11
ஆதிரா அருகில் உள்ள எஸ் கே ஹாஸ்பிட்டலில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். ஹவுஸ்சர்சனாக இருந்தபோது கற்றுக் கொண்டதும் மற்றும் ஆறு மாதம் மருத்துவராக பணிபுரிந்த அனுபவமும் அவளுக்கு உதவியாக இருந்தது. ஹாஸ்பிட்டலில் அவளுக்கென்று ஒரு அறைக் கொடுக்கப்பட்டிருந்தது.அங்கு உடன் பணிபுரியும் யாருடனும் அதிகமாக பேசுவது இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள். காலையில் சக்தி கிளம்புவதற்கு முன்பே கிளம்பிவிடுவாள்.மாலை வந்தவுடன் சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு படிப்பாள்.சக்தி வந்தவுடன் காபி கலந்து கொடுத்துவிட்டு பிறகு இரவு உணவு தயார் செய்து வைத்து விட்டு அறையில் புகந்துக்கொள்வாள். இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்வதில்லை.. இதற்கிடையில் வருண் ஆதிராவிடம் அறிமுகமாகியிருந்தான். நான் வயதில் சிறியவள் என்னை அண்ணி என அழைக்க வேண்டாம் ஆதிரா என அழைக்குமாறு கூறியும் வருண் கேட்கவில்லை.வருணின் கள்ளம்கபடமில்லாத மனதை அறிந்தவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அடிக்கடி பாரதி போனில் ஆதிராவிடம் பேசிக்கொண்டுதான் இருந்தாள். பாரதியின் பேச்சு ஆதிராவிற்கு சற்று ஆறுதலாகத் தான் இருக்கும்.
சக்தி வருணிடம் ஜானகிக்கு இந்த திருமணம் பற்றி எதுவும் தெரிய வேண்டாம் . அதுவும் கடத்தல் அது இது என தெரிந்தால் வருந்துவார் என அவருக்கு தெரியப்படுத்தவில்லை.பிறகு சமாளித்துவிடலாம் என விட்டு விட்டான்.
என்றும் போல் சக்தி் ஆபிஷிற்கு தன் பைக்கில் கிளம்ப ஆதிரா அங்கு பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் சக்தி அந்த ஸ்டாப்பைக் கடக்கும் பொழுது ஆதிரா அங்கு இருக்கமாட்டாள் அதற்குமுன் சென்றிருப்பாள்.
குழப்பத்துடன் அவள் அருகில் பைக்கை நிறுத்தியவன்.
"என்ன ஆச்சு பஸ் வரலயா?"... என வினவ.
"இன்னக்கி கொஞ்சம் லேட் ஆகிடுச்சி பஸ் மிஸ் பன்னிட்டேன் அதான் "...என கூறியபடி பஸ் வரும் திசையின் புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளுடன் அங்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் காத்திருந்தவன்.
"நீ ஒன்னும் நினைச்சிக்கலனா நான் உன்ன ஹாஸ்பிட்டல்ல டிராப் பன்னிரேன் "...என்றான் தயங்கியபடி.
இந்த உலகத்தில் தன் மனைவியை தன்னுடன் பைக்கில் அழைத்துச் செல்ல இவ்வாறு அனுமதிக் கேட்ட கணவன் சக்தியாகத்தான் இருப்பான்.
தன் கைகடிகாரத்தில் மணி பார்த்தவள் தாமதமாவதை உணர்ந்து
அவனுடன் பைக்கில் ஏறிச் சொன்றாள்.
இருவருக்கும் இடையில் இன்னொருவர் அமரும் அளவிற்கு இடைவெளி இருந்தது.
ஆதிராவை ஹாஸ்பிட்டலில் விட்டு சக்தி தன் ஆபிஷிற்குச் சென்றான்.
மாலை வீடு வந்து சேர்ந்தவன். ஆதிராவிற்கு ஸ்கூட்டி வாங்குவதற்காக அவளை ஷோ ரூமிற்கு அழைக்க அவளோ ...
"இல்ல வேண்டாம் நான் என்னோட பர்ஸ்ட் மன்த் சாலரியில் வாங்கிக்கிறேன் "...என மறுக்க,...
"இல்ல அது வரைக்கும் நீ எப்படி" ... என சக்தி முடிக்கும் முன் "ப்ளீஸ் ..,., நானே வாங்கிக்கிறேன். "...என அவள் மறுக்க சக்தியும் அவளை வற்புறுத்த வேண்டாம் என விட்டு விட்டான்.
இவ்வாறாக சக்தி கூறும் ஒவ்வொன்றிற்கும் ஆதிரா
மறுப்பு கூற அவன் மனதில் ஓரத்தில் சிறிய வலி இருக்கத்தான் செய்தது.ஆனால் அந்த வலிக்கு என்ன அர்த்தம் என அவன் அப்பொழுதிற்கு உணரவில்லை.
.
.
.
.
.
.
.
நாட்கள் மெல்ல நகர.......
"ப்ளீஸ் வருண் தயவு செஞ்சி புரியரமாதிரி அவங்களுக்கு எடுத்துச் சொல்லு அவ வரமாட்டானு. நான் வரேன்ல அது போதாதா ".,..
"நான் என்னடா சொல்லமுடியும். நீயே சொல்லுப்போ".,...என்றவன் கடுப்பாகிவிட்டான்.
"ஹேய் புரிஞ்சிக்கோடா "..,...
"நீ ஒரு டைம் அண்ணிக்கிட்ட கேட்டுப்பாரு அவ்ளோதான் நான் வச்சிட்றேன் "...என போனை அனைத்தான் வருண்.
சக்தியை சாப்பிட அழைப்பதற்காக வந்தவள் இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
"யாரு எங்க வரமாட்டா?".. என வினவ,..அதற்கு திருதிருவென விழித்தவன்,..
"ம்ம்ம்.,, என்ன".... என்றான்.
"இல்ல நீ போன்ல யாரோ அங்கலாம் வரமாட்டா நான் மட்டும் வரேனு சொன்னல்ல அதான் யாரு வரமாட்டானு கேட்டேன்."...
"ஹாங் அது.,,.. அதுவந்து என்னோட ஆபிஸ்ல என்னோட கொலீக் ராஜேஸிற்கு வர சாட்டர்டே மேரேஜ் .அதான் இன்வைட் பன்னா எல்லாரும் உன்னையும் கூட்டிட்டு வரச் சொல்லி கம்பல் பன்றாங்க. அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நான் பார்த்துக்கிறேன்.நீ வா சாப்பிடலாம் "...என அவளை சாப்பிட அழைத்துச் சென்றான்.
ஆம் சக்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் யாருக்கேனும் திருமணம் என்றால் உடன் பணிபுரிவர்கள் திருமணத்திற்கு வரும் பொழுது அவர்களின் குடும்பத்துடன் வர வேண்டும்.இது அங்கு பணிபரியும் இளவட்டங்களின் அன்பான வேண்டுகோள். அதுவும் இல்லாமல் சக்தியை அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் வருணின் மூலம் சக்தியிடம் இதைப் பற்றி சொல்லுமாரு அறிவுறுத்தியிருந்தனர். வருணும் அதைதான் செய்தான்.
ஏதோ யோசனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள். சக்தியிடம்...
"எனக்கொன்னும் பிரச்சனை இல்ல. நான் உன் கூட வரேன் ".,எனக் கூற மகிழ்ந்தவன் அடுத்த நொடி அது மறைந்துப் போனது. இறுகியமுகத்துடன்
"அதுல ஒரு பிரச்சனை இருக்கு"...என்றிட
"என்ன?"...புருவம் முடிச்சிட அவனைப் பார்த்தாள்.
"வருண் அவங்க எல்லார்க்கிட்டையும் நான் லவ் மேரேஜ் பன்னிக்கிட்டேனு சொல்லிவச்சிருக்கான். அவன் மேலயும் எந்த தப்பும் சொல்ல முடியாது. அப்ப இருந்த சூழ்நிலை அப்படி .அதான் அப்படி சொல்லிட்டான்.இப்ப அங்க நீ வந்தா உன்கிட்ட அதையும் இதையும் கேட்டு தொந்தரவு பன்னுவாங்க"...என்றவன் தயக்கத்துடன் அவளை பார்த்தான்.
சில நொடி சிந்தித்தவள்...
" இல்ல எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. நான் சமாளிச்சுக்கிறேன் . நான் வரேன் "...என தீர்க்கமாகக் கூற சக்தியும் ஒப்புக்கொண்டான்.
அவளின் மன நிலைக்கு வெளியில் எங்காவது சென்று வந்தால் பரவாயில்லை என இருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro