Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

49

சக்தி தன்னை விரும்புகிறான் என தெரிந்த பின்பு அவனை முதன்முதலாக எதிர் கொள்ளப் போகிறாள்.இதயத்துடிப்பு நூறைத் தாண்டித் துடிக்க அவளது பார்வை அறை வாசலிலேயே நிலைத்திருந்தது.

அவளது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் சக்தி உள்ளே நுழைந்தான்.

களையிழந்த முகம், கருவளையம் போட்டக் கண்கள், இளைத்த தேகம் என சக்தி ஆளே மாறிப்போயிருந்தான்.இந்த ஒரு வாரத்தில் சக்தி இந்தளவிற்கு மாறுவான் என அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவளை வசீகரிக்கும் அந்த சினேகமான புன்னகை தற்போது அவனிடத்தில் இல்லை.இந்த நிலையில் சக்தியை பார்த்தவளுக்கு கண்கள் கலங்க இதயம் ரணமாய் வலித்தது.அவனை தன்னோடு அனைத்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வை தற்காலிகமாக கட்டுப்படுத்திக் கொண்டாள்.

சாரி சக்தி என அவள் தன் வாய்க்குள்ளேயே முனங்க அது அவன் செவியைச் சென்றடைந்தாற் போல் அறையில் தன் கண்களை சுழலவிட்டான்.

சுதாரித்துக் கொண்டவள் இன்னும் சுவற்றோடு ஒட்டி நின்றுக் கொண்டாள்.

மெத்தையில் கிடந்த அவளது போட்டோவை எடுத்தவன் அவளை வருடியபடி ...

இப்பக் கூட நீ இங்க என் கூட இருக்கற மாதிரி தோனுது.என்றவன் முத்தம் ஒன்றை அவள் நெற்றியில் பதித்துவிட்டு போட்டோவை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

சிரமப்பட்டு தன் உணர்வுகளை அடக்கியவள் இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாதவளாய் ...அவன் பின் நின்று....

ம்ஹூம் என செருமினாள்.

திடுக்கிட்டுத் திரும்பியவன் வெகுவாக தன் கையிலிருந்த போட்டோவை மறைத்துக் கொண்டு..,.

ஆ...ஆதிரா.,.ந்..நீ எப்போ வந்த ...இங்க என்ன பன்ற,.. என்றவனிடம் ...

ஏன் நான் இங்க வரக் கூடாதா என்றவள் மிகவும் சிரமப்பட்டு அவன் மறைத்து வைத்திருந்த போட்டோவை அவனிடமிருந்துப் பிடிங்கினாள்.

என்ன இதெல்லாம். இதுக்கு என்ன அர்த்தம்.,.என்ற அவளது கேள்வியில் தடுமாறியவன்.,..

உன்ன உங்க வீட்ல தேடுவாங்க. வா நான் கொண்டுப் போய் விட்டறேன் எனக் கிளம்பியவனை கைப் பிடித்து நிறுத்தியவள்...

இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன் என்றாள் அழுத்தமாக,..

அவள் முகம் பாராமல்.,..

ஒரு அர்த்தமும் இல்ல. நீ முதல்ல உங்க வீட்டுக்கு கிளம்பு என்றவனின் காலரை இறுக்கிப் பிடித்தவள்.,..

ஏன்டா இப்படி இருக்க. உன்ன தேடித் தான வந்துருக்கேன்.இப்பக் கூட உனக்கு என்கிட்ட சொல்லனும்னு தோனலல..என்ன சொன்ன எங்க வீட்டுக்கு கிளம்பனுமா ..அங்க போயி உனக்கு டைவர்ஸ்  குடுத்துட்டு அவங்க பார்த்து வச்சிருக்கவன கட்டிக்கனும் அப்படி தான...என்ன எவனோ ஒருத்தனுக்கு விட்டுக்குடுத்துட்டு நீ என்ன பன்னபோற இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க போற. என் அம்மா சொன்னா உடனே டைவர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் போட்டுக் குடுத்துருவியா .மனசுல பெரிய தியாகினு நினைப்பா. ம்ம்ம் சொல்லு நான் கேட்கறத்துக்கெல்லாம் பதில் சொல்லு.ஏன் இப்படியே வாய மூடிட்டு நிக்கிற.சொல்லமாட்டல்ல இப்பக் கூட எதுவும் சொல்லமாட்றல.,.என அவனைப் போட்டு உலுக்க சக்தியோ எந்தவித உணர்வும் இல்லாமல் நின்றிருந்தான்.

அவனை விடுவித்தவள்.,,.

ஆனா நான் சொல்றேன் கேட்டுக்கோ என அந்த விவாகரத்துப் பத்திரத்தை கிழித்து அவன் முகத்தில் எறிந்துவிட்டு.,.

நான் உன்ன விரும்புறேன் சக்தி. என்னால நீ இல்லாம இருக்கமுடியாது.நீ எனக்கு வேணும்டா. என் ஆயுள் முழுக்க நான் உன்கூட வாழனும்னு ஆசைப்பட்றேன் உனக்கு ஒரு தோழியா.,நல்ல காதலியா,அன்பான மனைவியா ,உன் குழந்தைக்கு அம்மாவா வாழனும்னு ஆசைப்பட்றேன். என்ன ஏத்துப்பியா என கண்ணீரும் காதலுமாய்  கேட்டவளை அதுவரை இறுக்கத்துடன் நின்றிருந்தவன் காற்றுப்புகாத அளவிற்கு இறுக்கி அனைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.

அவன் கண்ணீர் அவள் தேகத்தை நனைக்க அவன் உதடுகளோ ஐ லவ் யூ ஆதிரா என முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

சக்தியின் இந்த இறுக்கமான அனைப்பே அவன் இந்த ஒரு வாரத்தில் அவளில்லாம் எப்படி தவித்திருக்கிறான் என்பதை உணர்த்த இம்முறை அவளும்

ஐ லவ் யூ சக்தி என முணுமுணுத்தவள் தானும் அவனை இறுக்கிக் கொண்டாள்.

அவளிடமிருந்து மெல்ல விலகியவன் சிறு குழந்தைப் போல் ...

என்ன விட்டுட்டு போமாட்டல்ல என்றிட...மறுப்பாக தலையசைத்து ம்ஹூம் போமாட்டேன்... என்றவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

நிமிடங்கள் பல கரைய அந்த அனைப்பில் இருவரும் தங்கள் காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

அவனிடமிருந்து விலகியவள் தன் கரங்களால் அவன் முகத்தை ஏந்தியபடி கண்ணீரைத் துடைத்துவிட்டு சாப்டியா என்றிட இல்லை என்பதைப் போல் தலையசைத்தவனின் கரம் பற்றி அழைத்துச் சென்றவள் பிடித்தமானவற்றை சமைத்துக் கொடுத்து அவனை உண்ண வைத்தாள்.,

கையில் வைத்திருந்த ஆதிராவின் போட்டோவையே கண்ணிமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தவனை தன் கரங்களை ஆட்டி தான் அணிந்திருந்த வளையல்களை குலுங்கச் செய்து அவனை திரும்பச் செய்தவள் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி.,.

அந்த போட்டோல அவ்ளோ அழகா இருக்கனா என்ன ...என்றாள்.

மாம்பழ மஞ்சள் நிற பட்டுப்புடைவையில் தேவதையாக நின்றிருந்தவளின் மெய்மறந்தவன் தன்னை மறந்து அவளை நெருங்கி அவளது செவ்விதழ் நோக்கி குனிந்தான்.

அவளோ சக்தியின் நெருக்கத்தில் இதழ் துடிக்க உடல் சிலிர்க்க கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

இருவர் இதழும் இணைய நூல் இடைவெளியே இருக்க .,.சட்டென தீயைத் தொட்டவனாய் அவளிமிருந்து விலகிக் கொண்டான்.

கண்களை ஏதாற்றத்துடன் திறந்தவளின் எதிரில் சக்தி குறும்பாக சிரித்தபடி நின்றிருந்தான்.

புருவம் உயர்த்தி என்ன என கேட்டவளிடம் மறுப்பாகத் தலையசைத்தவன்...

யூ ஆர் லுக்கிங் சோ கார்ஜியஸ் என்றான்.

கன்னம் சிவப்பேற ...அவன் விழி நோக்காமல்...

நானா இல்ல இந்த சேரியா...என்றவளின் காதில் நீதான்...என கிசுகிசுத்தான்.

உடல் சிலிர்க்க நின்றிருந்தவளை ம்ஹூம் என செருமி நடப்புக்கு கொண்டுவந்தான்.

அவன் கண் பார்த்து .,.

இது யார் வாங்கிக் குடுத்த புடவைனு தெரியுமா...

யாரு என்றவனிடம்.,,.

என் அத்தை ...எனவும் புருவம் சுருக்கியவன் ...

எந்த அத்தை என்றான்.

ஆதிரா அத்தை என்றதும் சக்தி சந்திராவை நினைக்க...

செல்வி அத்தை ... என்னோட மாமியார் என்றவள் அந்த கடிதத்தை அவனிடம் நீட்டினாள்.

அதை படித்தவனின் கண்கள் கலங்கிப் போனது...

அவனை அனைத்து அவன் நெஞ்சில் புதைந்தவள்,...

இந்த லட்டரப் படிக்கும் போது நான் தான் அவங்க மருமகனு எனக்குத் தெரியாது.ரேஷ்மாவ நீ விரும்புறதா தப்பா நினைச்சிக்கிட்டு அது அவ தானு முடிவுப் பன்னிட்டேன் என்றாள்.

ம்ம்ம் அப்றம்.,..என்றவனிடம்...

அப்றம் கூட எனக்கு உன் மேல எந்த ஃபீலிங்கும் வரல என்றவுடன் இம்முறை,..

ம்ம்ம் மட்டும் கொட்டினான்...

நிமிர்ந்து அவன் முகம் வாடியிருப்பதை கவனித்தவள்...

அப்றம் ஒரு நாள் நீ என்ன அன்னை இல்லம் கூட்டிட்டு போன அப்றம் நாம ஹோட்டல் போனோம்ல ...

ம்ம்ம்,..

அங்க நம்ம டேபுள் பக்கத்துல உக்காந்துருந்த பொண்ணுங்கலாம் நீ போன் பேசிட்டிருக்கும் போது உன்ன சைட் அடிச்சாங்க .,.உன்ன பத்தி என்னென்னமோ பேசினாங்க ...எனக்கு அப்படியே கோவம் கோவமா வந்துச்சு அதான் அவங்கள போய் திட்டிட்டு வந்துட்டேன்..

இம்முறை முகம் மலர...

பொசசிவ்னஸ்ஸா... என்றான்.

கன்னம் சிவக்க
ம்ம்ம் போட்டு அவனுள் ஆழப்புதைந்துக் கொண்டாள்.

அப்றம் மேடம் எப்போலருந்து தான் என்ன விரும்ப ஆரம்பிச்சிங்க,..

அப்றம் எனக்குள்ள நிறைய கன்பியூஷன் ஏன் இப்படிலாம் கோவம் வருதுனு. பாரதிக்கிட்ட கேட்டதுக்கு அவளும் அத இதனு சொல்லி குழப்பிவிட்டுட்டா...

ம்ம்  அப்றம்....

அப்றம் என்ன உன்ன வேற ஒருத்திக்கு விட்டுக்குடுக்க முடியுமானு யோசிச்சிப் பார்த்தேன் முடியல. அதான் முடிவுப் பன்னிட்டேன்...

என்னனு என வினவியனிடமிருந்து விலகியவள்...

ம்ம்ம் சொரக்காய்க்கு உப்பில்லனு என அவனை முறைக்க ...சக்தியோ கண்களில் குறும்புமின்ன சிரித்துக் கொண்டிருந்தான்.

யூ ...என அவன் நெஞ்சில் இரண்டு மூன்று அடிகளைப் போட ...சக்தி தன் வலிய  கரங்களால் அவளை சுற்றி தன் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

ம்ம்ம் அப்றம் என அவன் மீண்டும் கேட்கவும் ...

ம்ம் நான் என்ன கதையா சொல்றேன்.

ஓ அப்போ கத முடிஞ்சதா .ஓகே நாம தூங்களாம் குட் நைட் என வினவியவனை ஆதிரா விசித்திரமாகப் பார்த்தாள்.

இந்த புடவை அலங்காரம் எல்லாம் சக்திக்காக தான்  என அவன் அறியாமலில்லை.

அவளது பார்வையை புரிந்துக் கொண்டவனாய்...

இன்னக்கி வேண்டாம். போய் புடவையை மாத்திக்கோ என்றவன் சோபாவில் படுத்துக் கொண்டான்.

பதிலேதும் கூறாமல்  புடவையிலிருந்து இரவு உடைக்கு மாறியவள்...இறுகிய முகத்துடன் கட்டலில் வந்து படுத்துக்கொண்டாள்.

உறங்காமல் சக்தியை திட்டிக் கொண்டிருந்தவள் அவன் புறம் திரும்பிப் படுக்க சக்தியோ ஒரு தலையனை தன் மார்போடு அனைத்தவாறுப் படுத்திருந்தான்.அதன் மேல் பொறாமைக் கொண்டவளாய் வேகமாக எழுந்தவள் அவனிடமிருந்துத் தலையனையைப் பிடுங்கி தூக்கி எறிந்தாள்.

ப்ச் இது ஒன்னுதான் கொறச்சல்.,.என்றவள் டங்குடங்குவென நடந்து மெத்தையில் விழுந்தாள்.

சக்தியும் உறக்கம் வராமல் சும்மா கண்மூடித் தான் படுத்திருந்தான்.

ஆதிராவின் இச்செயலை இரசித்தவன் மெல்ல நடந்து அவளருகில் படுத்துக் கொண்டான்.

அடுத்த நொடி தன் மார்பின் மேன் தலைவைத்துப் படுத்துக் கொண்டவளை அனைத்துக் கொண்டவன்...

ஐ லவ் யூ...என்க அவளோ ஐ ஹேட் யூ என்றாள் .

மெலிதாய் சிரித்தவன் ஆதிராவின் தலையை வருடிட  அவள் சற்று நேரத்தில் உறங்கிப்போனாள்.அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தவன் தன் மனைவியின் கதகதப்பான அனைப்பில் உறங்கிப் போனான்.

சூரிய ஒளி கண்ணில் பட விழித்தவள் சக்தியைப் பார்க்க அவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.அவள் எழ முற்பட சக்தியின் கைகள் அவளை இன்னும் அவனோடு இறுக்கிக் கொண்டது.

தன் விரலால் அவன் முகத்தில் கோலமிட சக்தியின் இதழ்கள் உறக்கத்திலேயே மெல்ல விரிந்தது.இதழ்விரிப்பில் அவன் கன்னத்தில் குழிவிழ அதை ரசித்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் உருளும் அவனது விழிகள் பட்டுவிட அவன் உறக்கம் கலையாததைப் போல் நடிக்கிறான் என்பதை உணர்ந்தவள்...

திருடா...எனவும்..

ம்ம்ம் என்றவனிடம் ...

இதய திருடா என்றாள்...

தன்மீதிருந்தவளைப் படுக்கையில் தள்ளி அவள் மேல் புரண்டவன் ...

நீயும் தான் திருடி...என்றவன் அவள் இதழ் நோக்கிக் குனிந்து சட்டென விலகியவன் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு குளியலறையில் புகுந்துக் கொண்டான்.

ஆதிரா மீண்டும் சக்தியின் இந்த விலகலலில் ஏமாந்துத் தான் போனாள்.

.
.
.
தன் பேகை எடுத்துக் கொண்டு
கிளம்பியவளை தடுத்தவன்...

எங்க கிளம்பிட்ட...

இது என்ன கேள்வி டியூட்டிக்குதான்.

இன்னக்கி போ வேண்டா.நாம இப்போ ஒரு இடத்துக்குப் போபோறோம்..

ஓ.,.எங்க...

ம்ஹூம் சொல்லமாட்டேன் சர்ப்ரைஸ்...என்றவனிடம் சினுங்கியவள்...

ஏன்டா இப்படி எல்லாத்துலையும்  சன்பென்சா வக்கிற...

அது அப்படி தான்...

சரி அப்ப வா கிளம்பலாம் ...

இப்படியேவா என சக்தி முகம் சுழிக்கவும் .

ஏன் இந்த சுடிக்கு என்ன குறைச்சல் என்றவள் குனிந்து தன் ஆடையை ஆராய்ந்தாள்...

அவளை அப்படியே அறைக்குள் தள்ளிக் கொண்டுச் சென்றவன் தன் கபோடிலிருந்து மூன்று நான்கு பட்டுப் புடவைகளை சில டிசைனர் சேரிகளையும் எடுத்து வைத்தான்.

இது என்ன உள்ள ஒரு ஜவுளி கடையே இருக்கு ...

சத்தமாகச் சிரித்தவன்...உன்ன முதன்முதலா பாரதி கல்யாணத்துல தான் சேரில பார்த்தேன் .அப்படியே தேவதை மாதிரி இருந்த.அதுகப்றம் உனக்காக எடுத்த புடவை தான் இதெல்லாம்.குடுக்க தைரியமில்லாம குடுக்கல என்றவன் ஒரு ஜூவல்ஸ் பாக்ஸை அவளிடம் நீட்டினான்.

அதைப் பெற்றுக் கொண்டவள் ...அடுத்தென்ன ஜூவல்லரி ஷாப்பா என்றவளின் நெற்றியில் முட்டியவன்
போ போய் மாத்திட்டுவா என்றவன் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.

இன்னும் தன்னிடமிருந்து விலகியிருப்பவனின் முதுகையே வெறித்துப் பார்த்தவள் வானநீலமும் சந்தன நிற ஜரிகைக் கொண்ட ஒரு டிசைனர் சேரியை எடுத்து உடுத்திக் கொண்டாள்.

சக்தி கிளம்பலாம் என்ற குரலில் திரும்பியவன் தேவதையாய் நின்றிருந்தவளை கண்டுத் தன்னை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன்...

பைக் ஸ்டார்ட் பன்றேன். டோர லாக் பன்னிட்டு வா ...என்றவன் தலைதெறிக்க ஓடினான்.

அவன் அப்படி ஓடவும் வாய்விட்டே சிரித்தவள்...

எவ்ளோ தூரம் தான் நீ ஓட்றனுப் பாக்கத்தான போறன்... என்றவள் டோரை லாக் செய்துவிட்டு பைக்கில் அவனோடு ஒட்டி அமர்ந்துக் கொண்டாள்.

எங்கதான் கூட்டிட்டுப் போற என்றவளுக்கு ம்ஹூம் என்ற பதில் மட்டுமே கிடைக்க அவன் முதுகில் கண்மூடி சாய்ந்துக் கொண்டாள்.

பைக்கை நிறுத்தியவன் வந்துருச்சி இறங்கு...என்றதும் இறங்கியவள்...உச்சக் கட்டகோவத்துடன்...

இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த...

வா உள்ள போலாம் என அழைத்தவனிடம்  ...

நான் வரல...

அடம்புடிக்காத ஆதிரா வா என அவள் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

ராஜன் பேப்பர் படித்துக் கொண்டிருக்க வசந்தி காப்பி கப்புடன் கிட்சனிலிருந்து வெளியே வந்தார்.

ஆதிமா என அருகில் வந்தவரை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஒரு அம்மாவா தான் பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு நினைச்சதுல எந்த தப்பும் இல்லை .முதல்ல அவங்க கிட்ட மன்னிப்புக் கேளு என்றான்.

சக்தியை தன் கணவன் என்றுச் சொல்ல கர்வமாக இருந்தது ஆதிராவிற்கு.

அதே கர்வத்துடன் தன் அன்னையின் புறம் திரும்பியவள்...
இது தான் என் சக்தி. சொன்னா எங்க உனக்குப் புரியபோகுது ...என்றாள்.

என்ன மன்னிச்சிருங்க மாப்பிள்ளை என கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்ட வசந்தியின் கையைப் பிடித்து...

அய்யோ என்ன நீங்க .நானும் உங்க பையன் மாதிரிதான்.எங்கிட்டப் போயி மன்னிப்பெல்லாம் என்றான்.

சக்தியின் பெருந்தன்மையை எண்ணி மெய்சிலிர்த்த ஆதிராவின் தந்தை தன் மனைவி செய்த தவறுக்காக தானும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

சில நொடிகளில் அங்கு நிலவிய சங்கடங்கள் மறைய...சக்தியும் ஆதிராவும் பெரியவர்கள் இருவர் காலிலும் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டனர்.

மனம்நிறைய இருவரும் அவர்களை ஆசிர்வதித்தனர்.

தேடித் தேடிப் பிடித்திருந்தால் கூட தங்கள் பெண்ணிற்கு இப்படி ஒருவன் கிடைத்திருக்க  மாட்டான். அவர்கள் வாழ்வு மலர வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொண்டனர்.

இம்முறை சக்திக்கே கவனிப்பு அதிகம்.ஆதிராவை இருவருமே கண்டுக் கொள்ளவில்லை.

சின்னச் சின்ன சீண்டல்கள் ,சின்னச் சின்ன கோபத்துடன் அன்றைய பொழுதை அங்கு கழித்தவர்கள் மாலைப் பொழுதில் இருவரும் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினர்.

வீட்டிற்கு வந்ததுமே இரவு உடைக்கு மாறியவளை முறைத்தவனிடம் ...

என்ன முறைப்பு...

அதே மஞ்சள் நிறப்புடவையை அவளிடம் எடுத்துக் கொடுத்தவன்...

இத கட்டிக்கோ ...

முடியாது போடா...

ஏன் ...

நீ தான நேத்து மாத்திக்கோனு சொன்ன அது ஏன்னு சொல்லு அப்றம் நான் புடவை கட்டிக்கிறேன்.

குழந்தையைப் போல் கோவித்துக் கொள்ளும் தன் மனைவியை ரசித்தவன்...

நீ போய் புடவைய மாத்திட்டுவா என்றவன் மாட்டேன் என மறுத்தவளை கெஞ்சி கொஞ்சி அனுப்பி வைத்தவன் அவளுக்காக காத்திருந்தான்.

புடவையணிந்து வந்தவளை மையலோடு நெருங்கவும் அவனைத் தள்ளிவிட்டவள்...

ஏன்னு சொல்லு...

பெருமூச்சொன்றை வெளியேற்றியவன்...

உனக்கு எல்லா சந்தோஷத்தையும் குடுத்துட்டு உன்ன முழுமையா எனக்கு சொந்தமாக்கிக்கனும்னு நினைச்சேன்.

அவள் அவனேயே பார்க்கவும்

எனக்கு தெரியும் ஆதிரா நீ என்னதான் அவங்க கூட சண்டைப் போட்டாலும் உள்ளுக்குள்ள வருந்திக்கிட்டுதான் இருப்பனு.ஏன்னா நீ இந்த ஒரு வருஷம் அவங்கள பிரிஞ்சி பட்ட கஷ்டத்த என் கண்ணால பார்த்திருக்கேன்.அவங்க ஆசிர்வாதமும் சம்மதமும் கிடைக்கனும் நினைச்சேன்.அதான் என அவன் முடிக்கவும் அவன் இதழை தன் இதழால் மூடினாள்.

மூச்சுவிட முடியாமல் அவனிடமிருந்து விலகியவள் எந்நிலையிலும் தன் நலனை சிந்திப்பவனின் காதலில் உருகியவளின் கண்களில் கண்ணீர் பெரு்க சக்தியோ தன்மனைவியின் இதழனைப்பில் மெய்மறந்து கண்மூடி அதை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

விழி திறந்து
ஆதிராவின் கண்ணீரைக் கண்டவன் ஒரே எட்டில் அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி்...

போதும் நீ இத்தனை நாள்  அழுதது போதும். இனி நான்  உன்ன அழவிடமாட்டேன்...என்றான்.

முழுக்க முழுக்க காதலோடு பார்த்தவளைக் கண்டு தன்னை தொலைத்தவன் அவள் செவ்விதழோடு தன்னிழைப் பொருத்தினான்.

அவனது சட்டையை இறுக்கிப் பிடித்தவளின் இடையை தன் கரங்களால் இறுக தழுவிக் கொண்டான்.

இருவரும் கணவன் மனைவியாக தங்கள் வாழ்க்கையைத் தொடர நாம் அனைவரும் விடைப்பெற்றுக்
கொள்வோம்..

              

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro