Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 10

சித்தார்த் அந்த அறையை விட்டு சென்ற பிறகும், நாள் முழுவதும் அறையிலேயே முடங்கி கிடந்தாள் ஊர்வி. ஜானகி, கிருஷ்ணன் இருவர் வந்து அழைத்தும் பலன் இல்லை. மகள் இப்படி முடங்கி கிடப்பதை பார்க்க முடியாத பெற்றோர், அபியிடம் சென்று முறையிட்டனர். அவளை அடித்ததற்காக ஏற்கனவே வருத்தத்தில் இருந்த அபி, இவர்கள் சொல்வதை கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் ஊர்வின் அறைக்கு சென்றான். சென்று அங்கே கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவள் அருகில் அமர்ந்தான். அவள் முடியை கோதிவிட கண் விழித்தவள், அவனை பார்த்தவுடன் "அண்ணா" என்று அழைத்துகொன்டே எழுந்து அமர்ந்துகொண்டாள்.

"சாரி ஊர்வி" என்று அவன் கூற, "என்ன சாரிலேன் கேக்குற. நீ அடித்ததை எல்லாம் நா அப்போவே மறந்துட்டேன்" என்று சிரித்து கொண்டே கூறினாள். அவள் முகத்தில் சிரிப்பை கண்டவுடனே தான் அபிக்கு நிம்மதி வந்தது. "அடிச்சது வலிக்கல ல?" என்று அவன் கேட்க, "இப்போ எதுக்கு நீ முடிஞ்சதை பத்தியே பேசிட்டு இருக்க. நாளைக்கு ரக்ஷபந்தன். நா உன் கூட கொண்டாட போற முதல் ரக்ஷாபந்தன். கிபிட் வாங்கிட்டியா?" என்று ஊர்வி கேட்டாள். நாளை ரக்ஷபந்தன் என்பதே ஊர்வி சொல்லிதான் அபிக்கு தெரிந்தது. அவளிடம் எப்படியாவது மழுப்ப வேண்டும் எனபதற்காக முப்பத்திரண்டு பற்களும் தெரியும்படி இழித்தான். "சிரிச்சி மழுப்பாத. நாளைக்கு மட்டும் எனக்கு கிபிட் வரல அவ்ளோதான். கிளம்பு" என்று ஊர்வி கூறினாள். விட்டால் போதும் என்பது போல் அங்கிருந்து ஓடினான் அபிமன்யு.

நாளை அவளுக்கு கிபிட் கொடுக்காவிட்டால் கடித்து குதறிவிடுவாள் என்பது அபிக்கு நன்றாகவே தெரியும். அதனால் சித்துவை அழைத்து கொண்டு சென்றான், ஊர்விக்கு கிபிட் வாங்குவதற்கு. அவளுக்கு என்ன கிபிட் வாங்குவது என்று இவனுக்கு எதுவும் விளங்கவில்லை. இருப்பினும் ஒரு பிரபல நகைகடைக்கு சென்றனர். வெகு நேரம் தேடி, இறுதியில் diamond pendent set வாங்குவது என்று முடிவு செய்தான். ஆனால், எதை எடுப்பது, என்ற குழப்பத்தில் சித்துவிடம் கேட்டான், "ஊர்விக்கு எது நல்ல இருக்கும்?" என்று கேட்க, அங்கு உள்ளவற்றில் ஒன்றை காட்டினான் சித்து. அதில heart & arrow டிசைன் இருக்க, அதை பார்த்த அபி சிரித்து விட்டு, "ஹார்ட் ல அம்பு விடும் வேலை எல்லாம் நீ பாத்துகோடா" என்று கூறிவிட்டு, மயில் டிசைன் இருந்த ஒரு pendant ஐ பேக் பண்ண செய்தான். கடையில் இருந்து வெளியில் வரும்போதுதான் அபிக்கு உமையாள் பற்றி ஞாபகம் வந்தது.

ஊர்விக்கு வாங்கியது போலவே உமையாளுக்கும் ஒரு pendent set வாங்கினான் அபி. உமையாள் அபியின் சித்தப்பா மகள். அபியின் சித்தப்பா, அவன் தாத்தாவுடன் அவர்கள் சொந்த ஊரில் வசிக்கிறார். அவரின் ஒரே மகள் உமையாள். சிறு வயதில் இருந்து அபியுடன் சென்னையில் அபியின் இல்லத்தில் தான் வசித்தாள். இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர். விடுமுறை நாட்களில் மட்டுமே தாய் தந்தையை பார்க்க செல்வாள். ஊர்வி வெளிநாட்டில் படித்ததால், அபியுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை. உமையாள் சிறுவயதில் இருந்ததே, அபியுடன் இருந்ததால் அபி செய்யும் ரகளை அனைத்திலும் உமையாளிற்கு பெரும் பங்கு இருக்கும். ஒரு ஒரு ரக்ஷபந்தனுக்கும் அபிக்கு ராக்கி கட்டுவது உமையாலே. இப்போது படிப்பு முடிந்து சொந்த ஊருக்கு சென்று விட்டாலும், ரக்ஷபந்தன் அன்று கண்டிப்பா தன்னை காண வருவாள் என்ற நம்பிக்கையில் அவளுக்கு சேர்த்து கிபிட் வாங்கினான்.

அடுத்த நாள் காலை பறவைகள் சிறகடித்து செல்லும் இசையுடன் அழகாக விடிந்தது. 

காலையில் ஊர்வி அபிக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகம் பூசி, இனிப்புகள் ஊட்டிவிட்டு, ராக்கி காட்டினாள். ராக்கி கட்டி விட்டு, "இது என்ன எப்போவும் பாசமா, பத்திரமா பாத்துக்கறதுக்கு". என்றாள். மீண்டும் இன்னொரு ராக்கி கட்டி விட்டாள். "எதுக்கு ஊர்வி இன்னொரு ராக்கி கட்டுற?" என்று அபி கேட்க "இது என்ன பத்திரமா பாதுக்காததுக்கு" என்றாள் ஊர்வி. அங்கு உள்ள அனைவரும், "என்னது? பத்திரமா பத்துக்கறது ராக்கி கட்டுன,ok. பத்திரமா பாதுக்காததுக்கா?" என்று வியப்பாக கேக்க, "ஆமா. பத்திரமா பத்துக்காததுக்கு தான் ரெண்டாவது ராக்கி. என் போன் password தெரிஞ்சும், நா யாரு கூட பேசுறன், என்ன chat பண்றனு பாக்காததுக்கு. எங்க போனாலும் safety என்கிற பேருல பின்னாடியே வராம இருந்ததுக்கு. என் கூட பேசுற பசங்களலெல்லாம் போய் அடிக்காம இருந்ததுக்கு. என் மேல என்னைக்கும் சந்தேக படமா இருந்ததுக்கு. இந்த உலகத்தை என்ன பாக்க அனுமதிச்சதுக்கு. என்ன சுதந்திரமா சிந்திக்க விட்டதுக்கு" என்று ஊர்வி பேசிக்கொண்டு இருக்கும் போதே அபி எழுந்து ஊர்வியை அணைத்து கொண்டான்.

"எப்பா. பாசமலர் படம் பாக்க டிவிஏ வேணாம் போல. இங்கவே லைவ் ஆ ஓடுது" என்று குரல் கேட்க, அனைவரும் வாசல் நோக்கி திரும்பினர். ப்ளூ கலர் சல்வாரில் அழகு தேவதையாக நின்றிருந்தாள் உமையாள்.

வாசலில் இருந்தவள் ஊர்வியை பார்த்து முறைக்க, பதிலுக்கு ஊர்வியும் முறைத்தாள். (அட. ஆமா பா. ஊர்விக்கும் உமையாள்கும் சின்ன வயசுல இருந்ததே ஆகாது). "டேய். அபி. அவ வந்ததும் என்ன மறந்துட்டல? என்று உமையாள் கேட்க, "ஏன் செல்ல தங்கச்சிய நா எப்படி மறப்பன். எனக்கு தெரியும் டி. நீ வருவன்னு. உனக்கும் சேத்து கிபிட் வாங்கி வச்சிட்டேன்" என்று அபி கூற. "நல்ல வேலை தப்பிச்ச" என்று உமையாள் கூறினாள். "டேய் அபி. நா உன்னோட தங்கச்சி. அதனால எனக்கு ரக்ஷபந்தன் கு கிபிட் வாங்கி குடுக்கற. இவளுக்கு ஏன்டா வாங்கிட்டு வந்த?" என்று சும்மா இருப்பவளை ஊர்வி சண்டைக்கு இழுக்க, "ஹலோ மேடம். சும்மா ஒரு ரக்ஷபந்தங்கு வந்துட்டு ஓவரா சீன் ஓட்டாதீங்க. ஒரு ஒரு ரக்ஷபந்தன்கும் நான் தான் வந்து அபிக்கு ராக்கி கட்டுவன். நீ வேணும் நா சொந்த தங்கச்சியா இருக்கலாம். ஆனா நா தான் செல்ல தங்கச்சி. நீ வேணும் நா அபி கிட்டயே கேட்டுக்கோ" இவளும் சண்டையை விடுவதாக இல்லை. அபி என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தான். ஒருவரை பிடிக்கும் என்று கூறினால் மற்றவரிடம் அடிவாங்குவது உறுதி. 

தன் நண்பனை அந்த இரண்டு ராட்சசிகளிடம் இருந்து காப்பாத்த எண்ணி, "உமையாள்" என அழைத்தான் சித்து. சித்து அங்கு இருப்பதை அப்போது தான் பார்த்தாள் உமையாள். அவனை பார்த்தவுடன், "டேய் மச்சான்" என்று கூவி கொண்டே சென்று அவனை கட்டி அணைத்து கொண்டாள். "மச்சி" என்று சித்துவும் அவளை அணைத்து கொண்டான். (நண்பர்களே. எனக்கு எங்கயோ எரியுற வாடை வருது. உங்களுக்கு??)

"டேய். சித்து. 12th லாஸ்ட் எக்ஸாம் அப்போ உன்ன பாத்தது. அதுக்கு அப்புறம் எங்க டா தொலஞ்சி போன? மச்சி மச்சி னு என் கூட சின்ன வயசுல இருந்து சுத்திட்டு, வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம் என்ன கண்டுக்க கூட இல்ல நீ. போடா" என்று முறுக்கி கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள். அவள் தாடையை பிடித்து அழகாக அவள் முகத்தை தன் பக்கம் திரும்பியவன், "உன்ன கண்டுக்காம எப்படி டா செல்லம். நா அமெரிக்கா கு போனதுக்கு அப்புறம் யாருடனும் காண்டாக்ட்ல இல்ல தங்கம். மன்னிச்சுடு பேபி " என்று அவளிடம் கெஞ்சினான். "அதெல்லாம் முடியாது" என்று அவள் மறுபடியும் திரும்பிக்கொண்டாள். "ஒன்று இரண்டு மூன்று" என்று எண்ணி கொண்டே தோப்புக்கரணம் போடா ஆரம்பித்தான் சித்து. அதை பார்த்த உமையாள் சிரித்து கொண்டே, "இன்னும் மாறவே இல்லடா நீ. ஸ்கூல்ல இருந்த மாதிரியே தான் இப்போவும் தப்பு பண்ணிட்டு தோப்புக்கரணம் போடுற" என்று அவனை மறுபடியும் அணைத்து கொண்டாள்.

அவளின் 'மச்சான்' என்ற அழைப்பிலே கடுப்பாகிய ஊர்வியை, அவன் அவளை 'மச்சி, செல்லம், தங்கம், பேபி' என்று டிசைன் டிசைனாக அழைப்பது இன்னும் கடுப்பாகியது. அவள் அவனை கட்டிக்கொண்டு இருப்பது அவள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகமாக்கியது. "அவன் எல்லா பொண்ணுங்க கிட்டயும் இப்டி தான் வழியுவான். இவளும் என்னடானா கொரங்கு குட்டி மாதிரி அவன் கழுத்தலையே தொங்கிட்டு இருக்கா. பெரியவங்க இருக்காங்கனு ரெண்டுத்துக்கும் எங்கயாச்சும் மரியாதை இருக்கா" என்று மனதிற்குள் அவர்களை திட்டிகொண்டு இருந்தால். ஊர்வியை தவிர மத்த அனைவர்க்கும் அவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்ததே இப்படி தான் பழகுகிறார்கள் என்பது தெரிந்ததால், அவர்கள் முகத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை.

ஊர்வியின் முகத்தை பார்த்த அபிக்கு, அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது நன்றாகவே தெரிந்தது. இதற்கு மேல் அப்படியே விட்டால், இன்று இங்கு ஒரு வள்ளி-தெய்வானை நாடகம் அரங்கேறும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதை தடுக்க, "எம்மா உமையாள். நீ வந்தது ரக்ஷபந்தன்க்கு. மச்சானை பாத்த ஒடனே அண்ணனை மறந்துடாதமா" என்றான். பிறகு உமையாள் அபிக்கு ராக்கி கட்டினாள். 

ஜானகி ஊர்வியிடம், "சித்து ராக்ஷபந்தன் அதுவுமா கைல ராக்கி இல்லாம இருக்கான் பாருமா. அவனுக்கும் ராக்கி கட்டிவிடு" என்று கூற, "கண்டவனுக்கு எல்லாம் என்னால ராக்கி கட்ட முடியாது. என் அண்ணனுக்கு மட்டும் தான்" என்று ஒரு மொக்கை கரணம் கூறி தப்பித்துவிட்டாள். ஜானகி உமையாளிடம் திரும்ப, "பெரியம்மா.மச்சானுக்கு முத்தம் வேணும்னா குடுக்கறன். ராக்கி எல்லாம் கட்ட முடியாது" என்று கூறி விட்டாள்.

 (paavam. namba hero. yarumae rakki kati vida matranganu feel panraru. Story padikara girls yaravadhu ready aaa? sidhu ku rakki kati vida?)

"அப்பறம் ஒரு சந்தோசமான விஷயம். அப்பா, இங்கேயே தங்கி உங்க கம்பெனிலேயே வேலை செய்ய ஒத்துக்கிட்டாரு" என்று உமையாள் கூற, அனைவர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவம் ஆடியது. நம்ப ஊர்வியை தவிர.

Cover credits to @barbieFN akka. LUV you akka. Thank u for this extermely cute covers...😍😍😍

Umayaal pathi edhuvum comments, opinion, doubt irundha sollunga friends.

Marakama vote & comment pannidunga.🙏🙏🙏

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro