33
சக்தி விடிந்ததும் தன் தேடலை தொடங்கினான்.
வருணிடமிருந்து கால் வர.,,அட்டன் செய்தவன்.
டேய் வருண் சொல்லாம எங்கடா போன. சொல்லிட்டுப் போறதுக்கு என்ன உனக்கு. அம்மா பயந்து போயி இருக்காங்க.
சாரிடா.,... ஒரு அவசர வேல அதான்.நான் இப்போ வீட்டுக்குத் தான் போயிட்ருக்கேன் .
சரி ஆபிஸ் விஷயமாதான் போரேனு ஏன்டா அம்மாக்கிட்ட பொய் சொன்ன.
அது.,..நான் வீட்டுக்குப் போயிட்டு வந்தரேன் அப்றம் நேரா வந்து என்னனு சொல்ரேன்டா.
ம்ம்ம்.,.சரிடா.
நீ ஆபிஸ்ல தான இருக்க நான் நேரா அங்க வந்தரவா.
இல்லடா நான் ஆபிஸ் போல. நான் வெளிய இருக்கேன்.
சக்தியின் குரல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தவன்.
ஏன்டா எதாவது பிராப்ளமா.ஏன் ஆபிஸ் போல.
நீ நேர்ல வாடா நான் சொல்றேன் என்றவனின் குரல் தேய்ந்துப் போனது.
வருணிற்கு ஏதோ தவறாகப்பட வீட்டிற்குச் செல்லாமல் சக்தி இருக்குமிடத்தைக் கேட்டு அறிந்துக் கொண்டு அங்கு விரைந்தான்.
சக்தி விலாஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பார்க்கில் அமர்ந்திருந்தான்.
அவனருகில் வந்து அமரந்த வருண்.
போன்ல உன்னோட வாய்ஸ் சரியில்ல என்ன பிரச்சன சொல்லு என்றவனிடம் நடந்தவற்றைக் கூறியவன்.
நேத்து இங்க பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டலலாம் விசாரிச்சுப் பாத்துட்டேன் டா அவர எங்க அட்மிட் பன்னிருக்காங்கனு தெரியல.ஆதிரா இரண்டு நாளா ஒழுங்கா சாப்டல அழுதுட்டே இருக்கா. என்னால அவள அப்படி பாக்க முடியலடா என்றவனின் கண்ணிலிருந்த வலியை உணர்ந்தவனாய்
சாரி மச்சான் நான் நேத்து உன் கூட இருந்துருக்கனும் தப்பு பன்னிட்டேன்.சரி விடு இன்னக்கி கண்டிப்பா கண்டுபிடிச்சரலாம் என்றவன் சக்தியை அழைத்துக் கொண்டு பூங்காவைவிட்டு வெளியேறினான்.
வருண் பைக் ஓட்ட பின்னால் அமர்ந்தச் சக்தி
நீ எங்கடா போன. நேர்ல வந்து சொல்ரேனு சொன்ன. அப்றம் எதுவும் சொல்லல.
சொல்ரேன்டா அது ஒரு பெரிய கதை. பர்ஸ்ட் அண்ணியோட அப்பா இருக்கற ஹாஸ்பிட்டல கட்டுப்பிடிப்போம் அப்றம் இத பத்தி பேசிக்கலாம் என்றவனிடம் சக்தி பிறகு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
இருவரும் பல மருத்துவமனைகளில் விசாரித்தும் பயனில்லை.சோர்ந்துப் போனவன் மீண்டும் அதே பூங்காவில் தலையைத் தாங்கியபடி அமர்ந்துக் கொண்டான்.
வருணிற்கு சக்தியின் நிலையைப் பார்க்க வேதனையாக இருந்தது.
ப்ளீஸ் டா பீல் பன்னாத கட்டிப்பா கண்டுபுடிச்சடலாம் என சக்தியை ஆறுதல் படுத்த முயற்சி செய்தான்.
என்னாலதான்டா அவளுக்கு இவ்ளோ பிரச்சன. என்னால அவளுக்குனு எதுவும் பன்ன முடியல. எனக்கே என்ன நினைச்சா வெறுப்பா இருக்கு என்றவனிடம்.
அவங்க அப்பாக்கு ஆக்ஸிடன்ட் ஆனது அதானால அண்ணி அழறது இதிலெல்லாம் உன்னோட பங்கு எங்கருந்துடா வந்தது.
விரக்தியான சிரிப்பொன்றை வருணிற்குத் தந்தவன்.
அவ என்னோட லைப்குள்ள என்ட்டர் ஆனதுலருந்து நான் சந்தோஷமா இருக்கேன். ஆனா அவ சந்தோஷமா இல்லையே.இது பத்தாதா.என்றவன் வேறு புறம் திரும்பி ஒரு பொண்ணு அவளோட வாழ்க்கைல எத்தன அடிதான் வாங்குவா....குரல் கரகரத்தது.
சிறிது நேரம் அமைதி நிலவ.,,வருண் பேசத் தொடங்கினான்.
இன்னும் நிறைய ஹாஸ்பிட்டல் இருக்குல.,,நம்பிக்கைய இழக்காத வா என்றதும் எழுந்து நின்றவனின் கண்ணில் சந்திரா ஒரு ஆட்டோவிலிருந்து இறங்குவது தென்பட
வருண் அங்கபாரு ஆதிராவோட அத்தை.., என பூங்காவிற்கு எதிர்புற திசையில் கை நீட்டினான்.
ஆட்டோவை விட்டு இறங்கியச் சந்திரா விலாஸ் மருத்துவமனையை நோக்கிச் சென்றார்.
கண்டிப்பா ஆதிராவோட அப்பா இங்க தான்டா இருக்கனும் என்றவன் அவரை பின் தொடர்வதற்காக வருணை அழைத்துச் சென்றான்.
சக்தி முதலில் வந்து விசாரித்தது விலாஸ் மருத்துவமனையில் தான். ஆனால் அவன் விவரம் கேட்டபோது அந்த ரிசப்சனிஸ்ட் அந்த பெயரில் யாரும் வந்து இங்கு அட்மிட் ஆகவில்லை என்றதும் மற்ற இடத்தில் சென்றுத் தேட தொடங்கினான்.
கண்டிப்பாக இது எல்லாம் அவர்களது ஏற்பாடாக தான் இருக்கும் என யூகித்தவன் சத்தமின்றி சந்திராவை பின் தொடர்ந்தான்.
சக்தியும் வருணும் மருத்துவமனையினுள் நுழையும் போது ரிசப்சனிஸ்ட் வேலையில் பிஸியாக இருந்தமையால் இருவரையும் கவனிக்கவில்லை.
முதல் தளத்தில் உள்ள ஐசியுவினுள் சந்திரா நுழைவதைக் கவனித்தவன்
இப்போ எப்படிடா அண்ணிய கூட்டிட்டு வந்து அங்கில பார்க்க வக்கிறது எனறவனை உத்துப் பார்த்தவன் அது உன் கைல தான் இருக்கு என்றான்.
என்னடா உளற.,..முழித்து வைத்தவனிடம் தன் திட்டத்தைக் கூறியவன்
நான் போய் ஆதிராவ கூட்டிட்டு வரேன் நீ இங்கயே இரு என்றான்.
ஹாலில் உள்ள சோபாவில் சோர்ந்து படுத்திருந்தவளை கண்டு அவளருகே சென்றவன் விஷயத்தைக் கூற அவளது முகம் மலர்ந்துப் போனது.
அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் விலாஸ் மருத்துவமனையை அடைந்தனர்.
ரிசப்சனிஸ்ட் கண்ணில் படாமல் இருவரும் முதல் தளத்தை அடையவும் வருணிடமிருந்து கால் வரவும் சரியாக இருந்தது.
டேய் அவங்க ரெண்டுப் பேரும் கீழதான் இருக்காங்க முடிஞ்சளவுக்கு நான் அவங்கள மேல வராம பாத்துக்றேன் நீங்க சீக்கிரம் பாருங்கடா.
ம்ம்ம் சரிடா என்றவன் ஆதிராவிடம்..,.
டைம் கொஞ்சம் கம்மியாதான் இருக்கு வா சீக்கிரம் பார்த்துவிட்டு வந்தரலாம் .
ஐசியு வினுள் நுழைந்தவள் கண்ணீருடன் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
சக்தி யாரேனும் வருகிறார்களா என்று பார்ப்பதற்காக வெளியில் நின்றுக் கொண்டிருந்தான்.
வசந்தியை சாப்பிடுவதற்காக சந்திரா அழைத்து வந்திருந்தார்.
சக்தி அவர்கள் இருவரும் கண்டிப்பாக எதாவது ஒரு வேலையாக வெளியில் வந்துத் தான் ஆக வேண்டும் .அந்த கேப்பில் நான் ஆதிராவை உள்ளே அனுப்பி விடுகிறேன்.ஒரு வேளை அவர்கள் இருவரும் மிக விரைவாக ஐசியுவிற்குத் திரும்பினார்கள் என்றார் அதற்கும் சக்தி ஒரு பிளானை வருணிடம் கூறியிருந்தான்.
கேன்டினுள் நுழைந்தவர்கள் அடுத்த ஐந்து நிமிடங்களில் கையில் பார்சலுடன் வெளியே வர அதிர்ந்தவன் சக்தியிடம் விஷயத்தைக் கூறி அடுத்த பிளானில் இறங்கினான்.
சக்தி வருணிடம் போனில் பேசிக் கொண்டிருந்த கேப்பில் ஒரு நர்ஸ் ஐசியுவினுள் நுழைந்ததைக் கவனிக்கத் தவறினான்.
கீழே வருண் சந்திராவிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.
போனை நோண்டியபடி வந்து சந்திராவின் மீது மோதியவன் மன்னிப்பு எதுவும் கேட்காமல் நேரத்தை நீட்டிக்க வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தான்.
வசந்தியும் சரி சந்திராவும் சரி வருணை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் வேலை எளிதாகிப் போயிற்று.
உள்ளே நுழைந்த நர்ஸ் ஆதிராவை கண்டவுடன்
யாரு நீங்க .உங்கள இதுக்கு முன்னாடி பார்த்ததில்லை என கேள்வியெழுப்ப
ஹான் இவர் என்னோட அப்பா...என்றவுடன்
ஹோ சாரிங்க .நா பாத்தவரைக்கும் ரெண்டு அட்டன்டர் தான் இவர் கூட இருந்தாங்க அதான் கன்பியூஸ் ஆகிட்டேன் என்றவள் ஆதிராவின் கலங்கிய கண்களைப் பார்த்துவிட்டு...
எதுக்கு அழறிங்க ,,.கடவுள் புண்ணியத்துல சார்க்கு நேத்து நைட் கான்சியஸ் வந்துருச்சி. இப்ப தூங்கிட்டு தான் இருக்காங்க பயப்பட்ற மாதிரி ஒன்றுமில்லை என்றவுடன் தான் ஆதிராவிற்கு உயிரே வந்தது.
.
.
.
.
.
.
.
உங்கள் மகள் சற்றுமுன் பார்த்துவிட்டு போனதாக அந்த நர்ஸ் உலறி வைக்க அது ஆதிரா தான் என யூகித்தவர்கள் அதன் பின்பு ஜாக்கிரதையாகவே இருந்தனர்.
அதன் பின்பு வந்த நாட்களில் ஆதிரா சக்தியின் உதவியுடன் ஓரிரு முறை மட்டுமே அவளது தந்தையை பார்க்க முடிந்தது.பாவம் அவளது நேரம் அவள் செல்லும்போதெல்லாம் மருந்தின் வீரியத்தினால் ராஜன் உறங்கிக் கொண்டிருந்தார்.
.
.
.
.
.
.
.
வருண் ஆபிஸ் வந்தவுடன் அன்று அவ்வாறு நடந்துக் கொண்டதற்கு மன்னிப்புக் கேட்பான் என நினைத்துக் கொண்டிருந்த மதிக்கு ஏமாற்றமே .
வருண் மறந்தேனும் மதியை திரும்பிப் பார்ப்பதில்லை.அவன் தன்னைக் கண்டுக் கொள்ளாதது மனதில் வலியை ஏற்படுத்தினாலும் அவன் மீதுள்ள கோபத்தில் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
வருண் மதியை கண்டுக் கொள்ளவில்லை என்றாலும் அவனது கடமையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தான்.அதாங்க மதியழகி பாதுகாப்பாக விடுதியை அடையும் வரை அவளை பின் தொடர்வதுதான்.
இவர்களது காதல் கண்ணாமூச்சி ஆட்டம் பல மாதங்கள் கடந்தும் தொடர ஆதிரா தன் தந்தை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியதை சக்தியின் மூலம் அறிந்துக் கொண்டால்.
சக்திதான் மன உலைச்சலுக்கு ஆளாகி இருந்தான்.
இடையில் கொஞ்ச நாள் ஆதிராவிடமிருந்துக் கிடைத்த நேசம் கடந்த சில மாதங்களாக அவனுக்கு கிடைக்கவில்லை.
கேட்பதற்கு மட்டும் பதிலளிப்பவள் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள்.
சக்தி எப்பொழுதும் ஏதொ ஒரு யோசனையிலிருப்பவளை எப்படி மீட்பது என சிந்தனையில் ஆழ்ந்திருக்க அதற்கு வழி கிடைத்தாற் போல் சந்தோஷத்தில் வீடு வந்துச் சேர்ந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro