KADHAL 13
உமையாள் தரையில் ஊத்திவைத்த எண்ணையில் சித்து கால் வைத்து, வழுக்கி விழ, அவன் பின்னால் வந்த ஊர்வி அவனை தாங்கி பிடித்து கொண்டாள். இதனை பார்த்த உமையாளோ, "அடச்சை... என்ன கொடுமை டா இது, எல்லா படத்துலயும் ஹீரோயின் தான் விழுவாங்க, ஹீரோ பிடிப்பாரு. இங்க என்னடானா தலைகீழா நடக்குது. உன்ன ஹீரோவாக்கலாம் ன்னு பாத்தா, இப்டி காமெடியன் மாதிரி வழுக்கிட்டியே மச்சான்" என்று மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தாள்.
வழுக்கி விழுதவனை பிடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியும், இருவருமே அதை உணரும் நிலையில் இல்லை. அப்படியே அதே பொசிஷனில் நின்று கொண்டு இருந்தனர். என்ன செய்வது? காதலிப்பவரின் விழி வலைக்குள் சிக்கிவிட்டால் அவ்வளவு எளிதில் மீள முடிவது இல்லையே. இருவரும் மற்றவரின் பார்வையில் சிக்கி, மீள வழி தெரியாமல், சிக்கிக்கொண்டு இருப்பதும் சுகம் என்று உணர்ந்து, அதையும் ரசிக்க தொடங்கி விட்டனர்.
உமையாள் ஜானகியிடம் கண்ணை காட்ட, அவரும் சிரித்துக்கொண்டே, தலை அசைத்து கொண்டார். "இவளோ நேரம் ஆச்சு, இன்னும் இதுங்க ரெண்டும் அதே எடத்துல தான் நிக்குதுங்க. இந்த கண்றாவியை நம்மளும் எவளோ நேரம் தான் பாத்துட்டு இருக்கறது. நம்மளே பிரிச்சி விட்டாதான் வேளைக்கு ஆகும் போல" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, "hello, background மியூசிக் முடிஞ்சு அஞ்சு நிமிஷம் ஆகுது. இன்னும் அங்க என்ன போஸ். குடுத்த சீன் ஆ தல கீழ பண்ணிட்டு, ரெண்டு நிக்கிறத பாரு" என்று உமையாள் வைய இருவரும், ஒருவரை விட்டு ஒருவர் விலகி நின்றனர்.
இருவரும் குனிந்த தலை நிமிராமல் அவர்கள் அறைக்கு விரைந்தனர். அதை பார்த்து சிரித்து கொண்டே உமையாளும், ஜானகியும் அவர்கள் பணியை கவனிக்க சென்றனர். ஜானகி, அவர் கணவர் கிருஷ்ணரிடம் சித்து-ஊர்வி விஷயத்தை கூற, அவர் கோப்புகளில் இருந்து கண்ணை அகற்றாமல், "ம்ம்" என்று மட்டும் குரல் கொடுக்க, கடுப்பான ஜானகி, அவர் கையில் இருந்த கோப்புகளை பிடுங்கி மூடிவைத்தார்.
"ஹே ஜானகி. இப்போ எதுக்கு எல்லா files உம் மூடிவைச்சிட்ட" என்று அவர் கேட்க, "நம்ப பொண்ணு கல்யாண விஷயமா சொல்லிட்டு இருக்கன், நீங்க என்ன பண்ணிட்டுஇருக்கீங்க?" என்று ஜானகி கோபத்துடன் சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள, "சரி. சொல்லு" என்று கூறியவாறே, ஜானகியை பின்னில் இருந்து அணைத்தார் கிருஷ்ணன். "நம்ப ஊர்வியும், சித்தார்த்தும் லவ் பண்றங்களாம். உங்களுக்கு ஊர்விய சித்தார்த்துக்கு கட்டி கொடுக்க சம்மதமா?" என்று ஜானகி கண்களில் ஆவலுடனும், மனதில் வேண்டுதலுடனும், கேட்டார். "இதுல ஏன் சம்மதம் என்ன மா இருக்கு. அவங்களுக்கு புடிச்சி இருந்தா சரி. சித்துவும் நல்ல பையன் தான். நம்ப பாத்து வளந்த பையன். ஊர்விய கண் கலங்காம பாத்துப்பான். என்ன நம்ப பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா அவன் டெய்லி கண்ணு கலங்க வேண்டியதா இருக்கும். அவனை நெனச்சா தான் பாவமா இருக்கு" என்று அவர் பெண்ணின் பெருமையை கூறினார்.
"அதெல்லாம் கல்யாணம் ஆனா சரி ஆகிடுவாங்க. நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு.அதுவும் சின்ன வயசுல இருந்து நம்ப கூட இல்லல. அதான் அவ இப்டி இருக்கா. ஏங்க. கல்யாணத்துக்கு அப்புறம் கூட சித்து நம்ப கூட இப்டியே இருக்க ஒத்துப்பானா?" என்று ஜானகி தலைசாய்த்து கேக்க, ஜானகியின் தலையை வருடியவாறே, "நீ கேட்டா கண்டிப்பா ஒத்துப்பான் மா" என்று அவருக்கு சமாதானம் கூறினார். சட்டென்று எழுந்த ஜானகி, "அவங்களா நம்ப கிட்ட வந்து சொல்லுற வரைக்கும், நமக்கு விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்" என்று கூற, அதுக்கும் தலை அசைத்தார் கிருஷ்ணன்.
அவன் அறைக்கு சென்ற சித்து, ஊர்வியின் நினைவில் தலையணையை கட்டிப்பிடித்து உருண்டு கொண்டு இருந்தான். "செல்லம். உன் கண்ணுலயும் காதல் தெரியுது டி. அப்புறம் எதுக்கு மாமா கிட்ட இந்த வீராப்பு. ஐ லவ் யு டா ன்னு ஒரு வார்த்தை சொன்ன, அதுக்கு அப்புறம் நீ சொல்றது எல்லாம் கேக்க போறான்" என்று அவன் மனது நினைக்கும் போதே, அவன் மூளை குறுக்கிட்டது, "ஒரு விஷயத்தை தவற. இந்த குடும்பத்தை பழி வாங்கும் விஷயத்தில் நீ குறுக்கிட கூடாது" என்று மூளை மனதை எச்சரிக்க, முதல் முறையாக மூளையை எதிர்த்து பேசும் தைரியம் வந்தது அவன் மனதிற்கு. "என்னைக்கோ நடந்த விஷயத்துக்காக, இப்டி ஒரு குடும்பத்தை பழிவாங்குறது தப்பு. அதுவும் நம்பள நம்புற நண்பனோட குடும்பத்தை" என்று அவன் மனம் திடமாக வாதாட, "அப்போ உன்னோட அம்மா கு நீ பண்ணி குடுத்த சத்தியம்" என்று அவன் மூளை அவன் தாயை நினைவு படுத்து காரியத்தை சாதிக்க நினைத்தது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த மனம், சற்று யோசித்து, "அன்னைக்கு அம்மா சாகும் தருவாயில, அவன் மேல இருந்த கோவத்துல வாங்குன சத்தியம் அது. அம்மா அவளோ இரக்கம் இல்லாதவங்க இல்ல. இப்போ அவங்க இருந்துருந்தா, வேணாம்னு தான் சொல்லிருப்பாங்க. அவன் பண்ண தப்புக்காக, அவன் குடும்பத்தை பழிவாங்க நெனச்சி, என் குடும்பம் மாதிரியே இன்னொரு குடும்பம் சீரழிவதை பார்க்க சொல்றியா? அதுவும் என்ன அவங்க வீட்டு பையன் மாதிரி பத்துக்குறவங்க குடும்பம்.அதுமட்டும் இல்ல. அவன் பண்ண தப்புக்கு ஊர்விய இழந்துட்டு, என்னால வாழ்க்கை முழுக்க தவிக்க முடியாது. என் அம்மாவை இழந்த வருத்தத்துல இருந்ததே நா இன்னும் மீண்டு வரல. அதனால் என்ன ரொம்ப கஷ்ட படுத்தாம, இந்த பழி வாங்குற வேலை எல்லாம் விட்டுடு. நட்புக்கும், காதலுக்கும் உண்மையானவனா இருக்க பாரு" என்று அவன் மனம் மூச்சு விடாமல் பாயிண்ட் பாயிண்ட் ஆகா பேச, அவன் மூளை பதில் கூற முடியாமல் சுருண்டது.
மனம் வெற்றி பெற்ற தருணம், அவன் பழி வாங்கும் எண்ணத்தை கைவிட இருந்த தருணம், அவன் செல்போன் அழைப்பு மணி ஒலிக்க, அதை எடுத்தவன் திகைத்தான். எப்பொழுதும் அழைக்கும் அதே எண் தான். ஆனால் இன்று அதை எடுக்க தயங்கினான். "அவன் கிட்ட என்ன சொல்லி சமாளிக்கறது. இந்த குடும்பத்தை பழி வாங்க மாட்டேன்னு சொன்ன, நம்பலையே கொலை பண்ணாலும் பண்ணிடுவான். இப்போதைக்கு வேணாம் னு சொல்லு சமாளிப்போம்" என்று எண்ணி அந்த போன் காலை அட்டென்ட் செய்தான்.
"அடுத்த பிளான் என்ன?" என்று எதிர் முனையில் இருக்கும் குரல் கேட்க, "இப்போதைக்கு எதுவும் வேணாம்னு சொன்னன்ல. ஊர்விக்கு டவுட் வந்துடுச்சு" என்க, "என்னது எதுவும் வேணாமா? என்ன பேசுற நீ? பழைசு எல்லாம் மறந்துட்டியா? நீ மறந்தாலும் நா மறக்க மாட்டேன்" என்று எதிர் முனையில் இருப்பவன் பொங்க, "ஹே. நா என்ன எதுவுமே பண்ண வேண்டாம்னா சொன்னன். இப்போதைக்கு எதுவும் வேண்டாம். கொஞ்ச நாள் அப்புறம் பண்ணுவோம் னு தான சொல்றன். ஞாபகம் வச்சிக்கோ, நீ மட்டும் உன்னோட குடும்பத்தை இழக்கால. நானும் தான் இழந்துருக்கன். அந்த வலி என்னைக்கும் மறையாது", என்று அந்த வழியை மறைத்த காதலை பற்றி சொல்லாமல், பொய் கூறினான். "நம்பறேன். ரொம்ப நாள் டைம் எடுத்துக்காத. சீக்கரம் அடுத்த பிளான் பண்ணனும்" என்று கூறி அழைப்பை அணைத்தது.
அவன் நம்புமாறு பொய் கூறி, சமாளித்து விட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, அவன் திரும்பிய தருணம், அவன் அறை நுழைவில், கண்களில் கண்ணீருடன், வெடவெடத்த உடலுடன், அங்கு நின்றிருந்தாள் ஊர்வி.
அவளை பார்த்த சித்து திகைத்து தான் போனான். "அய்யயோ. இங்க நிக்குறாளே. நம்ப போன்ல பேசுறத கேட்டுருந்தா, அவ்ளோதான். லவ் ஆவது, ஏதாவது. நம்பள வீட்டை விட்டு தொறத்திட்டு தான் அடுத்த வேலை பார்ப்பா. ஆனா இந்நேரம் பத்ரகாளி அவதாரம் எதுத்துருக்கணும். ஆனா இவ இப்டி தேம்பி தேம்பி அழுகுறா? என்ன ஆச்சி? லைட் ஆ போட்டு வாங்குவோம்" என்று நினைத்து கொண்டு பேச ஆரமித்தான்.
"எப்போ வந்த ஊர்வி" என்று அவன் சாதாரணமாக கேட்க, "என்ன சமாளிக்க ட்ரை பண்றியா? நீ போன் பேச அராமிக்கும் போதே வந்துட்டேன்" என்று கூறிக்கொண்டே, கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். அப்பப்பா. அந்த மூச்சில் தான் எத்தனை வேகம்! எவ்வளுவு அனல்! மனதை அழுத்திக்கொண்டு இருக்கும் பாரங்களும், வருத்தங்களும் அந்த மூச்சிலே வெளியாகவிடும் என்று நினைத்தாள் போலும்.
"எங்க குடும்பத்தை அழிக்கணும், பழிவாங்கணும் னு தான் வந்தியா சித்தார்த். அந்த file விஷயம். அது நீதான் பண்ணணு எனக்கு தெரியும். ஆனா அதன் நா பெருசா எடுத்துக்கல. ஏன்னா. அது நீ பணத்துக்காகவோ, இல்ல வேற ஏதோ ஒரு ஆதாயத்துக்காக பண்ணுறன்னு நெனச்சன். அண்ணா ஓட நம்பிக்கையை பாத்ததுக்கு அப்புறம், நீயே திருந்திடுவன்னு விட்டுட்டன். ஆனா. ஆனா நீ...." என்று அதற்கு மேல் பேச முடியாமல் விசும்பல் ஒலி அதிகமானது.
தவறு எல்லாம் தன் மீது தான் என்பதால், சித்துவாலும், அவளை சமாதான படுத்த அருகில் நெருங்க முடியாமல் போனது. அவளே சீர்படுத்தி கொண்டு, மீதும் பேச தொடங்கினாள்.
"நீ பழிவாங்க வந்துருப்பனு, நா எதிர் பாக்கவே இல்ல சித்தார்த். எதுக்கு பழி வாங்கணும், யாரு செஞ்ச தப்புக்கு பழிவாங்கணும்? னு காரணம் எல்லாம் நா கேக்க மாட்டேன். அதெல்லாம் எனக்கு தேவை இல்லாத விஷயம். பழி வாங்க வந்தவன் வேற எப்படி வேணாலும் பழிவாங்கிருக்கலாமே. ஏன்? ஏன்டா இப்டி ஏன் மனச திருடுன?" என்று அவன் டீ-ஷர்ட் காலர்ஐ பிடித்து கேட்டாள் அவள்.
"ஊர்வி" என்று அவன் அழைக்க, "பேசாத. பேசாத சித்தார்த். என்ன ஏன்டா இப்டி படுத்துற, உன் பேச்சு, உன் குரல், உன் பார்வை, உன் ஸ்பரிசம் னு ஒன்னு ஒண்ணுதலையும் நா உன்கிட்ட மயங்குறன். ஏன் இப்டி என்ன ஏமாத்துன? உன் பழி வாங்கல் திட்டத்தோட பாகமா இதுவும்?" என்று அவள் கத்த, அவள் கையை பிடித்தவன், " என் காதல் நடிப்புனு நெனைக்குரிய ஊர்வி" என்று அவன் கேட்க, "இல்ல. உண்மையான காதலை உணர முடியாதவ இல்ல சித்தார்த் நானு. உன் கண்ணுல, நா பலதடவை, காதலை பாத்துருக்கான். அது பொய் இல்லனு தான் தோணுது. ஆனா நீ போன் ல பேசுனதை கேக்கும் போது, அது உண்மையா இல்ல, கண்டு புடிக்க முடியாத அளவுக்கு துல்லியமா நடிப்பானு சந்தேகப்பட தோணுது" என்று அவள் கூறினாள்.
"நா பழிவாங்க தான் வந்தன் ஊர்வி. என் எண்ணம் இந்நேரம் பாதி நிறைவேறி இருக்கும். என் மனச உன் கிட்ட நா இழக்காம இருந்திருந்தா. . என் காதல் உண்மைனு உனக்கே தெரியும் ஊர்வி. இதுவரைக்கும் தெரியலைனா, இப்போ என் முத்தத்தோட ஆழத்துல, அதுல இருக்க காதலை உணர்ந்துக்கோ ஊர்வி", என்று அவன், அவள் கைகளை, அவன் உதடுகள் நோக்கி எடுத்து செல்ல, "விடு சித்தார்த். இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்" என்று அவள் கைகளை அவன் கைகளில் இருந்து விடுவித்து கொண்டாள்.
"நீ எதுக்கு வேணுமோ பழி வாங்க வந்துருக்கலாம். ஆனா, இப்போ, உனக்கு ரெண்டே வழி தான் சித்தார்த். ஒன்னு. இந்த பழி வாங்கும் எண்ணத்தை விட்டுட்டு, என் கடைசி மூச்சு வரைக்கும் என் கூடவே இரு" என்று கூறும் போதே அவள் உதடுகள் துடிக்க ஆரமித்தது. "இன்னொன்று" என்று அவன் கேட்க, "பழி வாங்குறது தான் முக்கியம் னு நனைச்சனா, என்ன மறந்துடு. என்ன விட்டு தூரமா எங்கயாவது போய்டு. உன் மேல இருக்க காதல் காக, என் குடும்பத்தை காவு குடுக்க நா தயாரா இல்ல. என்ன விட்டுட்டு போய்டு" என்று அவள் உதடுகள் கூற, அவள் கைகளோ அதற்கு எதிர்மறையாக அவனை கட்டி அணைத்துக்கொண்டன.
"போய்டுனு சொல்லிட்டு, இப்டி கட்டி புடிச்சிகிட்டா? என்ன அர்த்தம்?" என்று அவன் கேட்க, "உன்ன போக விட எனக்கு இஷ்டம் இல்லனு அர்த்தம்" என்று அவன் நெஞ்சிக்குள் புதைந்தவள், சிறிது நேரத்தில் அவனை விட்டு விலகி,"யோசி சித்தார்த். யோசிச்சி சொல்லு" என்று அவள் வெளியே செல்ல எத்தனிக்க, "ஹே. நில்லு. எங்க ஓடுற? நா, எனக்கு நீ வேணாம்னு சொன்னா, என்ன பண்ணுவ? என் மனச அழுதிட்டு இருக்க கவலைல பத்தோட பதினொன்னா அது சேந்துடும். ஆனா நீ என்ன பண்ணுவ?" என்று அவன் கேட்க, "காலம் முழுக்க உன்ன மறக்க ட்ரை பண்ணுவன்" என்று அவள் திரும்பியவாரே கூற, "முடியுமா?" என்று அவன் கேட்டான், உதட்டில் குறு நகையுடன். "அதான் முடியாதுனு தெரியுதுல்ல. அப்புறம் என்ன கேள்வி" என்று அவள் கோவமாக கேட்க, "எனக்கு உன்ன விட வேற எதுவும் முக்கியம் இல்ல. உன் ஆசை படியே உன் கடைசி மூச்சு வரை உன் கூடவே இருக்க ஆசைபடுறன் ஊர்வி. எனக்கு அந்த வரம் குடுப்பியா?" என்று அவன் அவளை நெருங்க, அவள் பின்னால் நகர்ந்து சென்றாள்.
நகர்ந்து சென்றவள் அந்த அறையின் ஓரத்தில் உள்ள மேஜையில் முட்டி நிக்க, அவனோ இதுதான் சமயம் என, அவளை அவன் கைவலைக்குள் கொண்டுவந்தான். அவள் மேஜையை பிடித்துக்கொண்டு நிற்க, அங்க இருந்த டிவி ரிமோட்டில் அவன் கை பட்டு, டிவி தன் பங்கிற்கு, அவர்கள் காதலுக்கு பின்னணி இசை வாசிக்க தொடங்கியது.
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி.
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி.
எந்தக்காற்றின் அலாவளில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை
சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட..
பாடலின் முதல் வரியே, ஊர்வியை யோசிக்க வைத்தது. இதுநாள் வரை தன்னிலை மாறாமல் இருந்தவள் அவள். இன்று அவளுக்குள் தான் எத்தனை மாற்றங்கள். அனல்மேலே உள்ள பனித்துளிபோன்றும், அலைபாயும் கிளியை போன்றும், மரம் தேடும் மழைத்துளி போன்றும், அவன் அருகில் அவள் தன்னிலை இருந்து விலகி, அவள் மனம் அலைபாயுவது. அது காதலிக்கும் அனைவர்க்கும் உரியது தான் போல, என்று எண்ணி, கண்மூடி இசையை ரசிக்க தொடங்கினாள்.
இதுவரை பாடலை ரசிக்கும் தன்னவளை ரசித்துகொண்டுஇருந்த சிந்துவின் மனதில்,
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
என்ற வரிகள் நெருடலை உண்டாக்கியது. ஆஹா!! இந்த பாட்டில் தான் எத்தனை உண்மைகள். அவன் உள்ளத்தை அமுக்கியிருந்த அந்த பெரும் பாரமும், அவள் நெருக்கத்திலே, அவள் கடைக்கண் பார்வையில் மறைந்து விடுகிறதே. அவள் விழி பார்வை உண்மையால் போதை அளித்து மயங்க செய்வது தான், என்று நினைத்து கொண்டு அவனும் பாடலின் இசையில் மயங்க தொண்டங்கினான்.
Avanga konjam neram paathu ketutae love pannatum... Namba avangala thaniya vittutu kelambalaam.
Votes & Comments maranundhudadheenga...
Innaiku ud epdi irundhudhu? Waiting for ur comments..
BYE...
🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro