Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

5

வசந்தி ...... ம்ச்.., வசந்தி.,. எங்க இருக்க .

இதோ வரேங்க,.,

மண்டபத்துல எல்லா வேலையும் முடிஞ்சிருச்சி அங்க எல்லாம் ரெடி நம்ம கரக்ட் டைம்க்கு அங்க இருந்தா போதும்.என்றபடி சோர்வாக சோபாவில் அமர்ந்தார் ராஜன்.
ஆதிராவின் தந்தை.

என்னடா ஒரு மாதிரி இருக்க ... உடம்புக்கு எதாவது பன்னுதா,,
என்றபடி பதற்றத்துடன் அருகில் அமர்ந்தார் ராஜனின் ஒரே அக்கா சந்திரா.

என்னங்க ஆச்சு...

மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு என்னனு தெரியல.,.

நீ போய் காப்பி கொண்டுவா   வசந்தி...என சந்திரா உத்தரவிட.,.

சரிங்க அண்ணி என்றபடி தன் கணவனின் மீது பார்வையை வீசியபடி கிச்சனிற்க்குள் நுழைந்து கொண்டார் ஆதிராவின் அன்னை.

சிறிது நேரத்தில் காப்பி கலந்து எடுத்து வந்தவர் அதை  ராஜனிடம் கொடுத்தபடி.

என்னங்க மண்டபத்துல எதுவும் பிரச்சனை இல்லையே என  ராஜனின் அருகில் அமர்ந்து கொண்டார்.
 
அதெல்லாம்  ஒன்னும் இல்ல.  ஆமா எங்க ஆதிமா நான் வந்தாளே ஓடி வந்து எங்கிட்ட வம்பிழுப்பா  இப்ப ஆளையே காணோம் தூங்றாளா என்றார் ஆதிராவின் அறையை நோட்டமிட்டபடி.

இல்லங்க அவ பிரண்டு பாரதிய கூட்டிட்டு வரேனு ரயில்வே ஸ்டேசனுக்கு போயிருக்கா...

உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா  நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளிய அனுப்பிருக்க ஏன்டா இதையெல்லாம் நீ கேக்க மாட்டியா.,. என சந்திரா கடிந்துகொள்ள ..

அக்கா அவ என்னோட பொண்ணு அவ பிரண்ட தான கூப்பி்ட போயிருக்கா வந்துருவா.

ம்க்கும்., ஆனா நீ அவளுக்கு ரொம்பச் செல்லம் குடுக்கறடா  பாத்துக்க இதுவே ஒருநாள் வினையா வந்து முடியபோகுது.

(ஆமாங்க நம்ம ஆதிரா அப்பா செல்லம் தான் ஆதிமானு தான் கூப்டுவாறு. )

இந்த சந்திரா இருக்காங்களே அவங்க தா ஆதிமாக்கு வில்லி ரெண்டுபேருக்கும் ஆகவே ஆகாது. சந்திரா ஒன்னு சொல்ல அதுக்கு ஆதிமா ஒன்னு சொல்ல   அப்றம் வீடே போர்க்களம் ஆகிடும். சந்திராவுக்கு ஒரு பையன் சந்தோஷ் MBA முடிச்சிட்டு இப்ப பாரின்ல நல்ல வேலைல இருக்கான். ஆதிமாக்கு சந்தோஷதான் கல்யாணம் பன்னி வைக்கனும்னு ஆசைப்படப்டாங்க சந்திரா. . அவ பைனல்  இயர்  படிக்கும்போதே பொண்ணு கேட்டாங்க ஆனா ஆதிரா ஒத்துக்கல நாங்க எப்பவுமே பிரண்ட்ஸ் தானு மறுத்துட்டா. சந்தோஷ்க்கு ஆதிரானா ரொம்ப புடிக்கும். அவளுக்கு புடிக்கலனு தெரிஞ்சோன விட்டுடான். அவள மறக்க முடியாம பாரின் போயிட்டான். அவன் விரும்புனது ஆதிக்கு தெரியாது. அந்த கோபம் தான் சந்திராவுக்கு ஆதிரா மேல.
.
.
.
.
.
.
சிறிது  நேரத்திற்கு பிறகு.....

காலிங் பெல் அடிக்கும் ஓசைக்கேட்டு வசந்தி  கதைவை திறக்க அங்க பாரதி நின்று கொண்டிருந்தாள்.
 
ஹாய் ஆன்ட்டி எப்படி இருக்கிங்க...

நான் நல்லா இருக்கேன்மா நீ எப்படி இருக்க என விசாரித்தப்படியே  வெளியில் தன் மகளைத் தேடிக்கொண்டிருந்தார்.

யார ஆன்ட்டி தேடுறிங்க.

ம்ம்ம் என்னம்மா இப்படி கேக்குற ஆதிரா எங்க அவ உன்ன அழைச்சிட்டு வரதான ஸ்டேசனுக்கு கிளம்பினா என்றார் பதற்றத்துடன் .

இல்லைங்க ஆன்ட்டி நான் அவள வரவேண்டானு சொல்லிட்டேனே.

என்னமா  எங்கிட்ட அப்டிதான சொல்லிட்டு போனா.

சத்தம் கேட்டு ராஜனும் சந்திராவும்  வெளியே வந்தனர்.

அவர்களிடம் நடந்ததை கூறியவர் அழத்தொடங்கினார்.

என்னங்க எனக்கு பயமா இருக்கு.

ஆமா இப்ப அழுது என்ன பன்றது அவள வெளியே அனுப்பும் போது தெரிஞ்சிருக்கனும்...என்ற சந்திராவின் எண்ண ஓட்டம் தவறாக இருந்தது.

அதெல்லாம் ஒன்னும் இல்ல எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்க என்று அதட்டியவர் ஆதிராவிற்க்கு கால் செய்ய ஸ்விச்ட்டு ஆஃப் என வந்தது.

என்னங்க என்ன ஆச்சு போன் அட்டன் பன்னாளா எங்க இருக்காளாம் சொல்லுங்க பேசாம இருக்காதிங்க என்று ராஜனை உலுக்க.

வச,., வசந்தி ஸ்விட்ச்டு ஆஃப்னு வருது என்றார் கலங்கிய கண்களோடு.

போச்சா எல்லாம் போச்சா நான் அப்பவே சொன்னல்ல அவள கண்டிச்சு வளனு கேட்டியா இப்ப பாரு நம்மள அசிங்கப்படுத்திட்டு போய்ட்டா.

அக்கா அப்படி பேசாத எனக்கு என் பொண்ணு மேல நம்பிக்க இருக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டா நம்ம போய் தேடிப்பாக்கலாம்..
.
.
.
.
.
.
.
.
.
ஹலோ மதன் நாங்க நீ சொன்ன இடத்துலதான் இருக்கோம் அவங்க இன்னும் மயக்கத்துலதான் இருக்காங்க...

ஹோ,.  பத்தரமா பாத்துக்கோடா நான் காலைல அங்க வந்தரேன் இந்த நேரத்துல நான் வீட்டுலருந்து கிளம்புனேனா அப்பா துருவி துருவி கேள்வி கேப்பாரு.அப்றம் எல்லா ப்ளேனும் ஸ்பாயிலாயிடும்.  அவ என்னதா முதல்ல பாக்கனும். நீ அவ ரூம்க்கு போகாத.

ம்ம்ம் சரிடா.... என்றபடி போனை அனைத்தான் சக்தி .

பின்பு இதற்காக வறுந்துவோம் என்பதை அறியாமல்.





Bạn đang đọc truyện trên: Truyen247.Pro