Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 05

இருவரும் அலுவலகத்தை வந்தடைந்தனர். ஊர்வி முன்னால் செல்ல சித்து அவளை பின் தொடர்ந்தான். 

அலுவலகத்தில் உள்ள அனைவரும் ஊர்வியை நோக்கி "Good afternoon mam" என்று கூற, அவள் அதை எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாமல், தன் வழியில் சென்றுக்கொண்டிருந்தாள். அவள் பின்னால் சென்ற சித்துவை பார்த்து பெண்கள் அனைவரும் புன்னகைக்க, அவனும் அவன் பங்கிற்கு இழித்து வைத்தான். இது அனைத்தையும் ஓரக் கண்ணால் கவனித்துக்கொண்டிருந்த ஊர்விக்கு தான் உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்தது.

ஊர்வியின் அறைக்குள் நுழைந்தனர் இருவரும். ஊர்வி சித்துவிடம், "ஒரு பொண்ண கூட விடமாட்டியா. எல்லார் கிட்டயும் பல்ல பல்ல காட்ர" என்று வந்ததும் வராததுமாக அவனிடம் பொங்கினாள்."அவங்க சிரிச்சாங்க பதிலுக்கு நானும் சிரிச்சன்" என்று கூலாக பதில் அளித்தான்.

"அப்போ யாரு சிரிச்சாலும் சிரிப்பியா?" என்று அவள் கேட்க, "ஆமாம். பின்ன என்னையும் உன்ன மாதிரி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி, எப்பவுமே உர்ர்ர்ன்னு இருக்க சொல்றியா?" என்றான். "நான் குரங்கா?" என்று அவள் கத்த, "சாரி சாரி. தெரியாம சொல்லிட்டன். உன்ன போயி குரங்குன்னு சொன்னா, குரங்குங்கலாம் கஷ்ட படும்" என்றான். 

அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் "மேம். இன்டர்வியூக்கு டைம் ஆச்சு" என்று கூறி சென்றாள். சித்துவிடம் திரும்பிய ஊர்வி, "இங்க பாரு. இதுக்கு முன்னாடி எப்படி வேணும்னா இருந்துருக்கலாம். இனிமே வால சுருட்டிக்கிட்டு அமைதியா இரு" என்று அவன் முன் கைநீட்டி கூறினாள்.

"நான் யார பாத்து சிரிச்சா உனக்கு என்ன?" என்று அவன் புருவங்களை உயர்த்திக் கேட்டான்.

இந்த கேள்வி்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் ஊர்வி. காரணம் தேடி அலைந்து, இறுதியில் கூறினாள், "எனக்கு ஆபிஸ்ல டிசிப்லின்(discipline) ரொம்ப முக்கியம்" என்று கூறிவிட்டு நேர்க்காணல் நடக்கும் அறைக்குச் சென்றாள். வழக்கம்போல் அவனும் அவள் பின்னால் சென்றான்.

ஒரு அறையில், தமிழ்நாட்டின் சிறந்த கம்பனிகளுள் ஒன்றான A.M. GROUP OF COMPANIES இன் நேர்காணல் நடந்துக்கொண்டிருந்தது. அங்க இன்டர்வியு எடுத்துக் கொண்டிருந்தது ஊர்வியும் சித்தார்த்தும் தான். சித்துவிற்கு அங்கு பெரிதாக வேலை ஏதும் இல்லை. ஏனெனில், நேர்க்காணலுக்கு வந்தவர்களை ஊர்வி கேள்விகள் கேட்டு துளைத்துக்கொண்டிருந்தாள். அதனால் சித்து அமைதியாகவே இருந்தான். நேர்க்காணலுக்கு பெண்கள் வந்தாள் மட்டுமே அவன் வேலையை செய்வான். அதான் பா, சைட் அடிப்பது.

அலுவலகத்தில் உள்ள அனைவரும் மார்டனாக உடை அணிந்திருக்க, அதற்கு நேர்மாறாக உடை அணிந்த ஒரு பெண் நேர்க்காணல் அறைக்குள் நுழைந்தாள்.

பாவாடை தாவணியில் ஜொலிக்கும் அவளை தூரத்தில் பார்த்த உடனே "வாவ்" என்று  சித்து வாயைப் பிளக்க, ஊர்வியின் முறைப்பில் அடங்கினான்.

"May I come in?" என்று கேட்டு, ஊர்வியிடம் இருந்து அனுமதி வந்த பிறகு உள்ள நுழைந்தாள். உள்ளே வந்தவளிடம் "SO. tell us about yourself" என்றாள் ஊர்வி. அவளும் தன்னைப்பற்றி கூற தொடங்கினாள்.

"பெயர் மிருநாளினி. வயது 23. MBA முடிச்சுருக்கன். ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்க ஒரு சின்ன கிராமம்"

"இங்க வேலையில சேர்ந்துட்டா எப்படி family ஓட சென்னைக்கு வந்துடுவீங்களா?" என்று ஊர்வி கேட்க, "இல்லை ஹாஸ்டல்ல தங்கிருக்கன்" என்றாள்.

இவர்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த சித்து, "என்ன இவ, இவ்வளவு நேரம் இன்டர்வியூக்கு வந்தவரகளையெல்லாம் உண்டு இல்லன்னு பண்ணீட்டு, இந்த பொண்ணு கிட்டமட்டும் சொந்த கதை சோக கதைலாம் கேட்டுட்டு இருக்கா" என எண்ணிக்கொண்டு, அவள் தொழில்திறனை அறியும் வண்ணம் சில கேள்விகளை கேட்டான்.

அவை அனைத்திற்கும் மிக கச்சிதமாக பதில் அளித்த மிருநாளினியைப் பார்த்து. "வாவ். நீங்க இவ்வளவு நல்லா பதில் அளிப்பீங்கன்னு நான் எதிர்பாக்கல, அதுவும் இவ்வளவு சரலமான ஆங்கிலத்தில்"என்று கேட்க, "ஏன் எதிர்பாக்கல?" என்று கேட்டாள் மிருநாளினி.

"அது நீங்க தாவனிலாம் போட்டுட்டு வந்தீங்கல்ல, அதான்" என்று இழுக்க, மிருநாளினி ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, "ஏன் சார், படிச்சவங்க, ஆங்கிலம் பேச தெரிஞ்சங்கலாம் மாடர்ன் டிரெஸ் தான் போடனுமா என்ன? படிப்புன்னு ஒன்னு வந்துட்டா நம்பலோட கலாச்சாரம், நாகரீகம் எல்லாத்தையும் மறந்துடனுமா? நம்பலோட உடையும், மொழியும் தான் நம்பலோட அடையாலம். நாகரீக வளர்ச்சிங்கர பேர்ல அத மாத்திக்க நான் விரும்பல" என்று இதழில் புன்னகையுடனும், அதே நேரத்தில் மனதில் உறுதியுடனும் கூறினால். ஊர்விக்கு ஏனோ மிருநாளினியை மிகவும் பிடித்திருந்தது. தனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்ற குறையை தீர்க்க வந்தவள் என்று நினைத்துக்கொண்டாள்.

ஆசையாய் அன்பாய் பேச தந்தையும், கொஞ்சி பேச அன்னையும், எதிரும் புதிருமாக பேசும் சகோதரனும், கவிதைப் படிக்கும் காதலனும் இருந்தாலும், மனம் தேடுவது எண்ணவோ பைத்தியம் போல் பேசும் ஒரு நண்பனைத்தான். (Dedicated to all my paithiyakara besties...)

"ஓகே மிஸ்.மிருநாளினி. நீங்க நாளைக்கே ஜாயின் பண்ணிக்கோங்க" என்று ஊர்வி கூற, "thank you மேம்" என்று சந்தோசமாக கூறிவிட்டு சிட்டாக பறந்து செல்ல, அதைக் கண்ட ஊர்வியின் முகத்திலும் மகிழ்ச்சி ஊஞ்சல் ஆடியது. "ஏய் ராட்சசி. என்ன அந்த பொண்ண பாத்ததுக்கு அப்பறம் இவ்வளவு சந்தோசமா இருக்க" என்று கேட்க, "தெரிலயே. எனக்கு அவங்கல ரொம்ப புடிச்சுருக்கு. ஏன்? உங்களுக்கு புடிக்கலயா?" என்று கேட்டாள். "என்ன ராட்சசி இப்படி கேட்டுட்ட. எனக்கு போயி ஒரு பொண்ண புடிக்காம இருக்குமா? அதுவும் அந்த பொண்ணு அழகா தாவனி கட்டி, ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், கொலுசுன்னு போட்டு எவ்வளவு லட்சனமா இருக்கு" என்று கூறிக்கொண்டிருக்கும் போது ஊர்வியின் முகம் கோவைப்பழம் போல் சிவந்தது.

மேஜை மீதிருந்த பென்ஸ்டேண்டை எடுத்து அவன் மீது வீசினாள். நல்லவேலையாக அதை அவன் பிடித்துவிட்டான். பிடித்தவன் ஊர்வியைப் பார்த்து. "ஜஸ்ட் மிஸ். இன்னேரம் என் மண்ட ஒடஞ்சிருக்கும். அடி கொலக்காரி. எதுக்குடி என்ன சாக அடிக்க பிளான் பன்ற." என்று அவளைப் பார்த்து கேட்க, "அந்த பொண்ணு இங்க இருந்ததே 5நிமிடம் தான். அதுக்குள்ள அவ என்னென்ன போட்டுருந்தான்னு கரெக்டா சொல்ர. ஒரு பொண்ண கூட விடமாட்டியா" என்று உணர்ச்சிபொங்க கேட்டுவிட்டு அந்த அறையை விட்டு சென்றவளின் பின், "ராட்சசி ராட்சசி" என்று அழைத்தவாரு ஓடுச்சென்று அவள் கைகளைப் பிடித்து தடுத்தான்.

அவளை சுவற்றில் தள்ளி, கரங்களை கம்பியாக்கி சிறை பிடித்தான். யாராய் இருப்பினும் கண்களை பார்த்து பேசும் ஊர்வி, அவன் கைகளாகிய சிறைக்குள் தலைக்குனிந்து நின்றாள்.

நிமிர்ந்த நடையும், நேர்க்கொண்ட பார்வையும்,

தளர்கிறது.

வெட்கமும், நாணமும்,

மிளிர்கிறது.

உன் நெருக்கத்தில்......

பாரதி கண்ட புதுமைப் பெண்ணை,

களவாட வந்த கள்வனோ!

இந்த காதல்!!!

"ஊர்வி" என்று அவன் அழகாக அழைக்க, எப்போதும் வண்டிவண்டியாக கழுவி ஊத்துபவளின் வாயில் இருந்து, "ம்ம்ம்" என்று மட்டுமே பதில் வந்தது. "உண்மைதான் ஊர்வி. நான் எல்லா பொண்ணுங்களையும் பாக்கறன் தான். ஆனா என்னால உன்ன மட்டும் பார்க்க முடியலடி. உன் கண்ண தான்டி என்னால எதையுமே எண்ணால பாக்க முடிலடி. அப்படி என்னதான்டி இருக்கு உன் கண்ணுல. உன் பார்வை என் நெஞ்ச இப்படி அம்பு மாதிரி காயமாக்குது. இருந்தாலும் அந்த வலியதான் மனசு விரும்புது. உன் கண்ணு மீன் மாதிரிதான் இருக்கு. ஆனா அது வலையில சிக்குற சாதாரன மீன் கிடையாது. வலைவீசி இந்த திமிங்கலத்தயே புடிச்சுடுச்சே உன் கண்ணு" என்று அவன் மெல்லிய குரலில் கூற, குனிந்திருந்த ஊர்வியின் இதழ்களில் புன்னகை பூத்தது.

"உன் கண்ணுல அப்டி என்ன இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணலாம்ன்னு கிட்ட வந்தா, இப்படி குனிஞ்சியே இருக்க. கொஞ்சம் நிமிர்ந்து என்ன பாரு" என்று கெஞ்ச அவள் நிமிரும் தருனம், "சித்து....." என்று கூவிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் அபி.

இவர்கள் நிற்கும் விதத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். இவன் வருகையைப் பார்த்த இருவரும் சற்று விலகி நின்றனர். ஊர்வி தலையைக் குனிந்துக்கொண்டே வெளியில் சென்றுவிட்டாள்.

"என்னங்கடா நடக்குது இங்க" என அபி மனதில் நினைத்துக்கொள்ள, "அய்யய்யோ. இப்படி அவ அண்ணன் கிட்ட தனியா மாட்டி விட்டுட்டு போய்டாலே. வச்சி வெளுத்துடுவானோ" என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அபி சித்துவிடம் வந்து, "வீட்டுக்கு கிளம்பலாமாடா?"என்று எப்போதும் போல கேட்க, சித்துவும் தலையாட்ட இருவரும் அபியின் காரில் கிளம்பினர்.

செல்லும் வழியில் அபி சித்தார்த்திடம், "டேய். நம்ப ஸ்கூல் படிக்கும்போது, ஒரு கடையில பானிபூரி சாப்டுவோம்ல. அங்க போலாமா?" என்று கேட்க, சித்து "சரி" என்று கூறிவிட்டு, "நம்ப பண்ண வேலைக்கு நம்பல பொளந்துடுவான்னு பாத்தா, பானிபூரி சாப்பிட போலான்றான். சரியான சொரணகெட்ட அண்ணன். ஒருவேல வீரம் படம் அஜித் ஸ்டெயில்ல சாப்பாடு போட்டு அடிப்பானோ" என்று நினைத்துக்கொண்டான்.

"டேய் அபி. அந்த ரூம்ல நடந்தத பத்தி நீ ஒன்னுமே கேக்கல" என்று கேட்க, "நான் என்னடா கேக்க போறன். உன் தங்கச்சி கூட விளையாட உனக்கு உரிமை இல்லையா" என்று அபி கூற "தங்கச்சியா!!!" என்று அதிர்ந்தான் சித்து. அவன் தவிப்பை மனதிற்குள் ரசித்துக்கொண்டு, "ஆமான்டா. எனக்கு தங்கச்சின்னா, உனக்கும் தங்கச்சிதான்" என்றான் கூலாக. ஆனால் சித்துக்கு தான் இங்கு bp எகிறியது.

"அவ ஒன்னும் எனக்கு தங்கச்சிலாம் இல்ல" என்றான் சித்து. "பின்ன?"என்று அபி கேட்க, "தெரியலடா..." என்று சித்து யோசிக்க, "நீ அப்பறம் யோசிச்சிக்கோ. இப்ப வா பானி பூரி சாப்பிடலாம்" என்று கூறி விட்டு இறங்கினான் அபிமன்யூ.

pani puri next ud la sapdalam. ippo kelambunga. 

Namba abhimanyu vera single aa nimadhiya irukan. Pani puri sapudra gap la avana  love la kothuvitudalam. ok dhana?

Don't forget to vote. It encourages me a lot.

And comment me to boost me more. Negative comments are also welcome.

🙏🙏🙏

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro