Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Kadhal 08

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது.

சித்து, அபி, ஊர்வி மூவரும் அலுவலகத்திற்கு கிளம்பி இருந்தனர். டைனிங் டேபிளில் அமர்ந்து, ஜானகி சாப்பாடு எடுத்து வர காத்திருந்தனர்.

ஊர்வி சித்துவை பார்த்து முரைத்து கொண்டுஇருந்தால். அதை சித்து கவனிக்கவில்லை. ஆனால் அபி கவனித்தான். "டேய். சித்து. என்னடா? அவ உன்ன முரைக்குறா?" என்று அபி கேட்க, சித்து, ஊர்வியை ஒரு முறை பார்த்து விட்டு, அபியை பார்த்து இழித்து வைத்தான்."டேய்.என்ன டா சிரிக்குற? சொல்லுடா?" என்று அபி கேட்க, "டேய். உன் தங்கச்சி என்ன புதுசா முறைக்குற மாதிரி கேக்கற? அவ எப்போ பாத்தாலும் முரைச்சிட்டு தான் இருப்பா" என்று பதில் அளித்தான் சித்து.

 "அவ எப்போவும் முரைச்சிட்டு தான் இருப்பா. ஆனா இன்னைக்கு over dosage ஆக இருக்கு. மரியாதை யா சொல்லு. நீ இப்டி இழிக்கறத பார்த்தா, நீ கண்டிப்பா ஏதோ விஷமத்தனம் பண்ணிருப்பன்னு தோணுது.மரியாதையா சொல்லு. என்ன பண்ண?" என்று டேபிள் இல் இருந்த fork ஸ்பூனை சிந்துவை குத்த வருவது போல் வைத்திருந்தான்.

சித்து அவன் அருகில் வந்து, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், "அது வந்து, நேத்து நைட்......" என்று நிறுத்தினான். "டேய். என்ன டா நேத்து நைட்டு. சொல்லு டா" என்று கத்தினான். "அதெல்லாம் உனக்கு புரியாது டா. நீ சின்ன புள்ள. நீயெல்லாம் பானிபூரி பிடுங்கி சாப்பிட தான் லாயக்கு" என்று சித்து அவனிடம் விளையாட, "டேய். நா அவளோட அண்ணன் டா. சொல்லு டா. என்ன பண்ண?" என்று கேட்டான் அபி. "அதையே தான்டா நானும் சொல்றன். என்ன இருந்தாலும் நீ அவளோட அண்ணன் டா. இதெல்லாம் எப்படி உன் கிட்ட சொல்ல முடியும்" என்று சித்து வெட்கத்துடன் பதில் அளிப்பது போல் நடித்தான்.

அபிக்கு தான் BP ஏகுறியது. "டேய்." என்று அவன் கத்த. "சரி. சரி. கத்தாத. ஒன்னும் இல்ல டா. நயிட் அவ ரூம்கு போனான்.வழக்கம் போல, பேய் ஆட்டம் ஆடி வெளியில தொரத்திட்டா. அவளோ தான்" என்றான் சித்து. "நீ எதுக்கு டா நீ அவ ரூம்க்கு போன?" என்று அபி கேட்க. "அந்த ராட்சசி தூங்கும்போதாவது சிரிப்பாளா? இல்ல அப்போவும் முறைச்சிகிட்டு தான் இருப்பாளானு பாக்க போனேன்." என்றும் சித்து கூறினான். அபி அடுத்து ஏதோ சொல்ல வர, "டேய் நண்பா, இதுக்கு மேல கேள்வி கேக்காத. எனக்கு பசிக்குது" என்று அவன் வாயை அடைத்து விட்டு, "ஜானு, இன்னும் ஒரு தோசை கூட கிச்சேன்ல இருந்து வெளிய வரல. என்ன பண்ற நீ?" என்று கிச்சேன்ஐ நோக்கி ஏலம் விட்டு கொண்டு இருந்தான்.

"இருடா. இதோ எடுத்துட்டு வரன்" என்று சொல்லிக்கொண்டே ஒரு தோசையுடன் வெளியே வந்து, அதை சிந்துவிற்கு வைக்க போக, "அம்மா. எனக்கு ரொம்ப பசிக்கிது.எனக்கு குடுங்க" என்று ஊர்வி கேட்டாள். ஜானகி சித்துவை பார்க்க, "பரவாயில்ல ஜானு, அவளுக்கே குடு" என்று அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு கூற, "பாரு. அது புள்ள. நீயும் தன் இருக்கியே.உன்ன எவன் கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறானோ." என்று ஜானகி புலம்பி கொண்டே அடுத்த தோசை சுட சென்றார். 

ஊர்வி, சட்னி எடுத்து தட்டில் வைப்பதற்குள், அங்கு இருந்த தோசையை காணவில்லை. அவள் சித்துவை பார்க்க,  முழு தோசையும் அவன் வாய்க்குள் இருந்தது. இவர்கள் இருவரையும் பார்த்து அபியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அனால், சிரித்தால் ஊர்வி கொதறிவிடுவாள் என்ற பயத்தில் அமைதியாக இருந்தான்.

"ஏன்டா இப்டி பிடுங்கி சாப்புட்ற?" என்று அபி சித்துவிடம் கேட்க, அவனோ, "அதை நீ சொல்றியா டா, நேத்து தான் பாத்தோமே, உன் லட்சணத்தை. நீ மிருணாளினி கிட்ட பிடுங்கி சாப்புட்றத." என்று அவனுக்கு பல்பு கொடுத்தான். "ரெண்டு பூரி பிடுங்கி சாப்பிட்டேன். அதையே சொல்லி கட்டுறானே" என்று மனதில் நினைத்துக்கொண்டு, "சரி டா. நீ என்னமோ பண்ணு, யாரு கிட்டயாவது அடி வாங்கு. நா எதுவும் கேட்க மாட்டேன்." என்று திரும்பி கொண்டான். "சாப்பாட்டிலாவது கவனம் செலுத்தலாம் என்று பார்த்தால், வந்தது ஒரே தோசை.அதையும் அம்மா ஊர்விகு வச்சிட்டாங்க. அவளையும் சாப்பிட விடாமல் இவன் பிடுங்கி சாப்பிட்டான்." என்று மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தான். 

 இங்கு ஊர்வி சித்துவை பார்த்து முறைத்துகொண்டுஇருக்க, அவன் சிரித்துக்கொண்டு இருந்தான். அந்த நேரத்தில் ஜானகி அடுத்த தோசையுடன் வர, ஊர்வி "அம்மா" என்று அழைக்க, "என்னடி அதுக்குள்ள ஒரு தோசை fulla சாப்டுட்டே? அதுக்காக இந்த தோசையும் உனக்கு குடுக்கமாட்டான். இந்த தோசை சித்து கு தான்." என்று ஊர்வியிடன் கூறி விட்டு, "இந்த கண்ணா நீ சாப்பிடு பா" என்று கூறினார். "அம்மா. என் தோசையை அவன் தான் பிடுங்கி சாப்பிட்டான்" என்று கூற, "என்ன ஊர்வி நீ இப்டி பண்ற. கொழந்த மாதிரி" என்று அவளை முரைத்தார் ஜானகி. "ஓஹ். நீங்க பெத்த பொண்ணு, நா சொல்றத, கேக்க மாட்டிங்க. ஆனா நேத்து வந்தவன். அவன் முக்கியமா போய்ட்டான் ல?" என்று பட்டாசு போல வெடித்து, நாற்காலியில் இருந்து எழுந்து, "எனக்கு ஒன்னும் சாப்பாடு வேண்டாம். இந்த தடிமாடுகே குடுங்க" என்று கூறிவிட்டு, தன் தாய் அழைப்பதையும் பொருட்படுத்தாமல், தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

அவள் சென்ற உடன் ஜானகியின் முகம் சுருங்கியது. "ஜானு. என்ன நீ. இப்டி சட்டுனு டல் ஆயிட்ட." என்று சித்து கேட்க. "இல்ல டா கண்ணா. அவ எப்போவது தான் சாப்டுனே வாய தொறந்து கேப்பா. மத்த தடவைஎல்லாம் நாங்க தான் கம்பெல் பண்ணி சாப்பிட வைப்போம். பாவம் ரொம்ப பசி போல. இப்போ சாப்பாட்டையே வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா" என்று வருத்தத்துடன் கூற, "விடு ஜானு. கொஞ்சம் நேரம் ஆகட்டும். நா சாப்பிட்டு முடிச்சிட்டு போய், அவளை சமாதான படுத்தி கூட்டிட்டு வரன்" என்று சித்து கூறினான். ஜானகி கிட்சேனுக்குள் செல்ல, "இவரே வம்பு பண்ணுவாரான், இவரே போய் சமாதான படுத்துவாரான். உன் மனசுல என்ன நீ பெரிய ரொமான்டிக் ஹீரோ னு நெனப்பா?" என்று அபி கேட்டான். "I am the hero, and I am the villian" என்று சித்து கூறியதை அவன் வெறும் வசனம் என்று எண்ணி அபி சிரித்தான். அவனுக்கு அப்பொழுது தெரிய வில்லை, அவன் வைக்க போகும் ஆப்பு.

இவர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்க, வாசலில் ஒருவர் வந்து, "sir, your order" என்று கூற, அபி, சித்து இருவரும் வாசலை நோக்க, swiggy யில் இருந்து delivery man வந்து இருந்தார். "நாங்க எதுவும் ஆர்டர் பண்ணலையே" என்று இருவரும் கூற, "நான் தான் பண்ணன்" என்று ரூமில் இருந்து வெளியில் வந்தாள் ஊர்வி.

அந்த பார்சல்ஐ வாங்கி கொண்டு வந்து டைனிங் டேபிள்இல் சித்துவின் பக்கத்தில் அமர்ந்தாள். அந்த பார்சல்ஐ திறக்க, அதில் பிரியாணி இருந்தது. ஊர்வி இருந்த பசியில் நல்லா வெளுத்து வாங்கினாள். சித்துவிற்கு அதை பார்த்து நாக்கில் எச்சில் ஊற, அவள் பக்கம் நகர்ந்தான். (இதையும் பிடுங்கி சாப்பிட தான்). அவன் நகர, அவன் இடையில் ஏதோ குத்துவது போல இருந்தது. என்ன என்று பார்க்க, ஊர்வி அவளுக்கு அவனுக்கும் நடுவில், அவனை நோக்கி ஒரு கத்தி வைத்திருந்தாள். "மவனே, நா சாப்பிட்டு முடிக்கற வரைக்கும், இங்க இருந்து அசைஞ்ச, சொருகிடுவன்" என்று அவள் கூற. "நா எங்கயும் நகரலயே" என்று வெளியில் கூறி விட்டு, "சரியான, லம்பாடி பொண்ண இருப்பா போல. ஜானு டார்லிங்கு இப்டி ஒரு பொண்ணா?" என்று நினைத்து கொண்டான். 

அவள் மொத்தமாக சாப்பிட்டு முடிக்கும் வரை, தோசை சாப்பிட்டு கொண்டும், அவள் வாயை பார்த்து கொண்டும், அமர்திருந்தான். அவள் வைத்திருக்கும் கத்தி சித்துவுக்கு மட்டுமே தெரியும் என்பதால், ஜானகி, அவள் சாப்பிட்டதே போதும் என மகிழ்திருந்தார். "ஏன்டா இப்டி திருட்டு முழி முழிக்கற?" என்று அபி கேட்க, அவள் கத்தி வைத்திருப்பதை கண்ணால் காட்டினான். அதை பார்த்து சிரித்து விட்டு. "என்னையவேவா கலாய்க்குற, நல்ல அனுபவி மச்சான்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். "ஒரு வாய் கூட குடுக்காம சாப்புடறா பாரு" என்று அவன் மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருக்க, அவள் உண்டு முடித்துவிட்டு எழுந்தாள்.

அந்த நேரத்தில், அபி ஊர்வி இருவரின் செல்போனும் சினுங்க, இருவரும் அவர்கள் அறைக்கு சென்றனர். சித்து ஜானகி, கிருஷ்ணனிடம் பேசி கொண்டு இருந்தான். அப்பொழுது ஜானகி சிந்துவிடம், "போய். உங்க அப்பாவை ஒரு தடவ பாத்துட்டு வரலாம் ல." என்று கேட்க, "அதுவரை சிரித்துக்கொண்டிருந்த சித்துவின் முகம் கோபத்தில் இறுகியது. "அவரை என் அப்பா னு சொல்லாத ஜானு" என்று அவன் எகிற, "என்ன இருந்தாலும் அவரு உன் அப்பா டா" என்றார் ஜானகி. "ஜானு, உனக்கு நா இங்க இருக்கறது புடிக்கலான சொல்லிடு நா கெளம்பிடறன். அதா விட்டுட்டு அப்பாவை போய் பாருன்னுலான் சொல்லாத" என்றான். "டேய். ஏன்டா கண்ணா இப்டி லான் பேசுற. நீ வந்ததுக்கு அப்புறம் தான் நா கொஞ்சம் சந்தோசமா இருக்கன். இந்த வீட்டுல எல்லாருக்கும் என்னவிட, அவங்க கம்பெனி, பிசினெஸ், அதெல்லாம் தான் முக்கியம். அந்த ஊர்வி பொண்ணு, என்ன கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டா. நீ வந்ததுக்கு அப்புறம் தான். பேசலானாலும், கோச்சிக்காவது செய்யறா". என்றார் ஜானகி. 

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது, அபியின் அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது, "What!!! What the hell happening? How did this happen? How is this possible?" என்று  போனில் கத்திக்கொண்டு இருந்தான். அந்த சத்தம் கேட்டு ஊர்வி, சித்து இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவன் போன் கட் செய்த உடன், சித்து என்ன என்று கேட்க, "டேய். அந்த government contact, SRK group of companies கு போயிடுச்சி" என்று கூற, "இந்த contract போன என்ன டா?" ஏன்டா இவளோ டென்ஷன் ஆகுற?" என்று சித்து கேட்க, "என்னது. என்ன டா இவளோ ஈஸியா சொல்லிட. நம்ப  மத்த கான்ட்ராக்ட்ஸ்லான், பணத்துக்காக, லாபத்துக்காக பண்றோம். அனா இந்த government contract தான் நம்பளோ பெருமை. நம்மளோட bussiness tactics. மத்த private companies லான், தெரிஞ்சவங்க, regular client அப்டினு பல ரீசன்ஸ் காக காண்ட்ராக்ட் குடுப்பாங்க. ஆனா இந்த government காண்டாக்ட் அப்டி கிடையாது. கம்மியான விலை யாரு quote பண்றங்களோ, அவங்களுக்கு தான் காண்ட்ராக்ட் குடுப்பாங்க. கடந்த 10 வருசமா நம்ப கம்பெனிகு தான் அந்த காண்ட்ராக்ட். இதனால புது customers , நம்ப கம்பெனில தன் கம்மி விலை னு நம்பி வருவாங்க. சோ. இந்த காண்ட்ராக்ட் தன் நம்மளோட success secret " . என்று கோபத்துடன் பேசி முடித்தான்.

"அண்ணா. எவளோ difference , நம்ப quote பண்ண amount கும், அவங்க quote பண்ண amount கும்?" என்று ஊர்வி கேட்க, "ஒரு ரூபாய்" என்றான். "What? How is that possible?" என்று ஊர்வி ஆச்சர்யமாக கேட்க, "அதை தான் ஊர்வி, நானும் யோசிக்கறன். நம்ப quote பண்ண amount தெரியாம, அவங்க எப்படி நம்பல விட ஒரு ரூபாய் கம்மியா quote பண்ண முடியும்?" என்று அபி கேட்டான். ஊர்வி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, "நம்ப quote பண்ண amount தெரிஞ்சா பண்ண முடியும்ல?" என்றாள். "என்ன ஊர்வி? அது எப்படி அவங்களுக்கு தெரியும்?" என்று அபி கேட்க, ஊர்வி பார்வையை சித்து பக்கம் திருப்பி, "சொல்லுங்க Mr. சித்தார்த்" அவங்களுக்கு எப்படி தெரியும்? அண்ணா கேக்குறாருல்ல" என்று ஊர்வி குரலில் கோபத்துடனும், உறுதியுடனும் கேட்டாள்.

சித்து அதை கேட்டு ஆடி தான் போனான். அவன் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் முழிக்கும் நேரம், அபி பேச தொடங்கினான்....

Innaiku avalo dhan. ellarum kelambunga.

Urvi enna kandupudicha? 

Epdi kandupudicha?

Adha abhi kita sonna, abhi yepdi react pannuvan?

Unmai therinja Siddhu oda nelamai enna?

Idhellam next ud la pakalam....

Yarum yenna thittama next ud ku wait pannunga.....

Marakam vote  & comment pannidunga. 🙏🙏🙏🙏🙏🙏

negative comments irundhalum, feel free to say.

Thank u friends unga support kum, encouragement kum.



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro