KADHAL 14
பாடலின் இசையில், அதன் வரிகளில் உள்ள உண்மையிலும் தங்களை மறந்து ரசித்துகொண்டுஇருந்தனர்.
அவர்களின் நெருக்கத்தை இருஜோடி கண்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தது.
ஒரு ஜோடி கண்கள் கோவத்துடனும், மற்றொன்று ஆச்சரியத்துடனும் நோக்கிக்கொண்டும், அவர்கள் உரையாடலை கேட்டுக்கொண்டும் இருந்தவர்கள், இதற்குமேல் இங்கு இருந்தும் பயன் இல்லை என்று திரும்பி சென்றனர். (அந்த ரெண்டு பேரு யாரா இருக்கும்?)
பாடல் முடிந்து இவ்வுலகிற்கு வந்த ஊர்வி, சித்து அவ்வளவு நெருங்கி நிற்பதை அப்போது தான் கவனித்தாள். அவனை தள்ளி விட்டவள், "கொஞ்சம் இடம் குடுத்தா போதுமே, ஒடனே உன் வேலைய காட்ட ஆரமிச்சிடுவியே" என்று கூற, "இவளோ நேரம் நல்லா என்ஜோய் பண்ணிட்டு, இப்போ தள்ளி விடுற? இந்த பொண்ணுங்களே இப்டி தான்" என்று சித்தார்த் சலித்துக்கொள்ள, "என்ன டா? என்ன எல்லா பொண்ணுங்களும் இப்டி தான்?" என்று இடுப்பில் கை வைத்து கொண்டு மிரட்டும் தொனியில் கேட்டாள் ஊர்வி. "ஆமா. ரொமான்ஸ் பண்ணுற வரைக்கும் நல்லா என்ஜோய் பண்ணிட்டு, அப்புறம் எல்லாமே ஏதோ பசங்க தான் பண்ண மாதிரி சொல்ல வேண்டியது.நீங்க company குடுத்தது எல்லாம் எந்த கணக்குல வரும். நீ மட்டும் இல்ல. எல்லா பொண்ணுங்களுமே இப்டி தான்" என்று சித்து கூற, "ஓஹ் அப்போ எல்லா பொண்ணுங்களுமே இப்டி தான?" என்று கேட்டாள் ஊர்வி. "எல்லா பொண்ணுங்களும் இப்டி இல்லனாலும், முக்கால் வாசி பொண்ணுங்க இப்டி தான்" என்று கூறினான் சித்து. (ஏதோ பொண்ணுங்கள பத்தி படிச்சி phd வாங்குன மாதிரி percentage ஓட சொல்லுறான்). "இவளோ நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்களே சார். நீங்க அப்போ எத்தனை பொண்ணுங்க கூட ரொமான்ஸ் பண்ணிருக்கீங்க. இப்டி முக்கால் வாசி பொண்ணுங்க இப்டி தான் னு சொல்றீங்க?" என்று கேட்டாள் ஊர்வி, புருவங்களை உயர்த்தியவாரு.
"அய்யயோ. அவசர பட்டு வாய விட்டுட்டோமோ? இப்போ என்ன பண்றது? சரி சமாளிப்போம்" என்று நினைத்துக்கொண்டு "ஈஈஈஈஈஈஈ" என்று இழித்து வைத்தான். "இதோ பாருங்க சார். இது முன்னாடி எப்படி வேணாலும் இருந்துருக்கலாம். இனிமே ஏதாவது ரோமியோ வேலை பண்ணிட்டு சுத்துன... மவனே அவ்ளோதான்" என்று கூற ஊர்வி கூற, "அதுஇல்லைடி செல்லம். நா எல்லாரையும் சைட் மட்டும் தான் அடிப்பான். அதெல்லாம் சும்மா. ஒரு பூ அழகா இருந்தா ரசிப்பது இல்லையா? அதே மாதிரி தான். ஒரு பொண்ணு அழகா இருந்தா ரசிப்பேன். மத்தபடி இங்க இருக்கறது நீ மட்டும் தான்" என்று நெஞ்சின் மீது கை வைத்து காட்ட, "இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல" என்று கூறி சிரித்தாள்.
சிரித்துக்கொண்டிருந்தவளின் முகம் திடீரென சுருங்க, "என்ன ஆச்சு ஊர்வி? என்று சித்து கேட்க, "என்ன ஏமாத்த மாட்டல்ல. பழி வாங்குறானு எதுவும் பண்ண மாட்டல்ல" என்று அவள் கேட்க, "மாட்டேன்" என்று தலை அசைத்தவனிடம், "அப்போ உன் அம்மாக்கு ஏதோ சத்தியம் பண்ணி குடுத்துருக்கன்னு சொன்னியே?" என்று கேட்டாள் ஊர்வி. "ஆமா பண்ணி குடுத்துருக்கன். ஆனா அதுக்காக உன்ன இழக்க எனக்கு இஷ்டம் இல்ல" என்று கூறி அணைத்துக்கொண்டான்.
"சித்து.. சித்து...சித்து" என்று கூவிக்கொண்டே அவசரமாக உமையாள் அறைக்குள் ஓடி வர, அபி அவள் பின்னல் துரத்திக்கொண்டு வந்தான்.
"கொஞ்சம் நேரம் விடாதுங்களே. அவளே எப்போவாது தான் co-operate பண்ணுறா. அதையும் கெடுக்க ரெண்டும் கரடி மாதிரி வந்துடுங்க" என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே, ஊர்வி உமையாளிடம் கத்த தொடங்கினாள். "கொஞ்சம் கூட டீசென்சி இல்லையா உனக்கு? மத்தவங்க ரூம்குள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரணும் னு தெரியாது?" என்று அவள் கத்த, "எனக்கு என்ன தெரியும், நீ இங்க என் மச்சான் கூட இப்டி ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பன்னு? இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, இப்போ என் மச்சான் மாதிரி செம figure கெடச்ச ஒடனே, அப்டியே கரெக்ட் பண்ணிட்ட பாத்தியா?" என்று அவள் விடாமல் பேசினால்.
"நானாச்சு. அவனாச்சு. எங்களுக்குள்ள என்ன வேணும் நாளும் இருக்கும். நீ கதையை மாத்தாத. கதவை தட்டாம வந்தது உன் தப்பு" என்று ஊர்வி கூற, "அவளோ அக்கறை இருக்குறவ கதவை மூடிவைச்சிட்டு ரொமான்ஸ் பண்ணனும்" என்று உமையாள் கூற, "அம்மா. தாய்குலங்களா. கொஞ்சம் நேரம் அமைதியா இருங்கமா. எல்லாம் என் தப்பு தான்" என்று இல்லாத வழக்குக்கு, ஆஜர் ஆகினான் சித்தார்த்.
"சரி. நீ சொல்லு உமையாள். எதுக்கு நீ அபி போனேனா தூக்கிட்டு ஓடி வர?" என்று கேட்க, அவள் அபி போனில் மிருணாளினியின் புகைப்படத்தை காட்டி, "மச்சான். அபி, இந்த பொண்ணு போட்டோவ பாத்து தனியா சிரிச்சிட்டு இருக்கான் மச்சான். இந்த பொண்ண தான் அவன் சைட் அடிக்கறானு நனைக்குறன்" என்று உமையாள் கூற, சித்து சிரித்து கொண்டே, "அட போ மச்சி. நீ ரொம்ப லேட். அவன் அந்த பொண்ணு கிட்ட கல்யாண பேச்சே பேசிட்டு வந்துட்டான்" என்று கூற, "அடப்பாவி. நீயுமா டா?" எங்க, "ஹே. நீ ஓரம் போ. நா சித்து கிட்ட பேசணும்" என்று அவளை தள்ளி விட்டு, சிந்துவிடம் வந்தான் உமையாள்.
"அட பாவிங்கலா. அவன் அவனுக்கு லவ் வந்த ஒடனே என்ன கழட்டி விட்டுடீங்களே. இருங்கடா. எனக்கு ஒருத்தவன் கிடைக்காமலா போயிடுவான்" என்று உமையாள் கூற, அது யார் செவிகளிலுமே விழவில்லை. (Ipdi dhaan nanum en friends kitta solli suthitu irukan.. pappom. enakunu oru ilichavaayi kedaikaamala poiduvaan)
"சித்து.மிரு ஓட அப்பா, தாத்தாவை பத்தி எல்லாம் விசாரிச்சன்டா. அவ ஊரு நம்ப தாத்தா ஊருக்கு பக்கத்து ஊருதான் டா. நம்ப லீவ்க்கு தாத்தா வீட்டுக்கு போகும் போது, அப்டியே அவ பாமிலிய கரெக்ட் பண்ணிடலாம் டா" என்று என்று உமையாள் ஆர்வத்துடன் கூற, "செம பிளான் டா" என்று கூறினான் சித்தார்த்.
அபி ஊர்வியிடம் திரும்பி, "ஊர்வி. அந்த மஹாபலிபுரம் கான்ஸ்டருக்ஷன் ப்ராஜெக்ட் விஷயமா, அந்த client அ மீட் பண்ணனும். அப்டியே சைட் விசிட் பண்ணனும். அதுக்கு நீ போறியா? இல்ல நா போகவா?" என்று கேட்க, ஊர்வி பதில் அளிக்கும் முன், சித்தார்த் கூறினான். "உன்ன விட அவ நல்லாவே பேசுவா. அந்த client ஒதுக்கலைனா கூட, மெரட்டியாவது இந்த ப்ரொஜெக்ட நம்ப கம்பனிக்கு குடுக்குற மாதிரி பண்ணிடுவா. அதனால அவளே போகட்டும்" என்று சித்தார்த் கூற, "அதுவும் கரெக்ட் தான். நீயே போய்ட்டுவா ஊர்வி" என்று அபி கூறினான். அனைவரும் அவர்கள் அறைக்கு சென்று உறங்கினர்.
நிம்மதியுடனே உறங்கினர். நாளை நிகழ இருப்பது எதுவும் அவர்களுக்கு தெரியதல்லவா.
அடுத்த நாள் காலை, வானத்திற்கு சிகப்பு வண்ணம் பூசிக்கொண்டே கிழக்கில் உதித்தான் சூரியன்.
சித்தார்த், அபி இருவரும் அலுவலகத்திற்கு கிளம்ப, ஊர்வி மஹாபலிபுரம் client மீட்டிங்கில் கலந்து கொள்ள மஹாபலிபுரம் நோக்கி பயணம் செய்ய தொடங்கினாள்.
வழக்கம் போல் கேலி, கிண்டலுடன் சித்து, அபி இருவரும் பயணம் செய்ய, சித்துவின் செல்பேசிக்கு வந்தது, அவர்கள் நிம்மதியை குலைக்க போகும் அந்த அழைப்பு.
அங்கே ஊர்வியோ சென்னையில் இருந்து மஹாபலிபுரம் செல்லும் சாலையில் புதிதாக சிறகுகள் முளைத்த பட்டாம்பூச்சி போல, காதல் தேன் உண்ட மயக்கத்தில் சிறகடித்து, கனா என்னும் வானில் பறந்து கொண்டு இருந்தாள்.
அந்த கிழக்கு கடற்கரை சாலை அவளின் பயணத்திற்கு இன்னும் அழகு கூட்டியது. கடலின் அழகை ரசித்தவாரே, மரங்களின் கரங்களால் மூடிய சாலையில், FM இல் ஒலிக்கும் அந்த காதல் காணத்திற்கு ஏற்ப, தலையசைத்தவாரே அந்த சொகுசு காரில் இதமான பயணம்.
சாலையின் நடுவில் வழி முழுவதையும் barricade வைத்து தடுத்து, take diversion என்று அறிவிப்பு பலகை வைத்திருக்க, மெயின் ரோட்டில் இருந்து வலது புறம் திரும்பிய ஒரு சாலையில் திரும்பி பயணம் செய்தாள்.
இங்கு சித்து அவனுக்கு வந்த அழைப்பை எடுக்க, அதில் அந்த வழக்கமான குரலோ, "சித்தார்த். நம்ப எதிரி... இல்ல இல்ல. அந்த துரோகி உடைய கம்பெனி ல இன்னும் பாத்து நிமிசத்துல பாம் வெடிக்க போகுது. என்னையே ஏமாத்திட்டல்ல. நேத்து பாத்தான் சித்தார்த் நீ அந்த ஊர்வி கூட கொஞ்சி கொலாவரத. எப்படி எப்படி. ஊர்விக்கு டவுட் வந்துடுச்சு, இப்போதைக்கு எதுவும் வேணாம்ன்னு என் கிட்ட சொல்லுவாராம். அதே நேரத்துல, அவ கிட்ட பழி வாங்குறதுலான் முக்கியம் இல்ல, நீ தன் வேணும் னு ஹீரோ மாதிரி வசனம் பேசுவாராம். நீ வேணும் நா ஹீரோவா இருக்கலாம். ஆனா நா வில்லன் டா. உன்னையும் சாவுடான்னு விட்ருக்கனும். ஏதோ பழகின தோஷத்துக்காக, உன் கிட்ட 10 நிமிடம் முன்னாடியே சொல்லுறன். நீ தப்பிச்சிக்கோ" என்று கூறி விட்டு ஒரு பயங்கர சிரிப்பு சிரித்துவிட்டு போனை அணைத்தான்.
சித்துவிற்கு என்ன செய்வது என்று ஒன்னும் புரியவில்லை. "இப்போது மணி பத்து. இந்நேரம், ஊழியர்கள் அனைவரும் வந்திருப்பர். என்ன செய்யது. பொருட்சேதம் அது பரவாயில்லை. ஆனால் 600 ஊழியர்கள் புழங்கும் இடம் ஆயிற்றே. என்ன செய்வது. இதை அபியிடம் சொன்னால், உனக்கு எப்படி தெரியும், யாரு சொன்னது என்று கேள்விகள் வரும்" என்று யோசித்தவன், அடுத்தவினாடியே, "நம் நிலைமை என்ன ஆனாலும் பரவாயில்லை. அந்த 600 அப்பாவி உயிர்களை காப்பாற்ற வழி செய்தாக வேண்டும்" என்று முடிவு எடுத்து அபியிடம் அலுவலகத்தில் வெடிகுண்டு இருக்கும் செய்தியை கூறினான்.
அந்த கிளை சாலையில் சிறிது தூரம் பயணித்த ஊர்விக்கு, ஏதோ வினோதமாக தோன்றியது. "இது ஏதோ காட்டு வழியா இருக்கே. நம்ப போகும் வழி சரிதானா?" என்று சந்தேகம் ஏற்பட, அவள் கைபேசியை எடுத்து, GPS இல் வழி பார்க்க எத்தனித்தாள். ஆனால் அந்த இடத்தில் சிக்னல் சுத்தமாக கிடைக்கவில்லை.
"இப்படியே இன்னும் சிறிது தூரம் செல்வோம்" என்று நினைத்து சென்றவளுக்கோ, பெரும் ஏமாற்றம். அதற்கு மேல் செல்ல வழி இல்லாமல், ஒரு பெரும் மரம் சாலையில் விழுந்து கிடந்தது. பின்னல் செல்வோம் என்று காரை பின்னல் நகர்த்த, இன்னொரு மரம், அவள் காரிற்கு பின்னால் விழுமாறு வெட்டி வீழ்த்த பட்டது.
என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள் ஊர்வி.
Andha bombblast. Sidhu ellarayum kaapathiduvaana?
Apram oorvi? Ava nelamai yenna?
Ini varum udpategalil paarpom.
Apram mukiyamaana visayam, vote and comment pannidungoo...
🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro