப்படி இருக்கானு கேட்டா??"

"ஹாஹா..
 ஹேப்பி என கூறி சிறிது நேரம் நாங்கள் முன்று பேரும் வீடியோ காலில் பேசிக்கொன்டிருந்தோம்..

என் ரசக்குலா... அவளிடம் பேசுனதும் சிறிது நார்மலாகிவிட்டேன்.. அவ கூட பேசுனா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அழகா அதுக்கேத்த மாதிரி ஆறுதல் சொல்லுவா..
மனசு பாரமா இருக்கும் போது அவ கிட்ட பேசுனா போதும்.. அழகா சிரிச்சி மனச இலேசாக்கிடுவா..

என்னோட பெஸ்ட்டீ ரசக்குலா.. "லவ் யூ பேபி"..

ஒரு முக்கிய விஷயம்... என் ரசக்குலாக்கு ஸ்டார்டிங் ல என்னை பிடிக்காதாம்.. ஹாஹா😂😂😂.. அந்த ரீசனும் நல்லா இருந்துச்சு.. இப்போ அந்த மேடம்க்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்..😍😍😍

அருன் வந்ததும்  மறந்து.. அடுத்த நாள் தான் கேட்டேன்.. நம்ம ######😍😍😘😘க்கு தெரியுமானு.."ஈஈஈஈஈஈஈ.. சொல்லலேனு" சொன்னா... அதோட நான் எல்லோருக்கும் சொன்னேன்..

என்னுடைய ######(🐟🐋🐳🐠) நட்புகளே..
(புரியுறவங்களுக்கு புரியும்🙊)
உங்கள் இஷ்டப்படி எவ்வளவு வேண்டுமானாலும் அவளை திட்டிக்கொள்ளுங்கள்😉😉
நான் அதை பார்க்க ஆவலாக உள்ளேன்..

பிறகு என்ன... இரண்டு நாட்கள் எப்படி சென்றதென தெரியவில்லை.. ரொம்ப வேகமாக சந்தோஷமாக சென்றது..

நிறைய பேசியது.. பீச்க்கு சென்றது.. என்னுடைய நினைவுகளை அவளுடன் பார்த்தது.. பகிர்ந்தது.. வெளியே பேசிக்கொண்டே நடந்தது.. அவளுக்கு கார்ட் விளையாட சொல்லி குடுத்தது..
மொக்கைய சமைச்சி போட்டது😝😝.. பாவம் அவ.. இப்படியே அந்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகளாக மாறியது..

முடிவில் கண்கள் கலங்கியது.. அடக்கி கொண்டேன்...

நண்பர்கள் கூறிய ஒரே ஆறுதல்..
"இத்தனை நாளா ஃபோன்ல தானே பேசுனீங்க..
அவ கிளம்பிட்டானு கஷ்டப்படுறதை விட.. அவளை பார்த்து சந்தோஷமா இருந்ததை நினைச்சி பாரு".. முடிந்த வரை மாற்றி கொண்டேன்..

என் செல்ல தங்கை கூறியது:
"அக்கா.. உங்களை நினைச்சா ரொம்ப ஹேப்பியா இருக்கு... எல்லோரும் ஆன்லைன் ரிலேஷன் ரொம்ப நாள் நீடிக்காதுனு சொல்றாங்க.. அதை பொய்னு ப்ரூவ் பன்னீட்டீங்கனு சொன்னா"..
(ரொம்ப ஹேப்பி டா குட்டிமா Sneha_RV.. லவ் யூ டா😍😍😘)

நீ அவ கூட எப்படிலாம் பேசுனா.. என்னலாம் பன்னானு ஒவ்வொன்னையும் கேட்டு அதுக்கு கமேண்ட்ஸ் குடுத்து சந்தோஷம் பட்டா என் தங்கச்சி...

என்னை விட அவ வந்ததுல அதிக சந்தோஷமா இருந்தது..salmasasikumar Sneha_RV
(அப்ப உனக்கு சந்தோஷமா இல்லையானு கேட்காதே.. நான் ரொம்ப ஹேப்பி.. உண்மைய சொல்லனும்னா இன்னும் அதுல இருந்து வெளிவரல)

அப்புறம் தனு பேபியின் im_dhanuu அழுகை... சீக்கிரம் நாம்ம மீட் பன்னுவோம் பேபி மா.. luv u bby

தங்கோ... sandhiya_ishu நான் கண்டிப்பா உன்னை பார்க்க வருவேனு நம்புறேன்.. நீ எதுக்கும் ஃபீல் பன்ன கூடாது.. உனக்கு நான் இருக்கேன்.. உன் லைஃப் எப்பையும் ஹேப்பியா இருக்கும்.. நான் அல்லாஹ் கிட்ட துஆ செய்வேன்... இன் ஷா அல்லாஹ் ஆமீன்..
கண்டிப்பா நீ ஹேப்பியா இருப்பா டா..
 லவ் யூ தங்கோ😍😍😘😘

அருண் ஒருத்தி வந்ததுல சந்தோஷம் பட்டு விசாரிச்ச என் நட்புகள்.. அனைவருக்கும் நன்றி சொல்ல மாட்டேன்.. லவ் யூ நட்பூஸ்😍😍😘

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro