20
முகத்தில் விழும் முடியை காதோரம் இழுத்த்துவிட அவள் கை தீண்டளின் குஷியில் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி ஆட்டம் போட இமைகள் இரண்டும் வண்ணத்துப்பூச்சி விரித்து மடக்கும் இறகுப் போல் சிமிட்டிட உதடுச்சாயம் இல்லாமலே கோவப்பழம் போல் சிவந்திருக்கும் இதழைக் கடித்தபடி ஒரு பைலை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டு வருணின் அனுமதிக்காக நின்றிருந்தாள்.
அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால்.
!சார் ஐயம் மதியழகி "...என்றாள்.
அதற்கும் வருணிடமிருந்து பதில் இல்லை.
குழம்பியவள் மீண்டும் உரக்க "சார் "...என்றழைக்க வருண் அப்போது தான் பூலோலகத்தில் காலடி எடுத்து வைத்தான்.
இமைக்க மறுத்த இமையை இமையை இமைக்கச் செய்து பின் "என்ன "...என்பது போல் ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.
"இவர் என்ன கனவுக் கண்டுட்டு இருக்காரா"... என மனதில் நினைத்துக் கொண்டவள்.
"சார் ஐயம் மதியழகி "...என்றாள் மீண்டும்.
"ஆஹா பெயருக்கேற்ற" அழகு என மீண்டும் அவள் அழகை வர்ணிக்கச் சென்ற மூளையை தட்டி அடக்கினான்.
"என்ன ஆச்சுடா உனக்கு. எத்தன அழகான பொண்ண உன் லைப்ல பார்த்திருப்ப. ஆனா இவள பார்த்து மட்டும் ஏன்டா ஃரீஸ் ஆகிட்ட. சம் திங் ராங் டா."... என அவளுக்கு கேட்காதக் குரலில் முனு முனுத்தான்.
"குட் .......ஐயம் வருண் கம்மின் டேக் யுவர் சீட் "..என்றான்.
அவள் அவனுக்கு எதிரே உள்ள நாற்காளியில் அமர்ந்தாள்.அவள் ஒரு வித நடுக்கத்துடன் அமர்வதை அவன் கவனிக்காமல் இல்லை.
புது இடம் புது நபர் அப்படித்தான் இருக்கும் என விட்டுவிட்டான்.
சில விதிமுறைகளை அவளிடம் கூறியவன் அதன் பின் பயிற்சியைத் துவங்கினான்.
விவரிக்கும்
ஒவ்வொரு முறையும் சிஸ்டத்தைப் பார்த்துவிட்டு அவளைப் பார்க்கும் போது சற்றுத் தடுமாறிப் போனான்.
அவள் மூக்குத்தி ,அவள் நெற்றியிலுள்ள ஒற்றைப் பொட்டு அதற்கு மேல் சிறிது இடைவெளி விட்டு திருநீர் அணிந்திருந்தாள். இதை வைத்து அவள் கிராமத்தப் பெண்ணாக இருக்கக் கூடும் என யூகித்திருந்தான்.
ஆமாம் நகரத்துப் பெண்கள் அதுவும் இக்காலத்துப் பெண்கள் எங்கே மூக்குத்தி அணிகிறார்கள்.அதுவும் பேருக்கு என ஒரு பொட்டு ஐலைனரை வைத்து. கேட்டால் ஸ்டைல் என ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுவது.
அன்று முழுவதும் அவளுடன் இருந்தது வருணிற்கு உற்சாகத்தைத் தந்தது.ஒரு வித உணர்வு அது இதுவரை யாரிடம் உணராத உணர்வை அவள் அருகாமையில் உணர்ந்தான்.
மதியழகி முதன்முதலில் நகர்புறத்திற்கு வந்திருப்பதால் பயம் அதிகமாக இருந்தது. அதுவும் அவளிருக்கும் சூழ்நிலை அவளது பயத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
தினமும் செய்தித்தாளில் படிக்கும் பல செய்திகள் அவளுக்கு அச்சுறுத்தலைத் தான் தந்தது.
யாரைப் பார்த்தாலும் பயமாகவே இருந்தது. யாரையும் நம்பக் கூடாது.யாருடனும் அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவில் தான் இங்கு வந்திருந்தாள்.
பயிற்சி முடிந்ததும் வருண் மனமில்லாமல் அவளை அனுப்பி வைத்தான்.
அந்த கம்பெனியை விட்டு வெளியேறிவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி விரு விருவென அருகிலுள்ள பஸ் நிலையத்தை வந்தடைந்தாள்.
அவளை தொடர்ந்தே மெதுவாக காரில் வந்து கொண்டிருந்தவன் பஸ் நிலையத்திற்கு பத்தடி முன்பே காரை நிறுத்திக் கொண்டான்.
பேருந்தில் அவள் ஏறியப்பின் அதைப் பின் தொடர்ந்தான்.
மூன்று நிறுத்தங்கள் கடந்தப்பின்பு இறங்கியவள் எதிரே உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் நுழைந்துக் கொண்டாள்.
அந்த ஹாஸ்டலைப் பார்த்து புருவம் சுருக்கியபடி
"இவ என்ன ஹாஸ்டல்ல தங்கியிருக்காளா .ஏன் அவ பேரன்ஸ்லாம் இல்லையா. அவங்க கூட இருந்து வர வேண்டியதுத் தானே. இப்படி ஹாஸ்டல்ருந்து ஏன் கஷ்டப்படனும். ஒரு வேள அவளுக்குனு யாரும் இல்லையோ .இல்லை இல்லை அப்படியெல்லாம் இல்ல. நான் ஏன் அப்படி சொல்லனும் அவளுக்கு நான் இருக்கும் போது "...என நினைத்துக் கொண்டிருந்தவனின் மனசாட்சி...
"டேய் இதெல்லாம் ஓவரா இல்ல. இன்னக்கி தான அவள பார்த்த அதுக்குள்ள நான் இருக்கேன் .மானே தேனேனு உருகுற. கொஞ்சம் ஸ்பீட கம்மி பன்னு "...என எச்சரிக்கை செய்தது.
வருண் அவளைப் பின் தொடர்ந்ததிற்கான காரணம் அவளிருப்பிடத்தை அறிந்துக் கொள்ள அல்ல. அவளைப் பார்த்த நொடியிலிருந்தே அவள் முகத்தில் பயமும் நடுக்கமும் இருப்பதை கவனித்துத் தான் வந்தான்.ஒரு வேளை அவள் தன் பாதுகாப்பை எண்ணித் தான் பயப்படுகிறாளோ என்றுத்தான் பத்திரமாக அவளிருப்பிடத்தை அடையும் வரைப் பின் தொடர்ந்தான.
.
.
.
,
நிஷாவும் பார்க்கை வந்தடைந்தாள்.
"சாரி ஆதிரா ரொம்ப நேரம் வெயிட் பன்னவச்சிட்டேனா"... வருத்தத்துடன்.
"நானும் ஒரு பை மினிட்ஸ் முன்னாடி தான் இங்க வந்தேன் "...என்றாள்.
ஆதிரா சிரித்தபடி அவளிடம் பேசினாலும் மனதினுள் தான் சொல்லவிருப்பதை இவள் எவ்வாறு எடுத்துக் கொள்வாள். நம்புவாளா என்ற பயம் இருக்கத்தான் செய்தது.
மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள்.
"பிஸியா இருந்தியா டிஸ்டர்ப் பன்னிட்டேனா"...
"அதெல்லாம் இல்ல.நான் வெட்டியாதான் இருந்தேன்."...
"ஓ...... நான் உங்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும் நிஷா"...என்க..
"ஹாங்...என்ன சீரியஸ் மோடுக்குப் போயிட்டிங்க. அப்படி என்ன அந்த முக்கியமான விஷயம்.?"...என புருவம் உயர்த்தியவளிடம்... தயக்கத்துடன்...
"அது நானும் சக்தியும் லவ் மேரேஜ் பன்னிக்கல. எங்க மேரேஜ் நடந்த சூழ்யிலையே வேற"... என்றாள் எங்கோ பார்த்தபடி.
"என்ன லவ் மேரேஜ் இல்லையா" என அதிர்ச்சியில் வாயைப் பிளந்தவள் ..."அப்றம் ஏன் அன்னக்கி லவ் மேரேஜ்ஜானுக் கேட்டதுக்கு ஆமானு சொன்ன"... என்றாள் குழப்பத்துடன்.
"சூழ்நிலை அப்படி அதான் பொய் சொல்லவேண்டியதா போச்சு."...என்க..
"அப்றம் எப்படித்தான் நடந்துச்சு உங்க மேரேஜ்."...என்றவளிடம்
அவள் கடத்தப்பட்டதிலிருந்து சக்தி அவள் கழுத்தில் தாலிக் கட்டியது வரை ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள்.
உச்சக்கட்ட கோவத்துடன் "சீ யாரு அந்த அறிவுக்கெட்டவன் .கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத இராட்சசன்.அவன் மட்டும் எங்கிட்ட மாட்டினான் அடி வாங்கியே செத்துடுவான் பொறுக்கி"., எனப் பொறிந்துத் தள்ளியவள்
"சாரி ஆதிரா இதெல்லாம் தெரியாம நான் உன்கிட்ட லவ் ஸ்டோரி சொல்லுனு டார்ச்சர் பன்னிட்டேன் ",..என்றாள்.
,சாரி கேக்குற அளவுக்கு நீ பெரிய தப்பு பன்னல நிஷா"... என்றவளின்
இதயத்துடிப்பு அதிகமாக அவளது கைமேல் தன் கையை வைத்து அழுத்தியவள்.
"இப்ப அந்த அயோக்கியன் ஒரு பொண்ண கல்யாணம் பன்னிக்கப் போறான் "...என்றாள்.
"அவனுக்கெல்லாம் யார் பொண்ணு குடுக்க முன் வந்தது ".,.என்றாள் கோபத்துடன்.
"அவனுக்கு மத்தவங்கள பேசி ஏமாத்துறது அவ்வளவு கஷ்டமில்லை"...என்க
"அதுவும் சரிதான் எல்லாத்தையும் யோசிச்சு பொறுமையா செய்யற சக்தியையே ஏமாத்த தெரிஞ்சவனுக்கு மத்தவங்கள ஏமாத்தறது ஈஸி தான் "...என்றாள் சலித்தபடி.
"அவன் கல்யாணம் பன்னிக்கப்போறது என்னோட பிரண்டதான் "...என்றாள் பொறுமையாக.
"என்ன சொல்லற".....
"ஆமாம் அந்த பிரண்ட்டு நீ தான் .அவன் பேரு மதன் "...என்றாள் நிஷாவின் முகத்தின் மீதிருந்து கண்ணெடுக்காமல்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro