Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

32

சந்திராவின் வற்புறுத்தலினால் ராஜனை வேறு மருத்துவமனைக்கு மாற்றியிருந்தனர்.

தன் தந்தையின் உடல் நிலை சரியாகும் வரையாவது அவருடன் இருக்கலாம் என்றிருந்தாள்.ஆனால் நிலமையோ தலைகீழாக மாறிப்போகியிருந்தது.

ஒரு புறம் அழுதவள் மறுபுறம் அவளது அத்தையை திட்டிக்கொண்டிருந்தாள்.தன் மீதுள்ள வெறுப்புக் குறையவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் தன் தந்தையின் உடல்நிலைக் குறித்து சற்றும் யோசிக்காமல் இவ்வாறு செய்தவரின் மீது கோபம் கோபமாக வந்தது.

சக்தியும் அந்த செவிலியரும் மாறி மாறி ஆறுதல் கூறியும் ஆதிராவின் அழுகை நின்றபாடில்லை.

அவளை வீட்டிற்குச் அழைத்துச் சென்றவன் அவளது தந்தை இருக்கும் மருத்துவமனை எதுவென தேடிக் கண்டுப்பிடிப்பது தன் பொருப்பு என உறுதியளித்தான்.

.
.
.
.
.
நேற்று வருண் நடந்துக்கொண்ட விதத்தில் அவன் மீது கோபம் இருந்தாலும் அவனை பொது இடத்தில் வைத்து அறைந்ததற்கு மதி வருந்தாமலில்லை.

அவளுக்கே ஆச்சரியம் தான் அவளா நேற்று வருணை அறைந்தது என.எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது என அவள் அறியவில்லை.

பொதுவாக பெண்பிள்ளைகளுக்கு தந்தை என்றாளே தனி பாசம் தான்.அதனால் தான் தன் தந்தையின் முகவாடலை கண்டு பொருக்கமுடியாமல்  
மதி வருணை அறைந்திருக்கக் கூடும்.

தன் இருக்கையில் அமர்ந்தவள் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.

அவளை யாரேனும் கடந்துச் சென்றால் அது வருணாக இருக்கக் கூடும் என நிமிர்ந்து நிமிர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.இதுநாள்வரையில் மதியை பார்க்க வேண்டுமென்பதற்காக ஏதேனும் ஒரு சாக்கை வைத்துக் கொண்டு அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருபவன் இன்று வரவில்லை.

மதிய வேளையில் கேன்டினிற்குச் சென்றவளின் கண்கள் வருணைத் தான் தேடியது.

அவன் அங்கும் வரவில்லை.மனதில் உண்டான ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் மதிய உணவை முடித்தவள் வருணின் கேபினை கடந்துச் செல்லும் போது ஓரக் கண்ணாலையே பார்த்தபடிச் சென்றாள்.

அவனது கேபின் காலியாக இருந்தது.

அவன் இன்று அலுவலகம் வரவில்லை என்பதை விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டாள்.

அவன் தன்னால் தான் இன்று அலுவலகம் வரவில்லை என்ற வருத்தத்தோடு தன் பணியை தொடர்ந்தாள்.

.
.
.
.
.
தனக்குத் தெரிந்த பெரிய மருத்துவமனைகளில் விசாரித்துப் பார்த்தவனுக்கு
ஏமாற்றமே மிஞ்சியது.

அலைந்துத் திரிந்துக் கலைத்துப் போனவன் வருணின் உதவியை நாடி அவனது வீட்டிற்குச் சென்றான்.

வாபா சக்தி என்ன இந்தப் பக்கமே ஆளையே காணோம் என்ற ஜானகியிடம்

கொஞ்சம் வேலை அதிகம் அதாமா என பதிலளித்தவனின் கண்கள் வருணைத் தேடியது.

ஆதிரா எப்படி இருக்கா.அவளையாவது இங்க கூட்டிட்டு வரலாம்ல.

ஆதிராவை பற்றி விசாரிக்கவும் சற்றுத் தடுமாறியவன் பின் சுதாரித்துக் கொண்டு.

ம்ம்ம் நல்லா இருக்கா மா. அடுத்தவாட்டி வரும்போது கூட்டிட்டு வரேன் மா என சமாளித்து வைத்தான்.

கேட்டதா சொல்லு,..ம்ம்ம் சரி
ரொம்ப டயர்டா தெரியற நான் போய் காபி எடுத்துட்டு வரேன் என கிட்சனுள் நுழைய முற்பட்டவரை தடுத்தவன்

வேண்டாம் மா. நான் வருண தேடி வந்தேன் .அவனுக்கு போன் பன்னா நாட் ரீச்சபுள்னு வருது. வீட்ல இருப்பானு இங்க வந்தேன். எங்கமா அவன்.

அவன் ஏதோ ஆபிஸ் விஷயமா வெளியூர் போரேனு சொல்லிட்டுப் போனானே. ஏன்டா உன் கிட்ட சொல்லலையா.

அப்படியா எங்கிட்ட எதுவும் சொல்லலையே என்றவனின் மனதில் குழப்பம் குடிகொண்டது.

அவனது முகமாற்றத்தைக் கவனித்தவர்.

ஏன்பா ஆபிஸ்ல எதாவது பிரச்சனையா .நேத்து அவன் வீட்டிக்கு வரும்போதே ஒரு மாதிரியாதா தான் வந்தான்.கேட்டதுக்கு ஆபிஸ் டென்சன்னு சொன்னான். நானும் அதுக்குமேல எதுவும்  கேக்காம விட்டுட்டேன்.இப்ப நீ வேற இப்படி சொல்ற எனக்கு ஏதோ தப்பா படுது. பயமா இருக்கு சக்தி என கண்கலங்கியவரிடம்.

அம்மா பயப்படாதிங்க கண்டிப்பா ஆபிஸ் விஷயமாதா போயிருப்பான். நான் விசாரிச்சு சொல்றேன்.

சக்தி ஆதிராவின் தந்தையின் நிலைக் குறித்து ஜானகியிடம் கூறி அவரையும் வேதனைகுள்ளாக்க விரும்பவில்லை.

அதனால் எதற்காக வருணை நாடி வந்தோம் என்பதை மறைத்துவிட்டு
ஜானகியிடம் விடைப்பெற்று வெளியேறியவன் ராஜேஸிடம் வருணைப் பற்றி விசாரிக்க இப்போதைக்கு அலுவலகம் தொடர்பாக வெளியூர் செல்ல அவசியம் ஒன்னும் இல்லை என அவன் உறுதியாக கூறிவிட சக்தியின் மனதில் வருணைப் பற்றிய கவலையும் குடியேறியது.

சக்திக்காக வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவள் அவன் வந்தவுடன்.

அப்பா எங்க இருக்காருனு கண்டுப்பிடிச்சிட்டியா சக்தி.நாம பாக்க கிளம்பலாம்ல என்றவளிடம் சக்தி பதில் ஒன்றும் கூறாமல் நிற்கவும்

புரிந்துக் கொண்டவள் போல் அழுதுக் கொண்டே வீட்டினுள் ஓடியவள் தன் அறையினுள் புகுந்துக் கொண்டாள்.

ஆதிரா அழுதுக் கொண்டே ஓடியதும் கலங்கியவன் சோபாவில் தலையை சாய்த்தபடி அமர்ந்துக் கொண்டான்.

இந்த இரவும் இருவருக்கும் உறக்கமற்ற இரவாகவே கழிந்தது.

.
.
.
.
Too busy dr frds adha kutty kutty update ....sry.....gud nyt...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro