19
அப்படியே உறைந்தபடி நின்றிருந்தவள் மனதில்
"இவன் என்ன அவமானப்படுத்தி என்னோட அப்பா அம்மாட்டருந்து என்ன பிரிச்சி என்னோட வாழ்க்கைய திசை திருப்பினவன் ,...இவ ,.இவன சும்மா விடமாட்டேன் "...என நினைத்துக்கொண்டிருக்க கண்கள கோபத்தில் சிவந்து உடல் முழுவதும் சூடேற வியர்க்கத் தொடங்கியது.
அதை கலைக்கும் விதமாக நிஷா அவளைப் போட்டு உலுக்கினாள்.
"ஓய் ஆதிரா என்ன ஆச்ச அப்படியே உறைஞ்சி போய் நின்னுட்ட"...என்க...
"ஹாங் ஒ.,ஒன்னுல்ல ஏதோ யோசனைல இருந்துட்டேன் "...என அவளிடம் பேசியபடி மதனைப் பார்க்க அங்கு அவன் மறைந்திருந்தான்.
"மேரேஜ்ல எனக்கு சுத்தமா இன்ரஸ்ட் இல்ல .ஆனா இவர பார்த்துப் பேசனப்றம் புடிச்சுப் போச்சி"... என கண்கள் மிளிற நிஷா கூற ஆதிரா நிஷாவை பாவமாகப் பார்த்தாள்.
"மனசுல நிறைய ஆசைய வளத்துவச்சிருக்கா என்னனு சொல்லிப் புரிய வைக்க பக்குவமாதான் எடுத்துச் சொல்லனும் "...என மனதில் நினைத்துக்கொண்டாள்.
"அன்னக்கி என்ட இருந்து நீ தப்பிச்சிட்ட இன்னக்கி மாட்டிக்கிட்ட உன்னோட லவ் ஸ்டோரிப் பத்தி சொல்லு"...என்றதும் ...
"ஹாங் ..,.. கண்டிப்பா சொல்றேன் அது ஒரு பெரியக் கதை. உன்னோட போன் நம்பர் "...என ஆதிரா சொல்லிமுடிக்கும் முன்பே நிஷாவின் மொபைல் ரிங்கானது.
"ஒரு நிமிஷம் அவர் தான் கால் பன்றாரு"... என போனைக் காதில் வைத்தவள்.
"ஹலோ மதன் நான் இங்க தான் இருக்கேன். ஒரு டூ மினிட்ஸ் வந்துட்டேன்."...என போனை வைத்தவள்.
"சாரி ஆதிரா அவருக்கு டைம் ஆச்சு கிளம்பலாம்னு சொல்றாரு. நம்ம இன்னொரு நாள் மீட் பன்னும் போது உன் லவ் ஸ்டோரி சொல்லு பாய் "...என ஆதிராவை பேசவிடாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
.
.
.
"அட்டன்டரிடம் எதையோ விவரித்தபடி நின்றிருந்தவளை "ஆதிராசக்திவேல் "...என யாரோ அழைக்கத் திரும்பினாள்.
அவள் எதிரில் நின்றுக்கொண்டிருந்தவனைப் பார்க்க அவளுக்கு அப்படியே பற்றிக்கொண்டு வந்தது.
அவளை நோக்கி ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்தவன்
.
!கேள்விப் பட்டேன் சக்தி உன்ன கல்யாணம் பன்னிக்கிட்டானு.நானே உனக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு குடுத்துட்டேனோனு தோனுது. ம்ம்ம் ரொம்ப சந்தோஷமா இருக்கப்போல விட மாட்டேன். உன்னை என்னோட கால்ல விழுந்து கெஞ்ச வக்கிறேன்டி அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு"... என மதன் அவளிடம் சவால் விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
மதனுக்கு நிஷாவும் ஆதிராவும் தோழிகள் எனத் தெரியாது .அவர்கள் சற்றுமுன் சந்தித்துக் கொண்டதும் தெரியாது.தனக்கு தெரிந்த ஒரு மருத்துவர் இங்கிருப்பதாகவும் அவரை சந்தித்து விட்டு வருவதாகவும் நிஷாவை காரில் அமரச் சொல்லிவிட்டு ஆதிராவைப் பார்க்க வந்தான்.
மதன் பேசியதை அவள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை .அவள் எண்ணம் முழுவதும் நிஷாவை இதிலிருந்து எப்படி மீட்பது என்பது தான்.அதையே சிந்தித்தபடி அங்கேயே நின்றிருந்தாள்.
அதன் பின்பு தான் சக்தி அங்கு வந்தான்..
.
.
.
.
.
.
அன்று முழுவதும் ஆதிராவின் கவனம் தன் பணியில் இல்லை.
என்றும் விட உற்சாகமாக சக்தி வீடு வந்து சேர்ந்தான்.காதலில் விழுந்தவனல்லவா.
அவன் வந்ததிலிருந்து ஏதோ யோசனையாக இருந்தவளை சக்தியும் கவனிக்காமல் இல்லை.இரவு உணவின் போது அதை கேட்டே விட்டான்.
"என்ன யோசனை"... என சாதத்தை உண்ணாமல் பிளைந்தபடி அமர்ந்தவளிடம் சக்தி கேட்க.
"ஒன்னுமில்ல சக்தி "...என சாப்பிடத் தொடங்கினாள்.
"ஏதோ கேட்க வரனு தெரியுது. என்ன சொல்லு."...என்றதும்
"ஹாங் அது அதுவந்து எனக்கு உங்க ஆபஸ்ல வொர்க் பன்ற நிஷாவோட நம்பர் வேணும் "...என்றாள் தயங்கியபடி.
"இத கேக்கத்தான் இவ்ளோ தயக்கமா"...
அவள் எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க அவனே தொடர்ந்தான்.
"அவங்க நம்பர்லாம் எங்கிட்ட இல்ல. நான் நாளைக்கு வேணும்னா கேட்டு நம்பர் வாங்கிட்டு வரேன் "...என்றான் மெல்லிய சிரிப்புடன்.
"ம்ம்ம் "...என்றபடி அவள் கவனம் உணவிற்குச் செல்ல
"ஆமா அன்னக்கி எங்க ஆபிஸ் ஸ்டாப் நிறைய பேர் உங்கிட்ட பேசுனாங்க அதுல நிஷா மட்டும் என்ன ஸ்பெஷல் ."...என்றவன் அவளைக் கேள்வியாய் பார்க்கவும்...
"அவ பார்க்க பாரதி மாதிரியே இருக்கா அதான்."...என்றாள்.
சக்தியிடம் இதைப் பற்றிக் கூறினால் இன்று மதன் வந்து பேசியதையும் கூற வேண்டும். மதன் மீது கொலைவெறியில் இருப்பவன் இது தெரிந்தால் அவனை கொல்லக் கூடத் தயங்கமாட்டான் என்பதால் ஆதிரா அனைத்தையும் மறைத்தாள்.
மறுநாள் ஆபிஸிற்குச் சென்றவுடன் நிஷாவின் நம்பரைப் பெற்று ஆதிராவிற்கு மெஸேஜ்
அனுப்பினான்.
போன் நம்பர் கிடைத்தவுடன் நிஷாவிற்கு கால் செய்தவள் மாலை அருகிலுள்ள பார்க்குக்கு வருமாரு கூறினாள்.
அன்று ஆபிஸில் இன்டர்வீவ் நடந்தது.அதில் தேர்வானவர்களுக்கு அன்றே பயிற்சி தொடங்கப்படும்.பயிற்சி அங்குள்ள சினியர் ஸ்டாப் தான் கொடுப்பார்கள்.அதில் நம் வருணும், சக்தியும் இந்த ஆண்டு பயிற்சிக் கொடுப்பதற்காக தேர்வாகியிருந்தனர்.இருவரும் இளம் வயதினர்,சுறுசுறுப்பு திறமைசாலிகள் என்பதால் தேர்வாகியிருந்தனர். பயிற்சி ஒரு மாதம் கொடுக்கப்படும்.
ஆபிஸ் பாய் பயிற்சி கொடுப்பவர்களின் கேபினிற்கு சென்று அவர்கள் பயிற்சிக் கொடுக்கப் போகும் நபரின் விவரம் நிறைந்த பைலை கொடுத்தான்.
வருணுக்கு கொடுக்கப்பட்ட பைலை திறந்து பார்க்காமலே டேபுளில் வைத்தவன் தன் பாட்டிற்கு சிஸ்டமில் வேலைப் பார்க்கத் துவங்கினான்.
சிறிது நேரம் கழித்து "எக்ஸ்கியூஸ்மி சார் "...என்ற குரல் தேனாக அவன் செவியினுள் நுழைந்தது.
குரல் வந்த திசைக்கு திரும்பியவன் அங்கு நின்றுக்கொண்டிருந்தவளைக் கண் சிமிட்டாமல் மெய்மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
.
.
.
.
.
மாலை ஆதிரா பார்க்கில் நிஷாவிற்காக காத்துக்கொண்டிருந்தாள்.
Varun yaara paathan .....avala avanuku already theriuma ?
Aadhira soldradha nisha nambuvaala?
Comment pannunga frds next update la yaar soldradhu crct nu paapom.
sorry frds kutty update dha .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro