உனக்காக காத்திருப்பேன்
நீ சுவாசிக்கும் மூச்சாக
நான் காற்றோடு கலந்திருப்பேன்
காலங்கள் கரைந்தாலும்
உன் நினைவோடு காத்திருப்பேன்
அன் நினைவென்னும் கால்தடத்தை
நான் கரையாமல் காத்திடுவேன்
கண்மூடும் வேளையிலும் கனவாக நீ வந்தாய்
அக் கனவாய் நீ கரைந்தாலும்
உனை என் கண்ணுக்குள் பூட்டிடுவேன்
இமைகளை திறந்து நீ வந்தால்
உனை என் இதயக் கூட்டில் அடைத்திடுவேன்
இதயத்தை பிளந்து நீ வந்தால்
அடி என் இறுதி மூச்சு உனக்காக ........................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro