அத்யாயம் - 11
தலையை அழுத்தி கண்களை இருக்க மூடி நாற்காலியில் தலை சாய்ந்து அமர்ந்திருந்த உதய் என்ன நினைக்கின்றான் என்று தெரியாமல் அடுத்த என்ன வேலை செய்ய என்று தெரியாமல் அவனுக்கு சற்று தள்ளி நின்று கடந்த அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி...
நேரம் செல்ல செல்ல தன்னை அறியாமல் தூக்கம் வர அதை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருந்தாள்...
'காலைல வந்த ஒடனே தூங்குறவன் கொஞ்சம் வீட்டுல தூங்கி எந்திரிச்சிட்டு தான் வர்றது... இவனை பாத்து நமக்கும் தூக்கம் வருதே'
இதற்குமேல் பொறுத்தால் தான் அந்த இடத்திலேயே தூங்கி சரிந்து விடுவோம் என்று உணர்ந்து உள் சென்றிருந்த குரலை கடினப்பட்டு வெளியில் இழுத்து, "சார்" என்றாள்...
அவனிமிருந்து பதில் எதுவும் இல்லை... 'நெஜமாவே தூங்கிட்டாரா?' வியந்தவள் அவனது இருக்கைக்கு அருகே செல்ல கால்கள் நடுங்கினாலும் மனதில் இருந்த தயக்கத்தையும் ஓரம் தள்ளி அவனுக்கு அருகில் சென்றவள் அவனது அகன்ற தோள்களை தொட சென்ற கைகளை பாதியிலேயே நிறுத்தியது அவனது சிறிய அசைவு...
திடுக்கிட்டு இரண்டடி பின்னே சென்று நெஞ்சில் கைவைத்து வேகமாக சென்ற இதயத்துடிப்பை அடக்கி வைத்தாள்... இதயத்தை நிலைக்கு கொண்டு வந்த பிறகு அவனது அமைதியான மற்றும் ஆழ்ந்த யோசனையில் இருந்த முகத்தை உன்னிப்பாக கவனித்தவளுக்கு என்றும் இல்லாமல் இன்று அவன் சற்று வித்யாசமாக தெரிந்தான்...
அந்த வித்யாசம் என்ன என்றால் அவனை ஒவ்வொரு அணுவாக கவனித்தாள் அந்த குளிர்ந்த எசியையும் தாண்டி அவன் விருப்பப்படி ஓடும் அந்த மின்விசிறியின் காற்று அவன் அடர்த்தியான தலைமுடியை வருடி சென்ற பொழுது அதற்கு இணைய அசைந்தாடும் அவன் ஒற்றை முடி அவன் அமைதிக்கு இடையூறாக தோன்றியது.
அதில் சுருங்கும் அவன் நெற்றியும் புருவங்களும் ஒரு வித சிலிர்ப்பை அவள் உடலில் தந்தது... அந்த செதுக்கி வைத்தாற்போல் இருந்த அந்த கூர்மையான மூக்கும் அவன் முகத்தில் இருக்கும் கம்பீரமும் அவன் கண்களில் எப்பொழுதும் தெரியும் அந்த அதிகாரமும், உயிரின் ஆழம் வரை சென்று ஊடுருவும் பார்வையும் இல்லாதது அவளுக்கு ஒரு நிம்மதி அளித்தது இந்த சிறு இடைவேளை அவனை ரசிக்க போதுமானதாக இருந்தது...
அவனுடைய மறைமுகமான உதவிகளும் அவளை ரகசியமாய் பார்க்கும் பார்வையும் மனதில் ஒரு சிறிய ஆனந்தம் கலந்த ஆசையை தூண்டிவிட... "ஆனாலும் இவரு இவ்ளோ ஹண்ட்ஸோமா இருக்க கூடாது... பேசாம இவரையே கரெக்ட் பண்ணிடலாமோ" என்று நினைத்தவுக்கு அவன் கன்னங்களை கிள்ளி விளையாட ஆசை எழுந்தது யாழினிக்கு...
அவன் கன்னங்களை தாண்டி சென்ற அவள் கண்கள் அவனது கழுத்து வரை பட்டன் போடப் பட்டிருந்த அந்த விலையுயர்ந்த சட்டையையும் கோட் சுட்டும் பார்த்ததும் தான் நினைவிருக்கு வந்தது அவனுடைய தகுதியும் அவளுடைய நிலைமையும்...
உள்ளத்தில் உதித்த அந்த நந்தவனம் நொடி பொழுதில் இருன்டிட இதயமும் கனமாகியது... 'அட நாம ஆசை பட்டது எப்பதான் கெடச்சிருக்குது பீல் பண்ணாத யாழ்... அதுவும் ஒரு நிமிசத்துல வந்த க்ரஸ் தான் இது' ஆனாலும் இதயத்தில் உதித்த விரக்தி அந்த காந்த கண்களில் அப்பட்டமாக தெரிந்தது...
தனக்கு தானே ஆறுதல் அளித்துக் கொண்டிருந்த நேரம் உதய் சட்டென எழுந்து அமர்ந்து ஜெயனுக்கு அழைத்தான், "ஜெயன் வாங்க இங்க" என்று எழுந்து அவன் இருக்கைக்கு அருகில் இருந்த அலமாரியில் இருந்த பைலை எல்லாம் எடுத்து புரட்ட ஆரமித்தான்...
இவை எல்லாம் நொடி பொழுதில் நிகழ்த்திட அவன் என்ன செய்துக் கொண்டிருந்தான்? என்ன திடீரென யோசித்தான்...? அப்ப இவ்வளவு நேரம் தூங்கலையா...?? என்று புரியாமல் வியப்பாக அவனையே யாழினி பார்த்துக் கொண்டிருந்தாள்... அலமாரியில் ஒரு பைலை எடுத்தவன் தனது மடிக்கணினியில் எதையோ தேட அந்த நேரம் அறைக்குள் வந்து நின்றான் ஜெயன் மின்னல் வேகத்தில்...
"சொல்லுங்க சார்"
"ஜெயன் நீரஜ் மும்பைல ஒரு புது ரிசார்ட் வாங்கிரூக்கானு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சொன்னிங்கல"
"ஆமா சார் அது பீச் பக்கத்துல இருக்குது"
"அவனுக்கு ப்ராபிட் தர்ற மாதிரி பீச்க்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துலயே ரெண்டு ரிசார்ட் இருந்துச்சு, அந்த ரிசார்ட் ரொம்ப டேமேஜ் ஆன ஸ்டேஜ்ல இருக்குது அவன் ஏன் அந்த ரிசார்ட் வாங்குனான்-னு எனக்கு ரொம்ப நாள் டவுட் இருந்துச்சு இன்னைக்கு தான் அதுக்கு பதில் கிடைச்சிருக்குது...
இங்க பாருங்க ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவன் கம்பெனி எடுத்த இந்த பெரிய ப்ராஜெக்ட் தான் பிக்ஃபூட் இந்தியா (Bigfoot India). கார்ஸ்-கு வர்ற ஸ்பேர் பார்ட்ஸ் மட்டும் இல்லாம எலக்ட்ரிக் கார்ஸ்-கு இன்ஜின் தயாரிக்கிறது அதுவும் லோ பட்ஜெட். இது கவர்மன்ட் ப்ராஜெக்ட்.
ஆனா, ப்ராஜெக்ட் ஸ்டார்ட் ஆகி 7வது மந்த்ல ப்ராஜெக்ட்-ல ஒரு பெரிய சேஞ் வந்துச்சு ப்ராஜெக்ட் ஓட டைம் கொறஞ்சது ரெண்டு வருசத்துக்கு பண்ண வேண்டிய ப்ராஜெக்ட் ஒரு வர்சதுக்குள்ள முடிக்கணும்னு டெட் லைன். அதுனால ஒரு சின்ன ஸ்டார்ட்-அப் கம்பெனி அவங்க கூட சேந்து ஒர்க் பண்ண கவர்மன்ட் ஆர்டர் போட்டுச்சு அப்ப தான் ப்ராப்லம் ஸ்டார்ட் ஆனதே...
நீரஜ் அவனோட பார்ட்னர் கூட சேந்து அந்த சின்ன கம்பெனி ஓட ஐடியாஸ் எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணாங்க சோ அந்த கம்பெனி பிரஷர்-ல ப்ராஜெக்ட்ல இருந்து வெளியேறுனாங்க.
நௌவ் கமிங் டு தி பாயிண்ட். இந்த ரிசார்ட்கும் அந்த ப்ராஜெட்க்கும் ஏதோ கணக்க்ஷன் இருக்கனும்... மெயின் பாயிண்ட் இந்த ரிசார்ட் பெர்பக்ட் கண்டிஷன்-ல இருக்குது பட் இன்னும் யூஸ்க்கு வரல சோ சம்திங் இஸ் நாட் ரைட் தேர்...
ஜெயன் நீங்க அந்த ரிசார்ட் சுத்தி நம்ம ஆளுங்கள வாட்ச் பண்ண சொல்லுங்க முக்கியமா நைட் நேரத்துல... நேரம் காலம் பத்தி கவலை இல்லை அங்க எதாவது சந்தேக படுற மாதிரி ஒரு சின்ன விசியம் நடந்தாலும் எனக்கு நியூஸ் ஒடனே வரணும்... இத வச்சு தான் என்னோட ப்ராஜெக்ட் என் கைக்கு வர வைக்கணும்"
'எங்க இருந்து எங்க முடிச்சு போடுறாரு' அவனை வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி. ஆனால் என்ன சொன்னாலும் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குது...
"ஏன் அண்ணா இவரு எப்பயுமே இப்டி தான் லூசு மாதிரியே பேசுவாரா?" அவளை கேள்வியாய் பார்த்த ஜெயன் புருவங்கள் உயர்த்த, "இல்ல நல்லா தூங்கிட்டு இருந்தாரு திடீர்னு எந்திரிச்சு சம்மந்தமே இல்லாம எதையோ பேசுறாரு... இல்ல எனக்கு புரியல" என்றாள் குழப்பத்துடன்...
அந்த அமைதியின் உறைவிடமான அறையில் அவளது பதுங்கிய குரலும் அவன் கூர்மையான செவிகளில் அழகாக ஒலித்தது... மேலோங்கிய சிரிப்பை உள்ளடக்கியவன் ஜெயனை பேச விடாமல், "நேத்து உங்ககிட்ட ரிப்போர்ட் என்ன ஆச்சு யாழினி?"
"உங்க டேபிள்ல வச்சிட்டேன் சார் ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே" அந்த ஒரு மணி நேரம் சற்று பம்மியே வந்தது...
"ஒகே"
"சார் நீங்க சொன்ன இடத்துல 100 ஏக்கர் இடம் இந்த வாரம் ரெஸிஜிஸ்டெர் பண்ணிடலாம் நீங்க ஒரு தடவை வந்து பாத்துட்டு கன்ப்பார்ம் பண்ணிட்டா" - ஜெயன்
"என்ன என்ன அதுல இருக்கும்?"
"ஒரு 57 ஏக்கர் தென்னந்தோப்பு தனி இடம் அத விட்டு ஒரு நானுறு மீட்டர் தள்ளி 21 ஏக்கர் நெல் அதுகூடவே மிச்சம் இருக்க 22 ஏக்கர்ல வாழைதோப்பு, மாந்தோப்பு, லெமன், கொய்யா, சாமை இப்புடி எல்லாம் சேந்து இருக்குது சார்"
"எனக்கு ஒரே ஒரு ஆசைத் தாண்டா உதய்... நம்ம குடும்பமா வருசத்துக்கு ஒருப் பத்து நாள் எந்த ஒரு தொழில் சம்மந்தமானப் பேச்சும் இல்லாம, ஆயிரம் தென்னைமரத்துக்கு நடுல இருக்க ஒருக் குட்டி வீட்டுல எல்லாரும் சந்தோசமா இருக்கனும். அப்டியே ஆதி, கெளதம், ஆதவன், தமிழ் பேரையும் வர சொல்லிடு. அந்தப் பசங்க இல்லாம எனக்கு இப்ப எல்லாம் எதுவுமே செய்யத் தோன மாட்டிக்கிது...
தாகத்துக்கு இந்த மினெரல் வாட்டர் இல்லாம இளநீர் தண்ணிக் குடிச்சிட்டு ராத்திரி நேரத்துல மாடிலப் போய் நிலாச்சோறு என் கையாள எல்லாருக்கும் உருண்டைப் பண்ணிக் குடுக்கணும் தம்பி. காலைல விறகு அடுப்புல வச்சு மண் பானைலச் சாப்பாடு ஆக்கி போடணும்.
அப்புடியே பம்ப் செட்டுல இருக்குற பிரச்சனை எல்லாம் மறக்குற அளவுக்கு குளிக்கணும். அந்தக் கிராமத்து வாழக்கையை ஒரு பத்து நாள் மட்டும் அனுபவிக்கனும் உதய். உங்க அப்பாக் கிட்ட இத சொன்னா சிரிச்சிட்டு போய்ட்டாருடா, நீ நல்ல நிலைமைக்கு வந்து அம்மாக்கு சும்மா கொஞ்சம் இடம் வாங்கி ஒரு இந்த ஆசைய மட்டும் பண்ணிடு..." காதில் தாயின் வார்த்தை ஒலித்துக்கொண்டே இருந்தது...
"பம்ப் செட்டு இருக்கும்ல ஜெயன்?"
'இவரு என்ன கொழந்த மாதிரி பம்ப் செட்டு பத்தி கேக்குறாரு...' அவனது மன வேதனையை அறியாமல் தன்னுள் சிரித்தவன், "எல்லாமே இருக்கும் சார் ஒன்னு இல்ல பல பம்ப் செட்டு இருக்குது..."
"சரி நாளைக்கு ப்ராபர்ட்டி டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ஒரு தடவ செக் பண்ணிட்டு சொல்லுங்க ரெஜிஸ்டர் பண்ணிடலாம்"
"யார் நேம்ல சார்" பதில் தெரிந்தும் இந்த முறையாவது வேறு பதில் வரும் என்ற ஒரு நப்பாசையில் தான் இன்றும் கேட்டான்...
"இது என்ன கேள்வி வழக்கம் போல தம்பி தங்கச்சி பேர்ல ஈக்குவல்லா ஷேர் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிடுங்க"
இதுவே உதய். தனக்கென ஒரு போதும் எதையும் செய்திட மாட்டான் வாங்கும் ஒவ்வொரு பொருளும் அவர்கள் நால்வருக்கே... ஆனால் இது அவர்கள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வான் அதன் அர்த்தம் இப்பொழுது வரை ஜெயனுக்கும் விளங்கவில்லை அதை அவனிடம் கேட்கும் துணிவும் அவனுக்கு எழுந்ததில்லை...
"பேசாம ஒன்னு பண்ணு... ஒரு வேஷ்டி துண்டு கட்டிட்டு அவனுகளுக்கு வேலை பாக்க ஆரமிச்சிடு அது ஒன்னு மட்டும் தான் நீ பண்ணல"
உதய்யின் பேச்சை கேட்ட ஆதவன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே உள்ளே வர அவனை பொருட்படுத்தாமல் தனது வேலையை பார்க்க ஆரமித்தான் உதய்...
'கரெக்ட்டு' என்று ஜெயன் மெச்சுதல் பார்வையோடு ஆதவனை பார்த்தான்...
ஆதவனின் பார்வை அங்கு ஓரமாக நிற்கும் யாழினியை பார்த்து பளிச்சிட்டது, "ஹலோ மிஸ். யாழினி நல்லா இருக்கீங்களா?" என்றான் ஒரு குறும்பு பார்வையோடு உதய்யிடம் ஒரு பக்க பார்வையை வைத்து...
"சார் ரெண்டு நாள் முன்னாடி தான பாத்திங்க... என்கிட்டே கூட சாக்லேட் திருடி சாப்டிங்க மறந்து போச்சா?" என்றாள் புன்னகையுடன் அவனை வாரியது தெரியாமல்...
'இது உனக்கு தேவையா?' என்று உதய் ஆதவனை பார்த்து, "சொல்லு டா எதுக்கு வந்துருக்க?" என்றான்...
"ஒண்ணுமில்ல மச்சான் உங்க வீட்டுல உனக்கு கல்யாண பேச ஆரமிக்க பேசிட்டு இருந்தாங்க அது தான் உன் காதுல போட்டுட்டு அப்டியே என்ன பண்ணுறான்னு பாக்கலாம்னு வந்தேன்" என்று கூறியவன் கண்கள் தரை தாழ்ந்து நின்ற யாழினியின் முகத்தை அளந்து நின்றது...
"சரி பாக்கட்டும்... நீ சொல்லு ஆதியை பத்தி விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு?" - உதய்
"அட அது கெடக்குது மச்சான் உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?" - ஆதவன்
"டேய் உனக்கு பொழுது போகலனா என்கிட்ட வந்துருவ போடா வேலைய பாரு போ" - உதய்
"மச்சி சொல்லுடா அப்ப தான் நான் போவேன்... இல்லனா விடிய விடிய இங்க தான் இருப்பேன்" குழந்தை போல் ஆடம் பிடித்தான் ஆதவன்...
இவை எல்லாம் யாழினி நண்பனை பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ளவே இந்த ஆராய்ச்சி. அதை உணர்ந்து கொண்ட உதய் அவனை கேலி செய்யும் நோக்கோடு அவனுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான்...
"இருடா மச்சான் இந்த ஃப்லோர்க்கு தனியா ரெண்டு கார்டுஸ் போடணும்னு நெனச்சேன் நீ இருந்தா இன்னும் வசதியா போச்சு. சாப்பாடு நைட்-கு ஜெயன் வாங்கி குடுத்துட்டு தான் நீங்க போகணும்"
"ஐயோ சிரிச்சிட்டேன்... பேசமா வரியா நீயும்? காலேஜ்-ல ஒரு பொண்ணு பாத்துருக்கேன் அந்த பொண்ணோட ஃப்ரண்ட் நல்லா இருக்கா..."
தன் வாக்கில் பேசிக் கொண்டிருந்த ஆதவனை தடுத்த உதய், "டேய் லூசு பயலே வந்ததுல இருந்து தொன தொனனு லூசு மாதிரியே பேசிட்டு இருக்க வெளிய போடா மொத"
"மச்சி நீ எனக்காக கோவில் கட்டுவனு எல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்கேன் ஆனா நீ உன் நண்பனை பாத்து வெளிய போன்னு சொல்லிட்டியே" நெஞ்சில் கை வைத்து நடித்தான் ஆதவன்...
"உன்ன எல்லாம் கூட வச்சிருக்கதே பெருசுடா. உனக்கு விஷம் வச்சு பொறந்தபயே கொன்னுருக்கணும் அப்டி பண்ணிருந்தா உன் தம்பிக்கு ஆச்சும் பொறுப்பு வந்துருக்கும் இப்ப பாரு அவனும் உன்ன மாதிரியே உருப்புடாம ஊரு ஊரா சுத்திட்டு இருக்கான்... நானும் நிம்மதியா இருந்திருப்பேன்"
"வாய்ப்பில்லை ராஜா... டேய் அவனை பத்தி சொல்ல மறந்துட்டேன் உன்கிட்ட... அவன் நேத்து என்ன ஒரு பிரச்சனைனு காலேஜ்-கு துணைக்கு கூட்டிட்டு போனான் சரி பசங்க கூட பிரச்சனைன்னு நெனச்சு போனேன் ஆனா அங்க போனதுக்கு அப்றம் தான் தெரிஞ்சது ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்து அவ அப்பன் காரன் இவன் கைய உடைக்க காத்துட்டு இருந்திருக்கான்"
ஆதவனின் பேச்சில் ஆர்வம் பொங்க அவனையே பார்த்து ஜெயனும் யாழினியும் ஆழ்த்திட அவன் மேலும் தொடர்ந்தான், "காலேஜ் வாசலையே அவன் நிக்கிறாண்டா இவன் கார பாத்த ஒடனே கார உள்ளேயே விடாம வண்டிய வழி மாத்திட்டான்... நானும் சரி பேசி சமாளிச்சிடலாம்னு பாத்தா அவன் எடுத்த ஒடனே அருவா கம்புனு போய்ட்டான்...
சரி பயபுள்ள என்ன பண்ணுச்சுனு கேட்டேன்... 'இவன் என் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்துருக்கான்' னு சொன்னாரு... 'லவ் லெட்டர் தான சார் புடிக்கலான விட்ருங்க ஏன் அடிக்கிற அளவுக்கு வர்றிங்க' -னு இவனை நம்பி வீரப்பா பேசுனேன் டா ஆனா பயபுள்ள என்ன தெரியுமா பன்னிருக்கான்...?? ரெண்டு லவ் லெட்டர் குடுத்து உனக்கு புடிக்கலைனா உன் தங்கச்சிக்கு இந்த லெட்டர்-அ பாஸ் பண்ணிடுன்னு எழுதிருக்கான் அத அந்த பொண்ணோட அப்பன் பாத்துட்டான்"
"அப்றம்" என்றாள் யாழினி ஆர்வம் தெறிக்கும் குரலில் முகத்தில் சிறு புன்னகையுடன்...
"அப்றம் என்ன பின்னாடி திரும்பி ஏண்டா அப்டி பண்ணணு மிரட்டுற மாதிரி நடிக்கலாம்னு பாத்தா ஆளையே காணோம்டா. ஓடிப் போய்ட்டான். என்ன மட்டும் அந்த குண்டன் கிட்ட தனியா விட்டுட்டு... அவன் என்னமோ நான் அவன் பொண்டாட்டிக்கு லெட்டர் குடுத்த மாதிரி வச்சு செஞ்சிட்டான்" அவன் கூறிய தொனியை கேட்டு யாழினி அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரமித்தாள்...
"வடிவேல் மாதிரி சட்டை கிழிஞ்சு தான் எஸ்கேப் ஆனேன்... அப்றம் வந்து நிக்கிறாண்டா என் தம்பி கைல ஜூஸோட நல்லவன் மாதிரி..."
"சார் உங்கள பாத்தா வடிவேல் மாதிரியே இருக்கு" ஜெயன் மனதில் நினைத்ததை யாழினி வாய் திறந்து கூறிவிட்டாள்...
"சிரி மா சிரி..." ஆதவன் அலுத்துக்கொண்டான் கண்களை உருட்டி...
"சரி வந்த விசையத்தை சொல்லுடா வேலை நெறய இருக்கு..." என்றான் உதய் அவன் கதையில் ஆர்வம் காட்டாமல்... இது அடிக்கடி நிகழ் நிகழ்வு தானே பழகி இருந்தான் உதய் மாதவன்...
"ஆதியை பாக்க உன் மாமா ரெண்டு நாளா ட்ரை பண்ணிட்டே இருக்காரு... நேத்து ஆபீஸ்-ல பாத்துருக்காரு..."
இது தெரிந்தது தானே... இவ்வாறு நடக்கும் என்று உதய் முன்னரே யூகித்திருந்தான்...
எதற்காக தன்னுடைய தாய் மாமன் இவ்வாறு தன்மேல் வன்மம் வைத்திருக்கின்றார் என்று இன்று வரை உதய்யால் அனுமானிக்க இயலவில்லை...
விஷ்ணுவிடம் அவர் காட்டும் நெருக்கம், பாசம், அக்கறை எல்லாம் அவனுடன் மட்டுமே நின்றுவிட அதுவம் அவன் கண்களுக்குப் போலியாகவேத் தெரிந்தது அதுவும் அவன் சித்தி சித்தப்பாவிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் பொறுக்க இயலாதக் கோவத்தை அளித்தாலும் அவருடைய வயதிற்கே மரியாதையை அளித்து வந்தான்...
அவருடைய இந்த குணம் தனக்கு மட்டுமா தவறாகத் தென்படுகின்றது என்று நினைத்தப் பொழுது ஹரி அவரை தவிர்க்கும் விதமும் சகோதரிகளை அவர் இருக்கும் பொழுது அவர் முன்னே அனுமதிக்காமல் இருக்க, தனக்கு தோன்றியது அவனுக்கும் தோன்றியுள்ளது என்று புரிந்துக்கொண்டான்...
"ஆதி என்ன சொன்னான்?" - உதய்
"வழக்கம் போல அவரை மதிக்காம அனுப்பி விட்டுட்டான்" உதய்யின் உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது...
"ம்ம்" - உதய்
"என்னடா கதையா சொல்லிட்டு இருக்கேன்? அவன் ஒரு லூசுடா இப்ப இப்புடி இருப்பான் நாளைக்கு உனக்கு எதிரா எதாவது காட்டுன ஒடனே மாறிடுவான். எத்தனை நாள் தான் அவரை அவன் முன்னாடி வராம தடுக்க முடியும்னு நினைக்கிற?" - ஆதவன்
"அவன் லூசு தான் அதுக்காக அவன் முட்டாள் இல்லை ஆதவா. போகட்டும் எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்ளோ தூரம் என் மாமா போகட்டும் எனக்குன்னு ஒரு மூளை இருக்குதுல அத வச்சு நான் பொழச்சுக்குவேன்"
"என்னமோ போ. ஆதி விசயத்துல நீ ரொம்ப ஈஸியா இருக்க அவனை பத்தி உனக்கும் தெரியும் எப்ப எப்டி இருப்பான்னு தெரியாது..." - ஆதவன்
ஆதவனின் பதிலில் சத்தமாக சிரித்துவிட்டான் உதய், "ஏண்டா இன்னுமா நீ அவனை நம்பிட்டு இருக்க? என்ன பலி வாங்கணும்னு நெனச்சிருந்தா அவன் எப்பையோ பன்னிருப்பான்... இன்னேரம் வழக்கம் போல எதாவது ஒரு டீ கடைல அந்த ரெண்டு காமெடி பீஸ் கூட சேந்து என் கார் டயர பஞ்சர் ஆக்குறதா இல்ல செருப்பை திருடுறதான்னு யோசிச்சிட்டு இருப்பானுக..."
****************
வராத ஜூஸை வா வா என்று போராடி இழுத்துக் கொண்டிருந்தான் கெளதம்... அதை ஏக்கமாய் பார்த்து நின்ற தமிழ்...
அந்த தெருவில் இருக்கும் ஒரு சிறிய டீ கடை அது. எப்பொழுதும் ஆட்கள் அதிகமாகவும் அல்லாமல் குறைவாகவும் அல்லாமல் இருக்கும் இடம். அங்கிருக்கும் டீயின் வாசனை போவோர் வருவோரை எல்லாம் கட்டி இழுக்கும், அதை நம்பி தான் இவர்களும் முதல் முறை அங்கு சென்றனர்.
பிறகு அங்கிருக்கும் அந்த ரோஸ் மில்க்கின் சுவையில் மயங்கி அங்கேயே அவர்கள் சங்கத்தை கூட்ட தொடங்கினர். வாரம் ஒரு முறையேனும் அங்கு செல்லாமல் அவர்கள் பொழுது ஓயாது...
"மச்சான் எனக்கு ஒரு வாய் டா" தமிழ் கெஞ்சி கொஞ்சி பார்த்தும் கெளதம் அசரவில்லை...
"மச்சான் இது யோசிக்கிறவங்களுக்கு. நீ அமைதியா நின்னு வேடிக்கை பாரு போ" - கெளதம்
"சாமியோவ் சாத்துக்குடி ஜூஸ் கூட நல்லாதான் போடுற" ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்த கெளதம் அந்த கடைக்காரர் குப்புசாமியை பாராட்டினான்...
"பச்சை தண்ணி கூட வைக்க தெரியாதவன்லாம் என்ன பேசுறான்... மொத அந்த பாக்கி ரெண்டாயிரத்தை தா டா" - கடைக்காரர்
"என்ன குப்பு காசு எல்லாம் கேக்குற?" எகிறினான் தமிழ்...
"ஏண்டா உங்களுக்கு ஓசில ஜூஸ் குடுக்குறதுக்கா எங்க ஆத்தா என்ன பெத்து போட்டுச்சு..." இது அங்கே நடக்கும் வழக்கமே...
இதை எல்லாம் பொறுமையாய் வண்டியில் சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதி மேலும் இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று அமைதியாய் நின்றான்...
"ரைட்டு விடு... ரோஸ் மில்க் தரியா? தாகமா இருக்கு. இவனே ஜூஸ் குடிச்சுபுட்டான்" அப்பாவியாய் கேட்டான் தமிழ் அவரிடம்...
"அந்தா பச்சை தண்ணி இருக்குது பாரு போய் குடி" - கடைக்காரர்
"ஆதி..." - தமிழ்
பொறுமை காற்றில் பறக்க, "யோவ் குப்புசாம்மி குடேன்யா அவனுக்கு. நான் காசு தரேன்" ஆதி கூற அவர் அவர்கள் மூவரையும் முறைத்துக்கொண்டு அவனுக்கு கொடுத்தார்...
"டேய் எனக்கு கொஞ்சம்..." கெளதம் தமிழிடம் கெஞ்ச, "தர மாட்டேண் டா உனக்கு தர மாட்டேண் டா. நீ எனக்கு தந்தியா?" சிறு பிள்ளையாய் சண்டையிட்டு கொண்டிருந்தனர்...
"மச்சான் போதும்டா வேணும்னா நீ இன்னொன்னு வாங்கிக்கோ டா. ஆனா தயவுசெஞ்சு ஏதாச்சும் ஐடியா சொல்லுங்க டா" ஆதி கெஞ்சிக் கொண்டிருந்தான்...
"என்ன ஐடியா மாப்பிள்ளை?" அந்த கடையில் இருந்த ஒரு குச்சி முட்டையை எடுத்து சப்பிகொண்டே கெளதம் ஆதியிடம் கேட்டான்...
"அந்த குச்சியை வச்சே கொறவளைய கிழிச்சிடுவேன்... சனியனே சாகடிக்காத" - ஆதி
உதய்யை பழிவாங்கவே இந்த கூட்டம். ஆனால் அதை எவ்வாறு செய்ய்வதென்று தெரியாத ஆதி அறிவில் வளமை பெற்றிருக்கும் அவனது நண்பர்களிடம் தஞ்சம் புகுந்தான்... அறிவுரைக்கு லஞ்சம் கேட்டே இந்த ஜூஸ் நாடகம் நடக்கின்றது...
"ஐயோ மச்சி டென்ஷன் ஆகாத இப்டியே கத்துனனா BP வந்துடும்" தமிழ் ஆதியின் தோளில் கைபோட்டு சமாதான படுத்த,
"ஏய் சீய் கைய எடு நாயே. ஐடியா சொல்றிங்களா இல்ல குடிச்சதுக்கு காசு குடுக்குறீங்களா?" - ஆதி
"நான் சொல்றேன்" கெளதம் முந்தினான், "அவன் வாக்கிங் போறப்ப நாய் விட்டு கடிக்க விட்ரலாமா"
"போடா லூசு... அவன் நாய்க்கு எல்லாம் பயப்பட மாட்டான்... அவன் வாக்கிங் போறப்ப பர்ஸ்ச திருடிறலாமா?" - தமிழ்
"அவனுக்கு இருக்குற காசுக்கு அந்த பர்ஸ் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல... பேசாம அவன் வாக்கிங் போறப்ப ஆளு வச்சு முகத்தை துணியால மூடி மண்டைல ரெண்டு கொட்டு கொட்டிட்டு ஓடிறலாமா?"- கெளதம்
"கேக்கவே நல்லா இருக்குது டா ஆனா அவனுக்கு ரெண்டு கொட்டு எல்லாம் பத்தாதே..." நாடியை தடவி யோசித்த தமிழ், "ஏண்டா ஆதி இப்டி பண்ணிட்டா?"
"எப்புடி?" புருவங்களை உயர்த்தி எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் கேட்டான் ஆதி...
"அவனோட கார் டயர பஞ்சர் ஆக்கிடலாமா வீட்டுக்கு நடந்தே போகட்டும்"
"போடா ஃபூல். ரோட்டுல வேற டாக்ஸி... ஏன் அவனே ஓராயிரம் கார் வச்சிருப்பான்... நான் சொல்றேண் டா அவன் வாக்கிங் போறப்ப..." கௌதமை இடை மரித்த தமிழ்...
"டேய் நீ இன்னும் வாக்கிங்ல இருந்து வரலையா?"
வண்டியில் இருந்து நிமிர்ந்து நின்ற ஆதி, "நான் ஒரு ஐடியா சொல்றேன்..." என்ன என்று ஆர்வமாய் அவனை பார்த்தனர் இருவரும், "குப்புசாம்மிகிட்ட எலி மருந்து இருந்தா வாங்கி குடிச்சிட்டு அதோ அங்க வருது பாரு தண்ணி வண்டி அதுல அடிபட்டுச் செத்துருங்க... நாட்டுல ஜனத் தொகையாச்சும் கம்மி ஆகும்" என்றான் அடக்கி வைத்தக் கோபத்துடன்...
"அப்டிலாம் சொல்லாத ஆதி" பொய் கண்ணீர் வடித்தனர் இருவரும்...
"நடிக்காதிங்க டா நானும் எவ்வளவு நேரம் தான் அமைதியவே இருக்கது? கேன கூமுட்டை மாதிரி பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். அவ்ளோ பாசம் அவன்மேல் இருந்தா போங்க அவன்ட்ட... சும்மா இங்க இருந்து நடிச்சிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல யாருக்கும்..."
"ஆதி அப்டிலாம் இல்லடா எங்களுக்கு நீயும் முக்கியம் தான் டா... அவன் உன்னோட உதய்டா..." - தமிழ்
"என் உதய்ங்கிற நால தான்டா சண்டை போட போறேன். வேற யாராச்சும்னா இன்னேரம் அவனை பொதச்ச இடத்துல புல்லே மொளச்சிருக்கும்... அவன் என்ன கண்டந்துண்டமா வெட்டி போட்ருந்தா கூட சந்தோசமா செத்துருப்பேன்.
ஆனா, அவன் என் அப்பா மேல கை வச்சிருக்கான்... எந்த புள்ளையால பாத்துட்டு சும்மா இருந்துருக்க முடியும்? நான் பட்ட கஷ்டத்துக்கு இல்லனாலும் என் தங்கச்சி ஓட கண்ணீருக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்... சொல்ல வைப்பேன்" என்றான் தீர்க்கமாக...
"உதய் அப்புடி பண்ணிருப்பான்னு நம்புறியா ஆதி?"
"கண்ணு முன்னாடி எல்லா ஆதாரமும் இருக்கே டா... அவன் அதப் பண்ணலைனா ஏன் அதை மறுத்துப் பேச மாட்டிக்கிறான்? அப்ப அவன் பண்ணிருக்கானு தான அர்த்தம்?"
"வெறும் ஆதாரத்தை வச்சு ஒரு முடிவுக்கு வராத ஆதி" கௌதமின் குரலில் ஒரு கடுமை கலந்த இறைஞ்சுதல் இருந்தது...
நண்பர்கள் இடையில் நட்பு உருவாகவிடினும் மேலும் பிளவு ஏற்பட யாரும் விரும்பவில்லை... அதில் ஆதவனும் சரி, கெளதம் தமிழும் சரி, குறியாய் இருந்தனர். ஆனால் ஆதியும் உதய்யும் சிரமமே இன்றி தகர்த்தனர் எளிதாய்...
"இங்க பாருங்க என்ன சமாளிக்கிற வேலைய இதோட நிறுத்திக்கோங்க கூட இருக்கதா இருந்தா இருங்க. இல்லனா நானே என்ன பண்ணணுமோ அத பண்ணிக்குவேன்... நான் முடிவு பண்ணது பண்ணது தான்"
"டேய் நீ செய்றது தப்பு தான். ஆனாலும் நாங்க உன் கூட இருப்போம் எப்பையுமே... எல்லை மீறி நீ போக மாட்டங்கிற நம்பிக்கைல..." ஒரு சிறு புன்னகையுடன் தமிழ் கூற...
தலையை அசைத்து அவன் கூறியதை ஏற்றுக்கொண்ட ஆதியிடம் கெளதம், "என்ன பண்ணலாம்னு இருக்க?"
"சரியாய் வருமான்னு தெரியல... எனக்கு குடுத்த அதே அடியை அவனுக்கு நானும் கொடுக்கணும்னு ஆசை படுறேன்..."
"அவன் கம்பெனி-ல கை வைக்க போறியா?" - கெளதம் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் வாயை பிளந்து...
"என்ன டா லூசு மாதிரி பேசுற அவன் எவ்ளோ பெரிய கம்பெனி வச்சிருக்கான் அதுல நம்மளால ஒரு சின்ன துரும்பை கூட அசைக்க முடியாது"
தன்னுடைய பையிலிருந்து ஒரு டாக்குமெண்டை எடுத்து நீட்டிய ஆதி, "என்னால முடியாது ஆனா இது பண்ணிடும்ல?"
புரியாது விழித்த இருவரும் அதை வாங்கி பார்த்து அதிர்ந்தனர்... அதில் உதய்யின் கட்டுமான நிறுவனம் கட்டிய 10 அடுக்குமாடி இல்லங்கள் அதன் அனுமதிக்கு அதிகமான தளங்களை கட்டியதாக இருந்தது அதுமட்டும் இன்றி அதில் பயன்படுத்திய பொருட்களின் தரம் அவர்கள் குறிப்பிட்டிருந்த தரத்திற்கு மிக குறைவாக பயன்படுத்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தது...
"இது எப்டி டா உனக்கு கெடச்சது?" - தமிழ் ஆச்சிரியமாக கேட்டான்...
"நேத்து அவன் மாமா வந்தாருனு சொன்னேன்ல அப்ப அவரு தான் குடுத்தாரு"
"நானும் அங்க தானே டா இருந்தேன் எப்டி எனக்கு தெரியாம நீ எல்லார்கிட்டையும் பேசுற?" - கெளதம்
"அவரு பேசல டா பைலை எதார்த்தமா வைக்கிற மாதிரி வச்சிட்டு போய்ட்டாரு..."
"அவரு மேலயே எனக்கு டவுட் இருக்குதுடா எதுக்கு சொந்த தங்கச்சி பையன மாட்டி விடணும்? அதுவும் முன்ன பின்ன தெரியாத ஒருத்தன்கிட்ட" தமிழின் கேள்வியில் ஆமோதித்து கௌதம் தலை ஆசைதான்...
"எனக்கும் டவுட் இருக்குது டா ஆனா அவரு ஆரம்ப காலத்துல அவன் மேல ரொம்ப பாசமா இருப்பாரு அவனே அடிக்கடி சொல்லிருக்கான் அதை. ஆனா, அந்த கண்ணுல என்னமோ சரி இல்லன்னு எனக்கு தோணுது. இன்னொரு பக்கம் பாத்தா விஷ்ணு அவர் கூட என்ன பண்ணுறான்னு யோசனையாவும் இருக்குது...
நேத்து நைட்-ல இருந்து இதே யோசனை தான் எனக்கு தலையும் புரியல வாலும் புரியல இது எல்லாத்துக்கும் மேல உதய் அப்டி பண்ணுவானானு எனக்கு குழப்பம் வேற... அவன் மேல தப்பு இருக்கோ இல்லையோ அவனை நான் கண்டிப்பா பழி வாங்குவேன் இது எனக்கு கிடைச்ச ஒரு துருப்பு சீட்டு மாதிரி"
யோசனையில் ஆதி சிகையை கோதி அவன் பாக்கெட்-ல் இருந்து ஒரு சிகெரெட்டை எடுத்து பற்ற வைத்து ஆழ்ந்து அந்த துர்-புகையை உள் இழுத்தான்...
"அவன் மேல ஒரு அடி பட்டாலும் துடிச்சு போய் நிப்பியே டா ஆனா இன்னைக்கு நீயே அதுக்கு காரணமா இருக்கலாமா ஆதி?" கவலை தேய்ந்த முகத்துடன் தமிழ் ஆதியை ஏறிட்டான்...
"ஆதி பால (ball) இங்க பாஸ் பண்ணுடா" வேர்வை சொட்ட சொட்ட இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஆதியின் கவனத்தை உதய்யின் குரல் ஈர்த்தது...
அவன் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் அவனிடம் கால்பந்தை மாற்றி விட்டவன் உதய்யை திரும்பி பார்க்காமலே வெற்றி களிப்பில் முகம் மலத்திருக்க உற்சாக படுத்திக்கொண்டிருந்த நண்பர்களை பார்த்து சிரித்து நின்றிருந்தான்...
கால்பந்தை கைப்பற்றும் நோக்கில் ஒருவன் உதய்யிடம் போராடிக்கொண்டிருக்க, வேறொருவன் வேண்டும் என்றே உதய்யை இடித்துவிட்டு கீழே சரியவைக்க சத்தத்தில் திரும்பி பார்த்த ஆதி பொங்கி எழுந்த ஆத்திரத்தில் உதய்யை நோக்கி ஓடினான்...
உதய்யை தூக்கி நிற்கவைத்தவன் அவன் உடலை தலை முதல் கால் வரை ஆராய்ந்து அவன் கணுக்கால், கைகள், கன்னம் என சிராய்த்திருந்த இடங்களை பார்த்ததும் உதய்யின் கட்டுப்பாட்டில் இருந்து புயலாய் அவனை தள்ளி விட்டவனை நோக்கி வேக வேகமாய் நடந்தான்... அவன் நடந்த வேகமே கூறியது அவனுடைய கோவத்தின் அளவை...
"எவன் டா என் உதய தள்ளி விட்டது? சொல்லு எவன் தள்ளி விட்டது... நான் இருக்குறப்பயே எந்த நாய்க்கு என் உதய் மேல கை வைக்க தைரியம் வந்துச்சு... தில்லு இருந்தா வந்து இந்த ஆதியை தாண்டி இப்ப என் உதய் மேல கை வைக்க பாரு... அவனை தள்ளி விட்டவன் கால ஒடச்சு, ஒடஞ்ச காலோட இந்த மொத்த கிரௌண்ட்டையும் நாய் மாதிரி ஓட ஓட விரட்டலை நான் ஆதி இல்ல டா... கோத்தா ஆம்பளையா இருந்தா இப்ப வாங்க டா..." வேர்வை சொட்ட கண்கள் சிவக்க கர்ஜித்த ஆதியின் குரல் அந்த மைதானத்தையே அதிர வைத்தது...
என்ன செய்தும் ஆதியின் சீற்றலை தடுக்க யவரும் இல்லை... சொல்லை காப்பாற்றும் வகையில் நண்பன் மீது கை வைத்தவனின் காலை உடைத்தே வளாகத்தை விட்டு அனுப்பிவைத்தான். அதனால் எழுந்த பெரிய போராட்டத்தில் இரண்டு வாரம் பள்ளியில் இருந்து நீக்கினர். நண்பனுக்கு துணையாய் பழியை தானும் சுமந்து உதயும் அவனுடன் வீடு சென்றது இன்றளவும் அழகாய் நினைவில் நின்றது...
அந்த நாள் உதய், ஆதியை வறுத்தெடுத்து இன்றளவும் நினைவில் இருக்க அந்த அழகிய நினைவுகளை தலையை உலுக்கி தள்ளி வைத்தான் உதய்யின் உயிர் ஆதி...
"இப்ப என்ன பண்ண போற?" கெளதம் கேட்க தோளை உலுக்கி பதில் கூறினான்.
ஆதி உதய்யின் அருகில் இருந்த வரை எந்த துன்பமும் அவனை நெருங்க விடவில்லை ஆதி. ஆனால் இன்று அவன் கண்ணில் தெரிந்த வலியை பார்த்தவனுக்கு தன்னை குறை கூறுவதா? அவன் குடும்பத்தை குறை கூறுவதா என்று தெரியவில்லை. கைபேசியை எடுத்து இருந்த ஆத்திரத்தை எல்லாம் காலை அட்டன் செய்த ஆதவன் இறக்கினான்...
"ஹலோ"
"என்ன டா பண்ணிட்டு இருக்க நீ... உன்ன நம்பி தான டா அவனை தனியா விட்டு வந்தேன் அவனை பாதுக்காம என்ன புடுங்குற வேலையா நீ பாக்குற... பெரிய இவனாட்டம் பேசுன அன்னைக்கு. இப்ப எங்க போச்சு அந்த பேச்சு மயிறு எல்லாம்... உங்கள எல்லாம் நம்பி ஒரு ஆணியையும் புடுங்க முடியாது போல... கவனிச்சிக்கிறேன் எல்லாத்தையும் இருக்குது இனி எல்லாருக்கும்" பட்டாசாய் உச்சகட்டக் கோவத்தில் பொறிந்தவன் உடனே இணைப்பை துண்டித்தான் ஆதி...
மறுபுறம் துண்டித்த கை பேசியை காதிலிருந்து எடுத்த ஆதவன் அதை அப்பாவியாய் பார்த்தான், "என்ன டா இவனா போன் பன்னான் இவனா திட்டினான்... இவனா வச்சிட்டான்... என்ன பன்னேனு சொல்லிட்டு தான் திட்டேண் டா?" ஒன்றும் புரியாமல் விழித்தான் ஆதவன் பாவம்...
எப்டி இருக்குது மக்களே?
கமெண்ட்ஸ் சொல்லுங்க...
புடிச்சா கண்டிப்பா ஷேர் பண்ணுங்க...
நன்றி வணக்கம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro