42
மதனின் நிபந்தனையை கேட்டவள் அப்படியே அசையாது அமர்ந்திருந்தாள்.
அவளது மனதை சக்தியிடம் வெளிப்படுத்தும் முன்பே அவனை விட்டுப் பிரியக் கூடும் என அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
சுவரில் தலைசாய்த்தபடி அமர்ந்தவள் வெடித்து அழத் தொடங்கினாள்...
ஐ லவ் யூ சக்தி .எனக்கு உன் கூட வாழ குடுத்து வைக்கல ...நான் சீக்கிரம் உன்னவிட்டுப் போயிருவேன்...நீ இல்லாம என்னால இருக்க முடியுமானு தெரியல ... ஆனா தூரத்திலருந்து உன்ன பார்த்துக்கிட்டே உன்னோட நினைவுகளோட வாழ்ந்தரேன் சக்தி.,உன்ன காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல,.. என்றவள் தன்னாள் முடிந்தவரை அழுது தீர்த்தாள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சக்தி வீடு வந்து சேரவில்லை.
கதவையே வெறித்தபடி அமர்ந்திருந்தவள் போனை எடுத்து மீண்டும் முயற்சிக்க சுவிட்ச்டு ஆஃப் என வந்தது.
ஒரு வேளை மதன் கோவத்தில் சக்தியை எதுவும் செய்து விட்டானோ என பதறியவள் இம்முறை மதனுக்கே கால் செய்தாள்.ஆனால் நாட் ரீச்சபுள் என வந்தது.
இதயம் வெடித்துவிடுவது போல் இருந்தது.
கடவுளே ஏன் என்ன இப்படி சோதிக்கிற. நான் என்ன பாவம் பன்னேன். முதல்ல என்னொட அப்பா அம்மாவ எங்கிட்டருந்து பிரிச்ச இப்ப என் சக்திய .,ஏன் இப்படிலாம் நடக்குது...என பூஜை அறையில் சாமி படத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தபடி கதறியவளின் காதில் அழைப்பு மணி ஓசை கேட்க...
சக்தியாகத் தான் இருக்கும் என
விழுந்தடித்து எழுந்து ஓடியவள்
கதவை திறக்க...அவளது நம்பிக்கையை வீணாக்காமல் சக்தியே அவள் எதிரில் நின்றிருந்தான்.
எப்பொழுதும் அவன் உதிர்க்கும் அந்த சினேகமான புன்னகையுடன் அவன் ஏதோ சொல்ல வர .,ஆதிராவோ சக்தி என்ற கேவலுடன் அவனை இறுகி அனைத்துக் கொண்டாள்.
தன் கண்ணீரால் சக்தியின் சட்டையை நனைத்தபடியே தேம்பி தேம்பி அழுதவள் ...
சக்தி உனக்கு எதுவும் ஆகலல. அவன் உன்ன எதுவும் பன்னிரலல என்பதையே மீண்டும் மீண்டும் உச்சரித்தவள் அவன் நெஞ்சில் ஆழமாக முகம் புதைத்தபடி தேம்பிக்கொண்டிருக்க சக்திக்கோ ஒன்றும் புரியவில்லை.
அவள் அழுகையுடன் அவனை அனைக்கவும் சக்திக்கோ ஒன்றும் புரியவில்லை.கையில் வைத்திருந்த பேகையும் மொபைலையும் அப்படியே கீழே போட்டவன் அவள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.
மெல்ல அவனது கையால் அவளது தலையை வருடியவன்
உனக்கு என்ன ஆச்சு ஆதிரா.,.ஏன் அழறனு பர்ஸ்ட் சொல்லு என்றவனின் வார்த்தைகள் அவளின் காதில் விழவில்லை.
சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.
பாரு
எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாதா இருக்கேன்,..யாரால என்ன என்ன பன்னமுடியும் ...அவன் அவன் சொல்றியே அது யாரு...யாரச்சும் உன்கிட்ட பிரச்சன பன்னாங்களா...மதன் எதுவும் மிரட்டுனான என்றவுடன் திடுக்கிட்டு அவனிடமிருந்து விலகினாள்.
சக்தி அப்போது தான் கவனித்தான் ஆதிராவின் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது.அவள் முகத்திலிருந்த பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவள் முகத்தை ஆராய்ந்தவன் ஏதோ பிரச்சனை என அறிந்துக் கொண்டான்.
என்னாச்சு ஏன் இப்படி அழுதுருக்க ...முகமெல்லாம் வீங்கிப் போயிருக்கு...என்றவுடன் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்தவள்,..
அது நீ போன் சுவிட்ச்டு ஆஃப் வர லேட்டு ஏன் உலற,..
அதுக்கா அழுத...போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச்டு ஆஃப் ஆகிருச்சு. நேத்து நான் பன்ன டிசைன்ல ஒரு மிஸ்டேக் அதான் அத ரீகரக்ட் பன்னிட்டு வர லேட்டாகிருச்சு,,டோர் கீய இங்கயே விட்டுட்டிப் போயிட்டேன் அதான் காலிங் பெல் அடிச்சேன் எனத் தெளிவாக விளக்கினான்.
ஆனால் அவள் தான் தெளியவில்லை ஒரே குழப்பமாக இருந்தது. மதன் சக்தியிடம் பிரச்சனை செய்யவில்லை என்பது தெளிவாகப் புரிந்தாலும் அவன் மிரட்டியது தன்னை பயமுருத்தி அழ வைப்பதற்காகவா இல்லை உண்மையிலேயே நான் சக்தியை விட்டுப் பிரிய வேண்டும் என்பதற்காகவா என குழம்பிக் கொண்டிருக்க ...அவளது தெளிவடையாத முகத்தைக் கண்டவன்...
என்னதான் ஆச்சு ஆதிரா ஏன் இப்படி அழுதுருக்க எதாவது பிரச்சனனா சொல்லு மதன் எதாவது பிரச்சன பன்னான .,எதாச்சும் சொல்லு என சக்தி உரக்கக் கத்தவும்.,
வேகமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்...
அது பி..பிரச்சனைலாம் எதுவும் இல்ல.வ..வந்து அசதியில தூங்கிட்டேன் ஒரு கெட்ட கனவு .அதான் கொஞ்சம் பயந்துன்டேன். என்றவள் சிரிக்க முயற்சித்தாள்.
பொய்.,நீ.பொய் சொல்ற...ஏதோ பிரச்சனை இருக்கு. நீ எதையோ என்கிட்டருந்து மறைக்கிற ...உண்மைய சொல்லு ஆதிரா என சக்தி கடுமையாக வினவவும் அவனிடம் உலறிவிடுவோமோ
என்ற பயத்தில் சக்தி கீழே போட்ட அவனது பேகையும் மொபைலையும் எடுத்தவள்
அவனது கண்ணைப் பார்க்காது,
உண்மையாலுமே கனவுதான் சக்தி வேற எதுவும் இல்ல ...நீ போய் பிரஷ் ஆகிட்டு வா நான் போய் சாப்பிட எதாச்சும் செய்யிறேன் என்றவள் பேகையும் மொபைலையும் அறையினுள் வைத்துவிட்டு கிட்சனில் நுழைந்துக் கொண்டாள்.
அவன் கண்ணைப் பார்த்து பேசுவதை அவள் தவிர்க்கவும் சக்தி உறுதிப் படுத்திக் கொண்டான் நிச்சயம் ஏதோ பிரச்சனை அவள் அதை மறைக்கிறாள் என்று.
அதே நினைவில் பிரஷ்ஷப் ஆகிவிட்டு வந்தவனின் காதில் ஆதிராவின் மொபைல் ரிங் டோன் கேட்டது.
அவனது பேகை வைக்கும் போது அவளது மொபைலையும் மறந்து வைத்துவிட்டாள்.
ஸ்கிரீனைப் பார்க்க ஒரு அன்னோன் நம்பரிலிருந்து கால் வந்தது.அழைத்தது மதன் தான்.
ஆதிராவிடம் கொடுப்பதற்காக அறைக்கதவு வரை சென்றவன் பின் ஏதோ நினைத்தவனாக அந்த காலை அட்டன் செய்தான்.
சக்தி போனை காதில் வைக்கவும் மறுமுனையில் .,.
என்னடி வந்துன்டானா சக்தி...இந்த தடவ விட்டுன்டேன் அவன. இனிமே அவன் உயிரோட இருக்கிறதும் இல்லாததும் உன் கைல. சொன்னது நியாபகம் இருக்குள்ள இரண்டே நாள் தான் டைம் அதுக்குள்ள நீ அந்த சக்திய விட்டுட்டுப் போயிடனும்.இல்லனா இன்னக்கி நான் மிரட்டுனது டிரெய்லர் தான். மெயின் பிக்சர் என்னத் தெரியுமா சக்தியோட சாவு பார்த்துக்க என ஓரே மூச்சாக எதிர் முனையில் யார் இருக்கிறார் என்பதுக் கூடத் தெரியாமல் லைனை கட் செய்தான்.
சக்திக்கு மறுமுனையில் அவன் பேச ஆரம்பிக்கும் போதே அது மதன் எனத் தெரிந்துவிட்டது.
வந்த கொலைவெறியை சிரமப்பட்டு கட்டுப் படுத்தியவன் மதன் பேசி முடிக்கும் வரை அமைதியாகக்
கேட்டான்.
இப்போது சக்திக்கு மதனை விட ஆதிராவின் மீது தான் கோவம் அதிகமாக வந்தது இதை தன்னிடம் சொல்லுவதெற்கன்ன என.
அங்கு ஆதிராவிற்கு அன்று மதன் ஹாஸ்பிட்டலில் அவன் சக்தியை குறி வைத்துப் பேசியது நினைவிற்கு வந்தது. மதன் அவளை கடத்தியபோதே அவன் எப்பேர்ப்பட்ட காரியத்தையும் செய்யக் கூடியவன் என தெரிந்துக் கொண்டாள்.
சக்தியிடமிருந்து இதை மறைப்பது தான் சரி. தெரிந்தால் சக்தி மதனிடம் சட்டையிடுவான்.இதனால்
சக்திக்கு எதுவும் நேரக்கூடும்.மேலும் சக்தியின் மேல் கொண்ட காதலினால் அவன் வாழ வேண்டும் என நினைத்தவள் சக்தியை விட்டு விலகிப் போவதாக முடிவெடுத்தாள்.
கிட்சனில் உள்ள வாஷ்பேஷனில் முகம் கழுவியளுக்கு அழுகை தான் நிற்கவில்லை.ஒருவாராகத் தன்னை சமன்படுத்திக் கொண்டவள் தயார் செய்த உணவை டேபுளில் எடுத்து வைத்தாள்.
கால் ஹிஸ்ரியிலிருந்து அந்த நம்பரை டேலிட் செய்தவன் மொபைலை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு எந்த சலனமும் இல்லாமல் டயனிங் டேபுளின் அருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டான்.
விஷயம் தெரிந்ததாக அவன் காட்டிக் கொள்ளவில்லை.
ஆதிராவிடமிருந்து இதை மறைப்பதே சரி எனப் பட்டது.அவளுக்கு தெரிந்தாள் நிச்சயம் மதனுக்கு ஒரு முடிவு கட்ட விடமாட்டாள் என்றுத் தெரியும்.
இருந்தாலும் கடைசியாக ஒருமுறை கேட்டுப்பார்க்கலாம் என.,.
நீ எதையோ மறைக்கிற ஆதிரா உண்மைய சொல்லு என்ன நடந்துச்சி ..
அப்படிலாம் இல்ல சக்தி. கனவு தான் நீ எதையும் போட்டு குழப்பிக்காத என்றவள் அவனுக்கு பரிமாறினாள்.
சக்தி அவ்வாறு மீண்டும் மீண்டும் கேட்கவும் .,.
என்ன உன்ன விட்டுட்டு போ சொல்றான்டா அந்த மதன்.நான் எப்படி உன்ன விட்டுப் போவேன் என சக்தியை கட்டியனைத்து அழனும் போலிருந்தது அவளுக்கு.சூழ்நிலை அவளை தடுத்தது.
உதட்டை வலிக்க கடித்து அதை கட்டுப் படுத்திக் கொண்டாள்.
இரவு முழுவதும் இருவருமே உறங்கவில்லை.ஆதிரா ஊமையாக அழுதாள்.
இரவு தூக்கமின்மைக் காரணமாக சக்தி தாமதமாக தான் எழுந்தான்.
எப்பொழுதும் அவனை எழுப்புபவள் இன்று எழுப்பவில்லை.
சக்தி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டிருக்க ஆதிரா அறையினுள் நுழைந்தாள்.
லேட்டாயிருச்சி என்ன எழுப்பிருக்காம்ல .... என்றவனிடம் ஏன் உனக்கு அலாரம் வச்சி எழ தெரியாதா என்றவள் விருட்டேன அறையைவிட்டு வெளியேறினாள்.
அதை சக்தி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவள் காபி எதுவும் கொடுக்காததால் தானே காபி போட கிட்சனில் நுழைய அங்கு காலைக்கான உணவு எதுவும் தயார் செய்து வைக்கவில்லை .போட்டது போட்டபடி அப்படியே இருந்தது.
அதை சக்தி கேட்டதற்குகு கூட ...
உன்ன எழுப்பறது உனக்கு சமச்சிப்போடறது இதுதான் என் வேலையா எனக்கு வேற வேலை இல்ல. நான் என்ன உனக்கு அடிமையா ஆர்டர் போடற .தேவைனா செஞ்சுக்க வேண்டியது தான என முகத்திலடித்தார் போல் பேசியவள் தன் ஸ்கூட்டியில் பறந்தாள்.போகும் வழி முழுதும் சக்தியிடம் இப்படி பேசியதற்காக அழுது கொண்டே சென்றாள்.
சக்திக்கு அவள் பேசியதில் துளி அளவுக் கூட வருத்தமில்லை.அவளை எண்ணிதான் வருத்தமாக இருந்தது இதுபோல் பேசியதற்கு அவள் கண்டிப்பாக வருந்திக் கொண்டிருப்பாள் என.
இதற்கான காரணமான மதனின் நினைவு வரவும் பைக்கில் ஹை ஸ்பீடில் சென்றவன் ஜே எம் கம்பனீஸ் என பொறிக்கப்பட்ட ஒரு பெரிய கட்டித்தின் முன் நிறுத்தினான்.
ஆம் அது மதன் தந்தையின் கம்பெனி.
ஜெ எம் என்றால் ஜெயமாலினி மதனின் அன்னையின் பெயர்.
செக்யூரிட்டி சக்திப் பின்னே கத்திக் கொண்டே வர அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாதவன் நேராக எம் டி யின் அறையினுள் நுழைந்தான்.
அங்கு மதன் கோர்ட் சூட்டில் ஏதோ ஒரு பைலை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
அவனது காலரை பிடித்தவன்
மதனை சரமாறியாக அடித்தான்.எவ்வளவு முயன்றும் மதனால் சக்தியை தடுக்க முடியவில்லை.
அங்கு வந்த செக்யூரிட்டி சக்தியை மதனிடமிருந்துப் பிரித்தவன் அவனை வெளியே இழுத்துச் செல்ல முற்பட மதன் அந்த செக்யூரிட்டியை தடுத்து்.
ஹே அவன் என் பிரண்டு அவனுக்கு என்ன அடிக்க உரிமை இருக்கு அடிக்கிறான்.சோ நீங்க யாரும் தலையிட வேண்டாமென்றவன் அந்த செக்யூரிட்டியையும் அங்கு கூடிய ஸ்டாப்ஸையும் வெளியே அனுப்பி வைத்தான்.
மீண்டும் மதனின் காலரைப் பிடித்தவன்...
எதுக்குடா இப்படி டார்ச்சர் பன்ற .ஆதிரா உன்ன என்னடா பன்னா. பாவம் டா அவ . நீ மெரட்டுன மிரட்டுல எப்படி பயந்துட்ட தெரியுமா..உன்ன என சக்தி கை ஓங்கவும் மதன் அவனைத் தடுத்தான்.
சக்தி ப்ளீஸ் கொஞ்சம் பொருமையா இரு ...முதல்ல என்ன நடந்ததுனு சொல்லு..
நடிக்காத டா ...நீ தானடா ஆதிராக்கு கால் பன்னி என்ன விட்டுப் போகலனா என்ன கொன்றுவேனு மிரட்டுன...உனக்கு என்னதான் வேணும் ஏன் இப்படி பன்ற..என ஆவேசமாக கத்த...
ரிலாக்ஸ் சக்தி .நான் அந்த மாதிரி எதுவும் பன்னலடா .நான் தப்புப் பன்னா ஒத்துக்கவேனு உனக்கு தெரியுமில்ல. அதுவும் இல்லாம நான் பழிவாங்குர எண்ணத்தலாம் எப்பையோ விட்டுட்டேன்டா என்றவுடன் சக்தி கடுப்பாகிப் போனான்.
டேய்ய் என சக்தி பல்லைக் கடிக்கவும்.,
நம்புடா நான் மாறிட்டேன் என்றவன் அதற்கான காரணத்தைக் கூறி முடித்தான்.
நான் நிஷா என்ன விட்டுப் போனப்பக் கூட ஆதிராவ பழி வாங்கனும்னு நினைச்சேன்.
ஆனா வீட்ல உண்ம தெரிஞ்சதால அம்மா என்கிட்ட முகம் குடுத்துப் பேசறதில்ல.நிஷா நான் தொந்தரவா இருக்கேனு பேங்களூர் போயிட்டா .நொந்து போயிட்டேன். ஒரு பக்கம் நிஷா இன்னொரு பக்கம் அம்மா என்னால முடியலடா.அப்பதான் புரிஞ்சது நான் ஆதிராவுக்கு எவ்ளோ பெரிய பாவம் பன்னிருக்கேனு.எந்த மூஞ்சிய வச்சிட்டு உங்க ரெண்டுப் பேர்க்கிட்டையும் மன்னிப்பு கேக்றதுனுதான் நான் உங்கள தேடி வரல. ரொம்ப ஸ்ரெஸா பீல் பன்னேன் அதான் கொஞ்ச நாள் ஆபிஸ் வந்துட்ருக்கேன்.மத்தபடி நீ சொல்ற மாதிரி நான் எதுவும் பன்னலடா என்ன நம்பு.
சக்திக்கும் மதன் கூறுவதில் உண்மை இருப்பதாகத் தோன்றியது.ஏனெனில் மதன்க்கு அவனது தந்தையை விட அன்னையை தான் மிகவும் பிடிக்கும் அதனால் அவரை வைத்து பொய் கூற மாட்டான்.
குழம்பியவன்.,.
அப்போ நீ செய்யலனா வேற யாரு செஞ்சிருப்பா...
முதல பிரச்சனை என்னனு சொல்லு என்ற மதனிடம் நேற்று நடந்தவற்றைக் கூறினான்.
சக்தியிடமிருந்து அந்த நம்பரை வாங்கியவன் அவன் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த நபரின் அட்ரஸை கண்டுபிடிக்கச் சொன்னான்.
அதற்குள் மருத்துவரை வரவழைக்கப் பட்டு மதனின் காயத்திற்கு மருந்துப் போடப்பட்டது.
சிறிது நேரத்தில் அவனது பெயரும் அட்ரசும் கிடைத்தது.
அதில் அந்த நபரின் பெயர் பிரஷான்த் என இருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro