28
மூன்றரை மணியளவில் சக்தியும் ஆதிராவும் மதுரையிலிருந்து சென்னைப் புறப்படும் பேருந்தில் ஏறினார்.
ஆதிரா ஜன்னலோர இருக்கையில் அமர சக்தி அவளருகில் அமர்ந்துக் கொண்டான்.
ஏர்ப்போட்டிலிருந்து நேராக பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர்.
ஜன்னலின் புறம் திரும்பியவளின் கண்ணில் மலமலவென கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.
தன் தோழியின் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் தாக்குப்பிடித்தவள் இப்பொழுது அழத் தொடங்கினாள்.
ஏர்ப்போட்டிலிருந்து இங்கு வரும் வரை ஆதிராவின் மௌனம் சக்தியிடம் அவளது மன வேதனையை உணர்த்த.
அங்க அவ்ளோ ஆறுதலா பேசிட்டு இங்க வந்து அழுதா என்ன அர்த்தம். நீயும் தான சொன்ன ஜஸ்ட் சிக்ஸ் மன்த் தான்னு.சீக்கிரம் போய்டும் என சக்தி ஆறுதலாக பேச முயன்றான்.
இல்ல சக்தி அப்பவே என்னால கன்ட்ரோல் பன்ன முடியல எங்க நானும் அழுதா அவ உடைஞ்சு போயிருவாளோனு தான் கொஞ்சம் தைரியமா இருந்தேன்.ஆனா இப்ப என்னால சுத்தமா முடியல என மீண்டும் தன் அழுகையைத் தொடர்ந்தாள்.
சக்தியும் அவள் மனம் விட்டு அழட்டும் என விட்டுவிட்டான்.
சிறிது நேரத்திற்கு அழுது ஓய்ந்தவள் சக்தியிடம்
நானும் அவளும் லெவன்த் டுவல்த்லருந்து காலேஜ் முடிக்கிற வரையிலும் ஒன்னாதா இருப்போம்.எப்போதும் என்கூட இருக்கிறவ இப்ப ஆறு மாசத்துக்கு தான் என்னவிட்டுப் போறா.ஆனா அது என்னவோ எனக்கு ரொம்ப நாள் பிரிஞ்சிருக்கிற மாதிரி தோனுது சக்தி என்றவள் மீண்டும் ஜன்னலின் புறம் தன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
இரண்டு நாட்கள் திருமண வேலை மற்றும் அழுதக் கலைப்பில் ஆழ்ந்து உறங்கியவள் உறக்கத்தில் சக்தியின் தோளின் மேல் சாய்ந்துக் கொண்டாள்.
அதுவரை பக்கத்துச் சீட்டிலிருந்த குழந்தையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன் தோள் மேல் சாய்வதை உணர்ந்தான்.
அவளது உச்சியை மெல்ல வருடியவன் தானும் சீட்டில் தலை சாய்த்துக் கொண்டு கண்ணயர்ந்தான்.
கோயம்பேட் பஸ்டான்ட் ,,..என்ற நடத்துனரின் கூவலில் விழித்தவள் தான் சக்தியின் மேல் சாய்ந்திருப்பதை உணர்ந்து சட்டென விலகிக் கொண்டாள்.
சாரி தூக்கத்துல சாய்ந்திருப்பேன் என மன்னிப்பும் கேட்டுவிட்டால்.
அதை காதில் வாங்கிக் கொள்ளாதவன்
இறங்களாம் என்ற ஒற்றை பதிலுடன் கீழிறங்கினான்.
எப்பப் பாரு சாரி சொல்ல வேண்டியது இல்லனா தேங்க்ஸ் சொல்ல வேண்டியது என ஆதிராவை மனதில் கடிந்துக் கொண்டான்.
இருவரும் வீட்டை அடையும் போது மணிப் பத்தை தொட்டிருந்தது.
சக்தி எனக்கு சாப்ட எதுவும் வேனா. எனக்கு செம்மையா தூக்கம் வருது. நான் தூங்கப் போறேன் நீ கோவிச்சிக்காம எதாவது செஞ்சி சாப்டுக்கோ ப்ளீஸ் என்றவள் படுக்கையில் சரிந்தாள்.
சரி எனத் தலையாட்டியவன் வாஷ் ரூமில் புகுந்துக் கொண்டான்.
வருணிடம் நாளை அலுவலகம் வந்துவிடுவதாக அறிவித்தவன் ஆதிராவை விட்டு சாப்பிட மனமின்றி சோபாவில் சாய்ந்தான்.
ஆதிரா புடவையைக் கூட மாற்றாமல் உறங்கிக் கொண்டிருக்க
பாரு டிரஸ் கூட மாத்தாம தூங்கறத என முனுமுனுத்தவன்.
சோபாவில் அவள் புறம் திரும்பி படுத்திருத்தபடி அவளிடம் பேசத் தொடங்கினான்.
செல்லக்குட்டி இன்னக்கி நீ எவ்ளோ அழகா இருந்தத் தெரியுமா. சொல்ல வார்த்தையே இல்ல அவ்ளோ அழகா இருந்த.ம்ம்ம் நீ எப்போ தான்டி என்னப் புரிஞ்சிப்ப. எனக்குள்ள நீ எந்த அளவுக்கு நிரஞ்சி இருக்கனு தெரியுமா.அத வெறும் வார்த்தையால சொல்ல முடியாது.எங்க அம்மா என்ன விட்டுப் போனதுக்கப்றம் எனக்குனு இனிமேல் யாரு இருக்கானு தோனும்.ஆனா நீ இந்த வீட்டுக்கு வந்த நாள்லருந்து எனக்கு அப்படித் தோனுனதில்ல.ஒத்துக்குறேன் உன்ன பாத்த அடுத்த செகன்ட்லருந்துலாம் உன் மேல எனக்கு லவ் வரல.எனக்கே தெரியாம நீ எனக்குள்ள நுழஞ்சிட்ட.ஆனா ஒன்னு என்னோட காதல உங்கிட்ட சொல்லரப்போ உன்னோட வாழ்கைல நீ பட்ட கஷ்டம்லாம் இல்லாம போயிருக்கும்.கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் சரிப்பன்னிடுவேன்.
என அவளிடம் காதல் வசனத்தைக் கொட்டியவன் அவளை ரசிக்கத் தொடங்கினான்.
தலை முடியெல்லாம் கலைந்தபடி இருக்க குங்குமமும் கண்ணிலிட்ட மையும் இழுப்பியபடி இருந்தாலும் ஆதிரா அழகு தேவதையாகவே இருந்தாள்.
அவளிடம் ஏதோ அசைவுத் தெரிய சக்தி கண்களை இருக்கி மூடிக்கொண்டான்.
சில நொடிகள் கடக்க மெதுவாக ஒவ்வொரு கண்ணாக திறந்தவனின் கண்ணில் அவள் சக்தியின் புறம் திரும்பிப் படுத்ததில் சேலை விலகி அவளது மெல்லிய இடை தென்பட்டது.
அடர்நீல நிற புடவைக்கு அவளது மேனி பளிச்சிட நிலைத் தடுமாறிப் போனான் சக்தி.
தலையை உலுக்கியவன்
ம்ஹீம் இதுக்கு மேல இங்க இருந்தா நல்லதுக்கில்ல என எழுந்தவன் ஆதிராவின் மேல் போர்வை ஒன்றை போர்த்திவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் படுத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் எழுந்தவள் சக்தி அங்கு இல்லாததைக் கவனித்தாள்.
சக்தி எழுந்துட்டானா. லேட்டாயிருச்சோ என அடித்துப்பிடித்து குளித்தவள் ஹாலிற்கு வந்தாள்.
சக்தி சோபாவில் குப்புறப் படுத்தபடி உறங்கிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தவள்.
சக்தி எழுந்திறி.,
ஏன் இங்க வந்து தூங்குற. சோபாவேற சின்னது.கம்படபிலா இருந்ததா.
ஹாங் ,,அங்க படுத்தேன் தூக்கம் வரல. அதான் இங்க வந்து டீவி பாத்துக்கிட்டே தூங்கிட்டேன் காபியை அருந்தியபடி சமாளித்து வைத்தான்.
என்றும் போல் நாட்கள் மெல்ல நகர ஆதிரா சக்தியின் அருகாமையை தன்னையும் அறியாமல் நேசிக்கத் தொடங்கினாள்.
மாலை ஆனாலே அவனது வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள்.சக்தி வருகை சற்றுத் தாமதம் ஆனாலும் அவனை போனில் அழைத்து என்னவென்று விசாரித்துவிடுவாள்.
இங்கு வருணிற்கும் மதியழகிக்கும் இடையே மனதளவில் நெருக்கம் அதிகமாகியிருந்தது.
மதியழகியின் பயிற்சிக் காலம் முடிந்திருக்க,.... வேலையில் அவளது சாமார்த்தியம் அனைவரையும் வியப்புறச் செய்தது.
வந்தக் குறுகியக் காலத்திலேயே அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தாள்.
அது அவளுக்கு சந்தோஷத்தைத் தந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.ஏதோ நெருடல் அவள் மனதில் இருக்கத் தான் செய்தது.
தன் மனம் கவர்ந்தவளின் திறமையை எண்ணி வருண்
பெருமைக் கொண்டான்.
அவ்வப்பொழுது தன் பாராட்டுக்களை மதிக்குத் தெரிவித்தான்.
அன்று மாலை ஆபிஸ் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் மதியழகியிடம் ஐம்பது வயது மதிக்கத்தக்கப் பெரியவர் ஏதோ வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தார்.
அந்தப் பெரியவர் ஏதோ ஒன்றைக் கூற மதி அதை மறுக்கும் விதமாக தலையசைத்துக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் தூரத்திலிருந்தபடி வருண் கவனித்துக் கொண்டிருந்தான்.
வாக்குவாதம் முத்த அந்தப் பெரியவர் மதியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.
மதி அவரிடம் அழுகையுடன் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
காரை அவர்கள் அருகில் நிறுத்தியவன் ஒரு நொடிக் கூட தாமதிக்காமல் இறங்கிய வேகத்தில் மதியை தன் புறம் இழுத்துக் கொண்டான்.
தூரத்திலிருந்துப் பார்க்கும்போது அவரது முகத்தை கவனிக்காதவன் தற்போது தான் கவனித்தான்.
முருக்கு மீசை,வயதாகியதில் நரைத்திருந்தாலும் அடர்ந்திருந்த முடி, மற்றும் வெள்ளை நிற வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தார்.
வருணின் செயலில் திகைத்தது அந்த பெரியவர் மட்டும் அல்ல மதியும் தான்.
அதே திகைப்பில் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தம்பி முதல்ல மதி கைய விடுங்க நீங்க தேவையில்லாம
இந்த பிரச்சனையில மூக்க நுழைக்காதிங்க என்றார் தன் ஆள்காட்டி விரலை உயர்த்தியபடி.
நீங்க தான் தேவையில்லாம பிரச்சனை பன்றிங்க.அவளுக்கு தான் உங்க கூட வரப் பிடிக்கலல அப்றம் ஏன் கட்டாயபடுத்திரிங்க
வேணா தம்பி நீங்க வீணா வம்புப் பன்றிங்க.முதல்ல மதி கைய விடுங்க .எந்த உரிமைல நீங்க அவ கையப் புடிச்சிட்டு நிக்கிறிங்க நாலு பேர் இருக்கற இடத்துல.
மதியின் கையை இன்னும் இருக்கியவன்.
அவள கட்டிக்கப் போறவன்கிற உரிமைல புடிச்சிருக்கேன்.நீங்க எந்த உரிமைல மதிய உங்கக் கூட வர சொல்லி கட்டாயப் படுத்துறிங்க என வருணும் எதிர் கேள்வி கேட்க
முகம் இருகியவர் மதியை கோபமாக ஒரு பார்வையை பார்த்துவிட்டு பதில் ஏதும் கூறாமல் ஆட்டோ ஒன்றில் ஏறி அங்கிருந்துக் கிளம்பினார்.
வருண் அவர் முன் தன் கையை பற்றியதிலிருந்து தன் கையை உருவப் போராடிக் கொண்டிருந்தவள் இருவரது வாக்குவாதத்தை கவனிக்காமல் இல்லை.
வருண் அவ்வாறு கூறியதும் அவரின் முகம் இறுகியதைக் கவனித்தவளின் கண்கள் குளமெனத் தேங்கியது.
வெகுவாக வருணின் பிடியிலிருந்து தன் கையை உறுவியவள் அவனது கன்னத்தில் ஓங்கி அரைந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro