Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 09

ஊர்வி பார்வையை சித்து பக்கம் திருப்பி, "சொல்லுங்க Mr. சித்தார்த்" அவங்களுக்கு எப்படி தெரியும்? அண்ணா கேக்குறாருல்ல" என்று ஊர்வி குரலில் கோபத்துடனும், உறுதியுடனும் கேட்டாள்.

சித்து அதை கேட்டு ஆடி தான் போனான். அவன் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் முழிக்கும் நேரம், அபி பேச தொடங்கினான்....

"ஹே ஊர்வி. அது எப்படி சிந்துவுக்கு தெரியும்? நீ ஏன் அவனை கேட்டுக்குட்டு இருக்க?" என்று அபி ஊர்வியிடம் கேட்க, "சித்தார்த். அண்ணா என்ன கேக்குறாங்க பாருங்க? உங்களுக்கு எப்படி தெரியும்னு கேக்குறாங்க. அவங்க கிட்ட சொல்லுங்க. அந்த ரகசியத்தை opponent கம்பெனி கிட்ட ஏலம் விட்டது நீங்க தான்னு, உங்க உயிர் தோழன் கிட்ட சொல்லுங்க" என்று ஊர்வி ஏறிக்கும் பார்வையுடன் கத்தினாள். "ஊர்வி. என்ன சொல்ற நீ? அவன் ஏன் சொல்ல போறான்? அவன் தான் பண்ணான்னு எப்படி சொல்ற?" என்று அபி கேட்டான். 

"எனக்கு இவன் இங்க வந்ததுல இருந்து டவுட் இருந்துச்சு. இவன் மேல. நேத்து நைட் இவன் என்னோட ரூம்கு வந்ததனால் டவுட் இன்னும் அதிகம் ஆயிடுச்சு. எதுக்கு வந்தேன்னு கேட்டதுக்கு, ஏதோ காதல் வசனம்லான் பேசிட்டு போய்ட்டான். அப்புறம் தான், நான் நேத்து மீட் பண்ண ACP இனியன் கிட்ட போன் பண்ணி இவன பத்தி விசாரிக்க சொன்னன். அப்போ தான் தெரிஞ்சுது இவன் லட்சணம்" என்று கூறினாள். 

"அப்டி என்ன சொன்னாரு அந்த ACP? என்று அபி கேட்டான். "என்ன சொன்னாரா? சொன்னாரு. இவங்க அப்பா bussiness ல சம்பாதிக்கறது பத்தாதுன்னு, பணத்தாசை பிடிச்சி, ஸ்கூல் பசங்க கிட்ட போதை பொருட்கள் வித்து, drug dealing case ல மாட்டி இப்போ சிறையில் இருக்காரு. அவரு மாட்டினதுக்கு அப்புறம், அவங்க சொத்து எல்லாத்தையும் cease பண்ணிட்டாங்க. கோடீஸ்வரான இருந்தவன், இப்போ நடு தெருவுக்கு வந்துட்டான்" என்று ஊர்வி கூற, "அதெல்லாம் இருக்கட்டும். இப்போ இதை சித்து தான் பண்ணான்னு எப்படி சொல்ற?" என்று அபி கேட்டான். 

"சின்ன வயசுலிருந்து ஏழையா இருக்குறவங்க கூட, பணம் னு சொன்ன என்ன வேணாலும் செய்வாங்க. இவன் சின்ன வயசுல இருந்து பணக்கார வாழ்க்கையை அனுபவிச்சவன். இப்போ ஏதும் இல்லாம இருக்கான். இவன பணத்துக்கு மயங்க வைக்கறது என்ன பெரிய விஷயமா? அது மட்டும் இல்லாம அவங்க அப்பா ரத்தம் தான அவனுக்குள்ளயும் ஓடுது. அதனால் இவன் தான் பணத்துக்காக இதெல்லாம் பண்ணிருப்பான். யாருக்கு தெரியும்? பணத்துக்காக தான் இந்த வீட்டுல நொழஞ்சி, என் மயக்கி...." என்று ஊர்வி பேசிக்கொண்டு இருக்கும் போதல், அவள் கன்னத்தில் அபியின் விரல்கள் பதிந்தது. 

"போதும் நிறுத்து ஊர்வி. உனக்கு என்ன தெரியும் அவனை பத்தி. அவனோட அப்பா சிறையில் ல இருக்காருனு சொன்ன போலீஸ்காரன், அந்த கேஸ் ல முக்கியமான எவிடென்ஸ்ஆ இருந்தது, கோர்ட்ல போய் சாட்சி சொன்னது யாருனு சொல்லலையே? நா சொல்றன். அந்த கேஸ்ல முக்கியமான குற்றவாளி அவனோட அப்பா தான்னு தெரிஞ்சும், நேர்மையா போய் சாட்சி சொன்னவன் அவன். அப்புறம் என்ன சொன்ன? எதுவும் இல்லாம நடு தெருவுல நின்னானா? அந்த கேஸ்கு அப்புறம் cease பண்ணது எல்லாம், அவங்க அப்பா சேத்த சொத்துதான். அனா அவங்க பரம்பரை சொத்து எல்லாம் அப்டியே தான் இருந்துச்சு. அத வச்சி நாலு தலைமுறைகு உட்கார்ந்து சாப்ட்ருக்கலாம். ஆனா அவன் என்ன பண்ணான் தெரியுமா? இந்த பணத்தாசை ல தான் எங்க அப்பா இப்டி பண்ணாரு. அந்த பணம் எனக்கு வேண்டாம். எங்க என் கிட்ட பணம் இருந்தா, நானும் எங்க அப்பா மாதிரி தப்பான வழில போய்டுவானோன்னு பயமா இருக்குனு சொல்லி, அவனோட எல்லா சொத்தையும் அனாதை குழந்தைங்களுக்கு எழுதி குடுத்துட்டான். அதுக்கு அப்புறம் அமெரிக்காக்கு போய், ஒரு சாதாரண employee அகா வேலை செய்துட்டு இருந்தான். நா கூப்பிடப்போ கூட அவன் வரல. நான் தான் force பண்ணி அவனை வர வச்சன். அப்டி பணம் மேல ஆசை இருக்குறவனா இருந்தா இப்டி தான் எல்லா சொத்தையும் அனாதை குழந்தைகளுக்கு எழுதி கொடுப்பானா? இது எதுவுமே சொல்லலையே அந்த போலீஸ்காரன். சித்துவை எனக்கு தவழர வயசுலிருந்து தெரியும். அவன் என்னைக்கும் மனசு அறிந்து, யாருக்கும் எந்த ஒரு கெட்டதும், பண்ணதில்ல" என்று அபி முடித்தான்.

"அண்ணா. அந்த நம்பிக்கையை தான் அவன் யூஸ் பண்ணிக்கறான். அவனை நம்பாத" என்று ஊர்வி கூற, "சரி. நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும். அவனே பண்ணாத இருக்கட்டும். அப்பவும் எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல. நீ உன்னோட வேலைய பாரு" என்று ஊர்வியின் வாயை அடைத்தான் அபி. 

அபி அவ்வாறு கூறவும் ஊர்வி சித்துவின் பக்கம் திரும்பி, "என்ன நடிப்பு டா உன்னோடது. என் அண்ணனை இப்டி நம்பவச்சிருக்க. இதுவரைக்கும் என் கிட்ட குரல் உயர்த்தி கூட பேசாதவர், இன்னைக்கு என்ன அடிக்கற அளவுக்கு கொண்டுவந்துட்ட இல்ல. மத்தவங்க கிட்ட வேணும்னா உன் நடிப்பு, நாடகம்லான் செல்லும். ஆனா உன்ன என்னைக்கும் நம்பமாட்டேன்" என்று அவனிடம் கூறி விட்டு தன் அறைக்குள் சென்றாள் .

தன் நண்பன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சந்தோசப்பட வேண்டியவனோ, இங்கு தலைகுனிந்து குற்ற உணர்ச்சியில் தவித்து கொண்டு இருந்தான். 

முதல் நாள் பள்ளி வாழ்க்கை...

தொடங்கியது உன்னுடன்...

பெற்றோர் தனித்து விட்டு செல்ல,

தாயின் தாலாட்டாகவும், தந்தையின் மடியாகவும்,

என்னை காத்தது என் தோள்களே...

நீயே என்னை என்னை தண்டித்து இருக்கலாம்.

உன் நம்பிக்கை என்னை கொள்வதை விட.

சித்துவின் யோசனையை கலைத்தன, அபியின் வார்த்தைகள். "டேய். அவ பேசுனது எதுவும் மனசுல வச்சிக்காத டா" என்று கூறி விட்டு அபியும் தன் அறைக்குள் புகுந்து கொண்டான். 

சித்து தன் அறைக்குள் சென்றவுடன், யாருக்கோ போன் செய்தான். "அபிக்கு ஏதும் டவுட் வரல. ஆனா ஊர்விக்கு டவுட் வந்துடுச்சு. கொஞ்சம் நாளைக்கு நம்ப எதுவும் பண்ண வேண்டாம்" என்று கூறிவிட்டு கால்ஐ கட் செய்தான்.

இங்கு ஊர்வியின் நிலை தான் மிகவும் மோசம். சித்து மீது குற்றம் சாட்டிய போதும், அவன் அமைதியாகவே இருந்தான். அதனால், அவன் தான் அதை செய்தது என்று ஊர்வியின் அறிவு, சந்தேகமே இல்லாமல் முடிவு செய்ய, அவள் மனமோ அவன் செய்திருக்க மாட்டான் என்று என்று வாதாட காரணம் தேடி கொண்டு இருந்தது. இரண்டுக்கும் நடுவில் மாட்டி கொண்டு தவித்து கொண்டு இருந்தாள்.

அந்த நேரம் அவளை காண அங்கு வந்தான் சித்து. அவள் அறை கதவுகள் திறந்ததே இருந்தன. உள்ளே அவள் அழுது கொண்டு இருப்பது நன்றாகவே தெரிந்தது. அவள் கண்களில் கண்ணீரை கண்டவன், அதன் காரணம் அவன் தான் என்பது இன்னும் வேதனை அளித்தது. அவன் உள்ளேயே சென்றான். அவன் "ஊர்வி" என்று அழைக்க, அவள் நிமிந்து பார்த்தாள்.

இவனை பார்த்த உடன் இன்னும் அதிகமாக அழ தொடங்கினாள். "எதுக்குடா இங்க வந்த. ஏற்கனவே தான் ஏதோ பண்ணி என்ன மயக்கிடல. இன்னும் என்ன பண்ணலாம்னு வந்த? என் அண்ணண் சின்ன வயசுல இருந்து உன்னோட பிரென்ட். அதனால உன்ன இப்டி கண்மூடி தனமா நம்புறான். ஆனா என்ன எப்படி டா மயக்கன. நீ தான் இதை பண்ணணு நல்ல தெரிஞ்சும், நா எப்படி டா சும்மா இருக்கன். நீ இதை செய்யாம இருந்துருக்கும்னு நா ஏன்டா தவிக்கிறன். உன் பேச்சுல மயங்கர எல்லா பொண்ணுங்க மாதிரியும் நானும் மயங்கிட்டேனா" என்று அவன் சட்டையை பிடித்து கொண்டு அழ தொடங்கினாள்.

அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல், சித்து பிரமை பிடித்தவன் போல அமர்திருந்தான்.பிறகு அவளே கண்களை தொடைத்து கொண்டு. "இல்ல. நா மத்த பொண்ணுங்க மாதிரி இப்டி உட்கார்ந்து அழுதுட்டும் இருக்க மாட்டேன், உன் கிட்ட மயங்கவும் மாட்டேன். எனக்கு என் bussiness தான் முக்கியம். இன்னைக்கு என் அண்ணண் சப்போர்ட் இருக்கறது நால மட்டும் தான் நீ இன்னும் இந்த வீட்டுல இருக்க முடிந்தது. சீக்கிரமே, இந்த வீட்டுல இருந்து மட்டும் இல்ல, என் வாழ்க்கைல இருந்து தொரத்தவும் வழி கண்டுபுடிக்கறன். இப்போ நீ இந்த ரூம்ல இருந்து வெளிய போ" என்றாள் ஊர்வி, அவளுக்கே உரிய உறுதியான குரலில்.

வெளியில் போ என்று அவள் உதடுகள் கூறினாலும், அவள் கரங்கள் அவன் சட்டையை விட தயாராக இல்லை. அவன் சட்டை காலர்ஐ இன்னும் அழுத்தமாக பிடித்து கொண்டு, வெளிய போ என்று மட்டும் கத்திக்கொண்டு இருந்தாள். சித்துவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான். "சாரி ஊர்வி" என்று ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்து விட்டு சென்றான்.

hello friends...

Innaiku ud epdi irundhuchunu sollunga...

Ellarukum siddhuva pudikum nu theriyum. But, ethana peruku urvi ya pudikum nu theriyala. Ungaluku urvi ya pudikuma, pudikadhanu comments la sollidunga... Sidhhuva pudikadhunu yaravadhu irundhalum sollunga.

Next ud konjam late agum. Late na oru 3 days ku apram. Yenna enna ezhudhrdhunu enakae theriyala.

Yeppavum solradhu dhaan. Vote pannidunga. Comment pannunga.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro