Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 04

ஊர்வி வேண்டாம் என கூறியும் கேக்காமல், கூட்டத்தை நோக்கிச் சென்றான் சித்து. கூட்டத்திற்கு நடுவில் முன்னேறிச் சென்ற சித்து பார்த்தது, விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை. கூட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தனரே தவிர யாரும் உதவ முன் வரவில்லை. சிலர் போட்டோ, வீடியோ என எடுத்துக்கொண்டிருந்தனர்.

அந்த பெண்ணிற்கு உதவி செய்யலாம் என முன்னேறியவனை தடுத்தது ஒரு குரல். "ஏம்பா தம்பி கிட்டபோகாத. ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிருக்கோம். வந்துடுவாங்க. நாம்பலா போயி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தா போலிஸ், விசாரணைன்னு நம்பல அலையவிடுவாங்க"என்று கூறினார் கூட்டத்தில் ஒருவர்.இவர் இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தாள் ஊர்வியும். இவர் இப்படி கூறியவுடன் கோபத்தில் பொங்கினான் சித்தார்த். "எந்த காலத்துல இருக்கீங்க நீங்கலாம். இப்போதான் இந்த மாதிரி விபத்துல காயமடந்தவர்களை ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்ட போறவங்க மேல எந்த விசாரணையும் இல்லன்னு சட்டம் வந்துடுச்சில்ல. உங்க சுயநலத்துக்கு இப்படி ஒரு காரணம் வேற. இனிமே யாராவது வாய தொரந்தீங்க அவ்வளவுதான்". என்று கூறிவிட்டு காயமடைந்து சுயநினைவின்றி கிடந்த பெண்ணிடம் சென்றான்.

இதுவரை சிரிப்பும், குறும்பும் மட்டுமே கண்டவனிடம் கோவத்தை கண்டவள் ஸ்தம்பித்து நின்றாள். அவள் காரை விட்டு வந்ததே, நமக்கு எதுக்கு வேண்டாத வேல, கிளம்பலாம் என்று கூறத்தான். ஆனால் இங்கு வந்து அவனை பார்த்தவுடன்,"ஐயோ. இவனுக்கு கோவம்லாம் வேற பட தெரியுமா.இப்படி கத்தறான். இப்ப போய் நம்ப கிளம்பளாம்ன்னு சொன்னா அவ்வளோதான் போல. பேசாம அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணீட்டே போய்டுவோம்". இப்படி நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென யாரோ ஊர்வி என அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள். அழைத்தது சித்தார்த்தான். அடிப்பட்ட பெண்ணை கரங்களில் சுமந்துக்கொண்டு காரை நோக்கி சென்றுகொண்டிருந்தான். இவளும் அவன் பின்னே சென்று கார் கதவை திறந்து உதவி செய்தாள்.

"ஊர்வி. நான் பின்னாடி அந்த பொண்ணு கூட உட்கார்ந்துக்கிறன். நீ சீக்கிரம் போய் காரை எடு." இவளும் முதல் முறையாக அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு செயல்பட்டாள். இவள் வேகமாக மருத்துவமனை நோக்கி காரை செலுத்திக்கொண்டிருக்க, அவனோ அந்த பெண்ணிற்காக தவித்துக்கொண்டிருந்தான்.முகம் தெரியாத பெண்ணிற்கான அவனுடைய தவிப்பு அவளுக்கு புதிதாய் இருந்தது, பிடித்தும் போனது.

பின் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ஊர்வி வெளியே வந்து அலுவலகத்திற்கு கால் செய்து லேட் ஆகும் என கூறிக்கொண்டிருந்த நேரம், சித்து அந்த பெண்ணிற்கு மருத்துவம் பார்க்கும் அறை வாசலிலே நின்று கொண்டிருந்தான். டாக்டர் சித்துவிடம் வந்து "ரொம்ப blood லாஸ் ஆகி இருக்கு. உடனடியா இரத்தம் தேவை. எங்களுக்கு தெரிஞ்ச blood bank எல்லாத்துலையும் விசாரிச்சு பாத்துட்டோம் கிடைக்கல. உங்க சைட்ல முடிஞ்சா அரேஞ்ச் பண்ணுங்க. அந்த பொண்ணோட பிலட் குரூப்  A-ve என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு திடீரென வந்தது ஊர்வியின் நியாபகம். "எங்க இவல காணோம்." என தேடிக்கொண்டே மருத்துவமனை வாசலுக்கு வந்தான். ஊர்வி அவனை பார்த்தவுடன் "அந்த பொண்ண அட்மிட் பண்ணியாச்சுல்ல.  நாம கிலம்பலாமா? டைம் ஆச்சு" என்று அவள் பேசிக்கொண்டே போக, அவனோ தலையை தொங்கப்போட்டுக்கொண்டிருந்தான். இதை கவனித்தவள், "என்ன ஆச்சு" என்று கேட்க, "அது அந்த பொண்ணுக்கு இரத்தம் கிடைக்கல"."என்ன blood group என்று கேட்க" அவனும், "A-ve" என்று கூறினான்.

"ஊர்வி. உனக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது....... ஹேய். முதல்ல உன் blood group  என்ன?" அவளும் O-ve என்று கூற 1000 watts bulb ஏற்றியது போல பிரகாசமானது சித்துவின் முகம். "என்ன இவன் இப்படி இளிக்கறான். நம்பல வச்சி யதாவது பிளான் பன்றானோ?" என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவள் கையை பிடித்து இழுத்தான்.

"ஏய், எங்க இழுக்குற." என ஊர்வி கேட்க, "blood donor கிடச்சாச்சு என்றான்". "யாரு?" என்று ஆர்வமாக கேட்டவளிடம் "நீதான்" என்றான். அவள் அதிர்ச்சியில்,"என்னது நானா? முடியாது. வேணும்ன்னா நீ குடு போ" என்று முகத்தை திருப்பியவளிடம், "லூசு மாதிரி பண்ணாத, என் blood group B+ ve என்றான். "என் Blood group கூட ஒன்னும்  A-ve  இல்லையே" என்றாள். "O-ve, UNIVERSAL DONOR GROUP. எல்லாருக்கும் குடுக்கலாம்" என்று சித்து கூற, அவளோ "முடியாது. முடியாது. எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை". "என்னது? பழக்கம் இல்லையா? நான் என்ன உன்ன புகை புடிக்க சொன்னனா. இல்ல தண்ணீ அடிக்க சொன்னனா. பழக்கம் இல்லங்ற. ஒழுங்கா வந்து இரத்தம் குடு" என்று அவன் மிரட்ட, அவளோ "என்ன மிரட்டுற. முடியாதுன்னா முடியாது." என்றாள் முடிவாக.

(ஊர்விய எப்படி சம்மதிக்க வைப்பதுன்னு சித்துவுக்கு தெரியாதா என்ன. எப்படி ஒத்துக்கவைக்கிறான் என்று பாருங்க.)

"நீ ஒன்னும் குடுக்க வேணாம் போ" என்று கூறிவிட்டு,"ஆண்டவா, எனக்கு மட்டும் நீ O-ve Blood கொடுத்துருந்தா இன்னேரம் நான் அந்த பொண்ணுக்கு இரத்தம் குடுத்துருப்பன். அதவிட்டுட்டு, ஏம்பா இந்த சுயநலவாத சூனியக்காரிக்கு கொடுத்த?" என வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி புலம்புவது போல நடித்தான். "என்னது. நான் சுயநலவாதியா? நான் சூனியக்காரியா? நான் ஒன்னும் selfish இல்ல. நான் தான் அந்த பொண்ணுக்கு blood donate பண்ணுவன்" என வீம்புக்காக தன் முடிவை மாத்திக்கொண்டு, முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே சென்றாள். நினைத்ததை சாதித்த மகிழ்ச்சியிலும், அவள் முகபாவனைகளை ரசித்துக்கொண்டும் அவள் பின்னால் சென்றான்.

உயிரையும் கொடுப்பேன் என்று கூறுபவர்களுக்கு....

உயிர் வேண்டாம்

உதிரம் போதுமே

இன்னுயிர் காக்க....

(Friends... Blood donate panradhala acceptor ku matum illa, donors ku naraiya uses iruku. enna nu kekareengala? Google it....😝😝😝)

Romba advice panra madhiri irukoo....🤔🤔🤔🤔. Seri namba kadhaiku povom..🏃‍♂️🏃‍♂️🏃‍♂️)

ஊர்வி மருத்துவரிடம் சென்று இரத்த தானம் செய்ய சம்மதித்தாள். மருத்துவர் ஒரு செவிலியரை அழைத்து ஏதோ கூற, செவிலியர் ஊர்வியை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்.

இதுவரை அவள் இரத்த தானம் செய்ய ஒப்புக்கொண்டதால், நிம்மதியாக இருந்தவன் அவள் கண்ணை விட்டு மறைந்தவுடன் தவிக்கத் தொடங்கினான். "எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல" என்று அவள் கூறியது, அவன் மனதுக்குள் ரிங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. செவிலியர் அவளை அழைத்துக்கொண்டுச்சென்ற அறைக்கு அவனும் சென்றான். அங்கு அவள் படுத்திருக்க, இரத்தம் அவள் கைகளில் இருந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், அவள் கைகளை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். ஏனோ ஊர்வியும் மறுப்பு கூறவில்லை. செவிலியர் சித்தார்த்தைப் பார்த்து "என்ன" என்று கேட்க அவன், "இவங்க இப்ப தான் முதல் தடவ இரத்த தானம் பண்றாங்க. அதான் அவங்க கூடவே இருக்கன்" என்று கூறினான். இவர்களைப் பார்த்து ஒரு புன்னகை உதிர்த்து விட்டு அவள் வேலையைப் பார்க்கத் தொடங்கினார் அந்த செவிலியர் .

ஆண் ஸ்பரிசம் அறியா என் தேகம்

ஏக்கம்கொள்கிறது

உன் நெருக்கத்திற்காக.....

நீ நெருங்கி வந்தாள் நிம்மதி அடையும்

உடல் மட்டுமல்ல....

உள்ளமும்.

இரத்த தானம் முடியும் வரை அவள் கைகளை பிடித்துக்கொண்டே அமர்ந்திருந்தான். அவள் சிறிது மயக்கமாக உணரும் போதெல்லாம், அவன் பிடியை சற்று இறுக்கி, "ஒன்னும் இல்லமா" என்று அவளை அமைதிப்படுத்தினான். அவன் நெருக்கத்திலும், கைபிடியிலும் தன்னை மறந்து இருந்தவள், அவனுடைய மா... என்ற உச்சரிப்பில் இன்னும் சொக்கிப்போனாள். அப்பொழுது இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, புதிதாக மலர்ந்திருக்கும் இந்த நெருக்கம் வெகு நாட்களுக்கு நிலைக்கப்போவதில்லை என்று.

இரத்த தானம் முடிந்து இருவரும் கைகோர்த்தவாரே வெளியில் வந்தனர். மருத்துவர் சித்துவிடம் வந்து, "இந்த மருந்து வாங்கிட்டு வாங்க" என ஒரு சீட்டை அவனிடம் நீட்ட, அவன் ஊர்வியை ஒரு நாற்காலியில் அமர வைத்து விட்டு சென்றான்.

அவன் சென்றவுடன் மிடுக்கான காக்கி சட்டையில், கம்பீரமான நடையுடன் அங்கு வந்தான் ஒருவன். ஆனால் கண்கள் மட்டும் கலக்கம், பயம், தவிப்பு என ஓராயிரம் உணர்வுகளை விலக்கிக்கொண்டிருந்தது. தவிப்புடன் உள்ளே நுழைந்தவன், நேராகா மருத்துவரிடம் சென்றான். "டாக்டர்... திவ்யா எப்படி இருக்கா?" என்று கேட்க, மருத்துவர்,"She is alright now. No need to worry." என்றார். "ரொம்ப நன்றி டாக்டர்" என அவன் உணர்ச்சிவசப்பட, மருத்துவர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்த ஊர்வியை காட்டி, "நீங்க அவங்களுக்கு தான் நன்றி சொல்லனும். பேசன்ட்அ கரெக்ட் டைம்க்கு கொண்டு வந்தது அவங்கதான். அதுமட்டும் இல்ல, blood donate பண்ணதும் அவங்கதான்." என்று கூறி சென்று விட்டார்.

நேராக ஊர்வியிடம் வந்தவன்,"ரொம்ப நன்றி. நீங்க காப்பாற்றியது என் தங்கச்சி திவ்யா தான். நான் ACP இனியன்" என கூறி கைகளை நீட்டினான். அவளும் அவனுடன் கைகுளுக்கி "Nice to meet you. நான்..." என ஆரம்பிக்கும்போதே, "தெரியுமே. ஓனர் Mr. கிருஷ்ணன் ஓட பொண்ணு Miss.ஊர்வி" என்றான்.

"உங்களுக்கு எப்படி தெரியும்?" என அவள் கேட்க, "Basically I am a police officer. எனக்கு இதெல்லாம் சர்வ சாதார்ன விசயம்" என்று அவன் கூற இருவரும் சேர்ந்து சிரித்தனர். இந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் சித்தார்த். "நம்ப கிட்ட ஒரு வார்த்த கூட சிரித்து பேச மாட்ரா. ஆனா இந்த காக்கி சட்டை போட்ட குரங்கு கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசரா" என பொறாமையில் கொதித்தான்.

அங்கு சென்றவன் நேராக ஊர்வியுடம் சென்று, "கிளம்பலாம் வா" என அவள் கையை பிடித்து இழுத்தான். அதை கண்ட இனியன் சித்துவை தடுத்து, "பப்ளிக் பிளேஸ்ல ஒரு பொண்ணு கைய புடிச்சு இழுக்கற, மரியாதையா கைய எடு. இல்லன்னா eve-teasing கேஸ்ல புடிச்சி உள்ள போட்டுடுவன்" என்றான். சித்தார்த் அவனை பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு,"அவளே அமைதியா தான் இருக்கா உனக்கு என்ன பிரச்சன" என்று கூறினான். இருவரும் ஆவலுடன் ஊர்வியை நோக்கினர். வெளியில் தைரியமாக வசனம் பேசினாலும் உள்ளுக்குள்,"ஐயையோ. கையை புடிச்சு இழுத்தது மட்டும்மில்லாம, நம்ப இஷ்டத்துக்கு டைலாக் வேற பேசறோம். அடிச்சுடுவாளோ. தனியா வச்சு அடிச்சா கூட பரவால்ல. இந்த கொரங்கு முன்னாடி அடிச்சா அசிங்கமா போய்டுமே" என்று எண்ணிக்கொண்டான்.

 ஊர்வி இனியனை நோக்கி, "இவர் என் அண்ணனோட பிரண்ட் தான். ஒன்னும் பிராப்லம் இல்ல. எங்களுக்கு டைம் ஆச்சு. நாம இன்னொரு நாள் பாக்கலாம்" என்று கூற, இனியன் அவளிடம், "என் நம்பர் நோட் பண்ணீக்கோங்க. எதும் உதவி வேணும்ன்னா கண்டிப்பா சொல்லுங்க" என்று தன் தொலைபேசி எண்ணை அவளிடம் கூற அவளும் அதை சேமித்துக்கொண்டாள்.

ஊர்வியின் பதில் அவனுக்கு ஒரே நேரத்தில் சந்தோஷம் சோகம் இரண்டையும் அளித்தது. அவள் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசியது சந்தோஷம் தான் என்றாலும், அவளைப் பொருத்த வரை தான் அவளுக்கு அண்ணணின் நண்பன் மட்டும்தான் என்பது சோகத்தை அளித்தது.

இருவரும் வெளியே செல்லும் வழியில் "என் நம்பரும் சேவ் பண்ணுக்கோ" என்று அவன் கூற, "எதுக்கு?" என்று கேட்டாள் ஊர்வி. "ஏதாவது எமர்ஜென்சின்னா கால் பன்றதுக்குதான்" என கூறியவனிடன், "அப்படி ஏதாவதுன்னா என் அண்ணனுக்கு போன் பண்ண போறன். இல்லன்னா, இப்போ பார்த்தோமே ACP இனியன் அவருக்கு போன் பண்ண போறன். உங்க நம்பர்லான் எதுக்கு Mr.சித்தார்த் தேவையில்லாமா" என கடுப்பேத்தி, அவன் முகம் சுருங்குவதை ரசித்தாள். பாவம் அவனுக்கு தெரியாதல்லவே, அபி அவளுக்கு அனுப்பிய, சித்தார்த்தின் செல்பேசி எண்ணை, அவள் போனில் மட்டுமல்ல, மனதிலும் பதிந்து வைத்துள்ளது.

கார் பார்க்கிங்கிற்கு சென்று, கார் கதவை திறக்க விழைந்தவளை தடுத்தது சித்தார்த்தின் கரங்கள். "ஏய் ராட்சசி. இப்பதான் பிளட் குடுத்துட்டு வந்த. அதுக்குள்ள கார் ஓட்டபோற. எங்கயாவது மயக்கம் போட்டு விழுந்து, என்னையும் சேர்த்து சாகடிக்கவா. அப்பறம் என்ன நம்பி இருக்க பெண்களோட வாழ்கைக்குலாம் யார் பதில் சொல்வது. போ. போய் பக்கத்து சீட்ல உட்காரு போ" என்று கூறிவிட்டு அவன் காரை செலுத்தினான்.

காரில் செல்லும்போது, "யார் அவன்?" என்று சித்து கேட்க, "எவன்?" என தெரியாததைப்போல் நடித்தாள் ஊர்வி. "அதான், ஹாஸ்பிட்டல ஒருத்தவன் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தியே. அவனதான் கேக்கறன்" என அவன் கூற, "அதான் சொன்னனே, ACP இனியன்". "நான் அத கேக்கல, அவன உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்றதற்கு, அவள் இல்லை என தலை ஆட்டினாள். "அப்பறம் ஏன் அவன் உன் கிட்ட பேசுனான்? என்று சித்து கேட்க, "ஆக்ஸிடன்ட் ஆன பொண்ணோட அண்ணன் அவரு. அதான் நன்றி சொல்ல வந்தாரு" என்று அவள் கூற, அவன், "அடிப்பாவி ராட்சசி.அந்த பொண்ணுக்கு உதவுனது நான். உன்ன இரத்தம் குடுக்க ஒத்துக்க வச்சது நான். ஆனா அவன், உனக்கு நன்றி சொல்லிட்டு, என்ன ஜெயில் தூக்கி போடறன்னு சொல்றான்" என்று புலம்பினான். "விடுங்க சித்தார்த். உங்களுக்கு சொன்னா என்ன, எனக்கு சொன்னா என்ன, எல்லாம் ஒன்னு தான்" என்று கூறியவள் தான் மனதில் உள்ளதை வெளியே கூறியதை எண்ணி உதட்டை கடித்துக்கொண்டு, அவனைப் பார்த்தாள். ஆனால் அந்த மரமண்டைக்கு அது புரியாமல், "என்ன லூசு மாதிரி ஒலருர" என கேக்க, சற்று நிம்மதியடன் "ஒன்னும் இல்லை" என பதிலளித்தாள்.

அதன் பிறகு இருவரும் அமைதியாகவே ஆபிஸ்க்கு சென்றனர். 12 மணிக்கு தொடங்க வேண்டிய நேர்க்காணல் 2 மணிக்கு தொடங்கியது.

Indha interview la dhan mukiyama oruthavangala meet panna porom. Avanga yaru nu nxt ud la paathukonga.(ipdi sollidhan ellarayum padika vaika vendiyadha iruku.)

Apram oru request. Story language pathi edhavadhu comments irundha sollunga pa. Characters oda dialogue lan namba pesura language layum, medhi yellam bookish language layum iruku. Adhu padikum bodhu awkward aa iruka?? Yes or no nu reply pannunga. NO nu sonnengana, adha epdi correct pannikardhunum sethu sollunga.

Indha ud konjam aruvai ya irundha madhiri enaku oru feel. Ungaluku??

Long update ketavangaluku ellam sorry. Indha somberi ponnala, oru nalaiku 200 words ku mela type panna mudiyala.... June month la irundhu periya ud poda try panran friends. Adhu varaikum poruthukonga....

Vazhakam pola vote & comment..







Bạn đang đọc truyện trên: Truyen247.Pro