27
ஆதிரா கோபமாக உள்ளே நுழையவும் சக்தி பதறிப் போனான் எங்கே அவள் இவ்வளவு நேரம் தான் பாரதியுடன் பேசியதைக் கேட்டிருப்பாளோ என.
அவளது வாழ்வில் அவன் ஏற்படுத்தியத் துன்பங்களை சரி செய்தப் பிறகே தன் காதலை அவளிடம் கூறலாம் என்றிருந்தான். அதுவுமில்லாமல் இப்பொழுது அவளிடம் தன் விருப்பத்தை கூறினால் தன்னை கீழ்தரமாக எண்ணி பிரிந்துவிடுவாளோ என்ற பயம் வேறு.
இதயத் துடிப்பு எகிற சக்தி நின்றிருக்க பாரதியோ எவ்விதக் கலக்கமுமின்றி ஆதிராவின் கோபத்திற்குக் காரணம் அறிந்தவள் போல் நின்றிருந்தாள்.
ஆதிரா வந்த வேகத்தில் கையில் உள்ள பேகை பாரதியிடம் காட்டி
என்னடி இதெல்லாம்.,.
கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு ஆதிராவை மேலும் கீழும் பார்த்தவள்.
பார்த்தா ஜீவல்ஸ் பேக் மாதிரி தெரியுது என்றாள் இரு புருவங்களை உயர்த்தியபடி.
அய்யோடா அது எங்களுக்குத் தெரியாதா. இது எதுக்கு எனக்குனு கேட்டேன்.
அத யார் குடுத்தாங்ளோ அவங்ககிட்டையே போய் கேளு.
அப்படியே நடிக்காத. நீ தான இத அம்மாக்கிட்ட குடுத்து எங்கிட்ட குடுக்கச் சொன்ன.
இது பாரதியின் வேலை தான் அவள் கொடுத்தாள் சட்டம் பேசி வாங்க மறுத்துவிடுவாள் என்று தான் தன் அன்னையின் உதவியை நாடினாள்.
இவ்வாறு தோழிகள் இருவரின் உரையாடல் நீண்டுக் கொண்டேப் போக சக்தியின் நிலைத் தான் பெரும் பாடாக இருந்தது.தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான்.
வந்தவள் தன்னிடம் பாயாமல் பாரதியிடம் பாய்வதிலே புரிந்துக் கொண்டான் இவர்களின் உரையாடலை அவள் அறியவில்லை என்று.
அதன் பின் பாரதி ரேஷ்மாவைப் பற்றி சக்தியிடம் கேட்பதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.
மண்டபத்திலும் பாரதியுடன் ஆதிரா தங்கிக் கொள்ள சக்தி சதீஷீடன் தங்கிக் கொண்டான்.
விடிந்ததும் சக்தியை போனில் அழைத்தவள் தான் பாரதியை மேடைக்கு அழைத்து வரும் வரை அவளுடன் இருப்பதாகவும் அதுவரை சதீஷீடன் இருந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள்.
காலை ஏழு டு ஒன்பது முகூர்த்த நேரம் என்பதால்
சதீஷ் ஐந்து மணிக்கெல்லாம்
எழுந்துக் கிளம்ப சக்தியும் அவனுடன் கிளம்பினான்.
மணமேடையில் அஸ்வின் பாரதியின் வரவை எதிர்ப்பார்த்தபடி அவ்வப்போது மணமகள் அறையை நோட்டமிட்டுக் கொண்டிருக்க இன்னும் ஒரு ஜோடிக் கண்கள் மணமகள் அறையின் வாயிலின் மீதிருந்தது.
வேறு யாருமில்லை அது சக்தி தான் .அவனது எதிர்ப்பார்ப்பு ஆதிராவின் வரவு .
பொண்ண அழைச்சிட்டு வாங்கோ என்ற குரலில் இரு மனங்கள் குதூகலத்திலிருக்க மணப்பெண் கோலத்தில் பாரதி அன்ன நடையிட்டு வர அஸ்வினின் விழிகள் அவளை மேய்ந்துக் கொண்டிருந்தது.
சக்தியின் கண்கள் இமைக்க மறந்தன.
அவனது கண்கள் ஆதிராவை மட்டும் சூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தது.
அடர் நீல நிறப் புடவை தங்க நிற பார்டர் என அந்தப் புடவை ஆதிராவின் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது.
பிரன்ச் ப்ளாட்,காதில் ஜிமிக்கி,கழுத்தில் ஒற்றை டாலரைக் கொண்ட செயின்,கை நிறைய வளையல், நெற்றி வகிட்டில் அவள் வைத்திருந்தக் குங்குமம் இவை அனைத்தும் அந்த அழகுக்கே அழகு சேர்த்தது.
தன் காதல் தேவதை முதன்முதலில் புடவையில் வலம் வருவதைக் கண்டவன் அவள் அழகில் சொக்கிப் போனான்.
இதுவரை ஆதிரா புடவை அணிந்துச் சக்திப் பார்த்ததில்லை.ஜானகி அவளுக்குக் கொடுத்த பட்டுப் புடவையைக் கூட அவள் அணிந்ததில்லை .பாரதியின் நிச்சயத்தன்றுக் கூட கிரேன்ட் சுடி அணிந்திருந்தாளேத் தவிர புடவை அணியவில்லை.
இப்பொழுதும் கூட பாரதி மற்றும் அவளது அன்னையின்
வற்புறுத்தலினாலே புடவை அணிந்தாள் நெற்றி வகிட்டில் வைக்கப்பட்ட குங்குமும் தான்.
கெட்டி மேளம் கெட்டி மேளம் ,,..என்றிட அஸ்வின் மன நிறைவோடு மங்கள நானை பாரதியின் கழுத்தில் பூட்டினான்.
சக்தியின் கைப்பாட்டிற்கு அட்சதையைத் தூவ அவனது கண்கள் மட்டும் ஆதிராவின் மீதிருந்து எழவில்லை.
தாலி கட்டிய அடுத்த நிமிடத்திலிருந்து அக்னியை சுற்றி வருவது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குவது அம்மி மிதித்து அருந்ததி முகம் பார்ப்பது என அடுத்தடுத்த சடங்குகள் நடைபெற பாரதியைச் சுற்றி அவளது உறவினர்கள் சூழ்ந்துக் கொண்டனர்.
அந்தக் கூட்டத்திலிருந்து விடுபட்டு வெளியே வந்தவளுக்கு அப்போதுதான் சக்தியின் நினைவு வந்தது.
அங்கிருந்தப் படியே சக்தியை தேட சக்தி ஆதிராவின் கண்ணில் படவில்லை.
மொபைலில் சக்தியை அழைத்தபடியே அவனைத் தேடினாள்.
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே...,,
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே.....
என சக்தியின் மொபைல் அலர அதை சிறிதும் காதில் வாங்காதவன் ஆதிரா தன்னை நோக்கி வருவதுக் கூட தெரியாமல் அவளது அழகில் மெய் மறந்து நின்றிருந்தான்.
பெரும் பாடுப் பட்டு அவனை அந்த கூட்டத்தில் கண்டுப்பிடித்தவள் அவனிடம் வந்துச் சேர்ந்தாள்.
அவனது கையில் மொபைல் இருப்பதைக் கண்டவள்
கையில தான சக்தி மொபைல் வச்சிருக்க அப்றம் ஏன் அட்டன் பன்னல என அவள் பாட்டிற்குப் பேசிக் கொண்டிருக்க
சக்தியோ மையிட்ட அவளது கண்களையே ரசித்தப்படி நின்றிருந்தான்.
அவன் மனதில் அவனுக்கு மிகவும் பிடித்தமான அந்தப் பாடலின் வரிகள் வந்துப் போனது.
விடியல் வந்தப் பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி.....
இவ்வுலகம் இருண்டப் பின்னும் இருளாத பாகம் எது கதிர் வந்துப் பாயும் உந்தன் கண்களடி...,..
சக்தி என்னப் பன்ற நான் பேசறது கேக்குதா இல்லையா..,சக்தி என ஆதிரா கத்த அந்த மண்டபமே அவளைத் தான் திரும்பிப் பார்த்தது.
அதைக் கவனித்தவள் நாக்கைக் கடித்தபடி தலையில் அடித்துக் கொண்டாள்.
சக்தியின் கையைப் பற்றி ஓரமாக இழுத்துச் சென்றவள்
உன்னாலே என்ன மண்டபமே திரும்பி பார்த்துருச்சி.கூப்பட்றத கூட காதுல வாங்காமா ஏன் மரம் மாதிரி நிக்கிர....
என்ன மண்டமே உன்ன பார்த்துச்சா எவ்ளோ தைரியம் அவங்கள என மனதில் நினைத்ததை வாய்விட்டே உலறிவிட்டான்.
என்ன.,...என ஆதிரா சக்தியை குழப்பமாகப் பார்க்க அப்போது சக்தி தான் கூறியதை உணர்ந்தான்.
ஸ்,...இப்ப எப்படி சமாளிக்கிறது.
ஒன்னுமில்லை நீ ஏன் என்ன கூப்ட அத சொல்லுப் பர்ஸ்ட் என வாயில் வந்ததை உலறி வைத்தான்.
அவனை மேலிருந்து கீழ்வரை ஒரு மாதிரியாக பார்த்தபடி
நீ நல்லாதான இருக்க.எதுவும் பிராப்ளம் இல்லையே
அய்யோ இவ ஏன் இப்படி கேக்றா என நினைத்தவன்
எனக்கொன்னுமில்லையே நான் நல்லாத் தான் இருக்கேன் என சமாளித்து வைத்தான்.
இரண்டு மணிக்குள் அந்த மண்டபத்திலேயே ரிசப்ஷனை வைத்து முடித்தனர்.
அஸ்வின் குடும்பத்தாரும், பாரதியின் குடும்பத்தாரும் அவர்களை வழியனுப்புவதற்காக ஏற்போட்டில் குழுமியிருக்க அவர்களுடம் ஆதிராவும் சக்தியும் வந்திருந்தனர்.
அனைவரின் பிரிவை எண்ணி கட்டித் தழுவி அழுதவள் இறுதியாக ஆதிராவை இறுக அனைத்துக் கொண்டாள்.
வந்த அழுகையை அடக்கிக் கொண்டவள்
ஹே ஜஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் தான. வீடியோ கால்ல பேசிக்கலாம். ப்ளீஸ் அழாத என பாரதியைத் தேற்றினாள்.
போகுமுன் சக்தியிடம் பார்வையினாலே அவள பார்த்துக்கோங்க என கண்ஜாடைக் காட்ட.
சக்தியும் நான் பார்த்துக்றேன் என்பதுப் போல் கண்களை சிமிட்டினான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro