Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 20

ஜானகி அழைப்பு விடுத்து கிருஷ்ணனுக்கு நெஞ்சு வலி வந்த விஷயத்தை கூற, அவர் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தான் சித்தார்த். அதே நேரத்தில் அங்கு அபியும் வந்து சேர்ந்தான்.

(அதன் பிறகே மருத்துவர் கிருஷ்ணனுக்கு ஒன்றும் இல்லை, gastric trouble தான் என்று கூறினார். உமையாள் ஜானகிக்கு போன் செய்தது, ஊர்வி மருத்துவமனைக்கு கிளம்பியது, உமையாள் வீட்டுக்கு சென்றது அனைத்தும் அதன் பிறகு நடந்தவை)

உமையாள் சென்ற பிறகு, அபி மருத்துவரை காண அவர் அறைக்கு செல்ல, கிருஷ்ணன் இருந்த அறையில் சித்துவும் கிருஷ்ணனும் மட்டுமே அறையில் தனித்து இருந்தனர்.

ஒரு செவிலியர் வந்து, மருந்துகள் கொடுத்துவிட்டு செல்லும் வரை அமைதி காத்த கிருஷ்ணன், செவிலியர் வெளியே செல்ல பேச தொடங்கினார். "என்ன சித்து. முகமே சரியில்லை" என்று துவங்க, "ஒன்னும இல்லை அங்கிள்" என்று சமாளிக்க முயன்றான் சித்தார்த்.

"என்னவா இருக்கும்" என்று யோசிக்குமாறு பாவனை செய்தவர், "ஒருவேளை இப்படி இருக்குமோ. எனக்கு நெஞ்சு வலின்னு சொன்ன உடனே, நான் செத்துடுவேன்னு நினைத்து இருப்ப. இப்போ நான் குத்துகல்லு மாதிரி உட்கார்ந்து இருப்பதை பார்த்து சோகம் ஆயிட்ட. அப்படித்தானே" என்று குரலில் கடுமையுடன் கேட்க, சித்து பதில் எதுவும் அளிக்கவில்லை. மாறாக அவன் முகத்தில் கேள்விக்குறி மட்டுமே படர்ந்தது. அதைக் கண்டவர்,"ஒரு வேளை இப்படி இருக்குமோ. நான் போட்ட பிட்டு ல, என் பொண்ணு உன் லெப்ட் ரைட்டுன்னு வச்சி வாங்கிட்டாளோ. அதான் இந்த சோகமோ" என்று மறுபடியும் அவர் யோசிப்பது போல பாவனை செய்ய, சித்துக்கு தான் அவரை பார்க்க பார்க்க எரிச்சல் வந்தது. "என்ன அங்கிள் சொல்லுறீங்க? நீங்க போட்ட பிட்டா? எனக்கு ஒன்னும் புரியலையே" என்று அவன் முகத்தில் ஒரு பொய் புன்னகையை படர விட்டு சித்தார்த் கேட்க, இடியாய் ஒரு வில்லச் சிரிப்பு சிரித்தார் கிருஷ்ணன்.

"ஆமாம் நான் போட்ட பிட்டு தான். எப்படி எப்படி. என்னையே பழி வாங்க வந்துட்டு. என் பொண்ணையே, காதலிப்பாராம். நாங்க பார்த்துகிட்டு சும்மா இருப்போமாம்" என்று நிறுத்தியவர், "அன்னைக்கு என் பொண்டாட்டி சொன்னா. நீயும் ஊர்வியும் காதலிக்கறீங்கன்னு. நானும் நீ அப்பாவின்னு நம்பி சரின்னு சொன்னேன். அன்னைக்கு நைட்டு உன் ரூம் பக்கம் வந்தேன். அப்பதான் ஊர்வி உன் சட்டையைப் புடிச்சி பழி வாங்க தான் வந்தியா? காதலிச்சது பொய்யா ன்னு கத்திக்கிட்டு இருந்தா. அப்போ தான் புரிஞ்சது. உன் அப்பா அம்மாக்கு நான் பண்ணதுக்கு நீ என்னை பழி வாங்க வந்துருக்கேன்னு. நீ பழி வாங்க வந்துருக்கேன்னு தெரிஞ்சதும் ஊர்வி உன்னை வெறுத்துடுவான்னு நினைத்தேன். ஆனால், மாயகாரன் டா நீ. அவளை எப்படியோ மயக்கி உன் வழிக்கு கொண்டு வந்துட்ட. அப்போ தான் கவனிச்சேன், ஊர்வி நீ என்ன சொன்னாலும் நம்புறான்னு. அந்த நம்பிக்கை எனக்கு ஆபத்து. நான் பண்ணது எல்லாம் அவளுக்கு தெரிந்தால், அவளை என் மேல கேஸ் குடுத்து உள்ள தூக்கி போட்டுடுவா. அதனால அவளுக்கு உன் மேல இருக்கும் நம்பிக்கையை உடைக்க நான் போட்ட பிளான் தான் ஊர்வியை கொல்ல  ஆள் அனுப்பியது" என்று கிருஷ்ணன் கூறி முடிக்க, சிலை போல நின்றிருந்தான் சித்தார்த். கிருஷ்ணன் கெட்டவன் என்று அவனுக்கு தெரிந்திருந்தாலும் தன் உயிரில் உதித்தவளை கொல்ல துணிவான் என்று சிரிதும் எதிர் பார்க்கவில்லை.

" பாவி. உன் பேரை காப்பாத்திக்க, பெத்த பொண்ணையே கொல்லுவியாடா? " என்று சினம் கொண்ட சிங்கம் போல சித்தார்த் உறும, "அய்யய்யோ. காதலியை கொல்ல பார்த்தது நான் தான்னு தெரிஞ்சதும், காதலனுக்கு எவ்வளவு கோபம் வருது. நான் பயந்துட்டேன்" என்று பொய்யாக பயப்படும் பாவனை செய்தான் அவன். 

எரிச்சல் அடைந்த சித்தார்த்," டேய். உன்னை... " என்று கிருஷ்ணனின் காலரை பிடிக்க, தன் காலரில் இருந்து சித்தார்த்தின் கையை எடுத்த கிருஷ்ணன் மீண்டும் பேச தொடங்கினார்." இந்த சப்ப விஷயத்துக்கு என் பொண்ணை கொல்ல நான் என்ன லூசா? நான் கொல்ல நினைத்தது அவளுக்கு உன் மேல இருக்கும் நம்பிக்கையை மட்டும் தான். அவளை கடத்திட்டு வந்து, நீ கடத்தினன்னு அவளை நம்ப வைப்பது தான் என் பிளான். ஆனா எப்படி நம்ப வைப்பதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன். என் புத்திசாலி பொண்ணு அவளே அதுக்கும் வழி அமைத்து கொடுத்துட்டா. அவளை கடத்திட்டு வருவதுதான் என் திட்டம். ஆனா அவ என் ஆளுங்க எல்லாரையும் ஏமாத்திட்டு ஓடிட்டா போல. என்ன ஆச்சுன்னு கேக்குறதுக்கு, ஒரு அடியாளுக்கு போன் பண்ணேன். போன் அட்டெண்ட் பண்ணவங்க எதுவும் பேசாமல் அமைதியா இருந்தாங்க. நானும் எதுவும் பேசாமல் அமைதியா கொஞ்சம் நேரம் இருந்தேன். பேச்சு சத்தம் கேட்கல. ஆனா மூச்சு வாங்கும் சத்தம் மட்டும் நல்லா கேட்டுச்சு. அது ஊர்வியாதான் இருக்கும்ன்னு நினைத்து உன் குரலில் பேச ஆரம்பித்தேன். என்ன பேசுனேன்னு உனக்கு தெரியாதில்ல. இதோ கேளு" என்று கூறி அன்று ஊர்வியிடம் பேசிய அதே வார்த்தைகளை இவனிடம், இவன் குரலிலேயே பேசினார்.

"ஹலோ. நா சித்தார்த் தான் பேசுறன். என்னடா இவளோ நேரம் போன் போடுறான். இப்போ தான் லைன் கிடைக்குது. சரி. போன விஷயம் என்ன ஆச்சு? அந்த ஊர்விய போட்டு தல்லிடீங்களா? அவளை கொன்னா தான் நம்ப பிளான் படி இனிமே காய் நகர்த்த முடியும். நேத்து வந்து, லவ் பண்றன். பழி வாங்காத. அது இதுனு ஒரே டார்ச்சர்." என்று சித்தார்த் குரலில் கிருஷ்ண‌ன் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் அங்கு வந்து சேர்ந்தாள்   ஊர்வி.

அந்த நேரம் பார்த்து ஒரு செவிலியர் அந்த அறை பக்கம் வர, வேறு பக்கம் நகர்ந்தாள் ஊர்வி. அந்த செவிலியர் இவர்கள் இருக்கும் அறைக்குள் செல்ல அத்துடன் இவர்கள் உரையாடலும் நின்றது.

வேறு பக்கம் சென்ற ஊர்வி அங்கு இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்ந்து யோசித்துகொண்டிருந்தாள். உரையாடலின் கடைசி பகுதியை மட்டுமே கேட்டவளுக்கு தலையும் புரியவில்லை, வாளும் புரியவில்லை. ஆனால், இன்று காலையில் நடந்ததற்கும் சித்தார்த்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை செய்தது தன் தந்தை என்று மட்டும் தெளிவாக புரிந்தது.

தன் தந்தை இப்படி செய்ய என்ன அவசியம் என்று யோசித்துப்பார்த்தும் விடை தெரியவில்லை.

இவள் இவ்வாறு யோசனையில் ஆழ்ந்து அமர்ந்திருக்க, மருத்துவரை காண சென்ற அபி அறைக்கு செல்லும் வழியில் இவள் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

"என்ன ஊர்வி. இங்க ஏன் உட்கார்ந்திருக்க?" என்று அபியின் குரல் கேட்டு இவ்வுலகிற்கு வந்தவள், ஒன்றும் புரியாமல் விழிக்க, "ரூம்க்கு வழி தெரியாம உட்கார்ந்திருக்கியா?" என்று அபியே கேட்க, ஆமாம் என்று தலையசைத்து, அவனுடன் நகர்ந்தாள் ஊர்வி.

அறைக்கு சென்றவுடன், "சித்து, நைட்டு அப்பா கூட ஒருத்தவங்க மட்டும் ஹாஸ்பிட்டல்ல இருந்தால் போதுமாம். நான் வீட்டுக்கு போறேன். நீ இங்க இருக்கியா?" என்று அபி சித்தார்த்திடம் கேட்க, சித்தார்த் பதில் அளிக்கும் முன் ஊர்வி கூறினாள். "நீ இங்கேயே இரு அண்ணா. சித்தார்த் வீட்டுக்கு போகட்டும்" என்று ஊர்வி கூற காரணம் புரியாவிட்டாலும் சரியென தலையசைத்தான் அபிமன்யு." ராட்சசி. அவ அப்பா பண்ண போங்கை அப்படியே நம்பிட்டா போல. நம்ப தான் இவளை கொலை பண்ண ஆள் அனுப்பினோன்னு அப்படியே நம்பிட்டா போல. அப்பா கூட தனியா விட்டுட்டுப் போனா, அவ அப்பனை எதாவது பண்ணிடுவோம்ன்னு, என்ன பேக் பண்றா" என்று சித்தார்த் நினைத்து கொள்ள, அதே போல் நினைத்த கிருஷ்ணனும், தன் திட்டம் வெற்றி அடைந்ததென நினைத்துக்கொண்டார்.

ஆனால் ஊர்விக்கு மட்டுமே தெரியும், அவள் சித்தார்த்தை அனுப்புவது, தன் தந்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தாலும், சித்தார்த்தின் மீதுள்ள அக்கறையாளும் என்று. 

Meedhi next ud la pappom. Next ud tomorrow or day after tomorrow poduvom.

Vote & comment pannitu ponga..

And edhum confusing aa irundhaa kelunga..

Any suggestions?

🙏🙏🙏

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro