39
மெல்ல வருணிடமிருந்து விலகியவள் அவன் முகம் பாராமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளைத் தன்னொடு சேர்த்து அனைத்துக் கொண்டவன் குனிந்து அவளது காது மடலை இதழால் உரசியவாரே...
ஐ லவ் யூ,,.என்றான் ஹஸ்க்கி வாய்சில்.
குட்டி பிளாஷ்பேக் இருக்கு நாம அங்க போலாம் அவங்க கொஞ்ச நேரம் என்ஜாய் பன்னட்டும் ...
திருமணத்தைப் பற்றி பேசவும் அப்படியே ஸ்தம்பித்து நின்றவளிடம் ஒரு கவரை கொடுத்தவர்...
மாப்ள ஃபோட்டோ அவர பத்தின விவரம் இதுல இருக்குமா பாத்துக்கோ என ஒரு கவரை அவளிடம் கொடுத்துவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டார்.
என்புள்ள என்பேத்திக்கு இராஜாமாதிரி ஒரு மாப்பிள்ளைய பார்த்திருக்கான் என சங்கரனின் புகழைப் பாடியபடியே அப்பத்தா பாக்கு இடிக் மதியோ சற்றும் முன் இருந்த சந்தோஷம் மறைந்து இறுகி போய் நின்றிருந்தாள்.
இந்தாம்மா எம்புட்டு நேரம் இப்புடியே நிக்கப் போற அதை பிரிச்சுப் பாரு.ம்ஹீம் அந்த காலத்துல எங்க இந்த மாதிரி ஃபோட்டோலாம் இருந்துச்சி .நான்லாம் உன் தாத்தன கல்யாணத்தன்னக்கி தான் முதமுதல்ல பாத்தேன்.ம்ஹீம்,..
என அப்பத்தா தாத்தாவின் நினைவில் மூழ்க,
மதியோ விருவிருவென அறைக்குள் நுழைந்து பெட்டில் விழுந்தவள் கதறி அழத் தொடங்கினாள்.
அழுது ஓய்ந்தவள் வருணைப் பற்றி அப்பாவிடம் பேச வேண்டும் என எழுந்திரிக்கும் பொழுது அந்த கவரிலிருந்த போட்டோ கீழே விழுந்தது.
புன்னகை மலர அதைகக் கையில் எடுத்தவளுக்கோ சந்தோஷந்தில் தலை கால் புரியவில்லை.
வாசகர்களே உங்களது கணிப்பு சரியே அது வருணின் புகைப்படம் தான்.
அன்று மதியழகியை சங்கரன் சந்தித்துச் சென்ற பிறகு வருண் மதியழகியின் பக்க நியாயத்தை எடுத்துக் கூறுவதற்காக அரசலூர் வந்திருந்தான்.
முதலில் சங்கரன் வருணைச் சந்திக்க மறுத்தாலும் பிறகு ஒப்புக் கொண்டார்.
பிறகு அவருக்கு புரியும் படி மதியழகியின் திறமைகளை எடுத்துக் கூறியவன் அவள் படிப்பிற்கேற்ற வேலை செய்வதில் எந்த தவறும் இல்லை என்பதை அவருக்குப் புரியவைத்தான்.
சங்கரன் தன் பெண்ணின் திறமைகளை அறிந்து அதில் பெருமைக் கொண்டாலும் மதியின் மீதிருந்த கோவம் சற்றும் குறையவில்லை காரணம் அன்று வருண் பேசிய விதம்.
சங்கரனின் முகத்தில் இன்னும் இறுக்கம் குறையாததை உணர்ந்தவன்.
நேத்து உங்க கிட்ட அப்படி பேசினதுக்கு மன்னிச்சிருங்க அங்கில். அதுல மதியோட பங்கு எதுவும் இல்ல.நீங்கதான் மதியோட அப்பானு தெரியாம அப்படி பேசிட்டேன்.அப்போலருத்து இப்போவரைக்கும் மதி எங்கிட்ட முகம் குடுத்துக் கூட பேசறதில்ல.என்றவுடன் சங்கரன் ஆச்சர்யமாக வருணை நிமிர்ந்துப் பார்க்கவும் ...
ஆமாம் அங்கிள் நீங்க கிளம்பினப்றம் மதி என்ன அடிச்சிட்டா. எதுக்குனு தெரியுமா அங்கில் உங்க கிட்ட நான் அப்படி பேசுனதுக்காக.
என்ன மதி உங்கள அடிச்சாளா என்ன சொல்றிங்க என சங்கரன் ஆச்சரியமாகக் கேட்கவும்.
உண்ம தான் அங்கில்.அடிச்சிட்டு என்ன சொன்னா தெரியுமா எனக்கு உங்க மேல அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லனு சொன்னா.கண்டிப்பா அது பொய்யினு எனக்குத் தெரியும்.என்றவன் மெல்ல சங்கரனை நிமிர்ந்துப் பார்க்க சங்கரனோ புருவத்தைச் சுருக்கியபடி வருணைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதுக்கு காரணம் கூட நீங்கதான்.உங்க சம்மதம் இல்லாம மதி எந்த முடிவையும் எடுக்கமாட்டா. இதுக்குமேலையும் உங்க பொண்ணு மேல நப்பிக்க வரலனா அது உங்க விருப்பம்.ஆனா மதிய வெறுத்துறாதிங்க உங்க மேல உயிரையே வச்சிருக்கா வரேன் அங்கில் என்றவன் அங்கிருந்துக் கிளம்பினான்.
எறும்புக்கெல்லாம் பயப்படுகிற தன் பெண் ஒரு ஆண் மகனை அதுவும் விரும்புகிற ஒருவனை கை நீட்டி அடித்திருக்கிறாள் அதுவும் தனக்காக.வீட்டை விட்டு வெளியேறினாலும் பெற்றவனின் சம்மதத்திற்காக காத்திருக்கும் தன் பெண்ணை தவறாக நினைத்துவிட்டோமே என கலங்கியவர் வருணை அழைத்து மதியழகியின் மீது எந்த கோபமும் இல்லை என்றும் உங்கள் இருவரின் காதலுக்குத் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
மதியழகி விருப்பப்படியே சென்னையில வேல செய்யட்டும் உங்க மனைவியா.சீக்கிரம் உங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டுவாங்க என்றவர் மனநிறைவோடு வருணை சென்னை அனுப்பி வைத்தார்.
இதை அனைத்தையிம் வருண் சக்தியிடம் ஆதிராவின் தந்தை இருக்கும் மருத்துவமனையை அறிந்த அன்றே கூறிவிட்டான்.இதனால் தான் இரண்டு நாட்கள் வீட்டிலில்லை உனக்கு உதவவும் முடியவில்லை என சக்தியிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.
பிளாஷ்பேக் ஓவர்....
வருண்:
இன்னும் எவ்வளவு நேரம் மேடம் இப்படியே என்மேல சாஞ்சிட்டு நிக்கப் போறிங்க..
மதி:
தெரியல ஆனா இப்படியே இங்கயே நிக்கனும் போல இருக்குங்க.
வருண் :
எனக்கும் அப்படித்தான் இருக்கு .ஆனா ஒரு பெரிய வேல ஒன்னு பாக்கி இருக்கே.
மதி: என்ன அது .,
வருண்: ம்ம்ம் .,உன் மாமியார்க்கிட்ட சம்மதம் வாங்க வேண்டா...நீதான் வந்து கேக்கனும்.
மதி:என்ன நானா..எனக்கு பயமா இருக்கு நீங்களே கேட்ருங்களேன்.
வருண்: அடிங்க நான் மட்டும் என்னோட மாமனார்க்கிட்ட சம்மதம் வாங்குனேன்ல.
மதி:பயமா இருக்கே..
அதெல்லாம் ஒன்னுமில்ல வா பாத்துக்கலாம் என வருண் மதியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
வருண் கையை இறுக்கிப் பிடித்தபடி பயந்து பயந்து மதி வீட்டடினுள் நுழைய அங்கு ஹாலில் ஜானகி,ஆதிரா,சக்தி என அனைவரும் அமர்ந்திருந்தனர்.
ம்ம்ம் போய் பேசு என வருண் மதியின் காதில் கிசுகிசுக்க.,
பயத்தில் எச்சிலை விழுங்கியவள் அது,..அது வந்து.
ஏய் போதும் டா புள்ளய போட்டு பயமுறுத்தாத. நீ வாம்மா என ஜானகி மதியை இழுத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.
ஏன் மா இப்படி இருக்க கொஞ்ச நேரம் விளையாடலாம்னு இருந்தா போ மா என சலித்தபடியே சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.
மதி எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க அவளது தலையை மெல்ல வருடியவர்.
உன்ன பாத்த அன்னக்கே எங்கிட்ட வந்து சொல்லிட்டாம்மா.நான் காதலுக்கு எதிரிலாம் இல்ல. என் பையன் விருப்பம் தான் என்னோட விருப்பம் .பயப்படாத.,என மதியின் நெற்றியில் முத்தமிட்டார்.
ம்ம்ம் சரிங்க அத்தை..
உன்னையெல்லாம் தூக்கி போட்டு மிதிக்கிறவதான் உன் பொண்டாட்டியா வருவானு நினச்சன் மதி என்னனா இப்படி பயப்பட்றா,,.ஜானகி
யாரு இவளா பயப்பட்றா என வருண் தன் கன்னத்தை தேய்க்க..மற்ற மூவரும் புரியாமல் முழித்தாலும் மதிக்கு நன்றாகவே புரிந்தது.அன்று அறைந்ததைதான் குறிப்பிடுகிறான் என.
சக்தியை மதிக்கு தெரியும் என்பதால் ஆதிராவை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
மதிக்கு ஆதிராவை பிடித்துப் போக அக்கா அக்கா என ஒட்டிக் கொண்டாள் ஆதிராவும் தான்.
மதி கொஞ்ச நேரத்தில் அந்த குடும்பத்தில் ஒருவளாகக் கலந்திருந்தாள்.
இரவு உணவைச் சாப்பிட்டப் பின் ஹாஸ்டலுக்குச் செல்லுமாறு ஜானகி கேட்டுக் கொள்ளவும் மதி மறுக்காமல் ஒப்புக் கொண்டாள்.
வருணின் காரில் ் விடுதியை நோக்கி இருவரும் செல்ல மதி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.
என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு.
ஹாங்.. அது..நீங்க என்மேல கோவமா இருக்கிங்ளா,.
கோவமா எதுக்கு என வருண் புரியாமல் கேட்க...
நான் அன்னக்கி உங்கள அடிச்சேன் இல்ல அதுக்கு தான்.
ஆமாம் என்றவனின் முகம் மாறிப்போயிருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro