KADHAL 22
"அத்தைனு கூப்பிடுமா" என்று ஜானகி கூற, "அட கடவுளே. இந்த லூசுங்க, அம்மா கிட்டயும் சொல்லிடுச்சுங்க போல. இவங்களாவது இந்த லூசுங்களுக்கு புத்தி சொல்லுவாங்கனு பாத்தா, இவங்களும் இதுங்க கூட சேந்துக்கிட்ட, அத்தைனு கூப்புடா சொல்லுறாங்க. லூசு குடும்பம். லூசு குடும்பம்" என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.
"என்னமா யோசிக்குற" என்று ஜானகி கேட்க, இழித்துக்கொண்டே, "ஒன்னும் இல்லையே" என்றால் மிரு. "ஆமா. புள்ளைங்க லவ் பண்றேன்னு சொன்னா அதுக்கு முதல் எதிரி அவங்க அப்பா அம்மா வா தான் இருப்பாங்க. நீங்க என்னடா நா இப்படி அநியாயத்துக்கு சப்போர்ட் பண்றீங்களே" என்று மிரு ஆச்சர்யமாக கேட்டாள்.
"எதிர்த்து என்னமா பண்ண சொல்லுற. வாழப்போறவங்க தான மா முடிவு செய்யணும். நம்பள விட இப்போயெல்லாம் பசங்க புத்திசாலியா இருக்காங்க. அவங்க நல்லா இருந்தா போதும்" என்று ஜானகி கூற, மிருணாளினிக்கோ, தன் அன்னை இப்பொழுது இருந்திருந்தால் இப்படி தன் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்திருப்பாரோ. ஆனால் இப்போது தன் விருப்பங்களுக்கோ, எண்ணங்களுக்கோ செவி சாய்ப்பவர் எவரும் இல்லையே" என்று நினைக்கும் போது அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
அவள் மனதின் ஓரத்தில் அபி ஒரு சிறு இடம் பிடித்துத்தான் இருந்தான். ஆனால் இது நிறைவேறாத ஆசை என்று தெரிந்தும் அபி மனதிலோ, அல்லது அவன் குடும்பத்தினர் மனதிலோ ஆசையை வளர்ப்பது தவறு என்று எண்ணியவள், "நான் எங்க அப்பா சொல்லுற பையனாதான் கல்யாணம் பண்ணிப்பன். நீங்க நெனைக்கறது எல்லாம் நடக்காது மேடம்" என்று கூறினாள் அவள்.
அவள் அப்படி கூற உமையாலும் ஜானகியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். "இவங்க ஆசை நிறைவேறாதுன்னு சொல்றன். இதுக்கும் சிரிக்கறாங்க. இது கண்டிப்பா லூசு குடும்பம் தான்" என்று நினைத்து கொண்டு, "எதுக்கு சிரிக்கறீங்க?" என்று கேட்க, "உங்க அப்பா பாக்குற பையன கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னியே தவற. என் பையன புடிக்கலைனு சொல்லலையே. என் பையனையே உங்க அப்பாவை பாக்க வச்சிட்டா போச்சு" என்று ஜானகி கூற, "வேணாம் வேணாம். அப்பா கிட்ட எல்லாம் ஒன்னும் பேச வேணாம்" என்று பதறினாள் அவள்.
"இவர்கள் என் தந்தையிடம் பேசினால் என்ன கூறுவார்கள். தன் மகன் என்னை காதலிப்பதாக கூறுவார்கள். என் தந்தையும், தாத்தாவும் தான் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே கத்தியை தூக்குபவர் ஆயிற்றே. இந்த விஷயம் தெரிந்தால் அபியை கொன்றுவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். நம்மால் அபிக்கு ஏதும் ஆகக்கூடாது" என்று நினைத்துதான் அவள் வேண்டாம் என்று கூறியது.
"உங்க அப்பா கிட்டயும் பேசவேணாம்னு சொல்லுற. ஆனா உங்க அப்பா பாக்குற பையனாதான் கட்டிப்பேன்னு சொல்லுற. அப்போ நாங்க என்ன தான்மா பண்ணுறது?" என்று ஜானகி சற்று கடுமையாக கேட்க, அவள் முகம் மாறியது. "ஒன்னும் பண்ண வேண்டாம். என் தலைல என்ன எழுதிருக்கோ, அப்டியே நடக்கட்டும். என் தலையெழுத்தை மாத்த யாரும் முயற்சி பண்ண வேண்டாம்" என்று அவள் கூறும் போது, அவள் மறைத்து வைக்க செய்த முயற்சியும் மீறி, இமை ஓரத்தில் ரெண்டு கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தன.
இதை பார்த்த ஜானகி, "இப்போ எதுக்குமே கண்ணு கலங்குற? உங்க வீட்டுல ஏதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியுது. அது என்னனு நீ சொன்ன தான டா தெரியும்" என்று அவள் தலையை கோதிவிட, மிருணாளினிக்கோ இறந்த அவள் தாயின் முகம் நினைவில் வந்து தொல்லை செய்தது. ஆனால் தன் தாய் இறந்ததுக்கு காரணமாக இருந்த அந்த காதல் கதையும், அவள் நினைவை விட்டு அகலவில்லை. எதுவும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவள் தவிப்பதை பார்த்த ஜானகி, இப்போதைக்கு இதை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்தார்.
"சரி விடு. இப்போதைக்கு இதை பத்தி எதுவும் பேச வேண்டாம். அபி வரட்டும். அப்பறம் பேசிக்கலாம். நான் போய் டின்னர் ரெடி பண்றேன்" என்று கூறிவிட்டு சென்றார்.
************************************************************
ஊர்வி ஆர்டர் செய்த இரண்டு ghee roast ஐ டேபிள் மீது வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் ஓடினார் அந்த வெயிட்டர்.
அவரை பார்த்து சிரித்துக்கொண்டே சாப்பிட தொடங்கினர் இருவரும். சாப்பாடு வேண்டாம் வேண்டாம் என்று கூறியவன், தட்டில் இருந்து கண்ணை விலக்காமல் பறந்து பறந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான். "வீராப்பு வீராப்பு. சாப்பாடு வேணாம் வேணாம் னு சொல்லிட்டு, இப்போ சாப்புடுறத பாரு. பஞ்சத்துல அடிபட்டவன் மாதிரி" என்று நினைத்துக்கொண்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடிக்க, பயந்து கொண்டே அங்கு வந்தார் அந்த வெயிட்டர். "மேடம் வேற ஏதாவது வேணுமா?" என்று ஊர்வியிடம் கேட்க, "எதுவும் வேண்டாம்" என்று ஊர்வி கூற, அவரும் அந்த இடத்தை விட்டு நகர எத்தனித்தார். "நில்லு நில்லு. அது என்ன அவ கிட்ட மட்டும் கேக்கற. என் கிட்ட எல்லாம் கேக்க மாட்டியா?" என்று சித்து கேட்க, "இல்ல சார். நீங்க முன்னாடியே எதுவும் வேணாம்னு சொன்னேங்களே...." என்று இழுக்க, "முன்னாடி வேணாம்னு சொல்லிட்டு, இப்போ வேணும்னு கேட்டா குடுக்க மாட்டிங்களோ?" என்று சித்து கேட்க, திரு திருவென முழித்தார் அவர். "முழிக்காதீங்க. போய் ஒரு மசாலா தோசை எதுத்துட்டு வாங்க" என்று அதட்ட, "இதோ எடுத்துட்டு வரேன் சார்" என்று சிட்டாய் பறந்தார் அவர்.
ஊர்வி இவனை பார்த்து சிரித்து கொண்டு, "யாரோ எனக்கு பசிக்கவில்லை, சாப்பாடு வேணாம். ஹோட்டல் சாப்பாடு எல்லாம் நல்லதுக்கு இல்லைனு எல்லாம் சொன்னாங்க?" என்று எங்கோ பார்த்துக்கொண்டு கூற, "உனக்கு என்ன?" என்று ஒரே வார்த்தையில் முடித்தான் அவன். "ம்க்கும். இந்த கோவத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை. இன்னும் எவளோ நாளைக்குன்னு பாக்குறேன்" என்று மனதில் நினைத்துக்கொண்டாள் அவள்.
அவன் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, சித்தார்த் ஐ நோக்கி ஓடிவந்தாள் ஒரு பெண்.
*********************************************************************
ஹாஸ்பிடலில் கிருஷ்ணன் படுத்திருக்க, அவர் அருகில் அமர்ந்திருந்தான் அபிமன்யு.
"அப்பா..." என்று அபி இழுக்க, "என்னப்பா?" என்றார் கிருஷ்ணன். "நம்ப கோடௌன் பக்கத்துல இருக்க நகைக்கடைல இருக்க CCTV footage செக் பண்ணேன் பா....நம்ப godown ல பாம் வச்சது...." என்று அவன் தயங்க, "யாரு?" என்று புருவத்தை உயர்த்தினார் அவர். "விஷ்வா" என்றான் அவன்.
"விஷ்வா வா? எந்த விஷ்வா?", என்று கேட்டார் கிருஷ்ணன். "அது. நம்ப சித்து அப்பா ஓட வாட்ச்மன் பையன். ஸ்கூல்ல எங்க ஜூனியர் தான்" என்று கூற, "மாதவன் ஓட வாட்ச்மன், சங்கரன் ஓட பையனா?" என்று கிருஷ்ணனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
"ஆமா அப்பா" என்று அபி கூற, கிருஷ்ணனின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தது. அதை கண்ட அபி, "என்னப்பா இவளோ ஷாக் ஆகறீங்க?" என்று அபி கேட்க, "அவங்க வீட்டுல நடந்த fire accident ல, அவங்க குடும்பம்பத்துல இருக்க எல்லாரும் செத்துட்டாங்கனு கேள்வி பட்டேன் டா" என்று கிருஷ்ணன் கூறினார். "ஆமா பா. நானும் கேள்வி பட்டேன். ஆனா இவன் தப்பிச்சிட்டான் போல. இதனை வருஷம் ஆனாலும் எனக்கு அவன் முகம் மறக்கல அப்பா. அது கண்டிப்பா அவன் தான்" என்று அபி உறுதியாக கூற, கிருஷ்ணனோ யோசனையில் ஆழ்ந்தார். "அவன் பொழச்சது சந்தோஷம் தான் பா. ஆனா அவன் எதுக்கு இப்படி பண்ணனும் னு தான் புரியல" என்று அபி குழம்ப, கிருஷ்ணனோ எதிர்மாறான ஒரு குழப்பத்தில் இருந்தார். "அவன் இதெல்லாம் எதுக்கு பண்ணுறான்னு எனக்கு தெரியும். ஏன்னா அவன் வீட்டுக்கு தீ வச்சி கொளுத்துனதே நான் தான். ஆனா இவன் எப்டி தப்பிச்சான்?" என்று குழம்பினார் கிருஷ்ணன்.
"நம்ப ரகசியம் தெரிஞ்சவன் மாதவன் ஒருத்தவன் தான். அவனும் சிறையில் ல இருக்கானு நான் நிம்மதியா இருந்தன். அத கெடுக்கற மாதிரி சித்தார்த் வந்து தொலைஞ்சான். அவனுக்கு எப்படி நம்ப விஷயம் தெரிஞ்சுதுனு தெரியாம நானே கொழம்பிட்டு இருக்கேன். இதுல இந்த விஷ்வா வேற புதுசா மொளச்சிருக்கான். நான் கொலைஎல்லாம் பண்ணி எட்டு வருஷம் ஆயிடுச்சு. மறுபடியும் பண்ண வச்சிடுவாங்க போலருக்கே" என்று நினைத்தார் கிருஷ்ணன்.
hello friends, ellarum story epudi pogudhunu sollitu ponga pa..
and vote pannidunga
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro