22
காரிலிருந்து இறங்கியவன் நேராக மதியழகியின் முன் சென்று நின்றான்.
வருண் வந்து நின்றதும் இரண்டடி தள்ளி நின்றுக்கொண்டான்அந்த கயவன்.அவனை எரித்துவிடுவதைப் போல் முறைத்தவன் பின் மதியழகியின் மீது பார்வையை செலுத்தினான்.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் அவளது கண்களைப் பார்க்க பார்க்க வருணிற்கு ஏதோ மாதிரியாக இருந்தது.
வந்து வண்டில ஏறு. நான் உன்ன ட்ராப் பன்னிரேன்.என்றான் கட்டளையாக.
அவளும் எதிர்ப்பார்த்தது இதைத் தான் என்றாலும் உடனே ஒப்புக் கொண்டால் தவறாக எண்ணி விடுவானோ என தயங்கியபடி.,.,இல்லைங்க பரவால நான் பஸ்லயே போய்க்கிறேன்.
சரி நீ பஸ்லயே போ நான் கிளம்புறேன் என அடுத்த நொடி காருக்குள் ஏறி அமர்ந்துக் கொண்டான்.
மறுத்தால் மீண்டும் பேசி சம்மதிக்கவைத்து காரில் ஏற்றிக் கொள்வான் என நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மீண்டும் பயம் தொற்றிக்கொள்ள கண்கள் கலங்கத் தொடங்கியது.பீறிட்டு வந்த அழுகையை நமட்டைக் கடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
காரினுள் ஏறியவன் காரை எடுக்காமல் கதவை திறந்து வைத்துவிட்டு அவளுக்காக காத்திருந்தான்.
குனிந்தபடி அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் நிமிர்ந்துப் பார்க்க அங்கு வருண் காரை எடுக்காமல் காத்துக் கொண்டிருப்பதை கவனித்தாள்.
சற்றும் தாமதிக்காமல் விரு விருவென காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.
தலையை ஆட்டிக் கொண்டே சிறுப் புன்னகையுடன் வண்டியை எடுத்தான்.
குனிந்தபடி கையை பிசைந்துக்
கொண்டிருந்தாள்.
சற்று நேரம் மௌனம் ஆட்சி செய்ய அதை கலைக்கும் விதமாக
எதுக்கு இப்படி யாரப் பாத்தாலும் பயப்பட்ற.,,..
அவன் கேட்டதுதான் தாமதம் டேம் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அய்யய்யோ இப்ப நான் என்ன கேட்னுட்டேனு இப்படி அழறா.டேய் வருண் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டியாடா.என தனக்குள் புலம்பினான்.
மதியழகி
மதியழகி
அழகி
மதி
என பலவாறாக அழைத்தும் அவள் அழுதுக் கொண்டிருக்க கடுப்பாகியவன் காரை வேறு புறம் திருப்பி பீச்சை வந்தடைந்தான்.
அதுவரை அழுதுக் கொண்டிருந்தவள் அவன் காரை நிறுத்தியதும் தான் இறங்கும் இடம் வந்துவிட்டது என வெளியே பார்க்க அதிர்ச்சி அடைந்தாள்.
திரும்பி வருணைப் பார்க்க அவன் சீட்டில் இல்லை.
தனது இடது புறம் ஏதோ அரவம் கேட்க திரும்பினாள்.அங்கு வருண் கதவை திறந்து வைத்துவிட்டு கைகளை கட்டியபடி நின்றிருந்தான்.
அவனையே குழப்பமாகப் பார்த்துக் கொண்டிலுந்தவளிடம்
கட்டளையாக இறங்கு கீழ என்றிட
நான் இறங்கமாட்டேன்.
ப்ளிஸ் என்ன எங்க ஹாஸ்டல்ல விட்டுடுங்க என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.
இப்ப நீ கீழ இறங்குறியா இல்ல நான் இறங்க வைக்கவா.
ப்ளீஸ்..,.நா .,,நான் ஹாஸ்டல் போனும் என மீண்டும் தேம்ப ஆரம்பித்தாள்.
வருண் நீ இவள கட்டிக்கிட்டு படாதபாடுபடப் போற என பெருமூச்சொன்றை வெளியிட்டவன் அவள் அசந்த நேரத்தில் அவள் கையைப் பிடித்து வெளியே இழுக்க தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.
இதயம் இருவருக்கும் படபடவென அடித்து கொள்ள இருவரின் கண்களும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டது.
அவனிடமிருந்துச் சட்டென விலகிக் கொண்டாள்.
நான் ஹாஸ்டல் போனும்.
ஏன் அதையே கந்த ஷஷ்டி கவசம் மாதிரி சொல்லிட்டே இருக்க.உன்ன ஹாஸ்டல்ல தான் விடப் போறேன் ஆனா அதுக்கு முன்னாடி நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு.
நீ ஏன் ஹாஸ்டல்ல ஸ்டே பன்னிருக்க. உன் அப்பா அம்மாலாம் யாரு.
நான் ஹாஸ்டல் போனும் ப்ளீஸ் என அழத் தொடங்க.
ஒரு நாளைக்கு எத்தனை டைம்தான் அழுவா. லிட்டர் கணக்குல கண்ணுத் தண்ணிய ஸ்டாக் வச்சிருக்கா என நினைத்துக் கொண்டவன்.
சரி நீ உன்னோட வீட்ல உள்ளவங்களப் பத்தி சொல்ல வேண்டாம்.உன் பிரச்சனை என்ன.நீ ஏன் இப்படி இருக்க. உன் முன்னாடி யாராச்சும் கிராஸ் பன்னிப்போனாக் கூட பயப்பட்ற. அது ஏன்னு சொல்லு என வருண் கேள்விகளைத் தொடுக்க அழுகையே பதிலாகக் கிடைத்தது.
எரிண்சலடைய அவளது தோளைப் பற்றிக் குலுக்கியவன் ஏய் என்ன பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்கா நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன் இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்.உன்ன மாதிரிப் பொண்ணுங்க எத்தனை பேரு இங்க வொர்க் பன்றாங்கத் தெரியுமா.எல்லாரும் எவ்ளோ போல்டா சகஜமா எல்லார்க்கிட்டையும் பழகுறாங்க. நீ மட்டும் ஏன் இப்படி பயந்து ஓட்ற. இது சென்னை இப்படி தொட்ட தொன்னூறுக்கும் பயந்தனா உன்ன ஈஸியா ஏமாத்திட்டுப் போயிருவாங்க.எதா இருந்தாலும் போல்டா பேஸ் பன்னு இப்படி முடங்கி கிடக்காத.நான் நீ வந்த நாள்ளருந்து கவனிச்சிட்டுதான் இருக்கேன்.நீ வந்த நாள்ளருந்து இன்னக்கி வரைக்கும் நீ பத்திரமா உன் ஹாஸ்டல் போய் சேர்ற வரைக்கும் உன்ன பாலோ பன்றேன்.அப்படி வரப் போயிதான் இன்னக்கி உனக்கு பிரச்சனைன்றதும் உன் முன்னால வந்து நின்னேன். நான் இங்க இருக்கேன் அதானல உனக்கு எந்த பிரச்சனையும் வராம கூட்டிட்டு வந்தேன்.நான் ஒரு வேள இந்த ஆபிஸ்ல இல்ல உன்ன பாக்கல அப்படினா என்ன பன்னிருந்துருப்ப.நீ பயப்படாம அவன் கண்ணத்துல ரெண்டு விட்டனா உன் பக்கத்துல வருவானா.நீ பயத்தகாட்றனால தான அதை சாதகமா பயன்படுத்திக்கிட்டான். அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது யூஸ்லஸ் எனப் பொறிந்துத் தள்ளியவன் அவளைத் தன் பிடியிலிருந்து விலக்கினான்.
Hi frds sorry late update ku......konjm work adhan
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro