34
சக்தி வந்ததைக் கூட அறியாமல்
ஆதிரா முழங்காலைக் கட்டிக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தவன் ம்ஹீம் என செறுமினான்.
திடுக்கிட்டு நிமிர்ந்தவள்.
சக்தி எப்போ வந்த .....
இப்பதான்...
ஒரு நிமிஷம் இரு காபி எடுத்துட்டு வரேன் என எழ முற்பட்டவளை கையை உயர்த்தி அமரச் சொன்னவன்.
அப்படி என்ன திங்க்கிங் நான் வந்ததுக் கூடத் தெரியாம என்றான் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி.
ஹாங்....அதுவா ஏதோ ஒரு நினப்புல இருந்துட்டேன்.அதான் கவனிக்கல. நான் போயி காபி எடுத்துட்டு வரேன்.
எனக்கு காபிலாம் எதுவும் வேண்டா ஆதிரா. நாம இப்போ வெளிய போறோம் என்றான் அவளையே பார்த்தபடி.
வெளியவா ....என்றவள் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு.
நான் வெளிய எங்கயும் வரல சக்தி. நீ மட்டும் வேணும்னா போயிட்டுவா என்றவளிடம்.
இல்ல ஆதிரா நீ வந்து தான் ஆகனும். அது முக்கியமான இடம்.சப்போஸ் உனக்கு அந்த இடம் பிடிக்கலனா இனிமேல் உன்ன கம்பல் பன்ன மாட்டேன்.பட் இப்ப நீ எங்கூட அங்க வந்தாகனும்.
ஆதிரா பல முறை மறுத்தும் அவளை வற்புறுத்திய சக்தி அவளுக்கு புதிதாகவே தெரிந்தான்.
எப்பொழுதும் தன் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யாதவனின் இன்றைய பிடிவாதம் ஆதிராவை குழம்பச் செய்தது.
வேண்டா வெறுப்பாக ஆதிரா வருவதாக ஓப்புக் கொண்டாள்.
பைக்கிலிருந்து இறங்கியவள் பலகையில் உள்ள அன்னை இல்லம் என்பதை வாசித்துவிட்டு சக்தியின் புறம் திரும்பி
இங்க.,,என இழுக்க.,,
உள்ள வா சொல்றேன் என உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே நுழைந்ததும் அன்னை இல்லத்தின் நுழைவாயில், அதற்கு இடப்பக்கம் ஒரு சிறிய பூங்கா அங்கு வசிப்பவர்களுக்கென.
சக்தி ஆதிராவை முதலில் அந்த பூங்காவிற்குத் தான் அழைத்துச் சென்றான்.
அங்கு சின்னஞ் சிறிய மழலைகள் மணலிலும்
சருக்கலிலும் ஊஞ்சளிலும் விளையாடிக் கொண்டிருக்க ...
வயதில் முதியவர்கள்
ஆங்காங்கே உள்ள ஸ்டோன்
பென்ஜில்
அமர்ந்தபடியும் ,நடந்தபடியும் பேசிக் கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் ஆதிரா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க சில நொடி அமைதிக்குப் பின் சக்தியே பேசத் தொடங்கினான்.
அங்க விளையாண்டுட்டு இருக்காங்களே சின்னச் சின்ன வாண்டுகள் அவங்கலாம் எப்படி இங்க வந்தவங்கத் தெரியுமா..,ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சூழ்நிலைலருந்து வந்துருக்காங்க.
குப்பைத் தொட்டிலருந்து, அப்றம் பெத்தவங்க விபத்துல இறந்து போய் ஆதரவயிழந்ததுனால , ரோட்டுல பிச்சை எடுத்துட்டு இருந்தவங்க,அப்றம் வாலன்ட்டியராவே குழந்தைகள இங்க வந்து விட்டுட்டு போயிருக்காங்க இன்னும் இந்த மாதிரி நிறைய சுட்சுவேசன பேஸ் பன்னிட்டு வந்துருக்காங்க.
இவங்களுக்கெல்லாம் அம்மா அப்பானு யாரும் இல்ல.ஏன் அப்படினா என்னனுக் கூட தெரியாது. இந்த இல்லம் தான் அவங்க உலகம். இங்க இருக்கறவங்க தான் அவங்க சொந்தம் பந்தம் தாத்தா பாட்டி எல்லாமே.
அவங்க சிரிப்புல பொய் இல்ல. இந்த உலகத்துலயே இவங்கதான் ரொம்ப சந்மோஷத்தை அனுபவிச்சிட்டு இருக்காங்க.
வயசுல முதிர்ச்சியடையாத குழந்தைகள் ஒரு பக்கம் இருக்க இன்னொருப் பக்கம் வயசுல முதிர்ச்சியடைந்த குழந்தைகள்.
தங்களோட குழந்தைகளை பல கனவுகளோட வளர்த்து ஆளாக்கி அவங்களுக்குனு ஒரு நல்ல குடும்பத்த அமைச்சி தந்தவங்க.
அந்தப் பிள்ளைகளே
கடைசில அவங்கல விரட்டி விட்டு, ஒரு சில பேர் பாரமா இருக்காங்கனு இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்க.
சொந்தம் பந்தம் அப்பா அம்மா னா என்னனே தெரியாதக் குழந்தைகளும்,சொந்தம் பந்தம் பத்தி தெரிஞ்சி வெறுத்தக் குழந்தைகளுமான (முதியவர்கள் ) இவங்க எல்லாரும் எல்லாரையும் விட ரொம்பவே சந்தோஷமா இருக்காங்க.
இதுல நானும் ஒருத்தன் என்றவுடன் சக்தியை ஆதிரா திரும்பிப் பார்க்க....மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு.
நானும் ஒருத்தனா இருந்தேன் ...என முடித்துவிட்டு மனதினுள் என் அம்மா என்னவிட்டு போனதுலருந்து நீ என் வாழ்க்கைல வர வரைக்கும் என நினைத்துக் கொண்டான்.
சக்தியின் கண் மழலைகளின் புறம் திரும்ப ஆதிராவின் கண் சக்தியின் மீதேயிருந்தது.
இவங்களுக்கு கிடைக்காததெல்லாம் உனக்குக் கிடைச்சிருக்கு. இடையில தவறுதலான தற்காலிகப் பிரிவு.அதை கண்டிப்பா நான் சரி பன்னிடுவேன்.
ஆனா இப்படியே எதையோ தொலைச்ச மாதிரி நீ இருந்நா எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு.அதுவும் இந்த நிமிசம் மட்டும் தான் நம்ம கைல இருக்கு. அடுத்த நிமிசம் என்ன ஆகும்னு யாருக்கும் தெரியாது.
இவங்கலாம் அடுத்த நிமிசத்தை பத்தியோ இல்ல கடந்துபோன நிமிசத்தைப் பத்தியோ யோசிக்கறது இல்ல.அதுதான் இவங்க சந்தோஷத்துக்கு காரணமும் கூட.
இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுனு தெரியல என்றவன் ஒரு முறை ஆதிராவை பார்த்துவிட்டு மழலைகளை நோக்கிச் சென்றுவிட்டான்.
சக்தி சென்றவுடன் கலங்கிய கண்களுடன் அங்கு உள்ளவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிரு்ந்தாள்.
சக்தி கூறியடியே அவர்களது சிரிப்பில் பொய் இல்லை.எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாத மகிழ்ச்சியை அவர்களிடம்
கண்டாள்.
கன்னங்கில் வழிந்த விழி நீரைத் துடைத்தவள் சில நிமிடங்கள் கண்களை மூடித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
மனம் லேசாக இருப்பதை உணர்ந்தவளின் கண்கள் சக்தியைத் தேடியது.
சக்தி மூன்றரை வயது மதிக்கத்தக்க சிறுவனின் முன் அவனது உயரத்திற்கேற்ப முட்டிப் போட்டு அமர்ந்து அச்சிறுவனின் மூக்கைப் பிடித்து ஆட்டியபடி பேசிக் கொண்டிருந்தான்.
அந்தக் காட்சியைக் கண்டவளின் இதழ்கள் மெல்ல விரிந்தது.
சிரித்துக் கொண்டே ஆதிரா தங்களை நோக்கி வருவதைக் கண்டவனின் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிழுந்தது.
எத்தனை நாட்கள் ஏங்கியிருக்கின்றான் அவளின் பூவிதழ் புன்னகைக்காக .
அந்த மழலையின் முன்பு தானும் முட்டிப் போட்டு அமர்ந்தவள் அவனது கொழு கொழு கன்னத்தைக் கிள்ளியபடி....
உங்க பேர் என்னச் செல்லம் ..,...
சிறு புன்னகையுடன் ரிஷி .,.உன் பேர் என்ன ..,.
நான் ஆதிரா டா செல்லம்,,..
தன் குட்டி இதழ்களைக் குவித்தபடி ஓ.,என இழுத்தவன் ஆதிராவிடம் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
சக்தி ஆதிரா ரிஷியைக் கொஞ்சிக் கொண்டிருப்பதையே கண்ணிமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
நீ என்ன சக்தியோட கேர்ல் பிரண்டா ...என்றவனிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் ஆமாம் என்பதைப் போல் தலை ஆட்டி வைத்தால்.
ஆதிராவிற்கு ரிஷியை மிகவும் பிடித்துப் போனது..,.அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்ல ஆசைக் கொண்டவளாய்.
ரிஷி குட்டி நீ எங்க கூட வரியா.....
ம்ம்ஹூம் நான் வரமாட்டேன் என ரிஷி வேகமாக தலையாட்டினான்.
ஏன்டா குட்டி ....
ம்ம்ம்...என யோசித்தவன் உங்க வீட்ல அந்த மாதிரி தாத்தா பாட்டிலாம் இருப்பாங்கலா. இங்க இருக்குற தாத்தா பாட்டிலாம் என்ன மடியில தூக்கி வச்சி நிறைய கத சொல்லுவாங்க .
தாத்தா பாட்டி இருக்காங்கடா குட்டி. ஆன அவங்க என்கிட்ட டூ விட்டுட்டாங்க. இன்னும் கொஞ்சநாள்ல சமாதானம் ஆகிடுவாங்க .அதுவரைக்கும் நீ நான் சக்தி மூனு பேரும் இருப்போம்.அப்றம் தாத்தா பாட்டியும் நம்மக் கூட வந்துருவாங்க சரியா என ரிஷியை ஒத்துக்க வைக்க முயற்சி செய்தாள்.
மீண்டும் வரமாட்டேன் என மறுத்தவனிடம் காரணம் கேட்டதற்கு.
என்னோட பிரணட்ஸ் எல்லாம் இங்க தான இருக்காங்க.நான் இங்கையே இருக்கேன். எனக்கு இங்க இருக்கத்தான் புடிச்சிருக்கு என்றவனை இறுக அனைத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
வேக வேகமாக கன்னத்தை தேய்த்து விட்டவன் ...சக்தி இங்கப் பாரு உன் கேர்ல் பிரண்ட் என்ன கிஸ் பன்றா என சக்தியை போட்டு உலுக்க சக்தி அப்போதுதான் வெளி உலகிற்கே வந்தான்.
திரு திருவென முழித்தவன் ஆதிராவை பார்க்க அவளும் அவனைப் போலவே திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் மழலையோடு மழலையாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரிடமும் விடைப்பெற்று அங்கிருந்து கிளம்பினர் .
ஆதிராவிற்குத் தான் ரிஷியை பிரிந்துச்செல்ல மனமே இல்லை.
சக்தி பைக்கை ஸ்டார்ட் செய்தவுடன் ஏறி அமரந்தவள் .
இப்ப வீட்டுக்குப் போறோமா..,
ம்ம்ம் ஆமாம் ஏன் வேற எங்கையாச்சும் போனுமா.,.
ம்ம்ம்,...
எங்க போனும் சொல்லு ..,
நீ போ நான் சொல்றேன் என்றவுடன் சரி என தலையசைத்துவிட்டு பைக்கை எடுத்தான்.
அலைகள் ஆதிராவின் காலை வருடிச் செல்ல அவள் அந்த இரவின் குளிர்ச்சியை ரசித்தபடி அமர்ந்திருக்க சிறிது இடைவெளி விட்டு கடல் அலைகளை வெறித்தபடி சக்தி அமர்ந்திருந்தான்.
காலேஜ் படிக்கும் போது இன்பமோ துன்பமோ அத ஷேர் பன்னிக்க இங்க தான் வருவேன்.
என்னோட துன்பத்த சொன்னாலோ இல்ல சந்தோஷத் தருணங்கள சொன்னாலோ அலை வந்து என்ன வருட்டிட்டுப் போகும்.அது எனக்கு துன்பம்னா ஆறுதல்
சொல்றமாறியும் ,இன்பம்னா என்னோட சேர்ந்து அதுவும் சந்தோஷப் படுற மாதிரி தோனும் சக்தி.
ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து.
ம்ஹூம்,.,ரொம்ப தேங்கஸ் சக்தி ...
மெலிதாய் புன்னகைத்தவன் மீண்டும் கடல் அலைகளை வெறிக்கத் தொடங்கினான்.
கண்களை மூடி
தன்னோட அப்பா அம்மாக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சி தன்ன ஏத்துக்கிட்டா அந்தத் தருணம் எப்படி இருக்கும் என நினைத்தவளுக்கு உள்ளுக்குள் குளிர்ந்தது.மீண்டும் அவளது செல்லத் தந்தையுடன் வம்பிழுத்தபடி அந்த வீட்டில் வளம் வரப் போவதை நினைத்துப் பார்த்தவளின் இதழ்கள் விரிய
அது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.
சட்டென கண்களைத் திறந்தவள் சக்தியைப் பார்த்தாள்.
அப்போ சக்திய தனியா விட்டுட்டுப் போனுமா.அதை நினைக்கவே அவளுக்கு கசப்பாக இருந்தது.
Hi frds pls vote pannunga apdiye comment um pannidunga...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro