படப்படப்பு
மணக்கோலத்தில் அத்தனை பேர் மத்தியில் இருந்தும் வராத வெட்கம் தன்னவன் அருகில் வந்து அமர்ந்ததும் பார்க்காதே பார்க்காதே என துடிக்கும் மனதை அடக்கிவிட்டு ஓரக்கண்ணால் பார்த்து அவனிடம் மாட்டிக்கொள்ளும் போது வருமே ஒரு படப்படப்பு...
தோழிமார்கள் கூறும் கூற்றுக்கு எல்லாம் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பதிலளித்து விட்டு தன்னவனை முதல் முதலாக காண செல்கையில்
அவன் பேசமாட்டானா?? என நானும்
நான் பேசமாட்டேனா?? என அவனும்
நீண்ட நேரமாய் துடிக்கும் துடிப்பை அவனே அடக்கி.. வார்த்தையாய் கோர்த்து அவன் பேச ஆரம்பிக்கும் போது வருமே ஒரு படப்படப்பு..
காலையில் தான் முதலில் கண்விழித்து தன்னவன் தூங்கும் அழகை ரசித்து கொண்டிருக்கையில்.. அவன் ஒற்றை கண் திறந்து புருவத்தை தூக்கியவாரு மாட்டிக்கிட்டியா? என கேட்காமல் கேட்க்கும் கேள்விக்கு வருமே ஒரு படப்படப்பு..
இதெல்லாம் நடக்கும் என நினைக்கும் போது வருமே ஒரு படப்படப்பு..
ப்ப்ப்ப்பா..
__________
Thaeriyaama dlt aahiruchu
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro