7
ஆதிராவின் புறம் திரும்பிய மதன்.,.,
"உனக்கு ஒன்னு தெரியுமா உங்க வீட்ல நீ எவன்கூடயோ ஓடிப் போய்டனு நம்பிட்டாங்க. உன்ன தூக்குன எனக்கு அது கஷ்டமா என்ன ஒரே ஒரு போன் கால் தான் நம்பிட்டாங்க கல்யாணமும் நின்றுச்சு. உன்ன உங்க வீட்லையும் சேத்துக்க மாட்டாங்க ஒரு வேல உன்ன சேத்துக்கிட்டாலும் கல்யாணத்துக்கு முதல் நாள் ஓடிப்போன பொண்ணுனு எவன் உன்ன கட்டிப்பான் ஒரு வேல உன்ன ஒரு கிறுக்கன் கட்டிக்கிட்டாலும் நீ சந்தோஷமா இருந்துருவியா ஓடிப்போன நீ எவன் கூடயோ ஒரு நாள் இருந்துருக்க நீ போனமாறி தான் திரும்பி வந்தியானு ஒரு நாளாச்சுக் கேக்கமாட்டான் "...என தன் வாய்க்கு வந்தபடி பேச அதை கேட்டவள் மண்டியிட்டு அழ ஆரம்பித்தாள்.
"அழறியா அழு எனக்கு அதான் வேனும் நீ வாழ்க்கப் பூரா அழனும் அத நான் ரசிச்சு பாக்கனும் டி .என்ன வேண்டானு சொல்லி அசிங்கப்படுத்துனல்ல அனுபவிடி"...என்றவன் உரக்க சிரிக்க..
பளார்...சக்தி மதனை அறைந்துவிட்டான்.
"என்ன ஏன்டா அடிக்குற "...என்ற மதனை எரித்துவிடுவதுப் போல் முறைத்தவன்...
"நீ பன்ன காரியத்துக்கு உன்ன கொன்னுப்போட்டாலும் தப்பில்லடா"...
" நான் உன் பிரண்டு அவ உன்
பிரண்ட அவமானபடுத்துனவ அவளுக்குப்போய் சப்போட் பன்ற"...
"ச்சீ வாயமூடு உன்ன போய் என் ப்பிரண்டா நினைச்சேன் பாரு என்ன சொல்லனும். உனக்கு பொண்ணுங்கனா அவ்ளோ இளக்காரமா போச்சா?... உன்னால அந்த பொண்ணு வாழ்க்கைய இழந்துட்டு நிக்கிறா. ஒழுங்கா என் கூடவா நாம போய் அவங்க வீட்ல நடந்தத சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு வரலாம்"...
"ஹே என்ன விளையாட்றியா அப்றம் எல்லாம் வேஸ்ட்டா போயிடும் "...என கூறியபடி மதன் அங்கிருந்து நகர முயற்சிக்க...
அவனை தடுத்து நிறத்திய சக்தி ,, "நீ ரொம்ப தப்பு பன்ற மதன் நான் சொல்றத கேளு"...
"நீ சொல்றத கேக்கனுமா யாருடா நீ?.. இப்ப தான சொன்ன நான் உன் பிரண்டு இல்லனு அப்றம் எப்படி நீ சொல்றத கேக்க முடியும்.என்றவன் நகர முயற்சிக்க ...
"நான் விடமாட்டன் உன்ன"...என்ற சக்தி அவனை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள மதன் அவனை தள்ளி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
"டேய் நில்லு., உன்ன விடமாட்டேன் "...என சக்தி மதனை பின் தொடர அதற்குள் மதன் காரில் பறந்தான்.
அவன் சென்ற திசையை பார்த்தபடி நின்றிருந்தவன் மனதில் தன்னையே திட்டிக்கொண்டான் "ச்ச இப்படி பன்னிட்டனே ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிய நான் காரணமாயிட்டேனே கடவுளே".,.,
சிறிது நேரம் அங்கு நின்றிருந்தவன் ஆதிராவின் நினைவு வர பதறியபடி அறையினுள் நுழைந்தான். அங்கு ஆதிராவோ தரையில் மண்டியிட்டபடி அழுது கொண்டிருந்தாள். அதைக் கண்ட சக்தியின் மனமோ குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தது.
அவள் முன் தானும் மண்டியிட்டு அமர்ந்தவன் "
"என்ன மன்னிச்சிடுனு சொல்லக்கூட எனக்கு தகுதி இல்ல அவன் சொன்னதெல்லாம் நம்பி இவ்ளோ பெரிய தப்புப்பன்னிட்டேன் .என் கூடவா நான் உங்க வீட்ல நடந்தத சொல்றேன் ப்ளீஸ். ",.. என கெஞ்சியவனை நிமிர்ந்து முறைத்தவள் பின் ஆத்திரத்துடன்
"நடந்தத சொன்னா அவங்க நம்புவாங்களா அவங்க நம்புனாலும் மத்தவங்கக்கிட்ட என்ன சொல்லப் போற? ,..ம்ம்ம் ஒவ்வொருத்தருகிட்டையும் போய் சொல்லுவியா,..
"ப்ளீஸ்.,. என்ன நம்பு எப்படியாவது பேசி புரியவைக்கிறேன். யார்க்கால்ல வேணா விழறேன்
என்ன போலீஸ்ல கூட புடிச்சுக் குடு ஆனா, அதுக்கு முன்னாடி நான் உன்ன வீட்ல விட்டறேன் ப்ளீஸ்."...
இதுவரை சக்தி மதனிடம் பேசியதை அவளும் தானே கவனித்துக் கொண்டிருந்தாள்.மதன் அவனை ஏமாற்றித் தான் தன்னை கடத்த வைத்திருக்கிறான் என புரிந்துக் கொண்டாள்.
அவன் வார்த்தையில் பொய் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை . .
..
.
.
.
வீட்டை நெருங்க நெருங்க ஆதிராவிற்கு மனதில் பயம் அதிகமானது.
மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணை காணவில்லை என தெரிந்தவுடன் திருமண ஏற்ப்பாட்டை நிறுத்திவிட்டு ஆதிராவின் அன்னையையும் தந்தையையும் அவமானப்படுத்தும் படி பேசிவிட்டு சென்றனர்.
இருவரும் வீட்டினுள் நுழையும்முன் ஒரு குரல் அவர்களை தடுத்தது.
"ஏய் நில்லுடி இங்க எதுக்கு வந்த நாங்களாம் செத்துட்டமா இல்லையானு பார்க்க வந்தியா. ஓடிப் போனவ அப்படியே போ வேண்டிதான ..,என்ற தன் அத்தையை ஏறிட்டவள்...
"அத்த என்ன நம்புங்க .நான் எந்த தப்பும் பன்னல "...என ஆதிரா சொல்லி முடிக்கவும் ராஜன், வசந்தி இருவரும் சத்தம் கேட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
அவர்களின் முகம் அழுது அழுது வீங்கி இருந்தது.
ஒரு வித ஏக்கத்துடன் அவர்களை பார்த்தவள் தன் தாயிடம் "அம்மா நீ என்ன நம்புறதான நான் எதுவுமே பன்னல"...என்றவளிடம் "எங்கள ஏமாத்திட்டல"... என்ற தாயின் பதில் அவளின் உயிர் வரைச் சென்று வலிக்கச் செய்தது ராஜனின் மௌனமும் தான்.
ஆதிரா அசையாது சிலைபோல் நின்றிருந்தாள்.
"உங்க பொண்ணுமேல எந்த தப்பும் இல்ல நான் தான் "என சக்தி சொல்லி முடிக்கும்முன் அவன் முன் கையை உயர்த்தி நிறுத்திய சந்திரா தானே தொடர்ந்தார்
"என்ன? அவ மேல தப்பு இல்லையா? பர்ஸ்ட் நீ யாருடா? இங்க வந்து பேச நீ அவள இழுத்துட்டுப் போனவனா இருக்கலாம் .அவளே எங்களுக்கு யாரோனு ஆகிட்டா அப்றம் நீயாருடா எங்களுக்கு...என்றவர் ஆதிராவை முறைத்தபடியே...
"ச்சீ... இவல்லாம் ஒரு பொண்ணு பாரக்கவே அருவருப்பா இருக்கு .நேத்து ஓடிப்போயி இன்னக்கி என்மேல தப்பு இல்லனு வந்து நிக்கிறா ஒரு நாள்
இவன் கூட வாழ்ந்த வாழ்க்கை பிடிக்கலனு .இவள போய் என் பையனுக்கு கட்டனும்னு நெனச்சேன் நல்ல வேள இவளே வேண்டானு சொல்லிட்டா"...என சந்திரா தன் வாய்க்கு வந்தபடி பேச ஆதிராவோ இதை எதையும் காதில் வாங்காமல் தன் பெற்றோரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தால் மனமோ "என்னை நம்புங்க"... என மன்றாடிக்கொண்டிருந்தது.
சந்திராவின் சத்தம் கேட்டு அங்கு கூட்டம் கூடியயிருந்தது. அங்கிருந்த பலரும் பல படி பேசிக்கோண்டருக்க அதை கவனித்தவனின் மனமோ வேதனையில் நொந்துக் கோண்டிருந்தது. தன்னால் ஆதிரா அவமானப்பட்டு நிற்பதை எவ்வாறு சரி செய்வது என புரியாமல் நின்றிருந்தான்.
சந்திரா எல்லைமீறி ஆதிராவின் கற்பை கலங்கப்படுத்திப் பேச ஆத்திரம் கொண்டவன் ஒரு முடிவெடுத்தவனாய் தன் பாக்கட்டில் இருந்த தாளியை ஆதிராவின் கழுத்தில் கட்டி " இனிமே இவ என் மனைவி இவள பத்திப் பேச யாருக்கும் உரிமை இல்ல .
எப்ப ஒரு பொண்ணுனுக்கூட பாக்காம இவ்ளோ பேர் முன்னாடி அசிங்கப்படுத்துனிங்ளோ அப்பவே புரஞ்சிக்கிட்டேன் உங்கள பத்தி .இவ இனி உங்ககூட இருக்கமாட்டா"... என ஆதிராவின் கரம் பிடித்து இழுத்துச் சென்றான்.
சக்தியின் இந்த முடிவிற்கு இங்கு நடந்தது மட்டும் காரணமில்லை.மதன் ஆதிராவிடம் பேசிய வார்த்தைகள் தான். "உன்ன உங்க வீட்லையும் சேத்துக்க மாட்டாங்க ஒரு வேல உன்ன சேத்துக்கிட்டாலும் கல்யாணத்துக்கு முதல் நாள் ஓடிப்போன பொண்ணுனு எவன் உன்ன கட்டிப்பான் ஒரு வேல உன்ன ஒரு கிறுக்கன் கட்டிக்கிட்டாலும் நீ சந்தோஷமா இருந்துருவியா ஓடிப்போன நீ எவன் கூடயோ ஒரு நாள் இருந்துருக்க நீ போனமாறி தான் திரும்பி வந்தியானு ஒரு நாளாச்சுக் கேக்கமாட்டான் "...
மதன் கூறிய நிலைக்கு ஆதிரா தள்ளப்பட்டு விடுவாளோ என பயந்தவன் இந்த முடிவை எடுத்தான்.ஏனென்றால் இந்த சமூகம் அப்படி.
ஆதிரா தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றுக் கூட தெரியாமல் சக்தி இழுத்த இழுப்பில் அவனுடன் நடந்தாள்.
பாவம் அந்த உள்ளம் எதைத்தான் தாங்கும் தன்னை செல்லமாக வளர்த்த தாயின் சொல்லும் தந்தையின் மௌனமும் அவளை இந்த உலகிற்கு மீண்டு வராதபடி தடுத்துக்கொண்டிருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro