KADHAL 32
ஊர்வி இருக்கும் இடம் சொல்லிய உடன் விஷ்வா கு போன் செய்தான் சித்தார்த். "எங்கே டா இருக்க?" என்று சித்து கேட்க, "அதான் நீ அந்த போலீஸ் காரனுக்கு பயந்து ஊரை விட்டு ஓடி போக சொன்னியே. அதான் ரயில்வே ஸ்டேஷன் ல இருக்கேன்" என்று அவன் சொல்ல, அவனிடம் "சரி. 'உமா மஹேஸ்வரி ப்ளூ மெட்டல்ஸ்' எங்க இருக்கு?" என்று அவனிடம் கேட்க, "அந்த குடும்பத்துல சேர்ந்து லூசு ஆகிடியா நீ? இந்த நைட் ல போன் பண்ணி ப்ளூ மெட்டல்ஸ் க்கு அட்ரஸ் கேக்குற? போய் கல்லும் மண்ணும் வாங்க போறியா?" என்று கேட்டான் விஷ்வா. "டேய். எட்டு வருசமா வெளியூர் ல இருந்ததால எனக்கு இங்க இருக்க இடம் எல்லாம் அவளோ தெரியல. நீ இங்கயே தானே சுத்திட்டு இருக்க. அதான் உன் கிட்ட கேட்டேன். அப்புறம் நான் ஒன்னும் கல்லும் மண்ணும் வாங்க போகல. இது சீரியஸ் ஆனா விஷயம் டா. ஊர்வியை கடத்திட்டாங்க" என்று சித்து கூற, "என்னது கடத்திட்டங்களா? அப்டியே இருக்கட்டும். அவளை காப்பாத்த எல்லாம் என்னால உதவி செய்ய முடியாது" என்று விஷ்வா கூறினான். கோபம் அடைந்த சித்து, "நீ ஒன்னும் உதவி செய்ய வேண்டாம். நானே பாத்துக்கறேன்" என்று கோவமாக கூற, "சரி சரி. கோவிச்சிக்காத அந்த ஊர்விக்காக எல்லாம் இல்ல. உனக்காக. உனக்கு ஏதாவது ஆகிட போகுதுனு தான் உன் கூட வரேன். நீ அங்கேயே இரு. நான் வந்து கூட்டிட்டு போகுறேன்" என்றான் விஷ்வா.
"இது வீண் ஆசை மயூரன். நான்..." என்று ஊர்வி தொடங்கும் போதே, "நீ அந்த சித்தார்த்தை காதலிக்கிற, நீ அவனை தான் கல்யாணம் பண்ணிக்குவ அதை தானே சொல்ல வர செல்லம்" என்றான் மயூரன். "அப்போ நான் வேற ஒருத்தவனை காதலிக்குறேன் ன்னு தெரிஞ்சும், என்னை கடத்திட்டு வந்துருக்கியா?" என்று ஊர்வி கேட்க, "நீ வேற ஒருத்தவனை காதலிக்கிறதுனால தான் உன்னை தூக்கிட்டு வந்தேன். நீ என்னை அசிங்க படுத்தினாலும் நான் அமைதியா தான் இருந்தேன் இத்தனை வருசமா. என்னைக்காவது ஒரு நாள் உன்னை அடைஞ்சிடலாம்னு தான் அமைதியா இருந்தேன். ஆனா நீ என்னடானா அந்த பைய கூட சுத்திட்டு இருக்க. அதான் உன்னையும் கடத்திட்டு, பழியை அவன் மேல போடவும் பிளான் ரெடி பண்ணிட்டேன்" என்று அவன் கூறினான். அவனை பார்த்து ஒரு ஏளன புன்னைகை புரிந்தாள்.
" என்ன டி. இப்பவும் உன் திமிர் குறையல" என்று அவன் கேட்க," நீ பேச வேண்டியதெல்லாம் பேசிக்கோ. அவன் வந்ததுக்கு அப்புறம் நீ பேசுற நிலையில் இருப்பியான்னு சந்தேகம் தான் " என்றாள் அவள்." எவன் " என்று மயூரன் கேட்க, "அக்கட சூடு" என்று வாசலை நோக்கி கண்களை காட்டினாள் ஊர்வி. அங்கு மயூரனை பார்த்து முரைத்துக் கொண்டிருத்தான் சித்தார்த். சித்தார்த் அவன் கை முஷ்டியை மடக்க," என்ன தைரியம் டா உனக்கு. நாங்க இங்க ஆறு பேரு இருக்கோம். தனி ஆளாக வந்து நின்னுகிட்டு, என்னை முரைக்குறது மட்டும் இல்லாமல், கை முஷ்டியை வேறு மடக்குற" என்று மயூரன் கேட்டான்.
"எவ்வளவு பெரிய கோழையாக இருந்தாலும், அவனுக்குள்ள கூட ஒரு வீரம் இருக்கும். அது எப்போ வெளி வருதோ இல்லையோ. அவன் காதலிக்கு ஒரு ஆபத்துன்னா கண்டிப்பாக வெளிய வரும்டா. தனக்கு எதாவது ஆனாலும் பரவாயில்லை, தன் காதலிக்கு ஏதும் ஆகிட கூடாதுன்னு கண்டிப்பா வருவான்" என்று சித்தார்த் ஊர்வியை பார்த்து கொண்டே கூற, ஊர்வி அவனையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள்.
" அடேய் அடேய். போதும் நிருத்துடா. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி டைலாக் பேசுறீங்க. இதை கேட்கவா நான் இவளை தூக்கிட்டு வந்தேன். டேய் போய் அவனை காலி பண்ணிடுங்க" என்று கூற, அவன் ஆட்கள் ஐவர் அவனை நோக்கி ஓடி வர, சித்தார்த் கால்களாலே, கீழ கொட்டி வைத்திருந்த மணலை அவர்கள் கண்களில் தூவ, அவர்களோ மேற்கொண்டு காலடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறி நின்றார்கள். அவர்கள் தடுமாறிய அந்த நேரத்தை பயன்படுத்தக் கொண்டு, அங்கு கட்டுமானப் பணிகளுக்காக வைத்திருந்த கம்பி ஒன்றை எடுத்துக்கொண்டு சரமாரியாக தாக்கினான்.
அவன் பேய் போல தாக்குவதை பார்த்த மயூரன், முதலில் அவன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வழி செய்ய வேண்டும் என்று யோசித்து ஊர்வியின் கட்டுகளை அவிழ்த்து விட்டு அவளை எழுப்பி, அவள் கழுத்தில் கத்தியை வைத்து, வாசல் அருகில் வந்தான். சித்தார்த் அவர்களை பார்த்து விட, "கிட்ட வந்தா இவ கழுத்தை ஒரே சீவா சீவிடுவேன்" என்று ஊர்வியின் கழுத்தில் கத்தியை வைக்க, பதறினான் சித்தார்த்.
"டேய். அவளை ஒன்னும் பண்ணாத. அவளை விடு டா" என்று சித்து கத்த, "நீ என்னை எதுவும் செய்யாத வரை நானும் எதுவும் செய்ய மாட்டேன். அவளை காப்பாத்துறேன், என்னை பழிவாங்குறேன்னு, எதாவது செய்தால், அவ்வளவு தான்" என்று கூறி கொண்டே வாசல் வரை சென்று விட்டான். சித்தார்த் க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தன் கண் முன்னே அவளை அழைத்து செல்கிறான் என்னும் வருத்தம் ஒரு பக்கம் இருக்க, மயூரனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கோபம் ஒரு பக்கம் இருந்தது. அவன் மயூரனையே பார்த்து கொண்டே நின்றிருக்க, திடீரென அம்மா என்று அலறிக் கொண்டு கீழே சரிந்து விழுந்து, என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தான். சற்று பார்வையை கீழிறக்கி பார்க்க, அவன் விலாவில் கத்தி ஒன்று குத்தி இருந்தது. யார் குத்தி இருப்பார்கள் என்று பார்க்க, மயூரன் பின்னால் இருந்து வெளிவந்தான் விஷ்வா.
"டேய். என்னடா குத்திட்ட" என்று சித்தார்த் கேட்க, "வேற என்ன பண்ண சொல்ற. அந்த பொண்ண கூட்டிட்டு போடான்னு வழி அனுப்பி வைக்கவா" என்று அவன் கடுப்பாக கேட்க, "டேய் அவன் செத்துட்டா என்ன டா பண்றது" என்று சித்தார்த் கேட்க, "சாவட்டும். இவனெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம். சாகட்டும் " என்றான் விஷ்வா.
"டேய் முதல அந்த கத்தியை எடுத்துக்கோ. கை ரேகை வைத்து கண்டு பிடித்து விடுவார்கள்"என்று கூற, அந்த கத்தியை எடுத்து வைத்துக் கொண்டான் விஷ்வா.
" டேய். இவனை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு போகலாம்" என்று சித்தார்த் கூற," அப்டியே போய் நான் தான் குத்துன்னு சொல்லிட்டு வந்துடு. ஆள் மட்டும் வளர்ந்திருக்க, அறிவு கொஞ்சம் கூட வளரல. இப்ப அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா, எப்படி அடி பட்டுச்சுன்னு கேட்பாங்க. அதனால இவன் செத்தா சாகரான்னு விட்டுட்டு போகலாம். நான் கிளம்பறேன். நீயும் இவங்கள கூட்டிட்டு கிளம்பு" என்று கூறிவிட்டு விஷ்வா சென்றான்.
அவன் இவ்வாறு கூறிவிட்டு சென்றாலும் சித்து மனசு கேட்காமல் ஒரு பப்ளிக் PCO இல் இருந்து ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து இந்த இடத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்று மட்டும் கூறிவிட்டு போனை வைத்தான்.
வீட்டுக்கு செல்லும் வழியில் மயூரன் பற்றி கேட்க, அத்தனையும் ஒப்பித்தாள் ஊர்வி. "சித்தார்த். நீ கேட்டதுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிட்டேன் இல்ல. இப்போ நான் கேக்குறேன், விஷ்வா யாரு?" என்று கேட்டாள் ஊர்வி. "சொல்றேன் மா. சொல்லி தான் ஆகனும். உன்னையும் அபியையும் ஒன்னா வச்சி சொல்லிடறேன்" என்று சித்தார்த் கூற சரி என்றாள் அவளும்.
சித்தார்த் வரும் போது விஷ்வா உடன் இரு சக்கர வாகனத்தில் வந்துவிட்டான். அந்த வண்டியையும் விஷ்வா எடுத்து சென்று விட்டதால் இப்போது வீட்டுக்கு எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டே, ஊர்வி யிடம் கேட்டான்." அபிக்கு போன் பண்ணி கார் எடுத்துட்டு வர சொல்லவா.. இல்ல கேப் புக் பண்ணவா?" என்று கேட்க, "டவுன் பஸ் ல கூட்டிட்டு போறியா? எனக்கு ரொம்ப நாள் ஆசை" என்று சித்து வின் கைகளை பிடித்து கொண்டு கேட்க, அவள் பேச்சை மீற முடியாதவனாக, தலை அசைத்தான் அவன்.
இருவரும் பேரூந்து நிறுத்தத்தில் நின்று, பஸ்ஸில் ஏறினார்கள். அதிக கூட்டம் இல்லாத அந்த பேருந்தில் ஏறி ஊர்வி ஜன்னல் ஓரத்தில் அமர, அவள் அருகில் அமர்ந்தான் சித்தார்த்.
சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து, அவளுக்கு வெகு நெருக்கமாக அமர்ந்து கொண்டான். இரவு நேர குளிரில் கூட்டுக்குள் அமர்ந்திருக்கும் ஜோடி கிளிகள் போல அமர்ந்திருந்தார்கள் இருவரும்..
Short ud ku sorry pa...indha pacha pullaya manichi comment pannitu ponga.. 😪😪
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro