43
சக்திக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
புருவம் முடிச்சிட அந்த அட்ரஸையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்...
பிரஷான்த் யாரு .,.என மதன் கேட்க
தெரியலடா.,.போன்ல பேசும் போது உன் வாய்ஸ்ல தான்டா பேசுனான்.ஒரே கன்பியூஷனா இருக்கு ,.,
போலிஸ்க்கு இன்பார்ம் பன்னிடலாமா என்ற மதனிடம் ...
இல்ல இல்ல வேண்டா இத நானே பார்த்துக்குறேன் என சக்தி எழ...மதன்
ஓகே டா ஆனா நானும் உன் கூட வரேன் என மதனும் கிளம்ப...
வேணாடா பரவால...நான் கிளம்புறேன்...என சக்தி நகர மதன்,,.
சக்தி ஒரு நிமிசம்.,.நீ ஆதிராவ லவ் பன்றியா என கேட்கவும்,..
மெல்லிய புன்னகையுடன் ஆமாம் என்றவன் அடித்ததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.
வருண் நாளை தேனிலவுக்காக சிம்லா செல்லவிருப்பதால் இன்னும் ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தான்.
இதைப் பற்றி அவனிடம் கூறி வீணாக வருணையும் டென்ஷனாக்க வேண்டாமென சொல்லாமல் விட்டுவிட்டான்.
பிரஷான்த்தின் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த சில நொடிகள் காத்திருப்பிற்குப் பின் ஒருவன் கதவைத் திறந்தான்.
யாரு நீங்க..
இங்க பிரஷான்த்னு.,என சக்தி இழுக்க,.
நான் தான்.,நீங்க யா,,என அவன் சொல்லி முடிக்கும் முன்
சக்தி அவன் மூக்கைக் குறி வைத்துக் குத்த இரத்தம் பொலபொலவெனக் கொட்டியது.
தன் மூக்கின் மேல் கை வைத்துக் கொண்டவன் .,
யாருடா நீ எதுக்குடா என்ன அடிக்கிற என்றிட ..
அவனது காலரை இருக்கிப் பிடித்த சக்தி.,
எதுக்குடா ஆதிராக்கு கால் பன்னி மிரட்டுன ..என்றதும் வேர்த்து விருவிருத்துப் போனது அவனுக்கு. ...
அப்படி யாரையும் எனக்குத் தெரியாது ...என்றவனின் கழுத்தைப் பிடித்து இறுக்கியவன்.,..
இப்ப நீ சொல்லலனு வையி...கழுத்த நெறிச்சிக் கொன்னுடுவேன் என்றவன் அவனது பிடியை இன்னும் இறுக்கினான்.
சார் சார் சொ,சொல்லிடுறேன் விட்ருங்க சார்,என தினறியவனை விடுவித்தவன் ...
அவன் மூச்சுவாங்குவதற்காக சில நிமிடங்கள் இடைவெளி விட்டான்.
இப்ப சொல்லு எதுக்கு அப்படி பன்ன.,என சக்தி அவனது கையை முறுக்கியபடி கேட்க.,.
பயத்தில் எச்சிலை விழுங்கியவன் ...என் என்ன காசுக் குடுத்து அப்படி பேச சொன்னாங்க சார்...
யாரு ...
ரேஷ்மா ...என அவன் கூறவும் சக்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ரேஷ்மாவா என்ன சொல்ற ...என சக்திக் கேட்க,.
ரேஷ்மா தான் .,அவங்க என்னோட காலேஜ் சீனியர்,என்னைய ரேகிங்லாம் கூட பன்னிருக்காங்க,,....நான் நல்லா நிமிக்கிரி பன்னுவேன்
காலேஜ் படிக்கும் போது.,...
மூனு நாளைக்கு முன்னாடி என்ன அவங்க பாக்க வந்தாங்க,..யாரோ மதனாம் அவங்க வாய்ஸ் ரெக்காடிங்க என்கிட்ட குடுத்து இந்த வாய்ஸ்ல பேசிகாமினு சொன்னாங்க. நானும் பேசி காமிச்சேன்.
அப்றம் ஆதிரானு ஒருத்தவங்களோட நம்பர குடுத்து மதனோட வாய்ஸ்ல மிரட்ட சொன்னாங்க. காசு தரதா சொன்னாங்க. சரினு நானும் செஞ்சிட்னேன்.என சொல்லி முடித்தவன் பயத்துடனே .,,
சார் நீங்க...என இழுக்க,.
சக்தி டா.,நீ கொல்லப்போறதா சொன்னியே அது என்னத்தான் என்றவன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி பார்க்க.,.
அதில் நடுங்கியவன் .,.
காசுக்காக அப்படி பன்னிட்டேன் சார் மத்தபடி உங்கள யாருனு கூட எனக்குத் தெரியாது...
ம்ம்ம் காசு வாங்கிட்டியா...
சார் என இழுத்தவனிடம் .,
ரேஷ்மாக்கிட்ட காசு வாங்கிட்டியானுக் கேட்டேன் என சக்தி குரலை உயர்த்தவும்...பம்மியவன்...
அட்வான்ஸ் மட்டும் தான் தந்துருக்காங்க மீதிய இன்னக்கி தரதா சொன்னாங்க ...
சரி போன போட்டு நான் ஊருக்குப் போறேன் எனக்கு பணம் வேனும். அதனால உடனே கிளம்பி இங்க வாங்கனு கூப்டு என்ற சக்தியை குழப்பத்துடன் பார்த்தவன்...ரேஷ்மாவிற்கு போனை போட்டு சக்தி கூறியபடியே பேசினான்.
அதற்கு.,.
என்ன அவசரம். நான் தான் ஈவ்னிங் தரேனு சொன்னேன்ல...
அம்மாக்கு உடம்பு சரியில்ல .இப்பவே நான் ஊருக்கு போயாகனும் அதான்.
சரி எங்க ஆபிஸ் பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வந்துரு...
நீங்க என்னோட வீட்டுக்கே வந்துருங்க அதான் நல்லது.அங்க யாராச்சும் பாத்துட்டா அது நல்லதுக்கில்ல என அவன் கூறவும் அதுவே சரி என்றுப் பட
ம்ம்ம் அங்கயே வரேன் என்றவள்... ஆபிஸில் ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டுவிட்டுக் கிளம்பினாள்.
சக்தி ரேஷ்மாவின் மீது கொலை வெறியிலிருந்தான்.
இத்தனை நாள் அமைதியாக இருந்தவள் மீண்டும் ஏன் பிரச்சனை செய்கிறாள் என குழம்பிப் போனான்.
சக்திக்கு ஆதிராவுடன் திருமணம் ஆனது என கேள்வி பட்டபோதே ரேஷ்மா மனமுடைந்துப் போனாள்.
சக்தி தனக்கு
சொந்தமானவன் இல்லை என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சக்தியிடம் இதைப் பற்றி பேசலாம் என அவன் கேபினிற்குச் சென்றபோது வருண் சக்தி உரையாடலை அவள் கேட்டுவிட்டாள்.
வருண் சக்தியிடம் ஆதிராவை விரும்புகிறாயா எனக் கேட்டதற்கு சக்தி அளித்த பதில் ரேஷ்மாவிற்கு சாதகமாய் அமைந்துப் போனது.
அதனால்
ராஜேஸின் ரிசப்சனில் ஆதிராவை மிரட்டினாள்.
அவளது மிரட்டலுக்கு பலன் கிடைக்காமல் போகவே சக்தியை மறப்பது தான் சரி என முடிவெடுத்தாள்.முயற்சியும் செய்தாள்.
அதன் பின் வந்த நாட்களில் சக்தியை பற்றி நினைப்பதையும் அவனைப் பார்ப்பதையும் குறைத்துக் கொண்டாள்.
வருண் திருமணத்திற்குச் சென்றாள் ஆதிராவை சந்திக்க நேரிடும் என்பதால் வரமாட்டேன் என மறுத்தவளை அனைவரும் காரணம் அறியாது வற்புருத்தி அழைத்துச் சென்றனர்.
அங்கு ஆதிராவை பார்த்தபோது கூட வராத கோபம் அவள் காதல் நிறைந்தக் கண்ணோடு சக்தியை நோக்கும் போது வந்தது.
இத்தனை நாளாய் சக்தியை மறக்க எடுத்த முயற்சி அந்த ஒரு நாளிலே மறைந்துப் போனது.
மீண்டும் பழைய ரேஷ்மாக மாறியவள்.,.அன்று தான் அவ்வளவு மிரட்டியும் கொஞ்சம் கூட பயமில்லாமல்
சக்தியை சுற்றி சுற்றி வரும் ஆதிராவை அவனிடமிருந்துப் பிரித்து சக்தியை தன்னவனாக்கிக் கொள்ள எண்ணினாள்.
முடிந்தவரை அன்று ஆதிராவின் கண்ணில் படாமல் அவளை கண்காணித்தாள்.
அடுத்து வந்த அந்த நான்கு நாட்களிலும் சக்தி வேலையில் பிஸியாக இருந்தான்.அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டவள் அவனது சிஸ்டத்தின் பாஸ்வேடை ஹேக் செய்து சக்தி வடிவமைத்த டிசைனில் குறைகளை உருவாக்கினாள்.
அவள் எதிர்ப்பார்த்ததுப் போல் சக்தி அந்த டிசைனை ரீகரக்ட் செய்ய வெகு நேரமானது.அவன் அசந்த நேரத்தில் அவனது மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தாள்.
சக்தியின் மனம் புண் படுமாறு
ஆதிரா பேசினால் நிச்சயம் சக்தி ஆதிராவை வெறுத்துவிடுவான்.அதன் பின் தன் காதலைப் புரியவைத்துக் கொள்ளலாம் என திட்டம் தீட்டினாள்.
இதில் தன்பங்கு இருப்பது சக்திக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே மதனின் பெயரைப் பயன்படுத்தினாள்.
சக்தியின் மீதிருந்த காதலும் ஆதிராவின் மீதிருந்த வெறுப்புமே ரேஷ்மாவை இத்தகைய காரியத்தை செய்ய தூண்டியது.
.
.
.
.
.
.
.
அங்கு
எதிலும் கவனத்தை செலுத்தாமல் தவித்துக் கொண்டிருந்தாள் நம் கதாநாயகி.
அந்த மருத்துவமனையிலேயே பணிபுரியும் சக மருத்துவரிடம் தனக்கு வேறு ஒரு மருத்துவமனையில் வேலை அமைத்துதருமாறு கேட்டாள்.
அவள்
பெங்களூரில் தன் தோழி ஒருவள் பணிபுரியும் மருத்துவமனையைக் கூறினாள்.
ஆதிராவிற்கு
இந்த சூழ்நிலையில் பெங்களூர் செல்வதே நல்லதெனப் பட்டது.
என்னதான் அவள் சக்தியிடம் மனம் வருந்தும்படி பேசி சென்றாலும் கண்டிப்பாக அவளைத் தேடி வந்துவிடுவான்.அவளை தனியாக விடமாட்டான்.தனியாக விடவேண்டும் என நினைத்திருந்தால் அவள் கழுத்தில் தாலியைக் கட்டியிருக்கமாட்டான்.
முதலில் பேங்களூர் சென்றுவிடலாம் .சக்தி அவளைத் தேடி அங்கு வருவதற்குள் டெல்லி அல்லது வட இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்தாள்.அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தவள் பின் பார்க்கில் ஒரு பென்ச்சில் அமர்ந்தபடி சக்தியோடு வாழ்ந்த இந்த குறுகிய கால நினைவுகளைப் புரட்டிக் கொண்டிருத்தாள்.
.
.
..
.
.
ரேஷ்மா காலிங் பெல் அடிக்க பிரஷான்த் தான் கதவைத் திறந்தான்.
ஏன் நான் உள்ள வந்துதான் குடுக்கனுமா நீ வெளிய வந்து வாங்கிக்க மாட்டியா என கடுகடுத்தவள் அப்போது தான் அவன் மூக்கில் காயம் ஏற்ப்பட்டிருப்பதை கவனித்தாள்.
ஹே உனக்கு என்ன ஆச்சு என அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சக்தி அவள் எதிரில் வந்து நின்றான்.
சக்தியை அங்கு எதிர்பாராதவளின் முகம் வியர்த்துப் போனது.
பிரஷான்தை அவள் முறைக்க அவனோ குனிந்துக் கொண்டான்.
சக்தி பல்லைக் கடித்தபடி எதுக்கு இப்படி என் வைப்புக்கு போன் போட்டு மிரட்ட சொன்ன என இரண்டு மூன்று முறை கேட்க ரேஷ்மாவிடமிருந்து பதிலேதும் வராததால்..இம்முறை...
உன்னதான கேக்கறேன் .பைத்தியாமா உனக்கு ,,.என சக்தி உரக்க கத்தவும்...
ஆமா பைத்தியம் தான் .இரண்டு வருஷமா உன் பின்னாடி சுத்துனேன்ல நான் பைத்தியம் தான்.உன் மேல பைத்தியம் தான். .என்றவளுக்கு அடுத்த வார்த்தை வராமல் அழுகை தான் வந்தது.
அவள் அழுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன்...
இம்முறை பொறுமையாகவே ....
புரிஞ்சிக்க ரேஷ்மா . அப்பவே நான் உன்கிட்ட தெளிவா சொல்லிட்டேன் எனக்கு உன் மேல அந்த எண்ணம் எதுவும் இல்லனு.ஆனா நீ அத புரிஞ்சிக்காம ஆள வச்சி என் வைப்ப மிரட்டிருக்க .இங்க கோபப்பட வேண்டியது நான் தான் நீ இல்ல.
ம்ச் மறுபடி மறுபடியும் அவள உன் வைப்புனு சொல்லாத சக்தி இரிடேட்டிங்கா இருக்கு.என்றவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு ...
இங்க பாரு சக்தி வெறும் தாலிக் கட்டிட்டா அவ உன் வைப் ஆகிடமாட்டா .ஏதோ பரிதாபப்பட்டு அவ கழுத்துல நீ கட்டுன அதலாம் பெருசா எடுத்துக்காத.அவள தூக்கிப் போட்டுட்டு வா .உனக்கு நான் இருக்கேன் சக்தி...என் மனசுல நீ மட்டும் தான்டா இருக்க எனக்கு தெரியும் உன் மனசுலையும் நான் தான் இருக்கேன்.அத பர்ஸ்ட் புரிஞ்சிக்க. அத விட்டுட்டு கண்டவள உன் வைப்புனு சொல்லாத...எரிச்சலா இருக்கு...
ரேஷ்மா ஒவ்வொரு முறை வந்து அவள் காதலை சொல்லும் போதும் அவன் இல்லை என மறுக்கும் போதும் அவளைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருக்கும்.
இம்முறையும் அவள் காதல் வசனம் பேசும் போதும் தன்னையறியாமலே அவள் மனதில் ஆசையை வளர்த்துவிட்டோமோ என கஷ்டமாகத் தான் இருந்தது.ஆனால் அவள் கடைசியில் ஆதிராவை கண்டவள் எனக் கூறவும் சுரு சுருவென வந்தக் கோவத்துடன்...
ஏய் இங்கப் பாரு நானும் பொண்ணா போயிட்டியேனு பொறுமையா போயிட்டிருக்கேன்...என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற .,இன்னொரு தடவ ஆதிரா கண்டவனு சொன்ன அப்றம் அவனுக்கு விழுந்தது உனக்கு விழும்..என்றவனிடம் ரேஷ்மா ஏதோ சொல்ல வர தன் கை உயர்த்தி அவளைத் தடுத்தவன்...
இப்ப சொல்றேன் கேட்டுக்கோ என் மனசுல ஆதிரா மட்டும் தான் இருக்கா .இந்த ஜென்மம் மட்டும் இல்ல ஏழேழு ஜென்மத்துக்கும் மனைவினா அது ஆதிரா மட்டும் தான்.அவள எங்கிட்டருந்து பிரிக்கனும்னு நினைச்ச நீ என்ன யாரா இருந்தாலும் கொல்லக் கூட தயங்கமாட்டேன் என கை நீட்டி எச்சரித்துவிட்டுச் சென்றான்.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.
நேராக வருணின் வீட்டிற்குச் சென்றவன் முகத்தை இயல்பாய் வைத்துக் கொண்டு வருணிடம் கார் சாவியைக் கேட்க அதற்கு துருவி துருவி கேள்விக் கேட்ட வருணை சிரமப் பட்டு சமாளித்தவன் கடையில் கார் சாவியைப் பெற்றுக் கொண்டு நேராகத் தன் வீட்டை நோக்கிச் சென்றான்.
அவன் எதிர்ப்பார்த்தது போலவே ஆதிரா சீக்கிரம் வீட்டிற்கு வந்திருந்தாள்.
சக்தி அவள் முன் நிற்க அதைக் கண்டும் காணாததுப் போல் அமர்ந்திருந்தாள்.
ஆதிரா வெளியப் போகலாம் கிளம்பு என்றவனை முறைத்தவள் மொபைலில்
எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உன்கிட்ட தான் பேசிட்ருக்கேன்...
நான் எங்கயும் வரல...
ஏன்...
உன் கூட எங்கயும் ் புடிக்கல...
அதான் ஏன் ...
ஏன்னா நீ என் வாழ்க்கைய கெடுத்தவன் .என்ன எங்க அப்பா அம்மாட்டருந்துப் பிரிச்சவன்...உன் கூட இந்த வீட்ல இருக்கறதே அருவருப்பா
இருக்கு இதுல வெளில வேற வரனுமா என முகத்தை சுழித்தவளிடம் ...
பெருமூச்சொன்றை வெளியேற்றியவன்...
ம்ம்ம இப்ப முடிவா என்ன சொல்ற .வரமுடியுமா முடியாதா...
முடியாது...
ம்ம்ம் ஓகே என்றவன் ...அவளது கையைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்துச் சென்றான்.
அவன் பிடியிலிருந்துத் தன்கையை எடுக்க முயற்சித்தபடியே...ம்ச் விடு என்ன ...நான் தான் வரலனு சொன்னேல...ம்ச் விடுடா எனக் கத்திக் கொண்டேவந்தாள்..
அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாதவன் அவளை காரின் பின் சீட்டினுள் தள்ளிவிட்டு கோவமாக டோரை அறைந்துச் சாற்றி வண்டியை எடுத்தான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro