Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 01

என்னங்க இப்போ எங்க இருக்கோம்ன்னு கேக்கரீங்களா.

சத்ரபதி சிவாஜி விமான நிலையம், மும்பை.✈✈✈✈

பூமி மீதிருந்து தன் பார்வையை விலக்க மனமில்லாமல், சூரியன், தன் கடைக்கண் பார்வையை படர விட்டிருந்த பொன் மாலை நேரத்தில், ஒயிலாகவும், அதே சமயத்தில் கம்பீரமாமும் உடைய நடையுடன் விமான நிலையத்தில் கால் பதித்தால், அந்த எழில் நங்கை.

மார்டனாக, ஆதே நேரந்தில் நேர்த்தியாகவும் இருந்தது அவளுடைய உடை.

அவள் நடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தனர் இளம்வயதை உடைய இரு ஆண்களும், ஒரு பெண்ணும்.

"ரியா, என் கிட்கட்ஸ்(tickets) கண்பார்ம்(conform) ஆய்டுச்சா."-ஊர்வி.

"மேம், அது வந்து......."-ரியா.

"என்ன, வழக்கம் போல சொதப்பிட்டியா?" என மிரட்டும் தொனியில் கேட்டால் ஊர்வி.

"மேம், நானும், மதியத்தில் இருந்து முயற்சி பண்ணீட்டு தான் இருக்கன், ஆனா bussiness கிலாஸ் கிட்கட்ஸ் கிடைக்கல."

"அடுத்த பிலைட் எப்போ?" - ஊர்வி.

"நாளைக்கு, காலைல". -ரியா.

"நோ. நான் இன்னைக்கே கிளம்பனும். Economy கிலாஸ் கிக்கட்ஸ் ஏ கண்பார்ம் பண்ணீடு. And be careful, Riya. This is your last warning." - ஊர்வி.

"ஓ.கே. மேம்." என்றால் ரியா குரலில் ஜீவன் இல்லாமல்.

"அப்பறம், நீங்க மூனு பேரும் கிலம்பலாம். வேலையை எவ்வளவு சீக்கரம் முடியுமோ, அவ்வளவு சீக்கரம் முடிச்சுட்டு, சென்னைக்கு வந்துடுங்க." என கூறிவிட்டு அவர்கள் பதிலுக்கு காத்திறாமல், நடையின் வேகத்தை இன்னும் கூட்டினாள்."

அவர்கள் கண்ணில் இருந்து அவள் மறையும் வரை நின்றுவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என திரும்பி சென்றனர் மூவரும்.

விரைந்து சென்று, முடித்துக்கொண்டு flight boardingக்காக காத்துக்கொண்டிருந்தாள் நம் ஊர்வி.

6 மணி flight க்கு 4 மணிக்கே வந்து விட்டாள். நேரத்தை வீணாக்காமல், இவ்வுலகத்தை விடுத்து, தன் மடிக்கணினிக்குள் நுழைந்தாள்.

*********************************************************

(Ippo namba hero enna pannitu irukaru?? Avarukum 6 maniku dhan flight uuu.

Domestic flight ku 2 hours munadiyae airport la irukanum nu avaruku theriyadha????😝😝😝

Ippovae time 5 o clock aiduchu...

Nambalum airport fulla thedipathachu, namba hero va kanomae.)

இன்னும் ஒருமணி நேரத்தில் flight என்பதையும் மறந்து airportக்கு அருகில் உள்ள slum குழந்தைகளுடன் உற்சாகமான வளர்ந்த குழந்தையாக, கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தான், சித்தார்த். (Flight yera vandhavanuku inga enna da velai. Innum one hour la flight uu ippovadhu kelambunga hero sir. Flight layum footboard adikalam nu nenapoo..........)



விளையாட்டின் போது எதேர்ச்சையாக கை கடிகாரத்தைப், பார்த்தவன், மணி 5 ந்தைக் காட்டவும், பதறி அடித்துக் கொண்டு, தன் புது நண்பர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு செல்ல எத்தனித்தான்.

தன் மழலை நண்பர்களுடனான விளையாட்டை பாதியில் விட்டுச் செல்ல மனம் இல்லை எனினும், இப்போது செல்ல வில்லை எனில், தன் பழைய நண்பனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஆதனால், அரை மனதுடன் அங்கிருந்து புறப்பட்டான்.

இவன் செல்கிறான் என்றவுடன் இதுவரை உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் முகத்தில் சோகம் குடிகொண்டது.

இருக்காதா பின்ன... JEANS, T-SHIRT, SHOES, COOLERS எல்லாம் அணிந்த, பணக்கார கலைமிளிரும் ஒருவரை அவர்கள் இவ்வளவு நெருங்கிப் பார்த்தில்லை. விலகி நின்றாலும், மற்றவர் இவர்களைக் கண்டு முகம் சுழித்தே செல்வர். இவன் ஒருவனே இவர்களுடன் status பார்க்காமல் பழகியவன். இவனுடன் இருந்தது சில மணி நேரம்தான் எனினும், நீண்ட நாட்கள் பழகியவரை விட்டுச்செல்வது போலவே வலித்தது அவர்களுக்கு.

"அண்ணா, நீ மறுபடியம் எங்கல பாக்க எப்ப வருவ?"-என அழகாக கேட்டது -அங்கு இருந்த மழலைகளுள் ஒன்று.

"சீக்கரமே வரன் டா." தான் மறுபடியும் இங்கு வரும் நிலை என்றும் வரப்போவதில்லை என்று நன்கு தெரிந்தும், அவர்களின் தற்போதய சந்தோசத்திற்காக பொய் கூறினான்.

பொய்யான வாக்குறுதி அளித்த நெருடலுடனே அங்கிருந்துப் புறப்பட்டான்.

நாமும் இவ்வாறே பல தருனங்களில், மற்றவர்களின் தற்போதைய நம்மதிக்காக, பொய்யான நம்பிக்கை அளித்து ஏமாற்றுகிறோம்.

(which is better??? Revealing the bitter truth which makes them sad at present, or covering with a sweet lie which hurts them in future. Unga views aa comments la sollunga.)

*************************************************************

மும்பையில் இருந்து சென்னை செல்லும் விமானம் அது. பயணிகள் அனைவரும் அவர்கள் இருக்கையில் அமர்ந்தனர்.

கடைசியாக வந்தது நம்ப ஹீரோ சார் தான்.

அவன் உள்ள நுழையும் போதே வரவேற்கும் பணிப்பெண்கள் சிறிது சத்தமாகவே சிரித்தனர்.

Siddharth's mind voice: எப்பவுமே பொண்ணுங்க நம்பள பார்த்தா, ஹீரோவ பார்த்த ஹீரோயின் மாதிரிதான் வெக்கத்தோட சிரிப்பாங்க. ஆனா இவங்க ஏன் காமடியன பார்த்த மாதிரி கெக்க பொக்கன்னு சிரிக்கராங்க. நம்ப பார்க்க அவ்வளவு காமடியாவா இருக்கோம். ஒருவேள நம்ப dressஅ பார்த்து சிரிக்கராங்களோ. நம்ப decentஆ தான dress பன்னிருக்கோம்..

இவ்வாறு யோசித்துக்கொண்டே தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.

மூவர் அமரும் இருக்கை அது.

ஐன்னல் ஓரமாக 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும், அவருக்கு பக்கத்தில் ஊர்வியும், ஊர்விக்கு பக்கத்தில் சித்துவும் அமர்ந்திருந்தனர்.

எப்பவும் போல ஊர்வி, குனிந்த தலை நிமிறாமல் மடிக்கணினி ஐ நோன்டிக் கொண்டிருத்தாள். அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்த சித்து, அவள் அருகில் அமர்ந்திருந்த பெண்மனியிடம் பேசத் தொடங்கினான்.

சித்து: ஹாய் பியூட்டிபுள்.

பெண்: ஹாய் ஹேண்ட்சம்.

இவ்வாரு பேசத்தொடங்கிய இருவரும் நடுவில் ஊர்வி அமர்ந்திருப்பதையும் மறந்து பேச்சைத் தொடர்ந்தனர்.

URVI'S MINDVOICE: என்ன இவன், ஆன்டி கிட்ட போய் இப்படி கடல போடறான். நான் ஒருத்தி இங்க இருக்கறது அவனுக்கு தெரியுதா இல்லையா???

இவள் எப்பொழுதும் தனிமையை விரும்புபவள் தான். ஆனால், தன் அருகில் அமர்ந்திருப்பவன் தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், அந்த பெண்மனியிடம் நொடி இடைவேளை இல்லாமல் பேசிக்கொண்டிருப்பது இவள் கல் மனதையும் பிசையத்தான் செய்தது.

அப்போது தான் அவள் கவனித்தாள், விமான பணிப்பெண்கள் இருவரும் சித்துவையே ரசித்துக்கொண்டிருப்பது. அவன் முகத்தைப் பார்க்கும் போது தான் தெரிந்தது, அவன் கண்ணங்களிள் சேறு ஒட்டி இருப்பதை.அவன் அழகு முகத்திற்க்கு அதுவும் அழகாகத்தான் இருந்தது. ஆனால், விமானப் பெண்கள் அவனை ரசிப்பது பிடிக்கவில்லை ஊர்விக்கு. அந்த நேரம் பார்த்து, சித்துவுடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் அலைபேசி சினுங்க, அவர் அலைபேசியில் பேசத் தொடங்கினார்.

இதுதான் சரியான தருணம் என ஊர்வி அவன் பக்கம் திரும்பினாள். கண்ணத்தில் சேறு உள்ளது என்பதை வார்த்தையாள் தெரிவிக்காமல், தன் கண்ணத்தை தொட்டுத்தொட்டுக் காட்டினாள்.

"என்ன இவ கண்ணத்த தொட்டு காட்டி ஏதோ சொல்ல வரா, நமக்க ஒன்னுமே புரியலயே" என மனதிற்குள் யோசித்துக்கொண்டிருந்தான்.

நம் அறிவு ஜீவிக்கு, ஒரு எண்ணம் தோன்றியது."ஒருவேல கண்ணத்துல முத்தம் கொடுக்க சொல்றாலோ??? இல்ல இல்ல அது எப்படி, ஒரு ஹலோ கூட சொல்லாமல் ஸ்ட்ரெயிட்டா முத்தம் கேட்பா? ஆனா அவ பன்றதுக்கு வேறு ஏதும் அர்த்தம் இருப்பது போல தெரியலயே. அவ கிட்டயே கேட்போம்."

என்ன கேட்க வரீங்க?? எனக்கு புரியல, முத்தம் வேணும்ன்னு கேட்க வரீங்கலா?

இவன் இப்படி கேட்கவும் பகீர் என இருந்தது ஊர்விக்கு. அதை மறைத்துக் கொண்டு, தன் தீப்பார்வையால் சுட்டுவிட்டு திரும்பிக்கொண்டாள்.

அவள் தீப்பார்வையிலே புரிந்து கொண்டான், அவள் வேறு ஏதோ கூற வந்திருக்கிறாள் என்று.

"என்ன தான் சொல்லியிருப்பாள்?? வாய தொரந்து சொன்னா என்னவாம்.இப்படியா ஒரு அப்பாவி பையன சோதிக்கறது.. ஒரு வேல ஊமையா இருப்பாலோ. இருக்கலாம் இருக்கலாம். பாவம்."என அவளுக்காக பாவப்பட்டுக் கொண்டான். அவனுக்கு அப்போது தெரியவில்லை, எதிர்காலத்தில் அவள் கேள்விகளுக்கு விடை கூற முடியாமல் அவன் தினறப்போவது.

இவன் யோசனையை களைக்கும் விதமாக அங்கு வந்த விமானப் பணிப்பெண், டிஸ்ஷுவை(tissue) தண்ணீரால் நனைத்து, அவன் கண்ணங்களை துடைத்து, அந்த டிஸ்ஷூவை அவன் கைகளிள் வைத்துவிட்டுச் சென்றாள். ஏதும் புரியாத சித்து, அந்த டிஷ்ஹூவை, பார்க்கும் போது தான் அவனுக்கு அனைத்தும் புரிந்தது.

"ச்சே. அவ இததான் சொல்லிருக்கா. நம்ப தான் என்னவோ யோசிச்சிட்டோம்."

அவளிடம் மன்னிப்பு கேட்கும் பொருட்டு அவள் பக்கம் திரும்பினான்.

ஹலோ. வணக்கம். நமஷ்தே. Bonjour.ன்னு அவனுக்கு தெரிந்த அனைத்து மொழிகளிளும் அழைத்துப்பார்த்தம் அவள் திரும்பவில்லை.

இவன் அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினார் அவள் அருகில் அமர்ந்திருக்கும் பெண் திரும்பினார். என்ன என்பது போல் அவர் பார்க்க, "பாவம். இந்த பொண்ணு ஊமை மட்டும் தான்னு நனச்சன், ஆன இவளுக்கு காதும் கேட்காது போல." என்று கூறினான் சித்து.

"என்னால, பேசவும் முடியும். காதும் கேட்கும். ஆனா, தேவ இல்லாதவங்க கிட்டலாம் பேசுரது இல்லை, அவங்க பேசுரதை கேட்கரதும் இல்ல." என்றால் ஊர்வி, சற்று கடுமையாகவே.

அவளின் குறள் கேட்டு, அமைதி ஆனார்கள் மற்ற இருவரும். சென்னை வந்து சேரும் வரை அமைதியே நிலவியது.

சென்னை வந்து சேர்ந்த பிறகு, பணிப்பெண்கள் இருவரும் சித்துவை வழிந்து கொண்டே வழி அனுப்ப, ஊர்வி அவர்களை முறைத்துக்கொண்டே வெளியில் சென்றால்.

சென்னை விமான நிலையத்தில், வெளியே வந்த ஊர்வி, நடந்த சென்றுக்கொண்டிருக்க, "ஹேய், நான் உனக்கு தான் வெயிட் பன்றன். நீ எங்க போயிட்டு இருக்க" என கேட்டவாரே ஒருவர் இவளை நோக்கி கைகளை விரித்து கொண்டே வந்தார். அவர் நெருங்கி வர, இவளும் கைகளை விரித்தாள். ஆனால், வந்தவரோ இவளைத் தாண்டிச்சென்று, இவளுக்கு பின்னால் வந்த யாரையோ அணைத்துக்கொண்டார்.

அவர் தன்னைத் தாண்டிச் செல்லும் போதே கடுப்பான ஊர்விக்கு, அவர் அணைத்துக்கொண்ட நபரைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.

யார் அந்த புதிய நபர்?

அவர் அணைத்துக்கொண்டது யாரை?

Any guess..

First rendu episode kum na expect pannadha vida romba nalla response kedaichudhu. Ivalo encourage panra ellarukum thanks.

Story ezhudha solli encourage panna @Saranyamohan97 akka ku special thanks.

Vijay Devarkonda photo potadhu oru advertisement ku dhan pa. Hero introduction layae comment box full agara alavuku sanda potutanga, hero enaku dhan nu, idhula avaru siddarth , vijay illa. 😝😝😝

Mistakes irundha sollunga. Negative comments are also welcome.

Marakama vote pannidunga.

3-4 days once, update panna try panran.

Thank you.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro