17
இறுகிப் போய் அமர்ந்திருந்தவன் ரிஷி குட்டியின் தீண்டலில் தளர்ந்தான்.
"உன் கேர்ள் பிரண்டுகிட்ட கோவிச்சுட்டு வந்துட்டியா".... என அவன் மீண்டும் கேள்வி எழுப்ப சக்தி ஆமாம் என்பதைப் போல் தலையசைத்தான்.
ரிஷி மேலும் அடுத்தடுத்த கேள்விகளைத் தொடுக்க சக்தி அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்தான்.
பின் ரிஷி விளையாடச் சென்று விட சக்தி அங்கேயே அமரந்திருக்க போன் ரிங் ஆனது.
திரையில் ஆதிரா என வர அதை எடுக்காமல் சைலன்ட் மோடில் போட்டான்.
வீடு திரும்பியவனுக்கு ஆதிராவின் மீதிருந்த கோபம் சற்றும் குறையவில்லை.
அங்கு அவள் சோபாவின் மேல் காலை குறுக்கி அதை அனைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
அவன் சென்றப்பின் அழுது ஓய்ந்தவள் என்ன செய்தோம் என இவ்வளவு கோவப்படுகிறான் என குழம்பிக் கொண்டிருந்தாள்.அதிலும் அவன் "டோன்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ் "...என முகத்தில் அடித்தார் போல் பேசியது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.அவனுக்கு பாரமாக இருந்து தொல்லை கொடுக்கிறோமெனத் தோன்றியது.
பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பி வராததால் சோபாவில் அமர்ந்துக் காத்துக் கொண்டிருந்தாள்.பலமுறை கால் செய்தும் அவன் போனை எடுக்கவில்லை.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து நின்றவள் விரு விரு வென அறையினுள் நுழைய போனவனிடம்
"சக்தி சாப்பிட்டுட்டு போ"... என்றாள் சற்று தயங்கிய குரலில்.
அவளது முகம் பாராமல் "எனக்கு வேண்டாம் "...ஒற்றை பதிலளித்துவிட்டு அறையினுள் நுழைந்துக் கொண்டான்.
மீண்டும் கண்களில் நீர் தேங்க நின்றிருந்தவள் தானும் உண்ணாமல் படுத்துக் கொண்டாள்.
விடிந்து எழுந்தவன் ஆதிராவைப் பார்க்க அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் அவன் எழும் முன் எழுந்து தன் வேலைகளை தொடர்பவள் இன்று எழவில்லை.
அவளே எழுந்துக் கொள்வாள் என சக்தி எழுப்பாமலே குளியறைக்குள் புகுந்துக் கொண்டான்.
தலையை துவட்டியபடி வெளியே வந்தவன் இன்னும் அவள் எழாமல் இருக்கவே ...
"தேவை இல்லாத வேலையெல்லாம் பன்னிட்டு எப்படி தூங்கறா "...என முணு முணுத்தவன் "ஆதிரா ஆதிரா"... என குரல் எழுப்ப அவள் எழுந்தபாடில்லை.
"ப்ச்.",,.. என புருவம் முடிச்சிட அவளின் தோளை உலுக்கி எழுப்புவதற்காக கையை வைத்தான். அவள் உடம்பு கொதிப்பதைப் போல் உணர்ந்தவன் தலையிலும் கழுத்திலும் கை வைத்துப் பார்க்க அனல் போல் கொதித்து.
"கடவுளே இவ்வளவு பீவர் ச்ச எப்பருந்துனு தெரியலையே"... என ஆதிராவின் தோளை உலுக்கி எழுப்பினான் . அவளினடமிருந்து ஒரு அசைவும் இல்லை.
பயத்துடன் "ஆ,,..ஆதிரா என்னாச்சு .ப்ளீஸ் எழுந்திரி எனக்கு பயமா இருக்கு "...என சொல்லும் போதே கண்கலங்கியது .
நேற்று அறையை சுத்தம் செய்ததால் மதிய உணவை மறந்தாள். இரவிலும் எதுவும் உண்ணவில்லை. உறங்கும் முன் தனக்கு ஜுரம் அடிப்பதை உணர்ந்தவள் தான் இருந்தநிலையில் மாத்திரை எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை.
இரு வேளை உண்ணாதது,மற்றும் ஜுரத்தின் காரணமாக மயங்கியிருந்தாள்.சக்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமையால் இரவு முழுவதும் அவள் அனத்தியது அவன் காதில் விழவில்லை.
பதறியவன் போனை எடுத்து விஷயத்தைக் கூறி வருணை காரை எடுத்து வரச்சொன்னான்.
சக்தி அழைத்த ஐந்து நிமிடத்தில் வருண் வந்து சேர்ந்தான்.
"என்னாச்சுடா அவங்க மயங்கி கிடக்கறது கூட தெரியாம என்னப் பன்னிட்டு இருந்த"... என கண்டிப்புடன் வருண் வினவ.
சக்தி நடந்ததை சுருக்கமாகச் சொல்லி அவனே தொடரந்தான்
"எல்லாம் என்னாலதான்டா"... என்றான் கலங்கியக் கண்களோடு.
"சரி வா பேசி டைம் வேஸ்ட் பன்னாமல் அவங்கள ஹாஸ்பிட்டல்ல சேர்ப்போம் "...என்று வருண் கூறிவிட்டு கார் கதவினை திறந்து வைக்க சக்தி ஆதிராவை கையில் அள்ளிக் கொண்டு காரினுள் கிடத்தியவன் பின் சீட்டில் தானும் அமர்ந்துக் கொண்டு அவள் தலையை தன் மடியில் எடுத்து வைத்துக் கொண்டான்.
அவள் நிலையை பார்க்க பார்க்க அவனுக்கு அழுகையாக வந்தது.
மின்னல் வேகத்தில் கார் ஆதிரா பணிபுரியும் மருத்தவமனை முன் நின்றது.அருகில் உள்ள மருத்துவமனை அது தான்.
ஆதிராவை அட்மிட் செய்திருந்தனர்.
பீவர் குறைவதற்காக வென்ப்ளான்ட் போடப்பட்டு அதன் வழியே மருந்துக் கொடுக்கப்பட்டிருந்தது.பல்ஸ் ரேட் அதிகமாக இருந்தது.
உள்ளே அவளுக்கு சிகிச்சை நடந்துக் கொண்டிருக்க வெளியே சக்தி வருணிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.
சாதாரண பீவர் என்றாலும் சக்திக்கு அழுகையாக வந்தது.தன் நண்பனின் தோளில் சாய்ந்து அழத்தொடங்கினான்.
அவன் முதுகை ஆறுதலாகத் தடவி விட்ட வருண்.
"சாதாரண பீவர் தான ஏன்டா அழற"...என்றதும்
"நான் அவக்கிட்ட ஹார்ஷ்ஷா பிகேவ் பன்னிட்டேன். எல்லாம் என்னால தான்.அவளுக்கு எதுவும் ஆகாது இல்ல எனக்கு பயமா இருக்குடா"....
"நீ தேவையில்லாம பயப்பட்றனு தோனுது .ஒன்னு ஆகாது."...என்றான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க வெளியே வந்த டாக்டர்
"பீவர் அதிகமானதுனால மயங்கிருக்காங்க. அதுவுமில்லாம அவங்க ரொம்ப அனீமிக்கா இருங்காங்க அதான். மருந்து கொடுத்துருக்கோம் பீவர் கொறஞ்சிடும். இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிரும் "...என கூறி அங்கிருந்து நகர்ந்தார்.
அவளுக்கு ஒன்றுமில்லை என்றவுடன் சக்திக்கு நிம்மதியாக இருந்தது.
உள்ளே சென்று ஆதிரா இருந்த நிலையை பார்த்தவன் மனதை குற்ற உணர்ச்சி கொன்றுக்கொண்டிருந்து.
அவளருகில் சேர் ஒன்றைப் போட்டு அமர்ந்துக் கொண்டான்.
விஷயம் தெரிந்து ஜானகியும் அங்கு வந்துச் சேர்ந்தார்.
ஜானகியை அவளுடன் இருக்க வைத்துவிட்டு வருண் சக்தியுடன் ஏதோ பேச வேண்டும் என அந்த மருத்துவமனையின் முன் உள்ள ஒரு கார்டனுக்கு அழைத்து வந்தான்.
"உண்மைய சொல்லு சக்தி நீ ஆதிராவ விரும்புறியா. இல்லனு மட்டும் சொல்லிராத. அவங்களுக்கு ஒன்னுனவுடனே நீ துடிச்சத நான் பார்த்தேன்."...
"எனக்கு தெரியலடா .ஆனா அவ என் கூடவே இருக்கனும்னு தோனுது. அவளுக்கு எதாச்சுனா மனசு படபடனு அடிச்சுக்குது. இதுக்கு பேர் லவ் னா நான் ஆதிராவ லவ் பன்றேன்டா "...என்றான் வருணை நேராகப் பார்த்து.
"சூப்பர்டா எனக்கு எவ்வளவோ சந்தோஷமா இருக்கு தெரியுமா. சரி எப்பலருந்துனு சொல்லு"... என கண்களில் ஒளி மின்ன வருண் கேட்க அதற்கு மெல்லியசிரிப்பொன்றை உதிர்த்தவன்.
"ஆரம்பத்துல நான் அவளுக்கு என்னப் பன்னாலும் வேண்டானு மறுத்துடுவா. அப்போலாம் லைட்டா மனசுக்கு கஷ்டமா இருக்கும் அத அப்படியே விட்டுட்டேன். ஆனா இரண்டு நாளைக்கு முன்னாடி அவ என் கையப் புடிச்சி ஆறுதல் சொன்னா அப்போ இன்னும் எனக்கு அவள புடிச்சி போச்சு. எப்ப பாரு அவ நினைப்பாவே இருக்கு .நேத்துக்கூட அவள திட்டிட்டு நான் அன்னைஇல்லம் போய்ட்டேன்.ஆனா மனசுல ஒரு ஓரத்துல அவள திட்டிட்டமேனு கஷ்டமா இருந்துச்சு. என்னோட கோபம் அத மறச்சிடுச்சு.இப்பதான் எல்லாம் புரியுது. அம்மாதான் என்கிட்ட அவள அனுப்பி வச்சிருக்காங்க .நான் அவள மிஸ்பன்னமாட்டேன் டா"... என்றான் காதல் நிறைந்தக் கண்ணோடு.
"ஹே...இவ்வளவு ஆசையா மனசுல வச்சுக்கிட்டுதான் விரப்பா சுத்திட்டிருந்தியா"....
"அதான் சொன்னனே அப்ப எனக்கு எதுவும் தெரியலனு .நீ இப்ப எங்கிட்ட கேட்டப்றம் தான் முழுசா புரிஞ்சது"...என்றான்.
"எப்ப சொல்லப்போற இன்னைக்கேவா"...
"அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனும். அதுவும் இல்லாம அவ அப்பா அம்மாவ பிரிஞ்சியிருக்க நான் தான காரணம் .இதையெல்லாம் பர்ஸ்ட் சரிபன்னனும். அப்பறமா தான் என்னோட மனசுலயிருக்கறத சொல்லுவேன்.".,,,
வருணிற்கு சக்தியை நினைத்து சந்தோஷமாக இருந்தது.
பின் இருவரும் ஆதிராவைக் காணச் சென்றனர்.
அவளுக்கு மயக்கம் தெளிந்திருந்தது.ஜானகி அவள் தலையை வருடியபடி அருகில் அமரந்திருந்தார்.
ஆதிரா சக்தியை நிமிர்ந்துக் கூடப் பார்க்கவில்லை.
வருண் ஆதிராவிடம் நலம் விசாரித்துவிட்டு அவர்களுக்கு தனிமையைக் கொடுக்கவேண்டும் என ஜானகியையும் வெளியே அழைத்துச் சென்றான்.
சற்று நேரம் தயங்கியபடி அங்கேயே நின்றிருந்தவன் அவளருகில் சேரைப்போட்டு அமர்ந்துக் கொண்டான்.
ஆதிரா குனிந்தத் தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.
அவளிடம் பேசலாம் என வாயைத் திறந்தான் அதற்குள் மருத்துவர் உள்ளே நுழைந்துவிட உடன்
ஜானகியும் வருணும் வந்தனர்.
"இப்ப எப்படி இருக்கு ஆதிரா"... என விடவியபடி அந்த லேடி டாக்டர் அவள் பல்ஸ் ரேட்டை பார்க்க ...
"ம்ம்ம் பெட்டர் மேம்."...என்றாள்.
"நீ இங்கதான வொர்க் பன்ற."...
"எஸ் மேம்."...
"இவ்வளவு கேர்லஸ்ஸா இருக்கலாமா ஒரு டாக்டர்ரா இருந்துட்டு. உன்னோட Hb 7gm தான் இருக்கு இதுல பீவர் வேற உனக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் தேவை 3 டேஸ் லீவு போட்டு ரெஸ்ட் பன்னிக்கோ. பிளட் டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் என்ன டைப் ஆப் பீவர்னு தெரிஞ்சிடும்.நார்மல்னு ரிசல்ட் வந்ததுனா நீ இன்னக்கி ஈவ்னிங்கே டிஸ்சார்ஜ் ஆகிடலாம் ஒகே டேக் கேர் "...என அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
மாலையில் ஆதிராவின் பிளட் டெஸ்ட் ரிசல்ட் நார்மல் என வந்தது.ஆதிராவை டிஸ்சார்ஜ் செய்தப்பின் ஜானகி அவளையும் சக்தியையும் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். விடுப்பு எடுத்திருப்பதால் சக்தி வேலைக்குச் சென்றால் வீட்டில் தனியாகத் தான இருப்பாள்.இங்கிருந்தாள் நான் அவளுடன் இருப்பேன் அவளுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக இருக்கும் என்று ஜானகி கூறவும் சக்தியும் ஒப்புக்கொண்டான்.
அங்கிருந்த மூன்று நாட்களில் எவ்வளவு முயற்சி செய்தும் ஆதிராவுடன் தனியாக பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
எப்பொழுதும் ஆதிரா ஜானகியுடனே இருந்தாள்.இரவு உறங்கும்முன் பேசலாம் என்றால் சக்தி அறைக்கு வரும்முன் உறங்கிவிடுவாள்.
இவர்களுக்குள் ஏதோ மனஸ்தாபம் என்பதை ஜானகி அறியாமல் இல்லை.கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனையில் மூக்கை நுழைக்க கூடாது என்பதால் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டார். வருணும் அதையே தான் நினைத்தான்.
இந்த மூன்று நாட்களில் ஆதிராவின் உடல் நிலை சற்று தேறியிருந்தது. இந்த மூன்று நாளிலும் அவளுடன் பேசாமல் இருந்தது சக்தியின் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தியிருந்தது.
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.வரும் வழியில் கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
அவளுடன் பேசியே ஆக வேண்டும் என்று தீர்மானித்தவன் அறையில் நுழைய அங்கு அவள் கபோடில் துணி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro