46
ரொம்பவும் சந்தோஷமாக அறையை விட்டு வெளியே வந்தவன் அவர்களின் அருகில் சென்றான்.
ஆதிராவின் அம்மா முதலில் கிளம்பலாமா என்றவுடன் சக்திக்கு ஒன்றும் புரியவில்லை.பிறகு அவர் தெளிவாகக் கூறவும் தான் புரிந்துக் கொண்டான். இதை அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.என்ன செய்வதெனப் புரியாமல் நின்றவனிடம் நன்றி கூறி கிளம்புவதாக ராஜன் கூறவும் வேறு வழியில்லாம் புன்னகையுடன் தலையசைத்தான்.
உதடுகள் சிரித்தாலும் அவன் மனம்....
போகத ப்ளீஸ்.,..இதுதான் என் வீடு. இங்கயே இருக்கேனு சொல்லு...என அவளிடம் மன்றாடியது.
அவன் பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை ஸ்தம்பித்து நின்றவன்
இடிந்துப் போய் அமர்ந்தான்.
கண்களிலிருந்து கண்ணீர் வழிய .,,அவளில்லாமல் இந்த வீட்டில் எப்படி இருக்கப் போகிறோம் என நினைத்தவனுக்கு அதற்கு மேல் சிந்திக்க மனம் இடம் தரவில்லை.
கண்களை இறுக மூடியவன் சோபாவில் சாய்ந்துக் கொண்டான். உடலும் மனமும் ஒரு சேர சோர்ந்துப் போனது அவனுக்கு.,..
எத்தனை ஆசை வைத்திருந்தான் இன்று தன்னவளிடம் தன் காதலைத் தெரிவிக்கப் போகிறொம் என்று.ஆனால் எல்லாம் ஒரு நொடியில் பாலாய் போனது.
ஆதிராவை அழைத்துக் கொண்டு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றவர்கள் அவளது பெயரில் அர்ச்சனை செய்தனர்.
வசந்தி ஆதிராவின் பெயர் ராசி நட்சத்திரத்தை சொல்லும் போது சக்தியின் நினைவு தான் வந்தது.
அழுகை வர உதட்டை இறுகக் கடித்துக் கொண்டு அதை கட்டுப் படுத்தினாள்.
சன்னதியில் அமர்ந்தப்பின் அவர்கள் ஆதிராவிடம் ஏதேதோ பேச அது எதுவும் அவள் காதில் விழவில்லை.
வசந்தி பேசிக் கொண்டே பூஜை தட்டிலிருந்தப் பூவை வைப்பதற்காக அவள் சூடியிருந்தப் பூவில் கை வைத்தார்.
அவரது தொடுதலில் உணர்வுப் பெற்றவள் அவரது கையைத் தட்டிவிட்டாள்.
என்னடா பூ வச்சி விடுறேன்...என்றவரிடம் மறுப்பாகத் தலையசைத்தாள்.
சாமி பிரசாதம் வேண்டானு சொல்லக் கூடாது என்றவரிடம் ...
அந்த பூமேலயே வச்சிவிடுங்க என்றாள்.
அவர் பூச்சூடிய அடுத்த நொடி அவரது மடியில் தலை வைத்துக் கொண்டாள்.
வழிந்த விழிநீரை அவர்கள் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டாள்.
.
.
.
.
.
.
காலைல சாப்டியோ இல்லையோ வா வந்து சாப்பிடு என்ற வசந்தியிடம்
எனக்கு பசிக்கலமா நீங்க சாப்பிடுங்க .எனக்கு தல வலிக்குது என்றவள் தன்னறையில் புகந்துக் கொண்டாள்.
அவளது பெட்டில் பொத்தென்று விழுந்தவள் தன்னால் முடிந்தவரை அழுதுத் தீர்த்தாள்.
கதவு தட்டு சத்தம் கேட்கவே முகம் கழுவி வந்தவள் கதவைத் திறந்தாள்.
காபி கப்பை அவளிடம் கொடுத்தவர் ...
இந்தக் காபிய குடிச்சிட்டு தூங்குடா தலைவலி சரியா போகிடும் என்று வெளியேறியவர் மீண்டும் வந்து...
உன் மேல இருந்தக் கோபத்துல உன் பொருளலாம் எரிச்சிட்டேன்.சர்ட்டீபிகட்ஸ எரிக்க மனசு வரல அதான் அந்த தம்பிக்கிட்ட கொடுத்துட்டேன்...பின் கண்கலங்கியபடி சாரிடா என்றார்.
விடுங்கம்மா பழசப் பத்தி பேச வேண்டாம் என்றவள் அறையின் கதவை மூடிக் கொண்டாள்.
வசந்தி சொன்னப்பின்பு தான் தன் அறையைக் கவனித்தாள்.
அவள் சம்பத்தப்பட்ட பொருள் எதுவும் அங்கு இல்லை.
் தெரிந்தால் வருந்துவேனென்று தான் இதைப் எண்ணிடம் கூறவில்லையோ என நினைத்தவளுக்கு சக்தியின்
மீதிருந்தக் காதல் பெருகியது.
சக்தி மனசுல அப்படி என்னதான் இருக்கு.எல்லாத்தையும் என் மனசுக் கஷ்டப்படாத மாதிரிப் பார்த்து செய்ரான். கஷ்டப்பட்டு அம்மா அப்பாட்ட பேசி புரியவச்சி என்கூட சேர்த்து வச்சிட்டான்.இதையெல்லாம் அவன் பன்ன தப்ப திருத்திக்கப் பன்றானா இல்ல எனக்காகப் பன்றானா.
ஏதோ இருக்கு. இன்னக்கி கூட அவன் என்ன விழாமப் புடிச்சப்பக் கூட நான்
பார்த்தேன் அவன் முகத்துல வந்த அந்த தடுமாற்றம் அப்றம் அவன் கண்ணுல எதையோ பார்த்தேன்.கண்டிப்பா அவன் மனசுல நா...நான் இருக்கேன் என்றவளின் இதழில் சிறிய புன்னகை பூத்தது.
பின்ன ஏன்டா என்கிட்ட எதையும் சொல்லமாட்ற .சொன்னாதா எண்ணவாம். இன்னக்கி அம்மா என அழைச்சிட்டுப் போறேனு சொல்றப்ப ...இவன் என் மனைவி. என்கூடத்தான் இருப்பானு சொல்லவேண்டியது தான. எனக்காக யோசிச்சாலும் என்னால ஆதிராவை விட்டு இருக்க முடியாது. நானும் உங்கக் கூட வரேனு சொல்லலாம்ல.ஏன்டா சொல்லல.ம்ஹூம் நான் சொல்லமாட்டேன் நீயா வந்து சொல்லி என்னக் கூட்டிட்டுப் போ. அதுவரைக்கும் உன்கிட்ட நான் பேச மாட்டேன் என்றவள் அப்படியே உறங்கியும் போனாள்.
இங்கு ஆதிரா இப்படி நினைக்க அங்கு சக்தியோ இதற்கு எதிர்மறையான நிலையில் .....
இத்தன நாள் என்கூட இருந்துருக்கா அவளுக்கு என் மேல எந்தப் பீலிங்க்ஸும் வரலையா.இங்கயே நான் இருத்துக்குறேனு ஒருவாட்டிக் கூட சொல்லல. அவங்க கூப்பிட்ட உடனே போயிட்டா...உண்மையிலேயே அவ மனசுல நான் இல்லையா.ம்ஹூம் இருந்துருந்தா இப்படி தனியா என்ன விட்டுட்டுப் போயிருக்கமாட்டா ...
உன்ன ஃபிரண்டா மட்டுமே நினைக்கிறவ கடைசி வரைக்கும் உன் கூட இருக்கனும்னு நினைக்கறது தப்பு சக்தி....என தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டான்.
எதர்ச்சையாக வீட்டுக்கு வந்த சந்திராவின் கண்ணில் ஆதிரா பட்டுவிட திட்டும் நோக்கத்தோடு அவளை நெருங்கியவரை வசந்தி தடுத்து நடந்தவற்றைக் கூறினார்.
அவர் ஆதிராவிடம் பேச்சுக் கொடுக்க அவளோ அதைக் கண்டுக் கொள்ளாமல் எழுந்துச் சென்றுவிட்டாள்.
அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தன் அத்தையிடம் பேச துளியும் விருப்பம் இல்லை.அவரைப் பார்க்கும் போதெல்லாம் தன்னை கொச்சைப் படுத்தி பேசிய வார்த்தைகளே நினைவிற்கு வர அவரைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.
டேபுளின் மீது தலை வைத்து படுத்திருந்தவளின் தலையை வருடியவர்....
ஏன்டா எப்பவும் ஏதோ ஒரு நினைப்புலையே இருக்க...
அதெல்லாம் ஒன்னுல்ல நான் நல்லாதான் இருக்கேன்மா..என்றவள் தன் தாய் தன்னிடம் எதையோ கேட்கத் தயங்குகிறார் எனப் புரிந்துக் கொண்டாள்.
என்னமா எதையா கேட்கனும்னு நினைக்கிறப் போல...
ம்ம்ம் ஆமாடா ,,.அந்தத் தம்பி உன்ன நல்லா பாத்துக்கிச்சா...கொடும எதுவும் பன்னிரலியே...என்றவரிடம் மெலிதாய் சிரித்தவள்...
தங்கத் தட்டுல வச்சி தாங்காதக் குறை தான். என்ன ராணி மாதிரிப் பார்த்துக்கிட்டான்மா ...என்றாள்.,..
அப்றம் அது வந்து...அங்க நீ பத்திரமா இருந்துக்கிட்டல என்றவரை புரியாமல் பார்த்தவள் பின் புரிந்தவள் போல்....
ஏன்மா இப்படி கேக்குற. என் மேல உனக்கு இன்னும் ந.,என முடிக்கும் முன்னரே வாயில் கை வைத்துத் தடுத்தவர்....
என்ன வார்த்தப் பேசற நீ எனக் கண்கலங்கினார்...
அப்றம் நீ தானமா கேட்ட என்றவளிடம் ....
என் பொண்ணு பாதுகாப்பா இருந்தாளனு தெரிஞ்சிக்கிறதுல ஒன்னும் தப்பில்லையே என்றார்.
சக்தியோட நிழல் கூட என் மேல பட்டதில்ல.உன் வயித்துல நான் இருந்தப்போ எப்படி பாதுகாப்பா இருந்தேனோ அப்படி தான் என்ன பாத்துக்கிட்டான் ...என்றாள்....
..
.
.
.
.
.
ஆதிரா இங்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் ...இதுவரை சக்தியிடமிருந்து ஒரு போன் கால் கூட வரவில்லை.
ஒவ்வொரு முறையும் தன் போனிற்கு அழைப்பு வந்தாலும் சரி வீட்டின் அழைப்பு மணி ஒலித்தாலும் சரி அது சக்தியாகத் தான் இருக்கும் என ஓடி வந்துப் பார்ப்பவளுக்கு ஏமாற்றமே...
ஏன் சக்தி என்ன கூட்டிட்டுப் போக வரல எனத் தனியாக புலம்பித் தீர்ப்பாள்.
சக்திக்கும் இதே நிலை தான் உண்ணாமல் தூங்காமல் நாட்களைக் கடத்தினான்.எந்த வேலையிலும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.
போய் ஆதிராவை தன்னுடன்
அழைத்து வந்துவிடலாம் என்றால் அவள் பெற்றோர் ஒத்துக்கொள்வார்களா.
நீ எங்கப் பொண்ண கடத்தி அவ வாழ்க்கைய சீரழிச்சவன் உன்ன நம்பி என் பொண்ண எப்படி அனுப்புறது... என அவர்கள் சொன்னால் கூட அவன் தாங்கிக் கொள்வான்.ஆனால் ஆதிரா
நான் எதுக்கு உன்கூட வரனும் என்ற ஒரு வார்த்தை சொன்னால் அவனால் தாங்கிக் கொள்ளமுடியாது.
ஆதிரா இல்லாமலும் அவளை தன்னுடன் அழைத்துவர முடியாமலும் இரு தலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தான்.
வருண் இல்லாமல் யாரிடம் சொல்லி புலம்புவது எனத் தவித்துக் கொண்டிருந்தான்.
.
.
.
.
.
இரவில் தூங்குவதற்காக அறையினுள் நுழைய முற்பட்டவளை தடுத்தவர்...
இந்தாடா எனத் தன்கையிலிருந்த கவரை ஆதிராவிடம் கொடுத்தார்.
என்னமா இது என அந்தக் கவரைப் பிரிக்க அதில் ஒரு ஆணின் போட்டோ இருந்தது.
யார்மா இது....
மாப்ள போட்டோடா.,...
ஹோ,..யாருக்குப் பார்த்த மாப்பிள்ள ,...
உனக்கு தான்மா என வசந்திக் கூறவும் அதிர்ச்சியில் அதை கீழே போட்டாள்.
எ...என்னமா சொல்ற எனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல...
அது ஒரு கல்யாணமாடா ,..தாலிக் கட்டிட்டா அது கல்யாணம் ஆகிடாது.அன்னக்கி உனக்கு பேச வாய்ப்பு குடுத்திருந்தா இந்நேரம் உனக்கு ஒரு நல்ல வாழ்க்க அமைந்திருக்கும்.தப்புப் பன்னிட்டோம்.சரி பழச எதுக்கு பேசிக்கிட்டு .உனக்கு ஒரு நல்வாழ்க்கை அமைய போது.என் ஃபிரண்டு சுசிலா இருக்கால அவ பையன் தான்.ரொம்ப நல்லக் குடும்பம்.எல்லாம் விஷயமும் அவங்களுக்குத் தெரியும்.அத அவங்க பெருசா எடுத்துக்கல.பையனும் நல்ல குணம் என மூச்சுவிடாமல் பேசியவர்...
ஹான் உன்கிட்ட ஒன்னு குடுக்கனும் .சக்தி தம்பி காலைல வந்துட்டுப் போச்சி அப்ப நீ வெளிய போயிருந்த என்றவர் தன்னறைக்குச் சென்று ஒரு கவரை எடுத்து ஆதிராவிடம் கொடுத்தார்.
அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தவளுக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி...அது விவாகரத்துப் பத்திரம்..
அதில் சக்தியின் கையெழுத்து இருந்தது.
கோர்ட்ல இந்த வேல சீக்கிரம் முடிஞ்சதுனா கல்யாண வேலைய ஆரம்பிக்கலாம் என்றவர்
சரிடா போய் தூங்கு என தன்னறையில் புகுந்துக் கொண்டார்.
கண்டிப்பாக சக்தி வந்து தன்னை அழைத்துச் செல்வான் என நம்பியவளுக்கு அவன் கொடுத்த விவாகரத்துப் பத்திரத்தைப் பார்த்ததும் உயிர்வரை வலித்தது.
ஆனால் அவள் அழவில்லை மாறாக சக்தியின் மேல் கோபம் தான் வந்தது. அந்த கோபத்துடன் அதில் கையெழுத்திட்டவள் சக்தி அணிவித்த தாலி சரடை இறுக்கிப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள்.
இரவு முழுவதும் தூங்காமல் அதே சிந்தனையிலிருந்தவள் விடியற் காலையில் தான் தூங்கினாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro