45
மறுநாள் அலுவலகம் சென்றவனுக்கு வந்துச் சேர்ந்த முதல் செய்தியே ரேஷ்மா வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டால் என்பதுதான்..
.
.
.
.
.
.
.
.
.
.
ஏர்ப்போட்டிற்கு வருணையும் மதியையும் வழி அனுப்புவதற்காக...ஜானகி, ஆதிரா, சக்தி என அனைவரும் வந்திருந்தனர்.
டேய் இப்பவே அண்ணிக்கிட்ட உன் லவ்வ சொல்லிட்டு அப்படியே எங்க ஹனிமூன் ட்ரிப்போட ஜாயின் பன்னிக்கோங்கடா இரண்டு பேரும் என்ற வருணைத் தனியாக இழுத்து வந்தவன்,..
கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு கம்முனு இரேன்டா. அவ காதுல எதுவும் விழுந்திரறப் போவுது.
விழுந்தா விழுகட்டும் அப்பயாவது நீ அவங்கள லவ் பன்றது தெரியட்டும்.,.என்றவன் அண்ணி இவன் எனக் கத்த போனவனின் வாயைப் பொத்தினான்.,
நீ ஆணியே புடுங்க வேணா நானே சொல்லிக்குறேன்,,
நீ உன் லவ்வ சொல்றதுக்குள்ள எங்களுக்கு குழந்தையே பிறந்திரும் டா,.அதானால நானே சொல்லிறேன்
ஒன்னும் வேண்டா அவ பர்த் டே அன்னக்கி நானே சொல்லிக்கிறேன்.
பாப்போம் பாப்போம் .
போ போய் என்ஜாய் பன்ற வழியப் பாரு என வருணை மதியிடம் தள்ளிவிட்டான்.
ஆயிரம் தடவை அவர்களை கவனமாக இருக்கச் சொன்னவர் சந்தோஷத்தோடு அவர்களை வழி அனுப்பி வைத்தார் ஜானகி.
மறுநாள் வெள்ளி கிழமை என்பதால் சக்தியும் ஆதிராவும் அன்னை இல்லம் சென்று ரிஷியைப் பார்த்துவிட்டு வந்தனர்.
அதன் பின் வந்த நாளில் சக்தி ஏதோ வேலை இருப்பதாகக் கூறி இரவுப் பத்து மணிக்கே வீட்டை வந்தடைந்தான்.
.
.
.
.
நேரமானதால் அவசரஅவசரமாக பேகை எடுத்துக் கிளம்பிவளின் குறுக்கே வந்து நின்றவன்,..
இன்னக்கி நீ ஹாஸ்பிட்டல் போக வேண்டாம்...
ஏன் சக்தி.,.
நாம கோவிலுக்குப் போகப்போறோம்.,
திடீரென சக்தி வழி மறைத்து அவளை கோவிலுக்குப் போறோம் என அழைக்கவும் முகமும் அகமும் மலர.,.
என்ன சக்தி திடீர்னு...என கேட்டவளிடம்.,..
சும்மாதான் தோனுச்சு...போலாமா,.
என்றவனிடம் ,..அழகாக தலையை ஆட்டியபடி போலாம் என்றாள்.
மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷத்துடன் அவன் பினன்னால் அமர்ந்தவள்.,,.
என்ன ஸ்பெஷல் புதுசா கோவிலுக்கெல்லாம் கூட்டிட்டுப் போற என்றவளிடம் ...
சொல்றேன் என்றவன் வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
அருகிலுள்ள அம்மன் கோவிலின் முன் வண்டியை நிறுத்தி இருவரும் இறங்கி கோவிலின் வாயிலை நோக்கிச் சென்றனர்.
திடீரென சக்தி நிற்கவும் தானும் நின்றவள்..
இப்ப என்ன...
இங்க வா என அவளைப் பூக்கடைக்கு அழைத்துச் சென்றவன் .,
ஒரு முழம் மல்லிகைப் பூவும் ஒரு சிவப்பு நிற ரோஜாவும் வாங்கி அவளதுக் கையில் கொடுத்தான்.
பூவை சூடிக் கொண்டவளின் உள்ளம் சந்மோஷத்தில் துள்ளிக் குதித்தது.
சாமிக்கு மாலையும் பூஜைத் தட்டையும் வாங்கிக் கொண்டவர்கள் உள்ளே சென்று அம்மனை தரிசித்தனர்.
யார் பேர்ல அர்ச்சனை என குருக்கள் கேட்கவும்.,..
முந்திக் கொண்ட சக்தி ...பேரு
ஆதிரா பரணி நட்சத்திரம் மேஷம் ராசி என்றிட குருக்கள் மந்திரத்தை உச்சரித்தபடியே பூசையைத் தொடங்க ஆதிரா சக்தியையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் சாமியக் கும்பிடு என சைகை செய்தவன் தானும் கண்மூடி அம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டான்.
பிரஷாதத்தைப் பெற்றுக் கொண்டு சன்னதியில் இருவரும் அமர ஆதிரா தான் முதலில் ஆரம்பித்தாள்,.,
போதும் சக்தி இதுக்கு மேலத் தாங்காது. சொல்லு என்ன திடீர்னு கோவிலுக்கு கூட்டிட்டு வர என் பேர்ல அர்ச்சன பன்ற எனக்கு ஒன்னும் புரியல...
சக்தி அவளிடம் கை நீட்ட ஆதிராவும் நீட்டினாள்.
அவளது கையை மென்மையாகப் பிடித்துக் குலுக்கியவன்,., சிரித்துக்கொண்டே ...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றான்.
ஆதிராவிற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை...
பிறகு தான் இன்று செப்டம்பர் 15 தன் பிறந்தநாள் என நினைவு வந்தது.
உவகையுடன் சக்தியை நோக்கியவள் தேங்க்ஸ் என்றாள்...
பதினைந்து நிமிடம் சன்னதியில் அமர்ந்தவர்கள் பிறகு கிளம்பினர்.
கதவின் சாவியை அவளிடம் நீட்டியவன்.,.
ஓப்பன் பன்னு என்றான்.
ஏன் நீ ஓப்பன் பன்னமாட்டியா...என்றவளிடம்,.,
ம்ஹூம் என்றவன்,.
என்னோட முதல் கிஃப்ட் டோர்ர ஓப்பன் பன்னோன இருக்கும்.இரண்டாவது கிஃப்ட் அப்றமா தரேன் ...என்றான்.
சாவியை வாங்கியவள் அவனையே பார்த்தபடி கதவைத் திறந்தாள்.
அவள் தன்னையே பார்க்க... உள்ள பாரு என்றான்.
பார்த்தவள் அழுகையும் சிரிப்புமாக உள்ளே நின்றிருந்த தன் தாய்த் தந்தையைக் கட்டிக் கொண்டாள்.
ஆதிராவை இருவரும் சேர்ந்தனைத்துக் கொண்டனர்.
சில நிமிடம் அவர்களுக்குள் புதைந்து அழுவதளை விலக்கியவர்கள் கை எடுத்துக் கும்பிட்டபடி ஒரு சேர...
எங்கள மன்னிச்சிரு டா என்றனர்.
அவர்களது கையை கீழே இறக்கிவிட்டவள்...
என்னப்பா இதலாம். அம்மா நீயுமா. நான் உன் பொண்ணு எங்கிட்டப் போய் மன்னிப்பெல்லாம்...
அன்னக்கி நீ என்ன சொல்லவரனுக் கூடக் கேட்காம வார்த்தைய விட்டுட்டேன்.எவ்வளோ பெரிய தப்புப் பன்னிட்டேன் என அவளின் தாய் புலம்ப,..
தந்தையோ ...
என்ன மன்னிச்சிருடா என்றார்...
ஏன் இப்படி இரண்டு பேரும் மாறி மாறி மன்னிப்புக் கேக்கிறிங்க அந்த இடத்துல நான் இருந்தாலும் அதத் தான் பன்னிருப்பேன் என்றாள்.
தன் மகளின் பெருந்தன்மைமை எண்ணி இருவரும் மெச்சிக் கொண்டனர்.
இல்லமா நாங்க என வசந்தி பேச அவரைத் தடுத்த ஆதிரா...
ப்ளீஸ் மா பழச பத்தி பேசவேண்டா ப்ளீஸ் என்றாள்
இதுவரை தன் பிறந்தநாளை தன் தாய்த் தந்தையர் இல்லாமல் அவள் கொண்டாடியதில்லை.
சரி என ஒப்புக் கொண்ட இருவரும் ஒரு சேர அவளுக்கு வாழ்த்துக் கூற இருவரையும் கட்டியனைத்துக் கொண்டவள்...
இந்த பர்த்டேக்கு நீங்க இரண்டுப் பேரும் விஷ் பன்னுவிங்கனு நான் எதிர்ப்பார்க்கள. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா...என்றவள் அப்போது தான் வீடு முழுவதும் வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்ததைக் கவனித்தாள்.
எல்லாம் சக்தியின் ஏற்பாடு தான்.
ஆங்காங்கே ...ஹேப்பி பர்த்டே ஆதிரா என எழுதியிருத்தது.
சோபாவின் முன் உள்ள அந்தச் சிறிய டேபுளில் கேக்கை வைத்தவன் ஆதிராவின் கையில் கத்தியைக் கொடுத்து் கேக்கை வெட்டும்படி கண்ணசைத்தான்.
கேக்கை வெட்டியவள் முதலில் தன் அப்பா அம்மாவிற்குத் தான் ஊட்டிவிட்டாள்.
அடுத்து ஒருத் துண்டை எடுத்தவள் தயங்கியபடி சக்தியிடம் கொண்டுச் செல்ல அவளதுத் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவன்
கேக்கை கையில் வாங்கிக் கொண்டான்.
இருவருக்கிடையில் அமர்ந்தவள் பலக் கதைகள் பேச சக்தி அவர்களுக்குத் தனிமையைக் கொடுக்கவிரும்பி தன் அறையில் அடைந்துக் கொண்டான்.
ஒரு குட்டி பிளாஷ்பேக்...
நேற்று
சக்தி வீட்டிற்கு வருவதற்கு லேட்டாகும் எனக் கூறிவிட்டு நேராக ஆதிராவின் வீட்டை நோக்கிச் சென்றான்.
இன்று என்ன நடந்தாலும் பரவாயில்லை அவர்களிடம் நடந்தது என்னவென கூறியே ஆகவேண்டும் என்ற உறுதியிலிருந்தான்.
போகும் வழியில் ஆதிராவின் அன்னை கோவிலிலிருந்து வெளியே வருவதைக் கண்டவன் விரைவாக வண்டியை நிறுத்திவிட்டு அவரை நோக்கிச் சென்றான்.
என்னதான் வசந்திக்கு ஆதிராவின் மேல் கோபம் இருந்தாலும் நாளை அவளது பிறந்தநாள் என்பதை அவர் மறக்கவில்லை.ஆதிரா தங்களுடன் இல்லாத முதல் பிறந்தநாள் இது என எண்ணுகையில் மனதிற்கு பாரமாக இருந்தது.அதனால் தான்தான் கோவிலுக்கு வந்திருந்தார்.அதே நினைப்புடன் சாலையைக் கடக்க முற்ப்பட்டவர் எதிரில் வந்தக் காரை கவனிக்கவில்லை.
தன் போக்கில் நடந்துக் கொண்டிருந்தவரை யாரோ ரோட்டின் ஓரம் இழுக்க அந்தக் கார்க்காரன் வசந்தியை திட்டிவிட்டுச் சென்றான்.
உடல்நடுங்க தன்னைக் காப்பாற்றியவனிடம் ...
ரொம்ப நன்றித் தம்பி என்றவர் அவனது முகத்தைக் கண்டப்பின் அவனது கையைத் தட்டிவிட்டு நடையில் வேகத்தைக் கூட்டினார்.
அவரைப் பின் தொடர்ந்தச் சக்தியோ .,அம்மா நான் உங்கக்கிட்டப் பேசனும் நில்லுங்க ப்ளீஸ் என்றான்.
அதை எதையும் வசந்தி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
ஓடிச் சென்று அவர் முன் நின்றவன்...மூச்சிறைக்க..
ப்ளீஸ் இன்னைக்காச்சும் நான் சொல்றத கேளுங்க ..என்றான்.
அவனை முறைத்தவர்...
யார் நீ சொல்றத எதுக்கு நான் கேட்கனும் என்றவர் நகர முற்ப்பட அவரை வழி மறித்தவன்...
நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. ஆதிரா மேல எந்தத் தப்பும் இல்ல..
ம்ஹூம் இந்த கதையையே இன்னும் எத்தன நாளைக்கு சொல்லிட்டிருப்பிங்க...
எனக்கு என்னோட அம்மானா உயிர்.அவங்கமேல சத்தியமா ஆதிரா மேல தப்பே இல்ல. நான் சொல்லறத நம்புங்கப்
ப்ளீஸ் என கையெடுத்துக் கும்பிட்டான்.
நான் யாரையும் நம்பத் தயாரா இல்ல .முதல்ல வழிவிடு..என்றார்
சரி நீங்க என்ன நம்ப வேணாம்.ஒரு நிமிசம் ஒரே ஒரு நிமிசம் கண்ணமூடி உங்கப் பொண்ணு இப்படி துரோகம் பன்னுவாலானு யோசிங்க ...
இதை பலமுறை வசந்தி சிந்தித்துப் பார்த்திருக்கிறார்.அன்றுக் கிளம்பும் போதுக் கூட தன்னிடம் பர்மிஷன் வாங்கிவிட்டுக் கிளம்பினாள்.அவள் முகத்தில் தவறு செய்யப்போகிறோம் என்பதற்கான பயமோ குற்றவுணர்ச்சியோ இல்லேயே.இதை எண்ணும் போதெல்லாம் வசந்திக்கு ஏனோ நெருடாலாகவே இருக்கும்.ஒருமுறை தன் மகளிற்கு பேச வாய்ப்பளித்திருக்கலாம் என்றுத் தோன்றும்.இதை சந்திராவிடம் கூறினாள் எதையாவது சொல்லி குழப்பிவிடுவார்.
இப்போது சக்தி அப்படி சொல்லவும் தவறு தன் மீது தானோ என ஸ்தம்பித்து போனார்.
வசந்தி அமைதியாக இருக்கவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சக்தி அன்று நடந்த அனைத்தையும் கூறினான்.
கண்களில் கண்ணீர் பெருக அப்படியே தீயில் நிற்பதுப் போல் இருந்தது வசந்திக்கு.
ஒரு தவறும் செய்யாதவளை வார்த்தைகளாலேக் காயப் படுத்தி அவளை ஒதுக்கி வைத்து எத்தனைப் பெரிய தவறு செய்து விட்டோம் என நினைத்தவருக்கு தலை சுற்றியது.அப்படியே மயங்கி சரிந்தார்.
பதறியடித்துப் போய் தண்ணீர் வாங்கி வந்தவன் அவர் முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கத்தை தெளிவுற செய்தான்.பின்பு வசந்தியை வீட்டில் கொண்டுபோய்விட்டவன் ராஜனிடமும் நடந்தைக் கூறினான்.
இத்தனை நாள் ஆதிரா இவர்களைப் பிரிந்துப்பட்ட கஷ்டத்தையும் கூறினான்.
இருவருக்கும் சக்தியின் மேல் கோபம் இருந்தது.ஆனால் அவன் பேசியவிதத்தில் அவனது குணத்தை அறிந்துக் கொண்டமையால் அவனிடம் கடுமையாக நடந்துக் கொள்ளவில்லை.
உடனே ஆதிராவை பார்க்கவேண்டும் என எழுந்த வசந்தியால் மயக்க களைப்பில் நடக்கக் கூட முடியவில்லை.அதனால் ஓய்வெடுத்துவிட்டு நாளை அங்கு வந்து ஆதிராவிற்கு இன்பதிர்ச்சித் தருமாறுக் கூறினான்.
வசந்தி பேச்சுவாக்கில் ஆதிராவிடம் இதையெல்லாம் கூறினார்.
சக்தியை அவளதுக் கண்கள் தேட அவன் ஹாலில் இல்லை.
அவர்களிருவருக்கும் அருந்த ஜூஸ் கொடுத்துவிட்டு சக்தியை தேடி தங்களறைக்குச் சென்றாள்.
அங்கு சக்தி ஜன்னலருகே நின்று வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆதிரா இந்தளவுக்கு சந்தோஷமாக இருந்து அவன் பார்த்ததில்லை.எதையோ சாதித்து விட்டதைப் போல் உணர்ந்தான்.
அவனையே காதலாகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்படியே அவனைக் கட்டியனைத்து முத்தமழைப் பொழிய வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.
சக்தி என்ற மென்மையானக் குரலில் திரும்பியவனின் பார்வையிலும் காதல் நிரம்பியிருந்தது.
இருவருமே சில நொடிப் பேசிக்கொள்ளவில்லை.
அடிமேல் அடிவைத்து ஒருவரை ஒருவர் நெருங்க ஆதிரா தரையில் தண்ணீர் சிந்தியிருப்பதைக் கவனிக்காமல் அதில் கால் வழுக்கி விழப் போனாள்.
ஒரே எட்டில் தன் இடது கரத்தால் அவளது இடையை தாங்கிப் பிடித்தவனின் வலது கரம் அவளது இடது கரத்தின் விரல்களோடுக் கோர்த்திருந்தது.
அவனது முதல் தீண்டளில்
உடல் சிலிர்க்க அவளதுக் கன்னம் சிவந்துப் போனது.
நூலிடைவேளியில் நின்றிருந்தவர்களின் இதயம் படபடவென அடித்துக் கொள்ள விழி நான்கும் சந்தித்துக் கொண்டது.
இருவரின் உதடுகளும் சொல்லத் துடித்த அந்த மூன்று வார்த்தைகள் ஐ லவ் யூ தான்.
இருவரும் அதை உச்சரிக்கவிருக்கும் வேலையில்...
ஆதிரா என தன் தாயின் குரலில் அவனிடமிருந்து விலகியவள்
அவனது விழி நோக்காது.
ஒரு நிமிஷம் என்று் அறையைவிட்டு வெளியேறினாள்.
கிறங்கிய நிலையிலிருந்தவன் தன் அடர்ந்த கேசத்தை கோதிவிட்டு தலையை சிலிப்பிக் கொண்டான்.
தன் சட்டைப் பையிலிருந்த கிஃப்ட் பாக்ஸை தடவி அதற்கொரு முத்தத்தைத் தந்தவன் அதை உள்ளே வைத்துவிட்டு தானும் அறையைவிட்டு வெளியேறினான்.
சரிடா அப்ப நாம கிளம்பலாமா என்றத் தன் அன்னையிடம் சிரித்துக் கொண்டே...
எங்கமா ...
நம்ம வீட்டுக்குத் தான்மா...
எ..என்ன என தடுமாறியவளின் முகம் சட்டென மாறிப்போனது.
போதும்டா செய்யாதத் தப்புக்கு இத்தன நாள் நீ அனுபவிச்ச தண்டனப் போதும் கிளம்பு நம்ம வீட்டிற்குப் போலாம் என்றார்.
மீண்டும் தடுமாறியவளிடம்..
ஆதிமா எங்கள நீ இன்னும் மன்னிக்களையா. கோவமா எங்க மேல என்ற தன் தந்தையிடம்...
அய்யோ அப்பா என்ன நீங்க .அப்படியெல்லாம் எதுவுமில்லை என்றவள் ..சக்தியை பார்க்க அவனோ எதுவும் சொல்லாமல் நின்றிருந்தான்.
.
இருதலைக் கொள்ளி எறும்பாக துடித்துக் கொண்டிருந்தாள்.
ரொம்ப நன்றி தம்பி நாங்க கிளம்புறோம் என்ற ராஜனிடம் மெலிதாக சிரித்தபடி தலையாட்டினான் சக்தி.
அதைப் பார்த்தவளுக்கு வேதனையாக இருந்தது
ஏன் சக்தி நான் போறதப் பத்தி உனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லையா என மனதில் அவனிடம் கேள்வியெழுப்பிவாரே சக்தியைப் பார்த்துக் கொண்டே தன் பெற்றோருடன் வெளியேறினாள்.
Yaarum thitadhinga frds...kandippà avanga sendhuruvanga...hehe konjam different ahh mudikalanu paathen...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro