35
சக்தி ஏதோ நினைத்தவனாய்
திரும்ப ஆதிரா அவனை வாடிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இத்தனை நேரம் மலர்ந்த முகத்துடன் இருந்தவள் தற்போடு வாடியதை கண்டு.
மறுபடியும் என்ன ஆச்சு ஆதிரா இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா,.,.
சக்தியின் முகமும் வாடி தான் போனது.
அப்படி இல்ல சக்தி .,எனக்கு உன் மேல நம்பபிக்க இருக்கு ..,நீ கண்டிப்பா சொன்னத செய்வனு தெரியும் .,
அவளது பதில் அவனுக்கு நிம்மதியைத் தந்தாலும் அவள் முக வாட்டத்திற்கு என்ன காரணம் என குழம்பிப் போனான்.
அப்றம் ஏன் ஒரு மாதிரி இருக்க.,.என்று கேட்டேவிட்டான்.
ஹான்.,,அது உன்ன.,.,.என ஆரம்பித்தவள் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் நிறுத்தி விட்டால்.
சக்தி கேட்டவுடன் ஒரு வேகத்தில் உன்ன விட்டுட்டு நான் எப்படி போவேன் என சொல்ல வந்தவள் பாதியிலே நிறுத்திவிட்டாள் .சொன்னால் தன்னை தவறாக எடுத்துக் கொள்வானோ என நினைத்து.
அவன் அடுத்தக் கேள்வி கேட்பதற்குமுன் பேச்சை மாற்றுவதற்கென
எனக்கு பசிக்குது நாம வீட்டுக்கு போலாமா.
பசி என்று சொன்னவுடன் பதறியவன்.
சாரி ஆதிரா நான் மறந்தே போயிட்டேன் வா கிளம்பலாம் என்றவன் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் பைக்கை கிளப்பி ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.
இப்பவே டைம் ஆச்சு. இனி வீட்டுக்குப் போய் எப்போ சமச்சி எப்ப சாப்பட்றது.வா இங்கயே சாப்டுட்டு போலாம் என அழைத்துச் சென்றான்.
இருவரும் தங்களுக்குத் தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க சக்தியின் போன் சினுங்கியது.
வருண் தான் அழைத்திருந்தான்.
போனை எடுத்தவுடன் சக்தியை பேச விடாமல்.
மச்சி எனக்கு எப்படா டிரீட்டு என்றான் எடுத்த எடுப்பிலே,.,.
எதுக்கு..,.
ம்ம்ம் என்னடா தெரியாத மாதிரி கேக்கற அதான் உனக்கு லவ் செட்டாகிருச்சே அதுக்கு தான்.
என்னடா உலற,,,,.
சும்மா நடிக்காத அண்ணியும் நீயும் பீச்ல இருந்திங்க இப்ப ஹோட்டல்ல இருக்கிங்க.....ஆனா நீ உன் லவ் சக்சஸ் ஆனத எங்கிட்டருந்து மறச்சிட்டல., இதுக்கு பண்டிப்பா பனீஷ்மென்ட் இருக்கு மச்சி,,
வருணும் பீச்சிற்கு வந்திருந்தான். ஆனால் சக்தியும் ஆதிராவும் வருணை கவனிக்கவில்லை. இருவருக்கும் தனிமை கிடைக்கட்டும் என அவர்களிடம் பேசாமல் தூரத்தில் மதியின் நினவுகளில் கரைந்தவனாய் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.பின் வருண் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கும் போதுதான் அவர்கள் இருவரும் ஹோட்டலில் நுழைவதைக் கவனித்தான்.
வாயில எதாவது வந்துரும் டா என கடுப்பாகியவன் எதிரில் ஆதிரா புருவம் சுருக்கி என்ன என்பது போல் கேட்க .,,..
வருண் தான் ..,. அவன கொஞ்சம் திட்ட வேண்டியிருக்கு ...நீ சாப்பிடு நான் இதொ வந்திரேன் என்றவன் போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இரண்டு டேபிள் தள்ளி கதவின் அருகே நின்றுக் கொண்டான்.
ஆதிரா ஆர்டர் செய்திருந்த வெஜிட்டபுள் பிரியாணியை பிசைந்த வண்ணம் யோசனையில் இருந்தாள்.
இவர்களது டேபுளிற்கு அருகில் உள்ள டேபுளில் நான்கு இளம் வயது பெண்கள் அமரந்திருந்தனர்.
ஒருவரை ஒருவர் மாறி மாறி கிண்டலடித்தபடி கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் எழுப்பிய சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவள் அப்பெண்கள் அடிக்கும் கூத்தைப் பார்க்க தன் கல்லூரி கால நினைவு வந்தது.
அதில் ஒரு பெண்
Girl 1:
ஏய் அங்க பாருங்கடி மிஸ்டர் ஹேன்சம் ...செம்மையா இருக்கான்ல.
Girl 2:
எங்கடி...
Girl 1:
ஹே எரும அந்த கார்னர்ல பாரு .,பிளாக் ஷர்ட் போட்ருக்கான்ல அவன்தான்,..
ஆமான்டி செம்மையா இருக்கான்...என மற்ற பெண்கள் வாயைப் பிளக்க.
Girl 1: ஏய் என் ஆள சைட் அடிச்சதுப் போதும் எல்லா இந்தப் பக்கம் திரும்புங்க.
Girl 2:அடிங்க,,. அதெல்லாம் முடியாது,ஓடி போயிரு.
Girl 3: இப்பத் தானடிப் பாத்த அதுக்குள்ள என்ன உன்னோட ஆளுங்குற...
Girl 1: என்ன ஓவரா பொங்குரிங்க அவன் என்னோட ஆளுதான் இனிமே. என்னோட மனசுக்குப் புடிச்ச மாதிரி இருக்கான்.
Girl 4: அய்ய.,
Girl 1: ஓய் என்ன முகத்த இப்படி சுழிக்கிற.,அவனுக்கென்ன எனக்குப் புடிச்ச பிளாக் ஷர்ட், ஸ்லீவ்வ பாரு அழகா மடிச்சுவிட்ருக்கான்.ஹேர் ஸ்டைல பாரு எவ்ளோ சூப்பரா இருக்குனு. கண்ணத்துல குழி விழுகறது தான் செம்ம கியூட்டா இருக்கு. இது பத்தாதா ம்ஹீம்.
இவர்கள் இவ்வளவு மும்பரமா ஒருவனை விமர்சித்துக் கொண்டிருப்பதெல்லாம் ஆதிராவின் காதில் விழ...
யாராக இருக்குமென அவளது கண்களை அங்கு சுழல விட அங்கு சக்தி தன் அடர்ந்த கேசத்தைக் கோதிய வண்ணம் சிரித்தபடி போன் பேசிக் கொண்டிருந்தான். அந்த பெண் குறிப்பிட்டது போலவே சக்தியின் கன்னத்தில் குழி விழுவதை கவனித்தாள்.இத்தனை நாள் ஆதிரா அவளது குழி விழும் கன்னத்தைக் கவனித்ததில்லை.
இதழில் பூத்த புன்னகையுடன்
இமைக்காமல் சக்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
Girl 4: அவன் அழகா இருந்தா போதுமா நல்லவனா இருக்க வேண்டாவா.ஒரு வேள அவன் ஃபிராடு, பொறுக்கியா இருந்தா என்னப் பன்னுவ.
இதை கேட்ட ஆதிராவிற்கு சுருசுரவென கோபம் தலைக்கேறியது. .
சக்தி போன் பேசி முடித்துவிட்டு அவள் எதிரில் அமர்ந்தான்.
பசிக்குதுனு சொன்ன சாப்டாம அப்படியே வச்சிருக்க. ஏன் புடிக்கலையா நான் வேனுனா வேற எதாவது ஆர்டர் பன்னட்டுமா.
மறுப்பாகத் தலை அசைத்தவள் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினால்.இல்லை இல்லை அதற்கு முயற்சித்தாள்.
ஆனால் கவனம் அந்தப் பெண்களின் உரையாடலிலே இருந்தது.
Girl 4: பாரு நான் சொல்லி வாய மூடல .,. அவன் யாரோ ஒரு பொண்ணுக் கூட வந்துருக்கான்.
Girl1: அவ அவனொட தங்கச்சியாவோ இல்ல பிரண்டா கூட இருக்கலாம்.
Girl4: ம்ஹீம் பிரண்டா.,...இப்பல்லாம் பசங்க பிரண்டுனுதான் ஆரம்பிப்பானுங்க அப்றம் அது வேற மாதிரி முடிச்சிருவானுங்க,.,. இவன பாத்தாலும் அப்படித் தான் தெரியுது.
சக்தி எனக்கு போதும் நீ சாப்டனா நாம கிளம்பலாமா.,.
ம்ம்ம் நானும் சாப்டேன் என்றவன் பில் புக்கில் பணத்தை வைத்துவிட்டு எழ ஆதிராவும் எழுந்தாள்.
சக்தி முன் நடக்க ஆதிரா பொறுமையாக அவன் பின்னே நகர்ந்தவள் ஏதோ நினைத்தவளாய் அந்த பெண்களை நோக்கி வந்தாள்.
ஏனோ ஆதிராவிற்கு காரணமே இல்லாமல் அந்த பெண்களின் மீது கோபம் வந்தது.
எக்ஸ்கியூஸ்மி ஹீ ஸ் மை ஹஸ்பன்ட் சோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ்... என்றவள் ஒருமுறைஅவர்களை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
Girl 1 ஹஸ்பன்டா...என வாயை பிளக்க மற்ற மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
ஆதிரா காலர் வைத்த சுடி அணிந்திருந்தமையால் தாளி அந்தப் பெண்களின் கண்ணில் படவில்லைழ
எங்க போன ஆதிரா திரும்பி பார்த்தா ஆள காணோம்.
ஹான்...இல்ல அவங்க பர்ஸ கீழ விட்டுட்டாங்க அதான் சொல்லிட்டு வந்தேன்.
.
.
.
.
.
.
.
.
.
.ஆதிரா
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
சக்தி ஒரு தலையணையை அனைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.
அவனைப் பார்த்தவுடன் ஹோட்டலில் அந்த பெண்களின் உரையாடல் நினைவிற்கு வந்தது.
Girl1: அவ அவனொட தங்கச்சியாவோ இல்ல பிரண்டா கூட இருக்கலாம்.
Girl4: ம்ஹீம் பிரண்டா.,...இப்பல்லாம் பசங்க பிரண்டுனுதான் ஆரம்பிப்பானுங்க அப்றம் அது வேற மாதிரி முடிச்சிருவானுங்க,.,. இவன பாத்தாலும் அப்படித் தான் தெரியுது.
இதுநாள் வரை அவன் தன்னை தவறான எண்ணத்தில் பார்த்ததும் இல்லை. அந்த எண்ணத்தில்
தன்னிடம்
பேசியதும் இல்லை.தன்னை தங்கத்தட்டில் வைத்துத் தாங்காதது ஒன்று தான் குறை.தன் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ததில்லை.இன்று அன்னை இல்லத்திற்கு தன்னை அழைத்துச் சென்றதுக் கூட தனக்குப் புரியவைத்து மனநிலையை மாற்றுவதற்காகத் தானே தவிற அதில் சுயநலம் இல்லை.
சுயநலம் சிறிதும் இல்லாமல் தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறான்.இதற்கெல்லாம் கைமாறாக எண்ண செய்யப் போகிறோம்.
நான் அப்பா அம்மாவோட சமாதானம் ஆகி அங்க போனா அப்ப சக்திக்குனு யாருமே இருக்கமாட்டாங்க.அவனுக்கும் லைஃப்னு ஒன்னு இருக்கு. கண்டிப்பா சக்திக்குனு ஒரு நல்ல வாழ்கைய அமச்சி குடுத்துட்டு போனும் என யோசித்தவள்.
ரேஷ்மா ஆமா ரேஷ்மா...இருக்கா அவ கூட சக்திய விரும்பறதா சொன்னா..,.ஆனா சக்தி மனசுல அவ இருந்தா.,.அவளா.,ச்சீ சீ சக்தி மனசுல ரேஷ்மாவா சான்சே இல்ல...
ஒரு வேள இருந்தா ...சக்திக்கும் ரேஷ்மாவிற்கும் மேரேஜ் பன்னி வச்சிருவியா...
என ஆதிராவின் மனசாட்சி கேள்வி கேட்க...
கண்டிப்பா சக்தி மனசுல அவ இருக்கமாட்டா....
எப்படி சொல்ற
ஒருவேள இருந்தா.,.மேரேஜ் தான.
நோ.,........................,,..,என சத்தமாகக் கத்தியவள் எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro