37
எவ்வளவு நேரம் அந்த சோபாவில் அமர்ந்திருப்பாள் என்று தெரியாது.
அந்த தனிமையில் கிடைத்த அமைதியில் பாரதி கூறியவற்றை தன் மனதில் அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
தன் கன்னத்தில் ஈரம் படர்வதை தொட்டு உணர்ந்தவள் காரணமின்றி ஏன் அழுகிறோம் என குழம்பினால்.
கண்ணீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தவளின் கண்ணில்....தன் அன்னையின் தோளில் கைப்போட்டபடி சிரித்துக் கொண்டிருக்கும் சக்தியின் உருவம் தென்பட அந்த மாயப் புன்னகையில் சிக்குண்டவள் போல் அந்தப் போட்டோவை நோக்கி நெருங்கினாள்.
சக்தியின் பிம்பத்தை வருடி
கண்களை மூடியவளின் மனதில்
அறியாமல் செய்த தவறுக்கு பெண் என்றும் பார்க்காமல் தன் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சக்தி...
தன்னை கொச்சைச் சொற்களால் கலங்கப்படுத்தியவர் முன் அந்த கலங்கத்தைத் துடைக்க தன் கழுத்தில் தாளி கட்டிய சக்தி....
தன்னைக் காணவில்லை என்றவுடன் பதறியபடி தேடிய சக்தி..,.
ஒவ்வொன்றையும் மறுக்கும் போதும் தன்னைக் கட்டாயப்படுத்தாமல் பொறுமைக் காத்த சக்தி...
தாயின் நினைவில் தன் முன் குழந்தைப் போல் அழுத சக்தி...
அன்று உடல்நிலை சரியில்லை என்றவுடன் பதறிப் போய் கலங்கிய சக்தி..,
அன்று மருத்துவமனையில் தன் தந்தையின் சிகிச்சையின் போது ஒரு தோழன் போல்ஆதரவாக இருந்த சக்தி,...
அன்னை இல்லத்தில் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிய சக்தி,...
இதுவரை கணவன் என்ற உரிமையில் தன்னை நெருங்காமல் இருந்த கண்ணியமான சக்தி,...
என
தன் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தது முதல் இன்று வரையிலான சக்தி வந்துப் போனான்.
இதுவரை சக்தியின் கண்ணில் தனக்காகப் பூத்த அன்பு அக்கறை ,பரிதவிப்பு ,பயம் கோபம் ,தோழமை என இவை அனைத்தையும் வேறு ஒருவளுக்கு விட்டுத் தருவதை நினைத்துப் பார்த்தவளின் தலை மறுப்பாக தலையசைக்க....
எனக்கு தெரியல சக்தி பாரதி பொறாமைன்றா பொசசிவ்னஸ்ன்றா விரும்பறேன்றா.,எதுவும் புரியல சக்தி...
ஒன்னும் மட்டும் புரியுது நீ காட்ற அன்பு, கோவம், பாசம், பரிதவிப்பு இது எல்லாமே எனக்கு மட்டும் தான் கிடைக்கனும்னு தோனுது.
இந்த மாதிரி இதுக்கு முன்னாடி யார்க்கிட்டையும் நான் பீல் பன்னதே இல்ல உங்கிட்ட மட்டும் இந்த மாதிரி உணர்ந்திருக்கேன். அதுவும் எப்போலருந்துனு் தெரியல...
ஒரு வேள இதெல்லாம் உணர்ந்தா அது காதல்னா ...ஐயம் ஃபாலின் லவ் வித் யூ சக்தி என்றவளின் இதழில் புன்னகையுடன் மில்லி மீட்டர் அளவில் வெட்கம் படர அதற்குத் துனையாக கண்களும் கலங்கிப் போனது.
முதன்முதலாக சக்தியின் மீதான காதலை உணர்ந்ததால் ஏற்பட்ட உடல் சிலிர்ப்போடு நின்றிருந்தவளை காலிங் பெல் ஓசைத் தட்டி எழுப்பியது,...
மில்லி மீட்டர் வெட்கம் சென்டி மீட்டாராக மாறி அவளது கன்னங்களை சிவக்கச் செய்ய இதயத் துடிப்பு நூறைத் தாண்டியது.
பின்ன இருக்காதா வந்தது சக்தியாச்சே.,.அவன் மறந்து வைத்த வீட்டின் மாற்றுச் சாவியை ஆதிரா அறியாதவளில்லை.
காதல் நிறைந்தக் கண்களோடு இனி சக்தியை எப்படி எதிர் கொள்வது என சிறிது நேரம் நின்றிருந்தவள் இதயம் படபடக்க கதவினருகேச் சென்றாள்.
கதவை ஆதிரா திறக்கவும்.,..
சினேகமாகப் புன்னகைத்தபடி ஸ்ஸ்ஸ் சாரி காலைல கீய மறந்து இங்கயே வச்சிட்டுப் போயிட்டேன்....தூங்கிட்டியா டிஸ்டப் பன்னிட்டனா.,என்றான்.
தூங்கலாம் இல்ல உள்ள வா..,என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை எதுவும் எழவில்லை...
ம்ம்ம் என அழகாகத் தலையை ஆட்டியபடி உடைமாற்றுவதற்காக அறையினுள் நுழைந்துக் கொண்டான்.,.
சக்தி சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள் இரவு உணவு தயார் செய்வதற்காக கிட்சனில் நுழைந்துக் கொண்டாள்.
தோசையை ஊற்றியபடி தனியாக ஆதிரா சிரித்துக் கொண்டிருப்பதை கவனித்தவன் சிலாப்பில் ஏறி அமர்ந்தபடி..,.
இன்னிக்கு உன்கிட்ட ஏதோ ஒரு சேஞ்ச் இருக்கு ...தனியா வேற சிரிக்கிற என்ன ஆச்சு.,..
ஹாங் அது வந்து.,.அது,.அப்படி எல்லாம் ஒன்னுமில்ல நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்றவள் அவன் தட்டில் தோசையை வைத்துவிட்டு சக்தியை நிமிர்ந்துக் கூடப் பார்க்காமல் தோசை ஊற்றுவதில் கவனம் செலுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
என்ன நம்ம ஆளு ரொம்ப தடுமாறா ...ம்ம்ம் என சாப்பிட்டபடியே.,.
நீ ரொம்ப குஷியா இருக்கற மாதிரி தெரியுது.,.எதாவது குட் நியூசா,..என சக்தி துருவி துருவி கேள்வி கேட்க ...
இவன் ஒருத்தன் நிலமைய புரிஞ்சிக்காம,... பாரதிக்கிட்ட பேசினேன் அதான் என சமாளித்து வைத்தாள்.
.
.
.
.
.
.
.
.
தன் சொந்த ஊரான அரசலூரில் இறங்கியவள் இந்த நான்கு மாதங்களில் அவள் அனுபவிக்க முடியாமல் போன அந்த குளிர்ந்த இயற்கை காற்றை ரசித்தபடி தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.
தின்னையில் பாக்கு இடித்துக் கொண்டிருந்த செல்லத்தாயி (மதயழகியின் அப்பத்தா) கவனித்துவிட,..
அம்மாடி எப்படி ஆத்தா இருக்க எம்புட்டு நாளாச்சு உன்ன பாத்து.கழுதைக்கு இப்பத்தான் வழி தெரிஞ்சதா...என செல்லமாகக் கோபித்துக் கொள்ள மதி தான் குழம்பிப் போனாள்.
பின்ன
வீட்டைவிட்டு சொல்லாமல் வெளியேறிவளிடம் அன்பாகப் பேசினால் குழம்பாமல்.
கழுத என்ன நினப்புல இருக்க என மதியைப் போட்டு உலுக்க..
ஹாங் ...அப்பத்தா எப்படியிருக்க...என அவரை அனைத்துக் கொண்டாள்.
அப்பாத்தாவிற்கு வயதானதால் சரியாக காது கேட்பதில்லை. மதி கொஞ்சம் சத்தமாகவே பேசினாள்.
அந்த சத்தத்தில் மதியழகியின் தந்தை சங்கரன் வெளியே வர மதியழகி அமைதியானால்.
சங்கரன் தன் அன்னையையும் மதியழகியையும் மாறி மாறி முறைத்துக் கொண்டிருந்தார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro