அத்யாயம் - 6
"என்னடா சொல்றான் இவன்?" புலம்பி முடித்து நிம்மதியாக உறங்க, சென்றிட தமிழ் ஒன்றும் புரியாமல் அகன்ற விழிகளுடன் கௌதமை பார்த்து கொண்டு இருந்தான்.
"அவன் போதைல இருக்கானா இல்ல நான் போதைல இருக்கேனான்னு தெரியலடா, ஆனா பெருசா பிரச்னை நடந்துருக்கு" கெளதம் பயத்துடன் தூங்கி கொண்டிருக்கும் ஆதியை பார்த்து கூறினான்,
"முழுசா சொல்லு டா அவனை மாதிரியே அரையும் குறையுமா போதைல பேசாத" கோவமாக தமிழ் கூற, தமிழிடம் கெளதம் நடந்த அனைத்தையும் கூறினான்,
"இவன நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மச்சா... ஏதாச்சும் லூசு மாதிரி பண்ணிட போறான் கோவத்துல"
"டேய் இன்னோன்னு மறந்துட்டியா நாங்க ரெண்டு பேரும் அவன்ட்ட தான்டா ஒர்க் பண்றோம். இவன் எதாவது பண்ணி எல்லாரோட வேலையும் போய்ட போகுதுடா. அப்றம் உங்க வீட்டுல எனக்கு பொண்ணு தர மாட்டாங்க"
ஆம் ஆதி, கெளதம் இருவரும் பனி புரியும் இடம் உதய் மாதவனின் அலுவலகத்தில் தான், கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூல் தேர்வாகி வந்தவர்கள் தான். எனோ அந்த கம்பெனி நடந்தும் நேர்காணலிற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று ஆதி அன்று கூறியபொழுது அவனை வித்யாசமாக பார்த்தவர்கள், நாள் போக்கில் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். சிறிது காலம் அவர்களுடன் பணிபுரிந்த தமிழ் மேற்படிப்பு படித்து கல்லூரியில் இப்பொழுது ஆசிரியராக பணிப்புரிகிறான்.
"ஐயோ இப்ப சார்கு யாரு பொண்ணு தரேன்னு சொன்னது? இன்னும் பேசி முடிக்கல" கௌதமின் காலை வாரினான் தமிழ்.
"டேய் நாமெல்லாம் அப்டியா பழகிருக்கோம்"
"இல்லடா நீ யாருன்னே எனக்கு தெரியல. மூடிட்டு தூங்கு இவன வேற காலைல சமாளிக்கணும்"
போர்வையை தூக்கி தலையை மட்டும் தமிழை நோக்கி பார்த்தவன் ஒரு கெஞ்சலாடு கண்களை சுருக்கிய கெளதம், "உன் தங்கச்சி நான் இல்லாம வாழ மாட்டா டா பாத்துகோ"
"மச்சான் நீ மட்டும் இப்ப தூங்கலானு வை, யோசிக்காம செருப்பாலயே அடிப்பேன்"
"தூங்கி தொலையிறேன் காலைல வேகமா எந்திரிச்சு இவன் ஒடச்சு வச்ச பாட்டில்ல பொறுக்கி வச்சிரு. குட் நைட்"
"உங்கள வீட்டுக்குள்ள விடுறது மட்டும் இல்லாம உங்களுக்கு வேலைகாரன் வேலை வரைக்கும் என்ன பாக்க வக்கிறீங்கடா" புலம்பியவன் உறங்கியும் விட்டான்.
முகத்தில் தண்ணீர் பீச்சி அடிக்க தலை தெறிக்க எழுந்த மூவரும் சந்தித்தது கோவமாக நிற்கும் ஷீலா... தமிழின் தாயார் தான், கையில் துடப்பக்கட்டை, தலையில் கொண்டை, இடுப்பில் எடுத்து சொருகி இருந்த சேலை, கண்கள் சிவக்க சிவக்க நின்றவரை பார்த்த மூவருக்கும் தெளிவாக தெரிந்தது ஒரு சிறிய போர் நடக்க போகிறது என்று. கெளதம் அவர்களை சுற்றி பார்த்தவன் ஆதி உடைத்து வைத்திருந்த கண்ணாடி துகள்கள் எதுவும் இல்லை. அனால், அவர்கள் உண்டு மிச்சம் வைத்து இருந்த எலும்பு துண்டுகள் மட்டுமே இருந்தது.
"என்ன ஆச்சு டார்லிங் இம்புட்டு கோவம்? பாருங்க மூஞ்சி செவக்குது" தன் மேல் எந்த வாடையும் வரவில்லை என்று உறுதி செய்த பின்னரே ஆதி அவரை சுற்றி கை போட்டு அவரிடம் சென்றான்.
அவன் கையை உதறி விட்டவன், "கை எடுடா. திருட்டு பசங்க, எப்டி டா ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிறிங்க" ஒரு அடி துடப்பத்தை கொண்டே அத்தியின் காலில் வைத்தார்.
"என்ன ஷீலா கை நீளுது?" காலை தடவி கொண்டே கேட்ட ஆதி, வலி பொறுக்க முடியாமல் குத்த வைத்து காலை ஆராய்ந்து கொண்டு இருந்தான்.
கௌதமின் பார்வை தமிழை பார்க்க அவன் பீதியுடன் ஆதியையும் தன் தாயையும் பார்த்து கௌதமிடம் திரும்பினான், 'பாட்டில எடுத்துடல?' வாயை அசைத்து கேட்டவனுக்கு தலை அசைவை பதிலாக அளித்த மறு நொடி அவனுக்கும் ஒரு அடி, "ஐயையோ அம்மா எதுக்கு அடிக்கிறீங்க?" தமிழ் படியை நோக்கி ஓட அடுத்த அடி கௌதமிற்கு விழுந்தது.
"என்ன அத்தை மருமகனையே அடிக்கிறிங்களா?" வெட்டி வீராப்போடு கெளதம் ஏகுற,
"தண்ணி அடிச்சிட்டு உனக்கு என்னடா மரியாதை, உனக்கு பொண்ணு இல்ல போ" அடுத்து விழ இருந்த அடியை கையால் தடுத்தவன், "உங்களுக்கு எப்படி தெரிஞ்சது அதான் எல்லாத்தையும் எடுத்துட்டோமே"
"அட பாவிகளா எத்தனை பாட்டில்டா குடிச்சீங்க?" அடுத்த அடி மறுபடியும் தமிழுக்கு.
"ஐயோ அம்மா ஒன்னு தான். அதையும் அந்தா நல்ல குடி நாணயம் மாதிரி இருக்கான்ல அவன் தான் குடிச்சான்... நாங்க வெறும் சிக்கன் தான் சாப்பிட்டோம். மொத நீங்க சொல்லுங்க எப்படி கண்டு புடிச்சீங்க நா தா எல்லாத்தையும் எடுத்துட்டேனே"
"என் பையன் தான் எதையுமே ஒழுங்கா பண்ண மாட்டானே அவன்ட்ட ஏண்டா இந்த மாதிரி வேலை எல்லாம் குடுத்தீங்க வீட்டுக்கு சைடுல இருந்த கண்ணாடி பீஸ் எல்லாம் எடுக்காம விட்டுட்டான்"
கெளதம் தமிழிடம், "ஒரு வேலையும் உருப்படியா பண்றது இல்ல?"
தமிழ் பல்லை காட்டி, "மாப்பிள்ளை தூக்கம் ரொம்ப வந்துச்சா அதான் படுத்துட்டேன்"
தமிழ் கன்னத்தை விளையாட்டாக அறைந்த ஆதி, "பல்ல... பல்ல காட்டாத. பாக்குற எல்லா வேலையும் அர குறை தான் "
"ஏன்டா அவன் தான் தண்ணி அடிச்சானா நீங்க என்னடா அவனை குடிக்காதான்னு சொல்ல மாட்டிங்களா? வீட்டுல இப்புடி ரெண்டு பொம்பள பிள்ளையை கீழ வச்சிக்கிட்டு வெட்ட வெளில இப்டி பண்ணா யாராச்சும் பாத்தா என்ன நெனப்பாங்க? கொஞ்சம் கூட யோசிக்கிற பழக்கம் எல்லாம் இருக்காதா? ஏண்டா ஆதி மூளையை கழட்டி எங்க வச்ச எத்தன தடவ சொல்லிருக்கேன் இந்த பழக்கத்தை விடு விடுன்னு நான் சொல்றத எப்ப தான்டா கேக்க போற?"
"வாங்கி கொடுத்ததே அவனுக தான்" ஆதி தமிழையும் கௌதமையும் போட்டு குடுக்க இருவரும் கண்கள் வெளி வரும் அளவிற்கு அவனை வெறித்து பார்த்தார்கள்.
"மச்சான் என்ன... என்ன டா சொன்ன?" கெளதம் அதிர்ந்து கேட்க,
"எம்மா இவன் என்ன சொன்னாலும் கேக்குறத நிறுத்துங்க வேணா வேணான்னு சொல்ல சொல்ல கேக்காம இவன் தான் குடிச்சான்" கூறினான் தமிழ்.
ஆதியிடம் வந்தவர் அவன் கன்னத்தை அன்பாக வருடி, "ஏண்டா இப்புடி குடிச்சு ஒடம்ப கெடுத்துக்குற, வர வர நீ ரொம்ப இப்புடி பண்ணுறன்னு தமிழ் கூட சொல்லி கவலை பட்டான் பா. அம்மா சொல்றத கேப்பல அம்மாகாக இத விற்று பா"
'இத விட பல செண்டிமெண்ட் சீன்ன நாங்க பாத்துட்டோம்'
அவரை ஒரு நிமிடம் கண்களை சுருக்கி ஆராய்ந்தவனின் முகத்தில் தானாய் ஒரு நமட்டு புன்னகை வந்து மலர்ந்தது, "ஓ ஹோ அப்டி?" என்றவன் அவரை தாண்டி படியில் இறங்கி சென்று விட்டான்.
அவன் சென்ற வழி பார்த்தவரின் பார்வையில் ஒரு கவலை இருந்தது, "அத்தை என்ன புதுசா நடக்குற மாதிரி பாக்குறீங்க அவன் அப்டி தாணு தெரியும்ல போய் ஸ்டராங்கா ஒரு காபி போடுங்க அப்புடியே ஒத்தனம் வைக்க கொஞ்சம் ஐஸ் கட்டி, துணி"
"மாப்பிள்ளை எனக்கு..." தமிழ் கௌதமை பார்த்து கேட்க, "நாம ஷேர் பணிக்கலாம்டா"
"இனிமேல் இவிங்கள தண்ணி அடிக்கு இங்க கூட்டிட்டு வா சோத்துல வெஷத்தை வச்சு தான் குடுப்பேன் உனக்கு. உங்க அப்பா வரதுக்குள்ள போய் அந்த கருமத்தை எல்லாம் பொருக்கி தூக்கி போடுங்க டா அவரு பாத்தா கோவ படுவாரு"
"மம்மி சூது வாது தெரியாமலே வளந்துருக்க அவரு கோவ பட மாட்டாரு ஷேர்கு தா வந்துருப்பாரு"
அவனை முறைத்த ஷீலா, "என் வீட்டுகார பத்தி என்கிட்டயே தப்பா பேசுறியாடா? அவர் அந்த பழக்கத்தை போன வருஷமே விட்டுட்டார். சரி அத விடு ஆதி என்ன சொன்னான்? அவனுக்கு பொண்ணு பாக்க ஆரமிக்கவா"
கெளதம் தமிழ் இருவரும் தோல்வி என்று சைகை செய்ய, "ஏண்டா இவன் இப்புடி பண்ணுறான் அவனுக்கும் பொண்ணு பாக்க வேணாம்னு சொல்றான் சஹானாவுக்கும் பாக்க ஆரமிக்கலாம்னு சொன்னா பிடி குடுத்தே பேச மாட்டிக்கிறான். அவ படிப்பு முடிய போகுது இப்ப பாக்க ஆரமிச்சா தான் அடுத்த ஒரு வர்சதுக்குள்ள மாப்பிள்ளை அமையும்" இவர் பேசியது ஒரு பக்கம் ஓட, அவன் அடுத்து என்ன செய்ய போகிறான் என்று தமிழும் கௌதமும் முழித்து கொண்டு இருந்தனர்.
கீழே இறங்கிய ஆதி வேகமாக அவன் தங்கை சஹானாவிடம் தமிழுடன் கல்லூரிக்கு போகும்படி கூறி தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக தன்னுடைய வண்டியை வேகமாக வீட்டிற்கு செலுத்தினான், வீட்டிற்கு சென்று அவனுடைய பழைய பையை எடுத்து ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருக்கையில் அவன் தேடி கொண்டிருந்த அந்த பழைய நாளிதழ் அவன் கண்ணில் பட்டது.
ஒரு வலியுடன் அதை பார்த்தவன் கண்களில் இருக்கும் ஈரத்தை தாண்டி வந்த வேலையை பார்க்க ஆரமித்தான். ஏதோ முன் பின் தெரியாத ஒரு நபரின் பேச்சை கேட்டு ஒருவர் மேல் பகை வளர்க்க அவன் விரும்பவில்லை, அது மட்டும் இன்றி அவர் கண்ணில் இருக்கும் அந்த அளவெடுக்கும் பார்வை அவனை ஒரு முறை மீண்டும் சிந்திக்க கூறியது. அந்த நாளிதழில் தட்டச்சு செய்திருந்த குறிப்பில் இருந்த அலுவலகரின் பெயரை பார்த்தவன் வண்டியை ஆட்சியர் அலுவலகம் நோக்கி விரைந்தான். அங்கு அவனுடைய கல்லூரி நண்பன் ஒருவனின் தந்தையின் உதவியோடு அந்த நாளிதழில் குறிப்பிட்டிருந்த நபரின் முகவரியை வாங்கியவன் அவர் இல்லத்திற்கு சென்றான்.
"சொல்லு பா யார் நீ?"
அவன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அந்த துண்டு நாளிதழை அவரிடம் காட்டினான். அதை பார்த்தவர் அவனை உள்ளே அழைத்து, "ஆமா தம்பி நான் தான் அந்த கன்ஸ்டருக்ஷன் கம்பனிக்கு சீல் வைக்க உத்தரவு போட்டேன், ரொம்ப பெரிய திருட்டு பயலா இருந்தான் தம்பி அந்த ஆளு. கட்டுன ஒரு பில்டிங் கூட சரி இல்ல எல்லாமே ரெண்டு மூணு வர்சதுக்குள்ள இடிஞ்சு விழுந்துருச்சு"
அதற்கு மீறி கேட்க பொறுக்காதவன் அவர் முன் சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைத்தான். அதை கவனித்தனர் பேச்சை நிறுத்தி, "எதுக்கு இத்தன வருஷம் கழிச்சு அந்த கேச பத்தி விசாரிக்கிற?"
எதுவும் பேசாமல் மீண்டும் சில ஆயிரத்தை வைத்தான், "இப்ப நான் இத பத்தி சொன்னா என்ன ஆக போகுது?" பண காகிதங்களை பார்க்க பார்க்க அவரின் பேச்சும் மாறிக்கொண்டே சென்றது.
மீண்டும் சில நோட்டுகளை அவர் முன் வைத்தான், "ஒரு நாலு ஒரு பையன் வந்தான் என்ன பாக்க ஒரு இருவது, இருவதியொரு வயசு இருக்கும். அவன் சொல்றத அப்புடியே மீடியால சொன்னா எனக்கு பத்து லச்சம் தரேன்னு சொன்னான். எனக்கு அப்ப இருந்த பிரச்சனைக்கு அந்த காச வாங்கிட்டு அவன் சொன்ன மாதிரி அப்டியே செஞ்சேன்"
அவரை பார்த்து சிரித்தவன், "ஏன்யா ஒடம்பு நல்லா பன்னி மாதிரி பெருத்து தான வச்சிருக்க... கேவலம் ஒரு பத்து லட்ச ரூபாய்க்காக ஒரு குடும்பத்தோட மாணத்தையே வாங்கிட்டியே. உன்ன பத்தி மட்டுமே யோசிச்ச நீ, பலி போட்ட குடும்பம் அடுத்த வேலை சோத்துக்கு என்ன பன்னிருபாங்கனு யோசிச்சியா?"
அவன் பேச்சில் கோவம் வந்தவர் குனிந்து பணத்தை எடுக்கும் முன், ஆதி அவர் முன் வைத்த அத்தனை பணத்தையும் எடுத்து தன் சட்டை பாக்கட்டில் வைத்தான், "டேய் என்னடா காச குடுடா" அவர் கண்கள் எல்லாம் அவன் பாக்கெட்டில் மட்டுமே.
அவரை பார்த்து சிரித்தவன், "அண்ணே இது உங்க ரேஞ்சுக்கு ரொம்ப கம்மி, வாயேன் நடந்துட்டே பேமன்ட் பத்தி பேசலாம்"
***************************
"டேய் இந்த டை கட்டி விடு டா" - விஷ்ணு
"எனக்கும் அப்ப கட்டி விடுவியா?" - ஹரி
"எனக்கு தெரிஞ்சா நான் ஏண்டா உன்ட்ட கேக்க போறேன்?" - விஷ்ணு
புருவத்தை உயர்த்தி மேலும் கீழும் விஷ்ணுவை அளவெடுத்தான் ஹரி, "டேய் அந்த பின்னாடி இருக்க முடி கொஞ்சம் மேல தூக்கி இருக்க மாதிரி இல்ல?"
தலையை குனிந்து பார்த்தவன் கைகளால் சரி செய்து பார்க்க மீண்டும் அது பழைய நிலையை அடைந்தது, "ஜெல் தடவுடா அப்ப தான் நிக்கும்" என்று ஒரு டப்பாவை அவன் முன் வைத்து தன்னை கண்ணாடியில் பார்க்க ஆரமித்தான்.
"டேய் இந்த வைட் ஷர்ட் போடவா இல்ல லைட் ப்ளூ ஷர்ட் போடவா?" கண்ணாடி முன் இரு சட்டையையும் தன் மேல் வைத்து கேட்டான் ஹரி,
"ஏண்டா லைட் ப்ளூ ப்லேசர்க்கு லைட் கலர்லையா சட்டை போடுவ? அறிவாளி... டார்க் கலர் போடுடா. பேஷன் சென்ஸ் இல்லாத பையன்" முணுமுணுத்தான் விஷ்ணு.
"லுங்கிய கட்டிட்டு ரோட்டுல டான்ஸ் ஆடுற நாயி நீ என்ன இப்புடி எல்லாம் பேசுற அளவு ஆகிட்டேன் நான். நீ சொன்னதுக்காகவே இத தான்டா போடுவேன். மொத காலர ஒழுங்கா எடுத்து விடுடா அப்றம் என்ன சொல்லு"
விஷ்ணுவின் காலர்ரை சரி செய்த ஹரி அவன் அணிந்து இருந்த கோட் சூட்டின் பாக்கெட்டில் இருந்த அந்த 'பாக்கெட் ஸ்கோயர்' என்னும் துணியை எடுத்தவன் விஷ்ணு பார்க்கும் முன் அமைதியாக எடுக்க சரியாக அவன் கையை பிடித்தான் விஷ்ணு, "என்ன பண்றீங்க ஹரி அவர்களே"
"ஹிஹி..."அசடு வழிந்தவன், "உன் சூட்க்கு இது செட் ஆகலடா அதன் வேற கர்சீப் வச்சு விடறேன்" - ஹரி
"எவ்ளோ அக்கறை என் தம்பிக்கு என் மேல. ஆனா பரவால்ல, பிச்சைக்காரன் போடுற மாதிரி இருந்தா கூட நான் இதையே வச்சுக்குறேன்" மீண்டும் அந்த பாக்கெட் ஸ்கோயரை சரி செய்த விஷ்ணு, "டேய் நல்ல பேர்ப்யூம் போன வாரம் வாங்குனதா சொன்னல அத கொஞ்சம் குடேன்"
"பிச்சகாரனுக்கு எதுக்குடா சென்ட், போதும் போ" ஹரி அவன் ப்லேசரை எடுத்து அணிந்து அவனை முன்னும் பின்னும் கண்ணாடியில் ஒரு முறை பார்த்தான்.
"உங்க ரெண்டு பேரோட தொல்லைக்கு வரவர அளவே இல்லாம போச்சு, ஏன்டா இவ்ளோ அலப்பறை ஒரு போர்டு மீட்டிங் தான... அதுக்கு எதுக்கு என்னமோ உங்க கல்யாணத்துக்கு கெளம்புற மாதிரி ரெடி ஆகிட்டு இருக்கீங்க" கையில் சில அழகு சாதான பொருட்களுடன் ஹரியின் அறைக்குள் நுழைந்தாள் திவ்யா.
"ஐயோ இதுக்கே இவிங்க பண்ற அலப்பறை தாங்கல இதுல இவங்க கல்யாணமா? என்னால நெனச்சு கூட பாக்க முடியல, நான்லா வேற நாட்டுக்கு ஓடிருவேன் கரெக்டா டைம்கு தான் வருவேன்"
விஷ்ணுவிடம் ஒரு சென்ட் பாட்டிலை வைத்து, "இந்தா நீ கேட்ட பேர்ப்யூம். ஆனா பொண்ணுங்க பேர்ப்யூம போடுற ஒரே பையன் நீ தான்டா" என்றாள் கட்டிலில் பல்லவியின் அருகில் அமர்ந்தபடி.
"எங்களை இப்புடி திட்டுறீங்கல்ல உங்க அன்னே எப்டி தெரியுமா போர்டு மீட்டிங்க்கு போவான் அப்புடியே..." சட்டென தான் பேச வந்ததை நினைத்தவன் அமைதியானான் விஷ்ணு, "எப்டி ஹீரோ மாதிரியா?" என்றாள் பல்லவி ஒரு நக்கல் சிரிப்புடன்.
'ஆம்' என்று கூற தோன்றிய ஆசையை ஒதுக்கி வைத்தவன் இல்லை என்று தலையை அசைத்தான். விஷ்ணுவிற்கு எப்பொழுதும் முன்னோடி அவன் சகோதரன் தான். தோற்றத்திலும் சரி, தொழிலும் சரி. ஆனால் அவர்களுக்குள் இருந்த அந்த இடைவெளி சகோதரன் மேல் இருந்த பாசத்தை வெளியில் காட்ட விடாமல் தடுத்தது.
"இப்ப கூட கீழ பொய் பாரு எப்புடி வருவான்னு. சும்மா நடக்குற ஒரு மீட்டிங்கே கோட் இல்லாம வர மாட்டான் இதுல இன்வெஸ்டர்ஸ் மீட்டிங்கு எப்புடி வருவான்? அவன் முன்னாடி நாங்க எதுலயும் சலச்சு இருக்க கூடாது. அது மட்டும் இல்லாம இது எங்களோட பிரஸ்ட் போர்டு மீட்டிங் கெத்தா போய் நிக்கணும்"
ஹரியை பார்த்தவன், "என்னடா சொல்றது சரி தான" ஆமோதிப்பதாக தலை அசைத்தான் ஹரி.
"சரி கோட் சூட் ஓகே இந்த மேக்கப் செட் எதுக்கு கேட்ட?"
பல்லவி ஹரியை பார்த்து கேட்க அவன் தன்னுடைய அணைத்து பற்களையும் காட்டியவன், "அங்க இருக்க எல்லா பொண்ணுங்களும் நல்லா இருக்குடா அது தான்"
நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று பார்வை பார்த்து விட்டு, "தம்பி அதுக்கு பசங்க போடுற கிரீம் எல்லாம் போட்டுக்கலாம்ல எதுக்கு என்னோடது?"
"பாப்பு இந்த அளவு பளிச்சுனு அது இருக்க மாட்டிக்கிதுடா, சரி பேசாம வந்து ரெண்டு பவுடர் போட்டு விடு நேரம் ஆச்சு சாப்பிட போகணும்" இருவரும் சில பல சேட்டைகளை செய்து முடித்து கீழே வந்த பொழுது உதய் தன்னுடைய வழக்கமான பார்மல் ஷர்ட் பாண்ட் மட்டுமே அணிந்து தன்னுடைய கைபேசியில் ஏதோ ஒன்றை மும்முரமாக பார்த்து கொண்டு இருந்தான். அமைதியாக அவனுக்கு சற்று தள்ளியே நால்வரும் அமர்ந்தனர்.
"ஏண்டா இவன் மீட்டிங்கு வரலையா?" விஷ்ணு ஹரியின் காதில் கிசுகிசுக்க, "எனக்கு எப்புடிடா தெரியும் நா என்ன அவன் கொடுக்கா?" கூறினான் ஹரி.
"எனக்கு என்னமோ டௌட்டா இருக்கு. இவன் போட்ருக்க டிரஸ் பாத்தா வேற எங்கயோ போற மாதிரி இருக்கு"
"டேய் விஷ்ணு என்னடா இம்புட்டு அழகா இருக்க" அவன் சித்தி கண்கள் மினுமினுக்க அவனை பார்க்க வந்து அவனை நெட்டி முறித்தார்.
"சித்தி உங்க பிள்ளை பொறப்புலயே அழகு. என்ன... இத்தன நாலா மறச்சு வச்சிருந்தேன்" ஹரியை பார்த்தவன் மலர்ந்த முகத்துடன், "டேய் இன்னைக்கு ஒரு போட்டோ ஷூட் போறோம் மாஸா போட்டோ எடுத்து எல்லா சோசியல் மீடியாலயும் போடுறோம்"
"அம்மா உன் புள்ள பக்கத்துல ஒருத்தன் இருக்கேன்" ஹரி நியாபக படுத்த, "போடா நீ என்னடா சட்டை போட்ருக்க கோடு கோடா நல்லாவே இல்ல" பார்த்தவுடன் தோன்றியதை மறைக்காமல் கூறினார் அன்னை.
ஆனால் உண்மையில் இருவரும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தனர். 'மறக்காம ரெண்டு பேருக்கும் வந்த ஒடனே சுத்தி போடணும்' என்று மனதில் நினைத்தார்.
கையில் ஸ்டைலாக வாட்ச், புதிதாக கோட் சூட், எப்பொழுதும் போல் இல்லாமல் அளவாய் திருத்தி இருந்த முடியும், தாடியும் அவர்களை மேலும் அழகாய் காட்டியது.
"சித்தி லேட் ஆகுமா" கண்களை தன்னுடைய கைபேசியில் இருந்து அகற்றாமல் கேட்டான் உதய்.
"ஒரு ரெண்டு நிமிஷம் பா" சமையலறை உள்ளே சென்று வந்தவர் அனைவர்க்கும் சாப்பாடு பரிமாற நால்வரும் தங்களுக்குள் பேசி கொண்டிருந்தனர், அந்த நேரம் உதய்யின் அலைபேசி அடிக்க அதில் ஆதவன், "சொல்லு டா"
"ஆபீஸ் போய்டியா?"
"இல்ல இனி தா. எதுவும் பிரச்னையா?"
"இல்ல டா உன் மாமாவ இன்னைக்கு பாத்தேன் ரொம்ப சந்தோசமா இருக்காரு என்னமோ பெருசா பிளான் பன்னிருபாரு-னு தோணுது பாத்து இரு"
கண்களை சுற்றி அவன் சித்தியையும் சகோதரர்கள் சகோதரிகளும் இவன் புறம் கவனம் செலுத்த வில்லை என்று உறுதி செய்த பின்னர், "டேய் என்னதா இருந்தாலும் அவரு என்னோட மாமா டா கொஞ்சம் சந்தோசமா இருக்கட்டும் தப்பு இல்ல. அவர் என்ன பண்ணனும்னு நினைக்கிறாரோ அத பண்ணட்டும் எதுவும் தெரியிறதுக்கு முன்னாடி என் மூளையை தேவை இல்லாம நான் யூஸ் பண்ண விரும்பல. இருக்க ஆயிரத்தெட்டு பிரச்னைல இதுவேற" சலித்து கொண்டவன் வேகவேகமாக உணவை அருந்த ஆரமித்தான்.
"டேய் ரொம்ப நல்லவன் மாதிரி பேசாத நீ யாருனு எனக்கு தெரியும். சரி இன்னைக்கு மீட்டிங்கு என்ன பண்ணி கன்வின்ஸ் பண்ண போற அவங்கள"
"முடிவு எல்லாம் பண்ணி உனக்கு அது சம்மந்தமான தகவல் எல்லாம் அனுப்பிருக்கேன். நீ நான் சொல்றப்ப வந்தா போதும். எனக்கு அங்க போகவே புடிக்கல துரோகிக கூட எனக்கு என்னடா வேலைனு தோணுது"
"ரொம்ப சலிச்சுக்காத. நீ கேட்ட அந்த ரெண்டுபேரோட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி ஜெயன் கிட்ட குடுத்துருக்கேன்"
சற்று நொடிகள் அமைதி காத்த ஆதவன் திடீரென, "ஆமா என்னமோ புதுசா ஒரு பொண்ண வேலைக்கு சேந்துருக்குன்னு கேள்வி பட்டேன். நல்லா இருக்குமா அந்த பொண்ணு?" இவனுக்கு மட்டும் எப்டி தான் எல்லாமே இவ்ளோ வேகமா தெரியாதோ...
"ம்ம்ம் நல்லா தான் இருக்கும்" உதய்யின் பதிலில் ஆசிரியத்தின் உச்சிக்கே சென்றான் ஆதவன் மேலும் அவனை சற்று பேச வைக்க, "அது என்ன நல்லா தான்... ஏன் கண்ணு மூக்கு எதுவும் சரி இல்லையோ?" ஒரு நக்கல் சிரிப்புடன் ஆதவன் கேட்க.
அவள் முகம் ஒரு முறை கண் முன் வந்து சென்றது. அந்த முகத்தில் என்ன குறை கூற முடியும்? குண்டு குண்டு கண்கள் அதற்கு குடை பிடித்தார் போல் கரிய புருவங்கள், வைரம் போல் கூர் மூக்கு, செதுக்கிய அளவெடுத்த இதழ்கள், பளிங்கு சிலை போல் பளபளக்கும் கன்னங்கள். மாநிறத்தை விட சற்று சிகப்பாக இருப்பாள். கொள்ளை அழகு என்றெல்லாம் இல்லை ஆனால் கண்களை கவரும் வண்ணம் அழகியே.
தன்னை கடந்து செல்லும் பெண்களை ஒரு பார்வைக்கு மேல் பார்க்காதவன் உதய் மாதவன் என்றெல்லாம் கூற முடியாது, பெண்களை ஒரு பார்வை பார்க்க ஆண் உண்டோ? ஆனால் அவன் பார்வையில் எந்த விதமான பிசுறும் இருக்காது, ஒரு பார்வைக்கு மேல் போகாத மனம் அவளிடம் சற்று முரண் பிடித்தது. வினோதம் தான் ஆனாலும் அவளை முதல் பார்வையுடன் விட மனம் விரும்பவில்லை கடந்த சில நாட்களாக. அவள் செல்லும் திசையில் கண் தானாக செல்கின்றது. உரிமையுடன் அவனிடம் பேசும் முதல் பெண். புடிக்காமல் போகுமா என்ன?
"இல்லடா எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா அவ பாக்குற...." சட்டென நிறுத்தியவன் எதிரில் இருக்கும் அவன் குடும்பத்தை மறந்து விட்டதை நினைத்து தன்னையே கடித்தான் மனதில், "என்னடா பாக்குற....???" தெளிவாக தெரிந்தது ஆதவனின் விளையாட்டு. அதில் முதல் முதலில் இன்று விழுந்திருந்தான் உதய்.
வந்த புன்னகையை மறைத்தவன், "லைன்ல ஜெயன் வரான் நான் அப்றம் பேசுறேன்" கூறி அணைப்பை துண்டித்தான்.
ஆதவன் கைபேசியை ஒரு புன்னகையுடன் பார்த்து இருந்தான், "மச்சா நீ சிரிக்கிறது இங்க வரைக்கும் எனக்கு தெரியுதுடா"
அந்த பக்கம் "ஒரு பொண்ணு கிட்ட இப்புடி சிரிச்சு நீ பேசுனா கூட நான் கவலை பட மாட்டேண்டா. வந்து தின்னு" ஆதவனின் தாயார் அவர் வருத்தத்தை கூற எதுவும் பேசாமல் சாப்பிட சென்றான்.
"இன்னும் ஒரு இட்லி வைக்கவா பா?" உதய்யின் சித்தி கேட்க, "சித்தி இட்லி வேணாம் எனக்கு ஒரு தோசை ஊத்தி குடுக்குறீங்களா?"
அறையில் இருந்த அத்தனை கண்களும் அவனை தான் நோக்கின. இருக்காதா பின்ன? வைத்த உணவை உண்பவன், வாயை திறந்து தன்னுடைய விருப்பு வெறுப்பை ஒரு முறை கூட காட்டாதவன் இன்று இவ்வாறு கேட்கும் பொழுது உறைந்தனர் அனைவரும்.
அவரிடம் இருந்து பதில் வராமல் இருக்க, "இல்ல சித்தி வேணா பசி போயிருச்சு" என்று எழ இறந்தவனின் கையை அழுத்தி அமர வைத்தவர்,
"ரெண்டு நிமிஷம் பா, வந்தர்ரேன்" ஒரு சிறு சிரிப்புடன் சென்றவர் சமையல் அறையில் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்,
'எப்டி இதனை நாள் அவனுக்கு புடிச்சது எதுன்னு கூட நான் பாக்காம விட்டுட்டேன். வீட்டுல இருக்க எல்லாரோட அசைவையும் கவனிக்கிற நான் என்னோட இன்னொரு புள்ளைய பத்தி கொஞ்சம் கூட கவலை படாம இருந்துருக்கேனே. அக்கா இருந்திருந்தா இன்னேரம் உதய இப்புடி விட்ருக்க மாட்டாங்கள?' புலம்பியவாறே சுட சுட நெய் தோசையை அரை முழுவதும் மணக்க மணக்க எடுத்து வந்தார்.
"வேற ஏதாச்சும் வேணுமா பா?" அவர்r கேள்வியில் தன் மேல் சில நிமிடங்களாக இருந்த மற்ற நான்கு ஜோடி கண்களை உணர்ந்தவன், "இல்ல போதும் சித்தி"
அவன் உண்டு கொண்டிருக்கும் பொழுதே திவ்யாவின் மேல் சென்ற அவன் பார்வையை கண்டவள், 'அண்ணா எதுக்கு நம்மள பாக்குறாரு? இந்த தடி மாடுங்க ஏதாச்சு பண்ணி மாட்டி என்னையும் போட்டு விட்டுட்டாங்களோ?'
அவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த ஒரு கார்டுடை மேஜையில் வைத்து, "இதுல இருக்க அட்ரஸ் போய் பாரு" புரியாமல் விழித்தவள் அதை எடுத்து பார்த்து அதிர்ந்து போனாள்.
"எ... என்ன இது?" பயத்துடன் கேட்டாள் அவனை பார்த்து.
விளையாட்டில் அவள் ஆர்வத்தை அறிந்தவன் ஆதவனிடம் பேசி சிறந்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
அவள் கையில் இருந்த கார்டை பார்த்த ஹரி அதிர்ந்து விஷ்ணுவிடம் கூறினான், "காலேஜ் முடிஞ்சு உன்ன பிக்கப் அண்ட் ட்ராப் பண்ண டிரைவர் அரேஞ் பண்ணிருக்கேன். நாளைல இருந்து ப்ராக்டிஸ் போகலாம். புடிச்சத செய்றதுக்கு தைரியம் வேணும், மறைஞ்சு மறைஞ்சு விளையாட வேணாம்"
"அவளுக்கு எதுக்குப்பா விளையாட்டு எல்லாம் கல்யாணம் ஆகி போக போற எடத்துல இது எல்லாம் ஒதுக்குவாங்களா?"
"அங்க எப்டி இருக்குமோ எனக்கு தெரியாது சித்தி, ஆனா அவளுக்கு புடிச்சத நம்ம வீட்டுல ஆச்சும் அவ அனுபவிக்கனும். போய் விளையாடட்டும் சித்தி நடக்க போறத அப்றம் பாத்துக்கலாம்"
எழுந்து நின்றவன் ஹரியை பார்த்து, "ஏய் ஒழுங்கா இந்த கோட் சூட் எல்லாம் கழட்டி வச்சிட்டு வந்து சேருங்க. இத போட்டுட்டு வந்திங்க ஆபீஸ்குள்ள கால் வைக்க விட மாட்டேன்" உதய் சென்றதை உறுதி செய்த பின்பு திவ்யாவும் பல்லவியும் விழுந்து விழுந்து வயிற்றை புடித்து சிரிக்க ஆரமித்தனர்.
"இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லேயே இருந்துருக்கலாமே ராசா" என்று பல்லவி சிரிக்க, பாவம் விஷ்ணு, "நாம போட்டோஷூட் போறோம்னு அவனுக்கு மூக்கு வேர்த்துருச்சு போல டா" என்றான் வருத்தமாக.
"கவலை படாதடா வீட்டுலயே ஒரு சூட் வச்சிட்டா போச்சு அதான் நமக்குன்னு ரெண்டு அடிமை இருக்குல" என்று வன்மத்துடன் ஹரி பல்லவியையும் திவ்யாவையும் பார்க்க அங்க சில நிமிடங்கள் ஒரு மினி போர் நிகழ்ந்தது. பிறகு என்ன? அவர்கள் பேசியது போல் ஒரு போட்டோ ஷூட் நடந்தேறியதே...
காரில் சென்று கொண்டிருந்த உதய், ஜெயனை பார்த்து பேச அனுமதி கொடுக்க, "நீங்க சொன்ன மாதிரி ஈஸ்வரன்(உதய்யின் மாமா) சார், நாவலவன் சாரும் கால்ல பெருசா பேசிக்கிட்டது இல்ல சார். ஆனா அவங்க PA வோட மொபைல்ல இருந்து அடிக்கடி கால்ஸ் போயிருக்கு. அதே மாதிரி நாவலவன், ஜெயச்சந்திரன் ரெண்டு பெரும் அடிக்கடி காண்டாக்ட்ல இருந்துருக்காங்க"
வழக்கம் போல் வெளியில் பார்வை பதித்து இருந்தவன், "எல்லாமே மாமா வேலை தான ஜெயன்?"
"இப்ப வரைக்கும் அப்டி தான் சார் தெரியிது ஆனா நம்மகிட்ட ஸ்டராங்கா எந்த ப்ரூபும் இல்ல. சக்தியாலயும் இப்ப வரைக்கும் எந்த டீடைல்ஸையும் கலெக்ட் பண்ண முடியல"
"முடியல, தெரியல தவற வேற ஏதாச்சும் சொல்லுங்க ஜெயன். இவங்கள விட்டு வக்கிர ஒவ்வொரு செகண்டும் பிசினஸ்கு தா லாஸ் ஆகும்" அழுத்தமாக வந்தது அவன் குரல்.
"இல்ல சார் சீக்கிரமா ஏதாச்சும் ட்ரை பண்றேன்"
"என்னமோ... மீட்டிங்கு எல்லாரும் வர்றாங்க தான?"
"எஸ் சார். எவரித்திங் ஐஸ் செட்" தலையை அசைத்தவன், "மாமா மேல ஒரு கண்ணு வைங்க மீட்டிங் அப்ப"
"ஓகே சார்" அவர்கள் பேசி முடிக்க அவலுவலகம் வர சரியாக இருந்தது, "நீங்க இன்னொரு தடவ நான் சொன்ன பைல்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணுங்க. நான் ப்ரோடக்ஷன் டீம் ஹெட்ட பாத்துட்டு டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன். தம்பிகளுக்கு ஒருக்க கால் பன்னிருங்க" என்று அவன் பயணத்தை தொடர்ந்தான்.
சரியாக பாத்து நிமிடங்களில் கேபினில் நுழைந்தவன் கண்ணில் பட்டது பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த யாழினி மற்றும் ஜெயன் தான். அமைதியாக அவன் இருக்கையில் அமர்ந்தவன் அவன் முன் அடுக்க பட்டிருந்த அனைத்து பைலையும் பார்த்து கொண்டிருக்கையில் அவனுடைய கைபேசிக்கு ஹரியிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது அவர்கள் அவன் அறைக்கு வெளியில் நிற்பதாக, 'ஆமா அப்புடியே ரோஷத்துல வெளஞ்சவங்க உள்ள வர மாட்டாங்களாம்'
"ஜெயன் இந்த பைல்ஸ் எல்லாம் வெளிய நிக்கிறவனுங்கட்ட குடுங்க பக்கத்து ரூம்ல ஒக்கார சொல்லி" என்று சில முக்கியமான பாத்திரங்களை கொடுத்தவன் ஜெயன் சென்ற பிறகு யாழினியை பார்த்து, "எல்லாம் கரெக்டா இருக்கா?"
"பக்கா சார். இத மட்டும் ஒருக்க செக் பண்ணிட்டா ஒர்க் ஓவர்" என்று படபடப்பாக அவனை நிமிர்த்து பார்க்காமல் பேசியவள் தன் ஒரு கற்றை முடியை செவிகளுக்கு பின்னால் சொருகி மேலும் தொடர்ந்தாள், "நேத்து நைட் முழுக்க இத தான் சார் பாத்துட்டு இருந்தேன், எங்க அம்மாவே என்ன ஆச்சிரியமா பாத்திங்கனா பாத்துக்கோங்க... நான் என்னோட வேலை எல்லாம் விட்டுட்டு உங்களுக்காக வேலை பாத்தேன். ஏன் நேத்து கார்ட்ஸ் கூட விளையாட்டுல. ஆமா உங்களுக்கு UNO கார்ட்ஸ் விளையாட தெரியுமா?" சம்மந்தம் இல்லாத நேரத்தில் சம்மந்தம் இல்லாத கேள்விகளை கேட்பதில் கைதேர்ந்த பெண்.
"தெரியும்" என்று மேலும் அவள் கைகளையே பார்த்து கொண்டிருந்தான் உதய்.
"சாப்டாம ஏன் ஆபீஸ் வந்திங்க யாழினி?" என்றான் அவளின் நடுங்கும் கைகள் மற்றும் விரக்தியாய் அலையும் கண்களை பார்த்து.
"அது வந்து சார் அம்மா இன்னைக்கு வெளிய காலைல வெள்ளன போய்ட்டாங்க. சாப்பாடு சமக்கல" என்று பாதி அவனை பார்த்து பாதி அவன் கண்களை பார்க்காமல் கூறினாள்.
உண்மையில் அவள் தாய் வெளியே சென்றது உண்மை தான் ஆனால் அவர் யாழினியை கடையில் வாங்கி சாப்பிட கூறினார் ஆனால் பேருந்திற்கு மட்டுமே பணம் இருக்க உணவை புறக்கணித்தாள், "ஏன் சார் உங்க ஆபீஸ்ல சாலரில அட்வான்ஸ் மாதிரி எதுவும் தர மாட்டிங்களா?" எதை கேட்க கூடாது என்று இருந்தாலோ அதையே கேட்டும் விட்டாள்.
தவிர்க்க முடியாத நிலை, நாளை காலை வரை மட்டுமே பேருந்திற்கும் பணம் இருக்கின்றது, திரும்ப வீட்டிற்கு நடந்தே செல்ல வேண்டும்.
வெட்கத்தால் குனிந்த அவள் தலையையே பார்த்தவன், "தோசை சாப்பிடுவீங்களா?"
புரிந்தது அவளுக்கு அவன் தன்னுடைய நிலையை புரிந்து கொண்டான் என்று. கண்கள் கலங்கிய போதிலும் தலையை தூக்காமல், "சார் நான் காலைல சாப்பாடு எல்லாம் சாப்பிடுறது இல்ல. டயட்ல இருக்கேன்" அசராமல் பொய் கூறினாள்.
கண்கள் சுருக்கி அவளை முறைத்தவன் ஜெயனிற்கு அழைத்து, "ஒரு தோசை, ஒரு காபி. பைவ் மினிட்ஸ்ல வரணும்" என்று அழைப்பை துண்டித்தான்.
"இல்ல சார் வேணாம்" மிகவும் மெலிதாக வந்தது அவள் குரல்.
"பேசவே தெம்பு இல்ல நீங்க எப்டி அப்றம் வேலை பாப்பிங்க?"
"சரி அப்ப காபி வேணாம் எனக்கு டீ தா புடிக்கும். தோசை ஓகே கூட ஒரு உளுந்த வடை" பல்லை காட்டி சிரித்தவளை ரசித்தவன் அவள் கூறியதையே ஜெயனிடம் கூற ஐந்து நிமிடங்களில் வந்தது சுட சுட அவள் காலை உணவு.
"சார் இத சம்பளத்துல இருந்து களிப்பிங்களா?"
"இல்ல தைரியமா சாப்புடுங்க யாழினி" அடக்கப்பட்ட புன்னகையுடன் பதில் கூறினான்.
பசியில் வேகமாக எழுந்தவள் வெளியே செல்ல போக அவளை தடுத்தவன் அங்கேயே அமர்ந்து சாப்பிட கூற, "நீங்க வேணும்னா உளுந்த வடைய சாப்புடுறீங்களா?" என்று அதை அவனிடம் நீட்ட, "எனக்கு வேணாம். நா சாப்பிட்டேன்" என்றான்.
"சார் சும்மா கொஞ்சம் எடுத்துக்கோங்க அப்றம் உங்கள பாக்க வச்சு சாப்டதுக்கு எனக்கு வயிறு வலி வந்துரும்"
'இதெல்லாம் இன்னும் நம்பிட்டு இருக்காளா?' என்று அமைதியாக சிரித்தவன், "வலிச்சா வலிக்கட்டும். சாப்ட்டு வேகமா வேலைய பாருங்க இன்னும் ஹாப் அன் ஹௌர்ல மீட்டிங் ஆரமிச்சிடும். அப்றம் உங்களுக்கு சாளரி வர வரைக்கும் ஆபீஸ் வண்டில வந்துருங்க அரேஞ் பண்ண சொல்றேன்" என்று தன்னுடைய வேளையில் மூழ்கிட அவளால் தான் ஒன்றுமே பேச முடியவில்லை.
எவ்வாறு என்னுடைய பசியையும் வறுமையையும் புரிந்து கொள்ள முடிந்தது இவனால்?
'ஒரு வேளை நாம தான் வாய விட்டு ஒளறிட்டோமோ? சாளரி கேட்டப்ப காசு இல்லனு தெரிஞ்சிருக்கும் ஆனா பஸ்சுக்கு கூட காசு இல்லனு எப்டி தெரிஞ்சிருக்கும்? பசிச்ச நா என்ன ஒளர எதுவும் செஞ்சேனா? இல்லையே எப்டி இவன் கண்டு புடிச்சான்?' பலவாறு சந்தேங்களுடன் உணவை முடித்தவள் மறக்காமல் நன்றியை தெரிவித்து வேலையை தொடர்ந்தாள்.
அந்த நேரம் கதவை தட்டி உள்ளே வந்த ஜெயன், "சார் எல்லாரும் காண்பரென்ஸ் ரூம்ல வெயிட் பன்றாங்க"
தன்னுடைய இருக்கையில் அமர்ந்து சோம்பல் முறித்தவன், "எல்லா பைல்ஸ்யும் எடுத்துட்டு போங்க ஜெயன். ரொம்ப நாள் ஆச்சு நல்ல கேம் விளையாண்டு" அவன் இருக்கையில் இருந்து எழுந்து மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி நடந்தான்.
எப்டி இருக்கு?
இனி தா சம்பவங்கள் ஆரமிக்க போகின்றது.
புடிச்சா ஷேர் பண்ணுங்க உங்க பிரிஎண்ட்ஸ்கு, அப்றம் மறக்காம லைக் அண்ட் கமெண்ட் பண்ணுங்க.
பை டேக் கேர் எல்லாரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro