KADHAL 27
ஊர்விக்கு ACP இனியன் போன் செய்து, இந்த கேஸ் பற்றி சிலவிஷயங்கள் கூற வேண்டும் என்று, நேரில் வருமாறு அழைத்தான். "மாலை வருகிறேன். எங்கு வரவேண்டும்?" என்று கேட்டுவிட்டு போன் ஐ வைத்தாள்.
மிருணாளினி, அபி, சித்து அனைவரும் ஆபீஸ் கு கிளம்ப, ஊர்வி வரவில்லை என்று கூறிவிட்டு வீட்டிலே அமர்ந்தாள். உமையாள் நானும் வரேன் என்று அவர்களுடன் கிளம்பினாள்.
அவர்கள் சென்ற உடன் தாயின் மடியில் சாய்ந்தாள் ஊர்வி. "என்ன மா?" என்று ஜானகி கேட்க, "அம்மா... என்ன சொல்றதுன்னு தெரியல மா. அப்பா. அப்பா..." என்று இழுத்தாள் ஊர்வி. "என்ன தங்கம். அப்பா ஒத்துக்குவாரான்னு பயப்படறயா தங்கம். நான் ஏற்கனவே அப்பா கிட்ட சொல்லிட்டேன்" என்று ஊர்வின் தாடையை பிடித்து கேட்க, அப்போது தான் ஊர்விக்கு ஒரு எண்ணம் வந்தது. ஒரு வேலை தான் சித்துவை காதலிப்பது தந்தைக்கு பிடிக்கவில்லையோ. அதனால் தான் இப்படி ஒரு நாடகம் நடத்தினாரோ?" என்று கேள்வி எழுந்தது அவளுக்கு.
உடனே தன் தந்தையிடம் ஓடியவள், "அப்பா. உங்களுக்கு சித்தார்த் ஐ பிடிக்குமா?" என்று கேட்க, சிறிது யோசித்த கிருஷ்ணன், "ஏன் மா. பிடிக்குமே..நான் தூக்கி வளத்தை பையன் மா அவன். எனக்கு பிடிக்காம இருக்குமா" என்று கூறினார். சற்று நிதானித்து விஷயத்துக்கு வந்தாள் ஊர்வி, "அது வேற அப்பா. நான் சித்துவை கல்யாணம் பண்ணிக்கறதுல உங்களுக்கு சம்மதமா?" என்று ஊர்வி கேட்க, அமைதியானார் கிருஷ்ணன். சிறிது நேரம் கழித்து, "உனக்கு பிடிச்சிருந்தா, நான் என்னமா சொல்ல போறேன். உன்ன நல்ல பாத்துக்கிட்டா சரி தான்" என்று அவர் கூற, "சரி பா" என்று கூறிவிட்டு அறையில் இருந்து வெளியேறினாள் ஊர்வி.
மாலை நான்கு மணி போல, இனியன் ஒரு காபி ஷாப்பில் காத்திருந்தான். "சே. எல்லாரும் லவர் ஐ பார்க்க ரோஸ், சாக்லேட் னு வாங்கிட்டு போவாங்க. நம்ப நிலைமையா பாத்தியா. கேஸ் பைலை தூக்கிட்டு வந்து இருக்கோம்" என்று மனது நினைக்க, "டேய். இன்னும் நீ ப்ரொபோஸ் ஏ பண்ணல அதுக்குள்ள லவர் ஆ? என்று அவன் மூளை அவனை காரி துப்பியது. "அது இந்த ப்ரோப்லேம் எல்லாம் முடியட்டும். அப்புறம் பாரு நாங்க லவ் எல்லாம் மாஸ் ஆ ப்ரொபோஸ் பண்ணுவோம். இப்போதைக்கு crush " என்று சொல்லி மூளையை சமாதானம் செய்தது மனது.
ஊர்வி அங்கு வந்து சேர, "ஹலோ ஊர்வி" என்று இனியன் ஆர்வமாக கூற, உணர்ச்சிகள் துடைத்த குரலில், "ஹலோ" என்று கூற, இனியன் முகமும் வாடியது. "சொல்லுங்க இனியன். இந்த கேஸ் பத்தி என்ன சொல்லணும்" என்று கேட்க, அவனும் அரை மனதுடன் கேஸ் பத்தி சொல்ல ஆரமித்தான். "ஏற்கனவே சொன்ன தான் ஊர்வி. சித்து அப்பா ஒரு drug dealing கேஸ் ல உள்ள இருக்காரு. இது நடந்து எட்டு வருஷம் ஆகுது. அவங்க அப்பா சிறையில் கு போன நாலு நாள் ல அவங்க அம்மா ஒரு accident ல இறந்துட்டாங்க" என்று கூற, "accident நா?" என்று ஊர்வி இழுக்க, "ஒரு லார்ரி இடிச்சி செத்துட்டாங்க" என்றான் அவன். "அவள் ம்ம் என்று மட்டும் கூறி தலையாட்ட , அவன் பேச தொங்கினான். "அப்புறம். அதுக்கு ரெண்டு நாள் முன்னாடி அவங்க வீட்டு வாட்ச்மன் வீடு எரிஞ்சதுல, குடும்பத்தோட, எல்லாரும் செத்துட்டாங்க" என்று கூறினான். "இதுல ஏதோ இருக்கு இனியன். எப்படி கொஞ்சம் நாள் கேப் ல சித்துக்கு சம்பந்தப்பட்ட எல்லாரும் செத்து போயிருக்காங்க. அது எல்லாமே எதேர்ச்சியா நடந்துருக்க வாய்ப்பில்லை. அதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க" என்று கூறிவிட்டு யோசனையில் ஆழ்ந்தாள்.
"ஊர்வி.. நான் உன்ன..." என்று இனியன் அவன் மனதில் உள்ளதை கூற வர, ஊர்வி சட்டென, "இனியன். சொல்ல மறந்துட்டேன். சித்தார்த் கூட இருக்கவன், அதான் godown கு பாம் வச்சவன் பெரு விஷ்வா" என்று கூற, இனியன் முகத்தில் அதிர்ச்சி ரேகை படர்ந்தது.
"ஊர்வி.. சித்து வீடு வாட்ச்மேன் பையன் பெரு விஷ்வா. அவனும் அந்த அச்சிடேன்ட் ல எரிஞ்சிட்டதா தானே ரெகார்ட் ல இருக்கு. செத்தவன் திரும்பி வர முடியாது. வேற ஏதும் விஷ்வா சித்து கூட இருக்கறதுக்கு வாய்ப்பில்லை. சே. இந்த கேஸ் ல எல்லாமே குழப்பமா தான் இருக்கு" என்று கூறி அவன் டேபிள் இல் கையை அடிக்க, "வேற என்ன குழப்பம்?" என்று அவள் கேட்க, "அவங்க அப்பா சிறையில் ல இருக்கறதா ரெகார்ட் ல மட்டும் தான் இருக்கு" என்று கூற, "புரியல" என்றால் ஊர்வி. "மாதவன் சிறையில் இருக்கறதா ரெகார்ட் ல இருக்கு. அவரை மீட் பண்ணலாம்னு பாத்த முடியல. அவரு பாக்கணும்னு சொன்னதுக்கு, higher officials எல்லாரும் என்ன அடக்க பாக்குறாங்க" என்று கூற, "அப்போ என்ன சொல்ல வரீங்க" என்றாள் ஊர்வி.
"மாதவன் சிறையில் ல இல்ல. சிறையில் ல இருக்காருன்னு ஏமாத்திட்டு இருக்காங்க. யாரோ ஹை position ல இருக்கவங்க இதுக்கு துணை. அதான் higher officials மூடி மறைக்கறாங்க" என்றான் அவன்.
அதற்குள் இனியன் போன் கு அழைப்பு வர, "ஊர்வி. முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்பறேன்" என்று இனியன் கிளம்பினான். அடுத்த பாத்து நிமிடங்களில் ஊர்வி காபி ஷாப் ஐ விட்டு வெளியேறி, கார் கதவை திறக்க, அவள் பின்னால் இருந்து யாரோ, அவள் மூக்கை கைக்குட்டை வைத்து அழுத்தினர். அவள் திமிறி பார்த்தும் ஒன்றும் நடக்க வில்லை. அவள் கையில் இருந்த கார் சாவியை வைத்து, பின்னல் இருப்பவனை குத்தினாள் ஊர்வி. குத்திய இடத்தில இருந்து குருதி ஒழுக, அவன் வலியில் அலறினான் தவிர, பிடியை தளர்த்த வில்லை.
கைக்குட்டையில் இருந்த மயக்க மருந்தின் வீரியத்தால் ஊர்வி மயங்க, அவளை சற்று தொலைவில் நிறுத்த பட்டு இருந்த வேறொரு கார்க்கு இழுத்து சென்றான்.
சற்று நேரத்தில் வேலையை முடித்து விட்டு, இனியன் அதே பக்கமாக திரும்ப, ஊர்வியின் கார் இன்னும் அதே காபி ஷாப் முன்பு நின்று கொண்டு இருப்பதை கண்டான். ஏதோ தவறாக பட, இறங்கி அந்த கார் பக்கம் சென்றான்.
அந்த காரின் கதவுகள் திறந்திருக்க, எவனோ ஒருவன் ஏதேதோ போலி சாவிகளை வைத்து காரை உயிர்ப்பிக்க முயன்று கொண்டிருதான். அவன் காலரை பிடித்து வெளியே இழுத்தான் இனியன். இனியன் கண்டவுடன் பயத்தில் பிதற்ற தொடங்கினான் அந்த திருடன். "எங்க டா அந்த பொண்ணு" என்று இனியன் உறும, "பொண்ணா? அதெல்லாம் எனக்கு தெரியாது சார். கார் கதவு தெறந்து இருந்துச்சு. இதை திருடிட்டு போகலாம்னு வந்தேன். எனக்கு ஒன்னும் தெரியாது" என்று பதறினான் அந்த திருடன். அவன் திருடன் மட்டுமே என்று இனியனுக்கும் தெரியும். அதனால் அவனை விடுத்திவிட, அவனும் விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தான்.
அந்த காபி ஷாப் வாசலில் CCTV இருக்கும் என்று நம்பியவனுக்கு ஏமாற்றமே. அவள் கார் நிக்கும் இடம் வேற எந்த CCTV யிலும் கவர் ஆகா வில்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் சோர்ந்து போனான் இனியன். அப்போது அவன் கண்களில் பட்டது கீழே சொட்டி இருந்த ரத்தம். ஊர்வியை பிடித்துசென்றவன் கைகளில் இருந்து வழிந்த ரத்தம், அவன் நடந்து சென்ற வழி எங்கும் இருந்தது. அந்த ரத்த கறைகள் சிறிது தூரத்திற்கு பிறகு இல்லாமல் போக, அந்த இடத்தில் இருந்து வேற காரில் அவளை அழைத்து சென்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்தான் இனியன். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் இடம் அங்கு உள்ள டிராபிக் சிக்னல் அருகில் உள்ள CCTV கமெராவில் கண்டிப்பாக பதிவாகி இருக்கும் என்று நம்பியவன் control ரூம்க்கு விரைந்து சென்றான்.
அங்கு சென்றவனுக்கும் ஏமாற்றம் தான். கடத்தி சென்றவன் mokey குல்லா அணிந்து முகத்தை மறைத்திருக்க, அவன் முகத்தை காண முடியாமல் போனது. கார் நம்பரை மட்டும் நோட் செய்து வைத்து கொண்டான்.
இதை அவள் குடும்பத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியவன் அபி கு போன் செய்தான். அபியிடம் தெரிவிக்க, அவன் பதறிப்போய் சித்தார்த்துடன் இனியனை பார்க்க கிளம்பினான்.
இங்கு ஆஃபீஸிலோ வேலை நேரம் முடிந்தது. அபி, சித்து இருவரும் சென்று விட்டதால், வீட்டுக்கு அழைத்து செல்ல யாரும் இல்லாமல் அமர்ந்திருந்தாள் உமையாள். மிருணாளினி அவளிடம் வந்து, என் அண்ணாவும், உன் அண்ணாவும் வர லேட்டா ஆகும் போல. நீ என் கூட வா" என்று அழைத்து சென்றால் மிருணாளினி.
இருவரும் நடந்து செல்ல, வழியில் ஒரு கடையில் சுட சுட சமோசா போட்டு கொண்டு இருக்க, அதை பார்த்த உமையாளுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. "அங்க பாருங்க. சமோசா போடறாங்க. நான் போய் வாங்கிட்டு வரேன்" என்று கூற, "எனக்கு வேண்டாம்" என்றாள் மிருணாளினி. "எனக்கு வேணுமே" என்று கூறிவிட்டு, துள்ளி துள்ளி சென்றாள் உமையாள். அவள் போவதை பார்த்து சிரித்து கொண்டிருந்த மிருணாளினியின் சிரிப்பு தன்னை நோக்கி வருபவனை பார்த்தவுடன் நின்று போனது.
உமையாள் சமோசா வாங்கிவிட்டு, திரும்பி பார்க்க, எவனோ ஒருவன் மிருணாளினியின் கையை பிடித்து தர தரவென இழுத்து சென்றான். அதை பார்த்தவள் "டேய் டேய்" என்று கத்திக்கொண்டு ஓட, அங்க மிருணாளினியும், "எங்க இழுத்துட்டு போற. என்ன விடு" என்று கத்திக்கொண்டிருந்தாள்.
"டேய் தடி மாடு. விடு டா எங்க அண்ணியை" என்று உமையாள் கத்த, "என்னது உன் அண்ணியா?" என்றான் அந்த புதியவன். "பின்ன. பன்னியா? செவுடா டா நீ? ஒரு தடவ சொன்ன புரியாது. என் அண்ணன் ஆளு எனக்கு அண்ணி தான்" என்று அவள் கூற, மிருணாளினியை முரைத்தான் அவன். "வேலைக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு இங்க எவனோ ஒருத்தவன் கூட சுத்திட்டு இருக்கியா?" என்று அடிக்க கை ஒங்க, அவன் கையை பிடித்து தடுத்தாள் உமையாள். நொடி நேரத்தில் சுதாரித்தவன், தன் கையை விடுவித்து கொண்டு, உமையாள் கையை பிடித்து முறுக்க தொடங்கினான். "டேய். தடிமாடு. விடுடா.. இப்டி என் பிஞ்சு கையை போடு முறுக்குற..விடுடா." என்று அவள் கத்திக்கொண்டே தன் கையில் இருந்த சமோசாவை அவன் மூஞ்சில் மீது எறிந்தாள். கோவம் கொண்டவன் ஒரு கையில் உமையாள் கையை முறுக்கிக்கொண்டே, கீழே குனிந்து மற்றொரு கையில் ஒரு கல்லை எடுத்தான். உமையாள் மீது அந்த கல்லை எரிய குறி பார்க்க, "ஆத்தாடி இவன் கொலைகாரனா இருப்பான் போலயே. எம்புட்டு பெரிய கல்லா தூக்குறான் பாரு. யாராவது காப்பாத்துங்க. என்ன கொல்லவரான்..காப்பாத்துங்க" என்று கத்த, அவ்வழியே சென்று கொண்டிருந்த, ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள் அங்கு வந்தனர். "என்ன பிரச்சனை" என்று கேட்க, "அவனே கேளுங்க சார். என் அண்ணி கைய பிடிச்சி இழுக்கிறான். என் கையை பிடிச்சி முறுக்கறான். தடிமாடு. இவன் மூஞ்சில தூக்கி போட்ட ஒரு சமோசா வேற வேஸ்ட். புடிங்க சார். புடிச்சி ஜெயில் ல போடுங்க சார் அவனை" என்று கூற, "சார்.. அவ பொய் சொல்றா.." என்று அந்த புதியவன் பேச தொடங்கும் போதே, 'அதெல்லாம் ஸ்டேஷன் ல வந்து பேசிக்கோ" என்று கூறிவிட்டு அவனை அழைத்து சென்றனர். அவன் உமையாளை முரைத்து பார்க்க, "ம்க்கும்" என்று முறுக்கிக்கொண்டு திரும்பிவிட்டாள் அவள்.
Indha dhadava urviyai kadhathitu ponadhu yaraa irukum?
Miru kita vambu panra andha pudu aalu yaaru?
next ud la pakalaam..
apram daily night dhaan type panren...thooka kalakathula enna panrenu enaku therla..edhaavadhu puriyalanaa kelunga paa..
vote and comment pannitu ponga..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro