Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 02

சென்னை விமான நிலையத்தில், வெளியே வந்த ஊர்வி, நடந்த சென்றுக்கொண்டிருக்க, "ஹேய், நான் உனக்கு தான் வெயிட் பன்றன். நீ எங்க போயிட்டு இருக்க" என கேட்டவாரே, அவளின் அண்ணன் அபிமன்யு ,இவளை நோக்கி கைகளை விரித்து கொண்டே வந்தார். அவர் நெருங்கி வர, இவளும் கைகளை விரித்தாள். ஆனால், வந்தவரோ இவளைத் தாண்டிச்சென்று, இவளுக்கு பின்னால் வந்த யாரையோ அணைத்துக்கொண்டார்.

அவர் தன்னைத் தாண்டிச் செல்லும் போதே கடுப்பான ஊர்விக்கு, அவர் அணைத்துக்கொண்ட நபரைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.

ஏனெனில், அவர் சென்று அணைத்துக்கொண்டது சித்துவை.

ஊர்வி: வர,வர நம்பள யாரும் மதிக்கவே மாட்ராங்க. புதுசா வந்தவன் தான், நம்மல கடுப்பேத்திட்டே இருக்கான்னு பாத்த, நம்ப அண்ணன் என்ன இப்படி பன்றான்? ஆனா இவன் யாருன்னே தெரியலயே.இந்த அபி என்னடான்னா அவன கட்டிக் கொலாவி கொஞ்சிட்டு இருக்கான். இவன் யாரா இருக்கும்? 

இவள் இவ்வாரு யோசித்துக் கொண்டிருக்க, அங்கு இருவரும் மௌனத்தாளும், தழுவலாளும் தங்கள் அன்பை பரிமாரிக் கொண்டிருந்தனர். 

ஊர்வி: விட்டா இவனுங்க ரெண்டு பேரும் இப்படியே, நைட்டு முழுக்க நிப்பானுங்க போல. நம்ப தான் ஏதாவது பண்ணனும்.

அவள் அவர்கள் அருகில் சென்று தொண்டையைக் கணைத்தாள்.

அப்பொழுதே சுயநினைவிற்கு வந்தனர், சித்துவும், அபியும்.

துக்கமும் சுகமாய் மாறும்

நீ என் அருகில் இருந்தாள்,

சோகங்களும் சந்தோசம் ஆகும்

உன் தேற்றுதளினாள்,

தாய் மடியை இழந்தும் கவலை கொள்ளவில்லை

உன் மடி எனக்கானது மட்டும் என்பதால்,

காதல் உயர்ந்ததாய் இருக்கலாம்

ஆனால், நம் நட்பு புனிதமானது.

அபி: ஊர்வி, நீ எங்க இங்க.

ஊர்வி: ஓ. பெயர் ஆவது நியாபம் இருக்கா. நீ யாருன்னு கேப்பியோன்னு நனச்சன். வீட்டுக்கு கூட்டிட்டு போறியா? இல்ல நானே போய்க்கவா?

தனக்கு இருந்த கோவத்தில் பொரிந்து தள்ளினாள், ஊர்வி.

அபி: இப்ப எதுக்கு மா வந்நதும் வராததுமாம் இப்படி கத்தற. நம்ப கார், பார்க்கிங் ல இருக்கு. நீ போய் கார் ல உட்காரு. நா இவன கூட்டிட்டு வரன்.

அவன் இப்படி கூறவும், ஏதும் பேசாமல் நகர்ந்தாள்.

அவள் சென்றவுடன்......

சித்து: யாருடா அந்த பொண்ணு.

அபி: என் தங்கச்சி டா.

சித்து: உனக்கு தங்கச்சியா?

அபி: ஆமான் டா. நான் தான் சொல்லிருக்கேனே, எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா ன்னு.

சித்து: டேய், எத்தன தடவ உன் வீட்டுக்கு வந்துருக்கன். ஒரு தடவ கூட உன் தங்கச்சிய கண்ணுலே காட்டல.

அபி: டேய். நான் என்னடா பண்ணவன். அவ சின்ன வயசுல பாட்டி வீட்டுல இருந்து படிச்சா. அப்பறம் வெளிநாட்டுக்கு போய் படிச்சா. அவ படிப்புலாம் முடிஞ்சு வரும்போது, நீ அமெரிக்கா போறன்னு கெலம்பிட்.

சித்து:சரி விடு. உனக்கு என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போற ஐடியா இருக்கா. இல்ல ரோட்டுலேயே நிக்க வச்சி பேசிட்டு இருக்கப்போறயா?

அபி: சாரிடா. வா போலாம். ஊர்வி வேற லேட்டாயிட்டா திட்டுவா.

சித்து: உன்னயும் திட்டுவாளா?

அபி: உன்னையுமான்னு கேக்குற? நீ அவ கிட்ட திட்டு வாங்கி இருக்கியோ?

சித்து: திட்டிருந்தா கூட பரவாயில்லடா. அவ மொரச்சா பாரு. அப்படியே ப்லைட் ல இருந்து குதிச்சிடலாம் போல இருந்துச்சு.

அபி: அவ மொரக்கர அளவுக்கு நீ என்னடா பண்ண.

சித்து:பெருசாலாம் ஒன்னும் பண்ணல டா. முத்தம் வேணும்மான்னு கேட்டன்.

அபி: டேய். உன் வேலய லான் அவ கிட்ட காட்டாத டா. அவ சும்மாவே பேய் ஆட்டம் ஆடுவா. நீ வேர அவள இன்னும் ஏத்தி விடாத டா. உங்க ரெண்டு பேரயும் ஒன்னா வச்சிகிட்டு நான் என்ன பண்ண போரனோ?

சித்து: ரொம்ப பொலம்பாமா, சீக்கரம் வாடா.

இருவரும் காரை நோக்கி நடந்தனர். ஊர்வி அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்தாள். இவர்கள் வந்ததும் மூவரும் காரில் அமர்ந்து இல்லம் நோக்கிச் சென்றனர்.

வழி எல்லாம் மௌனமே குடிகொண்டது. ஊர்வியின் பார்வையில் சிக்குண்ட சித்து மீள வழித்தெரியாமல் திணரிக்கொண்டிருந்தான். ஊர்வியோ, அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என உள்ளம் தவிக்க, வேண்டாம் என அறிவு தடுக்க, இரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் குழம்பி இருந்தாள். எங்கு இவர்கள் இருவரும் பேசினால் முட்டிக்கொள்ளார்களோ என்ற பயம் அபிக்கு. அவர்கள் இருவரையும் ஒருசேர சமாளிக்கும் திறன் தனக்கு இல்லை என தெரிந்ததால் அவனும் அமைதியாகவே வந்தான். மௌனத்தின் ஆட்சிக்கு வழி விட்டு விலகி நின்றனர் மூவரும்.

பெரிய தோட்டத்துடன் கூட அழகிய பங்களா வீடு அது. வீட்டை அடைந்த உடன் மூவரும் கீழே   இறங்கி மூவரும் கீழே வீட்டை நோக்கிச் சென்றனர்.  பிறகு "ஜானு... ஜானு..." என்ற கூவளுடன் உள்ளே நுழைய முற்பட்ட சித்தார்த்தை தடுத்தது ஒரு குறள். "அங்கயே நில்லுடா. உள்ள கால எடுத்து வச்ச, கால வெட்டிடுவன்." என கூறியவாரே வீட்டினுள் இருந்து வெளியே வந்தார், அபியின் தாய் ஜானகி. 

"இத்தன வருடம் கழித்து வந்துருக்கான். அவன இப்படி வாசல்லயே நிக்க வச்சி சண்ட போட்டுட்டு இருக்க. உள்ள கூட்டிட்டு வந்து நல்லா சண்ட போடுமா" என எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தார், அபியின் தந்தை கிருஷ்ணன். "அங்கிள், நீங்க காப்பாத்துவீங்கன்னு பாத்தா, இப்படி ஏத்தி விடுரீங்க" என சினுங்கினான் சித்து."

"நம்பள தவர நம்ப வீட்டுல இருக்க எல்லாருக்கும் இவன தெரியுது. அதுவும் ரொம்ப வருஷம் பழக்கம் போல. ஒரு பொன்ன பார்த்து கொஞ்சம் நேரம் கூட ஆகல, அதுக்குள்ள முத்தம் வேணும்மான்னு கேக்கறான். அவ கேரக்டரே சரி இருக்காது போல. இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்." என நினைத்துக் கொண்டிந்தாள் ஊர்வி.

"டார்லிங். இங்க பாரேன் என்ன பார்த்தா பாவமா இல்ல. என்ன மண்ணிச்சு விட்டுடேன்." என சித்து ஜானகி அம்மாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்க அவர்களோ, "முடியாது. நாங்க உன் கிட்ட எவ்வவளவு கெஞ்சனோம், அமெரிக்கா போக வேணம்ன்னு. அப்போ நீ கேட்டியா? இப்ப மட்டும் இவரு சொல்றதலாம் நான் கேட்கனுமாம்.போனதுதான் போன. நீ அங்க போயி 8 வருஷம் ஆகுது, ஒரு தடவ எங்களை வந்து பார்த்துருப்பியா. ஒரு போன் கால் ஆவது பண்ணிருப்பியா?" என கோபம் என்னும் முகமூடியால் மறைத்த, உண்மையான பாசத்துடன் கேட்டார். அவர் பொய்கோபத்தால், மறைந்த தன் தாயின் முகம் நினைவில் வர அவன் கண்கள் குளமானது. யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரை மறைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். 

"சரி ஜானு நான் செய்தது தவறு தான். நான் வேணும்னா தோப்புக்கரணம் போடவா." என்று குழந்தைப்போல கேட்டான். "இல்லை. நான் சொல்கிறவரை நீ இங்கியே தான் இருக்கனும். வாசல் லயே." என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டனர் ஜானகியும் கிருஷ்ணனும்.தன் நண்பன் வெளியே நின்றுக்கொண்டிருப்பதாள், அபியும் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தான். தான் எதற்காக நிற்கிறோம் என்று கூட தெரியாமல் அவர்களுடனே நின்றுக்கொண்டிருந்தாள் ஊர்வியும்.

ஐந்து நிமிடத்தில், ஆரத்தி தட்டுடன் அங்கு வந்தார் ஜானகி. "ஜானு. இதுக்கு தான் என்ன நிக்க வச்சியா. நான் கூட பயந்தே போய்ட்டன். நீ என் மேல உண்மையாலே கோவமா இருக்கியோன்னு." "டேய். நான் உண்மையாலே உன் மேலே கோபமாகத்தான் இருந்தன். ஆன, நீ அப்படி என்னதான் செய்றியோ தெரியல, உன்ன பாத்த உடனே கோபம்எல்லாம் தானாக மறைந்துவிட்டது." என்றார் ஜானகி. "அம்மா நீ பெற்ற பிள்ளைகள், நான்க ரெண்டு பேரு இருக்கிறோம். எங்களுக்கு நீ எனறைக்காவது இப்படி ஆரத்தி எடுத்திற்கியா". "சித்து என் வயிற்றில் பிறக்கவில்லைதான். இருந்தாலும் எனக்கு அவன்மேல் பாசம் அதிகம். என்ன சந்தோசமா பார்த்துக்கொள்ளும் அவனால தான் முடியும். நீங்க ரெண்டு பேரும், ஒரு நாளாவது என் கூட சிரித்து பேசிருக்கீங்களாடா? சரி ரெண்டு பேரும் அவன் கூடயே நில்லுங்க. உங்களுக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்கறன்" என்று கூற சித்துவிற்கு பின்னால் அபியும், சித்துவிற்கு பக்கத்தில் ஊர்வியும் நின்றுக்கொண்டனர். 

தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஊர்வியை பார்த்து கள்ளச்சிரிப்பு ஒன்றை உதிர்த்தான். அவன் சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஊர்வியோ, அவனை தீப்பார்வையால் சுட்டுக்கொண்டிருக்க, அவனோ அத்தீயில் குளிர் காய்ந்துக்கொண்டிருந்தான்.

ஒருவழியாக ஜானகி ஆரத்தி எடுத்து முடிக்க அனைவரும் உள்ளே சென்றனர். "ஊர்வி, நீ சித்துவை இதுக்கு முன்னாடி பார்த்ததல்லை இல்ல." என கேட்க இல்லை என்பதுபோல் தலையாட்டினாள் ஊர்வி.

"நம்ம அபி சின்ன வயசுல,ஸ்கூல் டிராமாவிற்கு, பலராமனா வேசம் போட்டு எடுத்த போட்டவ காட்டும்போது, அதுல கண்ணன் வேசம் போட்டு இருக்கர்து யாருன்னு கேட்ட இல்ல, அது நம்ம சித்தார்த் தான்மா." என கூறினார் ஜானகி. "கண்ணன் மாதிரி வேசம் மட்டுந்தானா!!!" என கூறிவிட்டு சித்தார்த்தை முறைத்துக்கொண்டே அவள் அறைக்குச் சென்றாள். அவள் சொன்னதற்கு அர்த்தம் புரியாமல் ஜானகி விழித்துக்கொண்டிருக்க, அர்த்தம் புரிந்த சித்தார்த்தும் அபியும், ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டு, தத்தம் அறைகளுக்குத் சென்றனர்.

பயணக்களைப்பில் உடல் சோர்ந்திருந்தாலும் உறக்கம் அவள் கண்களைத் தழுவ மறுத்தது. சரி, ஆபிஸ் வேலைகள் ஏதேனும் பார்க்கலாம் என்றால் மனமோ அதை மறுத்தது. இன்று மாலையில் இருந்து நடந்தவற்றை எண்ணிப்பார்த்தால் அவளுக்கே அவளுடைய நடவடிக்கைகள் புதிதாகத் தெரிந்தன.

ஏக்கம் கொண்டேன்,

நீ என்னுடன் பேசாமல்இருந்தபோது.

பொறாமை கொண்டேன்,

நீ மற்றவர்களுடன் பேசும்போது.

ரசிக்கிறேன் ,

நீ தொலைவில் இருந்தாள்.

பதற்றம் கொள்கிறேன்,

நீ என் அருகில் இருந்தாள்.

என்னுள் எத்தனை மாற்றம்,

உன்னால்.

நான் அறியா இவ்வுறவின் பெயர் என்னவோ?

ச்சே, நான் ஏன் அவன பத்தியே நனச்சிட்டு தூங்காம இருக்கன். ஒரே நாள்ல நம்பள இப்படி ராத்தியில் தனியா பொலம்ப வச்சிட்டானே. 

தூக்கம் இழந்து தவிப்பதும் சுகமே,

அதன் காரணம் நீயாக இருக்கும் பட்சத்தில்.

இப்படி இவனாள் நிம்மதி இழந்து தூக்கம் இன்றி ஊர்வி மஞ்சத்தில் உழன்றுகொண்டிருக்க, அங்கு சித்துவோ பயண களைப்பில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த சித்தார்த், அவன் செல்போன் அழைப்பு மணி சினுங்க, அவன் அலைபேசியில் பேச ஆரம்மித்தான்.

"இப்ப தான் வந்துருக்கன்..."

"நம்ப வேலைய ஆரம்மிக்கத்தான் நேரம் பாத்துட்டு இருக்கன். நம்ப குடும்பத்த சிதைத்தவர்களுக்கு கண்டிப்பா பாடம் கத்து குடுப்பன்".......

"நீ எனக்கு அடிக்கடி போன் பண்ணாத. யாருக்காவது சந்தேகம் வரப்போகுது." என முடித்து அழைப்பைத் துண்டித்தான்.

வந்த அழைப்பு அவன் தூக்கத்தை தூக்கிக்கொண்டுச் சென்றது. தன் மனதிற்கும் மூளைக்கும் நடக்கும் போராட்டத்தால் தூக்கம் இழந்திருந்தான். "உன் குடும்பத்திற்காக, இதை நீ செய்யத் தான் வேண்டும்" என மூளை கூற, மனமோ வேறு விதமாக," உன் நண்பன் குடும்பத்திற்காக, இதை செய்யாதே"  என்றது.

"இல்லை நான் இதை செய்து தான் ஆகனும். ஆனா அபியோட நட்பும், ஜானகி அம்மாவின் பாசமும் என்னத் தடுக்குது. அவங்க பாசம் பொய்யில்லையே. அவங்களுக்கு எப்படி என்னால துரோகம் செய்ய முடியும். அதோட அந்த ஊர்வி, அவளோட பார்வை என்ன என்னமோ செய்யுது. அவ என் கிட்ட ஒரு வார்த்த கூட பேசலை, ஆனா இப்பவே அவளுக்காக என்ன வேணும்நாளும் செய்யலாம்ன்னு தோணுது. எத்தனையோ பொண்ணுங்க என் கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசுவாங்க, ஆன அவ என்ன கோபமா முரைக்கதான் செய்கிறாள், ஆனா எனக்கு இதுதான் புடிச்சிருக்கு. அது ஏன்னு தான் புரியல."

கத்தியை தீட்டும் சத்திரியர்களையும்,

புத்தியை தீட்டும் சாணக்கியர்களையும்,

              வெல்வது எளிதே.

கண்களில் மை தீட்டும் மங்கையை,

                    வெல்வதை விட.

அதற்கு நம் நாயகனும் விதிவிளக்கல்ல. ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டு தவிக்கின்றனர். ஆனால், இதை காதல் என்று உணரவில்லை.

இதுதான் காதல் என்று உணர்வார்களா?

சித்தார்த்தை அலைபேசியில் தொடர்புகொண்டது யார்?

சித்தார்த்தின் கடந்த காலம் என்ன?

இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

na ezhudardhu enakae padhi puriyala.😌😌😌 Ungaluku puriyudha?? Purilana purilanu sollunga. Koodavae, Purira madhiri epdi ezhudhanum num sollikudunga. Kathukaran.😌😌😌😌

Indha update epdi irundhudhu nu comment pannunga friends. Indhuvarikum neenga kudutha encouragement kum comments ku romba nandri. Idhuvae thoranumm nu nanaikuran.🙏🙏🙏

Positive comments encourage me, negative comments shape me. Adhanala rendumae important dhan. 

Ungaluku indha episode pudichirundha vote pannunga. Pudikalanalum vote pannunga. 😝😝😝.

Next episode la ungala meet panran. Bye.. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro