KADHAL 33
பஸ்சில் இருவரும் ஏறி அமர, முதலில் சற்று தள்ளியே அமர்ந்திருந்த சித்து, நேரம் ஆக ஆக, நெருங்கி வந்து அமர்ந்து கொண்டான். 'என்ன' என்பது போல, புருவம் உயர்த்த, "ஒன்றும் இல்லையே" என்று இளித்து வைத்தான் சித்தார்த். அவளும் அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல், ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டு வர, அவள் தோல் மீது கையை போட, மீண்டும் திரும்பி பார்த்தால் அவள். "இப்போவும் ஒன்றும் இல்லையா?" என்று அவள் கேள்வி போல் கேட்க,"அது வந்து... அது வந்து.. ஆஆஆன்.. காரணம் கிடைச்சிடுச்சு. அந்த ரௌடி பசங்க கூட சண்டை போட்டேன் ல. அதான் கை எல்லாம் ஒரே வலி. அதான் ஒரு பிடிப்புக்கு கை போட்டுக்கிட்டேன்" என்று அவன் சிரமப்பட்டு ஒரு பொய் காரணம் தேடி கண்டு பிடித்து கூறு, அவளும், 'இதை நான் நம்பனுமா' என்று அர்த்தப்படும் ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.
" என்ன டா இது. சும்மா பாத்துட்டு திரும்பிட்டா. டென்சன் ஆகல, கத்தல, திட்டல. இது நம்ப ஆளு தானா" என்று யோசித்துக் கொண்டே, அவள் தோள் மீது சாய, "Mr. சித்தார்த்" என்று ஊர்வி அழைக்க, "ஆஹா.. அபாய சங்கு ஒலிக்க தொடங்கிடுச்சு. அலர்ட் ஆய்க்க டா சித்து. அலர்ட் ஆய்க்க" என்று நினைத்து கொண்டு அவள் தோள் மீது இருந்த கையை எடுக்க, அப்போதும் அவள் முரைத்துக் கொண்டிருக்க, "இரும்மா. தள்ளி உட்காரனும், அதானே. நாங்களே உட்காருவோம். இப்படி சும்மா சும்மா முரைக்காத. எங்கயாவது கண்ணு ரெண்டும் உருண்டு கீழ விழுந்துட போகுது" என்று சிலுத்துக் கொண்டு சற்று தள்ளி அமர, அவனைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது ஊர்விக்கு. இருப்பினும் இப்போது அவனிடம் அதை காட்டிக் கொண்டால் மீண்டும் ஏதாவது குரங்கு சேட்டை செய்ய துவங்கி விடுவான் என்று வெளிகாட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து வந்த சித்து, கொஞ்ச நேரத்திலேயே புலம்ப தொடங்கி விட்டான். "அவன் அவன் லவ்வர், பாய் பிரண்ட், அப்படி இப்படின்னு சொல்லிட்டு என்னன்னமோ பன்றான். நான் என்ன அப்படியா செய்ய சொல்றேன். சரி, நம்ப ஆளு தானேன்னு, தோள் மேல கை போட்டேன். அது ஒரு குத்தமா? அதுக்கு போய் இப்படி முரைக்குறா. ஊருல அவன் அவன் நாலு ஐந்து பிகர் கூட சுத்திட்டு நிம்மதியா இருக்கான். இந்த ஒரே ஒரு பிகர உசார் பண்ணிட்டு நான் படுற கஷ்டம் இருக்கே. அய்யய்யோ " என்று டயலாக் பேசினான் அவன்.
அவன் பேசுவதை கேட்டு உள்ளுக்குள் சிரித்து விட்டு, அவன் கைகளை மெல்ல பிடித்தாள் அவள். அவள் கைபிடியில் இருந்து அவன் கைகளை உதறி விளக்கிக்கொண்ட சித்து," "ம்க்கும். நாம்ப கை போட்டால் மட்டும் அது குத்தம்ன்னு வானத்துக்கும் குதிப்பாங்க. ஆனா இவங்க மட்டும் நம்ப கையை பிடிப்பாங்கலாம்" என்று சித்தார்த் கூற," சித்தார்த். கொஞ்சம் இங்க பாரேன்" என்று ஊர்வி கூற," "என்ன" என்றான் அவன்.
"சார் க்கு கோவமோ?" என்று ஊர்வி கேட்க, "ஆமா. இப்போ ஆமான்னு சொன்னா மட்டும் மேட்ம் அப்படியே இறுக்கி அணைத்து ஒரு இச்சு கொடுத்து சமாதானம் படுத்திட போறாங்க பாரு" என்றான் சித்தார்த்.
ஊர்வி அவன் பக்கம் திரும்பி, அவன் முகத்தை அவள் பக்கம் திருப்பி, "ஏன் சித்தார்த். தொட்டு அணைத்து பேசி, உரசிக்கிட்டு இருந்தால் தான் காதலா? காமம் தான் சித்தார்த் உடல் பொருத்தது. காதல்க்கு மனசு மட்டும் போதும். அதுக்காக இதெல்லாம் காமத்தை சேர்ந்தான்னு கேக்காத. எனக்கு இப்போ இதெல்லாம் வேண்டாம். என்னோட முதல் முத்தம் நான் என் கணவனுக்கு தான் குடுக்கணும்ன்னு ஆசை படறேன்" என்று கூற," அப்போ நான் என்ன தான் பண்ணுறது?" என்று சித்து கேட்க," Mr. சித்தார்த். டியூப் லைட்டா நீங்க? சீக்கிரம் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றேன் டா மரமண்டை" என்றாள் ஊர்வி." அதான் தெரியுதில்ல. நேராவே சொல்ல வேண்டியதுதானே " என்று கேட்டான் சித்து.
அதற்குள் கண்டக்டர் அவர்களிடம் வந்து," உங்க ஸ்டாப்பிங் வந்துடுச்சுன்னு நானும் ஐந்து நிமிஷமா விசில் அடிச்சிட்டு இருக்கேன். என்னை ஒரு மனுசனா கூட மதிக்காமல் நீங்க பாட்டுக்கும் பேசிட்டு இருக்கீங்க. முதல்ல கீழ இறங்குங்க. அடுத்த தடவை நீங்க வந்தால், உங்கள பஸ்சில் ஏத்த மாட்டேன். பஸ்சை தான் உங்க மேல ஏத்துவேன்" என்று கழுவி ஊத்தி அனுப்பினார். இருவரும் இருந்த களைப்பில் அவரவர் அறைக்கு சென்று உறங்கினர்.
சித்தார்த் காலையில் எழுந்ததும் அபியிடம் ஊர்வி கிடைத்த விஷயத்தை கூற, அவனுக்கும் அப்போது தான் நிம்மதி பிறந்தது.
காலை மணி ஒன்பது ஆக, ஹாலில் உமையாள், டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு கத்தி கொண்டிருந்தாள். "மணி ஒன்பது ஆச்சு. இன்னும் டிபன் ரெடி ஆகல. இந்த வீட்டுல யாருக்கும் இந்த பன்சுவாலிட்டி, ரெகுலாரிட்டி எதுவுமே இல்லை" என்று கத்தி கொண்டிருக்க, அவள் சத்தம் அனைவருக்குமே கேட்டது. "இந்த நண்டு காலையிலேயே வேலைய ஆராமிச்சிடுச்சு என்று நினைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான் கார்த்திக். "ஆமா நண்டு நீ ரொம்ப பன்சுவல், ரெகுலர். இப்ப கூட பாரு. 8.50 க்கு எழுந்து, பல் கூட துலக்காமல் 9 மணிக்கு எல்லாம் சாப்பிட வந்துட்ட பாரு" என்றான் கார்த்திக்." அட என்னயா தடிமாடு நாட்டு நிலவரம் தெரியாமல் பேசிட்டு இருக்க. ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுது. இதுல நான் வேற பல் துலக்கி, குளித்தால் என்ன ஆகுறது. என் பார்வையில் தினமும் பல் துலக்கி குளிப்பவர்கள் எல்லாம் தேச துரோகிகள். அவங்கள பிடிச்சி புழல் சிறையில் அடைக்கனும். அய்யோ. நானே பசியில இருக்கேன். நீ வேற என்னை பேச வைத்து என் எனர்ஜி வேஸ்ட் பண்ணாதே. தடிமாடு நீ சும்மா இரு. ஜானு நீ சொல்லு. என்ன சாப்பாடு சொல்லு" என்று நாலு வரி வசனம் பேசினாளும் தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள் உமையாள்.
"நீ தான் தினமும் இட்லி தோசை வேண்டாம். ஏதாவது வித்தியாசமாக வேணும்ன்னு கேட்டல்ல. அதானால நான் வித்தியாசமான சாப்பாடு செய்திருக்கேன்" என்று ஜானகி கூற," சோ ஸ்வீட் பெரியம்மா நீங்க. என்ன செய்திருக்கீங்க" என்று ஆவலாக கேட்க, "உப்புமா செய்திருக்கேன் " என்றார் ஜானகி.
உமையாள் முகத்தில் இருக்கும் ஆவல் மறைந்து."ஏய் தாய்க்கிழவி. உப்புமா தான் நீ வித்தியாசமான செய்யுற லட்சனமா? இதுக்கு இட்லியே பரவாயில்லையே. உன்னால எனக்கு விதவிதமா சமைத்து போட முடியும்ன்னா போடு. இல்லைன்னா ஒரு நல்ல chef ஆக பார்த்து கட்டி வச்சிடு" என்று கூறி முறுக்கிக்கொண்டு அமர, "அம்மாடி உமையாள்.." என்று ஜானகி ஏதோ கூற வர," நீங்க என்ன சொல்ல வரீங்ன்னு எனக்கு தெரியும். அம்மாடி உமையாள். என்னமா இப்படி சொல்ற. நீ இல்லைன்னா வீடே வெறுமை ஆகிடும். உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவோம். அதனால நீ இங்கேயே இருடா தங்கம்ன்னு என் கிட்ட கெஞ்ச போறிங்க. அதானே. சரி சரி. மனனிச்சிட்டேன். இப்போ போய் சூடா ஒரு ஆம்லெட் போட்டுட்டு வாங்க பாப்போம் " என்று ஓவர் பிகு செய்தாள்.
" அடங்க. நான் ஏன் டி உன் கிட்ட கெஞ்ச போறேன். நான் என்ன சொல்ல வந்தேன்னு கேளு. அம்மாடி உமையாள். உன்னை வச்சி மேய்க்குறதே ஒரு பெரிய தலைவலி. இதுல இந்த வயசான காலத்துல உனக்கு மாப்பிள்ளை எல்லாம் பார்க்க முடியாது. அது மட்டும் இல்ல. நாங்க மாப்பிள்ளை பார்த்து வச்சா, நாளைக்கு நீ படுத்துற பாட்டுல அவன் எங்களை கழுவி கழுவி ஊத்துவான். அதனால நீ என்ன பண்ணுவியாம். நீயே ஏதாவது சமையல்காரனை பார்த்து கட்டிக்கோ" என்று கூற, உமையாள் ஜானகியை முரைத்துக் கொண்டிருத்தாள். சிரிப்பு சத்தம் ஒன்று பலமாக கேட்க, அந்த பக்கம் திரும்பி பார்த்தார்கள் உமையாளும் ஜானகியும். அங்கு கார்த்திகோ தரையில் விழுந்து சிரித்துக்கொண்டு இருந்தான்.
" ச்சை. இவனுக்கு வேற நான் அசிங்க படுறதுல அப்படி என்னதான் சந்தோசமோ" என்று மனதில் நினைத்துக் கொண்டு "கிழவி கிழவி. தாயா நீ. பேய் பேய். அசிங்க தான் படுத்துறயே. அதை தனியா தான் வந்து பண்ணு. இந்த தடிமாடு இருக்கும் போது பண்ணுற. சும்மாவே இவன் என்னை வச்சி செய்யுவான். இரு உனக்கு பாயச்த்துல வெசம் வச்சிடுறேன்" என்று உமையாள் கூற," ஒரு கரேக்ஷன் நண்டு. நீ வைக்குற பாயசமே வெசம் மாதிரி தான் இருக்கும். இதுல வெசம் வேறையா? " என்று கேட்டான் கார்த்திக்." அடேய். இருடா உனக்கு ரெண்டு கிலாஸ் பாயாசம் எடுத்து வைக்கிறேன் " என்றாள் உமையாள்." அடிஆத்தி. என்னது ரெண்டா. என்னை ஊருக்கு டெட் பாடி யாக தான் அனுப்பி வைப்பா போலயே. நான் எஸ்கேப்" என்று அவன் ஓட, அப்போது அங்கு வந்து சேர்ந்தார்கள் ஊர்வியும், சித்துவும். "அண்ணா. கார்த்திக் அண்ணா. என்ன ஆச்சு. ஏதாவது ஆபத்தான மிருகம் நம்பல நோக்கி வருதா? இப்படி தலை தெரிக்க ஓடுறீங்க" என்று கேட்க," ஆபத்தை விட பெரிய ஆபத்து டா தம்பி. இந்த நண்டு சமைக்க போகுதாம். அதுவும் பாயாசம்மாம்" என்று கூற, "என்னது. சைத்தான் சமையல் செய்ய போதுதா. இந்தா இருங்க. இதோ நானும் ஓடியாறேன்" என்று சித்து கூற, அவன் அருகில் வந்த உமையாள்" மச்சான்.. " என்று உமையாள் சினுங்க, "மச்சி. நீ என்ன வேணாலும் பண்ணு. கருமம் இந்த சமையல் மட்டும் பண்ணி தொலையாத. பல பேரு உயிர் சம்பந்தப்பட்ட விசயம் பாரு" என்றான் சித்தார்த்." மச்சான். அப்போ என் சமையல் நல்லா இல்லையா" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க," நீ என்னை மச்சான் மச்சான்னு கூப்பிடுவதற்காக கொஞ்சம் பொய் சொல்லலாம் தான். அதுக்காக இவ்வளவு பெரிய பொய் சொல்ல முடியாது. நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு. பத்தாம் கிலாஸ் படிக்கும் போது மேகி செஞ்சியே. அன்னைக்கு அதை வாயில வச்சவன் தான். இன்னைக்கு வரை மேகி ன்னு நினைத்தாலே வாந்தி வருது" என்று கூற," மச்சான். நீயுமா.. " என்று ஏதோ தொடங்க," ஏய் வாயை மூடு. நாங்க சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பனும். லொட லொடன்னு பேசாத" என்றாள் ஊர்வி." ப்பே. அப்படியே ஆபீஸ் போயி மட்டும் என்ன பண்ணுவியாம். யார் உயிரையாவது எடுத்துட்டு இருப்ப" என்றாள் உமையாள்.
" ஆமா. இவங்க யாரு?" என்று கார்த்திக் ஊர்வியை பார்த்து கேட்க, அபியின் தங்கை என்று அறிமுக படுத்தி வைத்தனர்." வணக்கம் அண்ணி " என்று கார்த்திக் கூற, "ஏய் ஏய்..அவளை அண்ணின்னு கூப்பிடுற. அண்ணி முறையா வரும்" என்று உமையாள் கேட்க,"மிருணாளினிக்கு அண்ணிதானே. அப்போ எனக்கும் தான்" என்றான் கார்த்திக்.
"அவ அண்ணின்னா. நானும் அண்ணி தானே. என்னையும் அண்ணின்னு கூப்பிடு" என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்க, "ச்சை. உன்ன அண்ணின்னு எல்லாம் கூப்பிட முடியாது. பன்னி ன்னு வேனா கூப்பிடட்டா" என்று கார்த்திக் வழக்கம் போல காலை வார, மற்றவர்கள் அனைவரும் சிரிக்க, 'துப்புனா தொடச்சிக்குவோம்' என்ற பாலிசியை பாலோ செய்தாள் உமையாள்.
அந்த நேரத்தில் காலிங் பெல் அடிக்க, "நான் போய் யாருன்னு பாத்துட்டு வரேன்" என்று உமையாள் நழுவ, அதே நேரத்தில் ஊர்விக்கு போன் கால் வர, ரூமுக்குள் சென்றாள் ஊர்வி.
Extremely sorry guys...
Naan 4 days munaadiye type panna start panten.. Aana phone thanni kulla vizhundhuduchu.. Adhaan online vara mudila... 😑
Kovichikaama comments potutu ponga
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro