Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 14

"நூத்தி ஏழு... நூத்தி எட்டு" 

அந்தச் சிறிய மருத்துவமனையின் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆதி... அதைச் சரியாகக் கணக்கு எடுத்துக்கொண்டிருதான் தமிழ்... 

"மச்சி நூத்தி எட்டு வேண்டுதல் ஓவர் இப்ப ஒக்காரு" அந்த அறையில் இருந்த சிறியத் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதிலும் தன்னை வெறுப்பேற்றும் விதமாக வேறு சேனலை மாற்றாமல் அந்த மினிஸ்டரின் இறப்பு செய்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்... 

"இப்ப நீ அத மாத்தாம இருந்தன்னு வை, கத்திய எடுத்துக் கழுத்துலச் சொருகிடுவேன்" பொறுமையை இழந்துக் கத்தினான் ஆதி... 

'இவன் செஞ்சாலும் செய்வான்' தொலைக்காட்சியை அமைதியாக ஆஃப் செய்து விட்டான் கெளதம்...

"இந்த ஆளு எப்டி டா செத்தான்?" தலையை பிய்த்து கொள்ளும் அளவிற்கு குழப்பம் மூளையை நிறைத்திருந்தது...

"கேக்குறான் பாருக் கேள்வியை எவ்ளோ நேரம் மாடு மாதிரி அந்த நியூஸ் காரன் கத்திட்டு இருந்தான்ல செவுடன் மாதிரி என்கிட்டே கேக்குற?"

"இல்ல டா எனக்கு சந்தேகமா இருக்கு... சரி உதய் ஏன் அவங்க பழைய வீட்டுல இருக்கான்னு தெரிஞ்சதா?" 

"ம்ம்ம்ஹ்ம்ம் அவன் ஆதவன்கிட்டயே சொல்லலையாம் ஆனா விஷ்ணு தா பிரச்சனைன்னு நெனக்கிறேன்... ஒழுங்கா அவன்கிட்டயும் பேச முடியல"

தலை அசைத்துக் கேட்டவன், "என்னோட வண்டி சாவி யார்கிட்ட இருக்குது?"

"ராசா வெட்டு வாங்குனது பத்தலயா ஆக்சிடன்ட் ஆகி இன்னும் பத்து நாள் இங்க இருக்க ஆசையா?" - தமிழ்

"என் உயிரை விட எனக்கு இப்ப முக்கியமான வேலை ஒன்னு இருக்குது வண்டி சாவிய தர முடியுமா முடியாதா?" 

"ஏண்டா எப்பையுமே உன் இஷ்டத்துக்குத் தான் எல்லாத்தையும் செய்வியா?" கையில் இருந்த ஊசியை உருவிய ஆதியை பார்த்து கோவத்தில் கத்தினான் தமிழ்...

"ஆமாடா என் இஷ்டத்துக்கு தான் நா செய்வேன்... அவன் பண்ண ஒவ்வொரு விசயத்தையும் வாய மூடிக்கிட்டு இதனை வருஷம் பாத்துட்டு இருந்துட்டேன் இனி அப்டி இருக்க மாட்டேன்" என்று கௌதமிடம் வந்து அவன் பாண்ட் பாக்கெட்டில் இருந்துத் தன்னுடைய வண்டிச் சாவியை எடுத்தவன், "வண்டில ஒரு இடத்துல கோடு இருக்கட்டும் அப்றம் செத்த என்கிட்ட" 

"இவனை பெத்து விடத்துக்கு ரெண்டு மாட பெத்து விட்ருக்கலாம் சுத்தமான பால் ஆச்சும் கிடைச்சிருக்கும்" கெளதம் புலம்ப அந்த அறையை விட்டு வேகமாக வெளியில் நகர்ந்தான் கோவத்தில், ஆனால் பூந்தோட்டலில் நுழைந்த புயலாய் மனம் அல்லோலப்பட்டது....

"டேய் ட்ரிப்ஸ் ஏறணும்டா சாவடிக்காத இந்த ஒரு தடவ எங்கப் பேசக் கேளு... ப்ளீஸ்டா" அறைக் கதவை திறக்க சென்ற ஆதியின் கையை புடித்து கெஞ்சினான் தமிழ் அதில் சற்று மனம் இறங்கியவன், "சரி நாளைக்கு வெளிய போகணும் அப்ப என்ன யாரும் எதுவும் சொல்லக் கூடாது"

"நாங்களே உன்னக் கூட்டிட்டுப் போறோம்... இப்ப வந்து படு" என்று அன்று அவனை கட்டி அமைதிப்படுத்தினர் இருவரும்...

இரவு முழுவதும் உறக்கம் வராமல் இம்சிக்க விடிந்தவுடன் இருவரையும் மாறி மாறி கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தான்...

"ஐஐ ஜாலி... நா போய் அந்த நர்ஸ்ச கூட்டிட்டு வர்றேன்" என்று ஆனந்தமாக ட்ரிப்ஸை சாக்காக வைத்து வெளியில் ஓடிய கெளதமை பார்த்து சிரித்துக்கொண்டான் ஆதி... 

'இவனுக மட்டும் இல்லனா நான் இன்னேரம் பைத்தியம் தான்'

"டேய் காலைல ஏழு மணிக்கு எவண்டா டிஸ்சார்ஜ் பண்ணுவான்? இன்னும் டாக்டர் கூட வரல... சாவடிக்காத டா" கதறிவிட்டான் தமிழ் 

"அதெல்லாம் எனக்கு தெரியாது நாம இப்ப கெளம்பனும்" கையில் இருந்த ட்ரிப்ஸை இன்றும் எடுத்தவன் வலியை கூட பொருட்படுத்தாமல் வெளியில் செல்ல உள்ளே வந்த செவிலியர் அங்கு நின்ற தமிழையும் கௌதமையும் தாளித்து தள்ளினார்... பிறகு வேக வேகமாக டிஸ்சார்ஜ் வேலையை முடித்து தமிழுடைய காரில் மூவரும் உதய்யின் கெஸ்ட் ஹவுஸ் (பழைய இல்லம்) நோக்கி பயணித்தனர்...

அவன் வீட்டை அடைந்தவுடன் ஆதி எப்பொழுதும் நிற்கும் தெருவின் முனையில் வண்டியை நிறுத்த கீழிறங்கி அந்த வீட்டை பார்த்து நின்றான்... சரியாக மொட்டை மாடியில் நின்று அந்த வெட்ட வெளி ஜிம்மில் (gym) உடற்பயிற்சிச் செய்துக்கொண்டிருந்த உதய்யை வலி நிறைந்த பார்வையுடன் பார்த்தான்... தனது முதுகில் இருக்கும் வலியோ, அவன் சகோதரியின் எதிர்கால சிந்தனையோ அல்லது அவன் உதய்க்கு எதிராகத் தீட்டி இருக்கும் திட்டமோ நினைவில் இருந்து பறந்தது... மாறாக தன்னுடைய ஆருயிர் நண்பனுடைய நிலையே மனதை வாட்டியது...

"மூணு வாரத்துலயே இளைச்சுட்டாண்டா என்னமோ சரி இல்ல அவன்கிட்ட... பாக்கவே கஷ்டமா இருக்குது" என்றவன் வேகமாக உதய் வீட்டை நோக்கி நடக்க அவன் பின்னாலேயே புரியாமல் இருவரும் சென்றனர்... 'இன்னைக்கு என்ன பண்ண காத்துருகனோ' என்ற பீதியில்...

நேராக சென்றவன் யாருக்காகவும் காத்திருக்கவில்லை... பரிச்சயமான வீடு, பசுமை நினைவுகள், அழகிய காலங்கள் எந்த ஒரு பாரமும் இல்லாத விடலை பருவம் மீண்டும் அதற்காக மனம் கூவியது... சிந்தனையில் இருந்த நினைவுகளை ஒதுக்கி சென்றவன் கால்கள் வீட்டின் வாசலில் நின்றது... உள்ளேச் செல்ல மனம் இடம்கொடுக்காமல் ரணமாய் வலித்தது ஒரு பத்து நிமிடம் அந்த இடத்திலே பல யோசனைகளோடு நின்றான் ஆதி... 

மனதில் ஆயிரம் கேள்விகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் உயிரை வதைத்தது... பிறகு எங்கோ சென்ற தைரியத்தை இழுத்து உள்ளே சென்றான்... எல்லோரும் செல்லும் வழியில் இல்லை, சிறு வயதில் அவனுக்கே உரிய வழியில் சென்றான். கதவே திறந்திருந்தாலும் நண்பனை திருட்டுத்தனமாய் பார்ப்பதற்கு சுவர் ஏறி குதிப்பது அவன் வழக்கம்...

இன்றும் அதேப் போல் மிக எளிதாக ஏறிக் குதித்து சென்றவன் கீழே குதிக்கும் பொழுது அவனுக்கு சற்று தொலைவில் நின்றிருந்தான் உதய்... பணக்காரர்களுக்கே உரித்தான விலையுயர்ந்த கோட் சூய்ட் சகிதம் அந்த கருமையான பாண்ட்டில் இரு கைகளை புதைத்து வீட்டில் திருடன் போல் நுழைந்தவனை பார்த்து நின்றான்... 

மீண்டும் வந்த வழியே ஏறி சென்று விடுவோமா என்ற எண்ணம் வந்ததை உதய்யின் நக்கல் பார்வை தடுத்தது.

"என்ன?" என்றான் ஆதி திமிராய்

மெலிதாய் தோள்களை குலுக்கி, "ஒண்ணுமில்லையே"

"பால் உள்ள விழுந்துடுச்சு அதான் எடுக்க வந்தேன்" 

'நம்மள சொல்லிட்டு இவன் எப்டி புளுகுறான் பாரு... சொன்ன பொய்ய சமாளிக்க முடியல' என்று கௌதமும் தமிழும் தலையில் அடித்தனர்

"சரி எதுக்கு வந்த?"

தலையை அழுத்தி கோதியவன், "சிகெரெட் இருக்கா?" 

ஒரு வெற்றுப் பார்வையுடன் 'இல்லை' என்றான் உதய்.

தனியாக இருக்க வேண்டியவனா இவன், "இங்க என்னடா பண்ற?" ஆதி இயலாமையில் கேட்டான்

"என்ன பண்ணுறன்னா நீ வீட்டுல என்ன பண்ணுவ அத தான் நானும் பண்றேன்" உதயனின் குரலில் திமிர் மட்டுமே கிலோ கணக்கில் இருந்தது...

பல்லை கடித்து தன்னை சமன் செய்தவன், "சரி அத விடு அந்த மினிஸ்டர கொன்னது நீயா?"

அந்த நேரத்தில் ஜெயனுடன் தமிழும் கௌதமும் வந்து சேர்ந்தனர்...

"எந்த மினிஸ்டர்?" 

"நடிக்காத டா உன்ன பத்தி எனக்கு தெரியும்... ஒழுங்கா உண்மைய சொல்லு செம்ம காண்டுல இருக்கேன்" - ஆதி

"அந்த மினிஸ்டர் செத்தா உனக்கு என்ன வந்தது?" - உதய்

"அவன் செத்தா எனக்கு என்ன? என்னோட பிரச்சனையே நீ தான் என்னாத்துக்கு அவனை நீ கொன்னை?" உனக்கு நான் மசியப்போவதில்லை என்ற முடிவுடன் ஆதி வாதாடினான்.

"அவன் பண்ணுன வேலைக்கு எல்லாம் சும்மா விட முடியாது" - உதய்

"எதுக்குடா தேவை இல்லாம என்னால நீ மேல மேல தப்பு பண்ணிகிட்டே போற?" - ஆதி

உதய் அழுத்தமாய் ஆதியை பார்த்து நின்றான்...

"ஒவ்வொரு தடவையும் எனக்கு சம்மந்தமான ஆளுங்களுக்கு எதாவது ஆச்சுன்னா மொத என் கண்ணு முன்னாடி நீ தான்டா வந்து நிக்கிற என்ன காய படுத்த நினைக்கிறவன் என்ன நெருங்குறதுக்கு முன்னாடி நீ வந்து அந்த பலியை தாங்கி எதுக்காகடா கெட்டவனாகுற?"

எந்த நேரமும் உடையும் தருவாயில் இருந்தது ஆதி குரல். ஆனால், அதை பார்த்து நின்ற உதய் சிறிதும் சலனம் இல்லாமல் இறுக்கமாய் நின்றான்...

"ஏற்கனவே என்னால உன் வாழ்க்கைல இருக்க ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் இழந்துட்டு நிக்கிற... உன்ன பாக்க பாக்க எப்படா எனக்கு அந்த சாவு வரும்னு வேண்டிட்டு நிக்கிறேன் இதுல நீ இன்னும் இன்னும் என்னால உன் வாழ்க்கைல பாவத்தை சுமக்க வைக்க நா விரும்பல உதய்... விற்றுடா என்ன முழுசா விட்டு நீ சந்தோசமா இருடா" அழுதே விட்டான் ஆதி இயலாமையில், நண்பனுக்கு ஏற்பட்ட வலியில் குறிப்பாக கூற வேண்டுமானால் ஏற்படுத்திய வலியில். 

"இவ்வளவு எனக்காக நீ பண்ணுற அளவுக்கு நான் உனக்கு என்னடா பெருசா பண்ணிட்டேன்? எதுக்குடா என்ன விட்டு தள்ளியே இருக்க மாட்டிக்கிற? உன் சந்தோசத்தை கெடுத்தவனுக்கு எதுக்குடா கஷ்டமே வர கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு நிக்கிற?"

கேள்விக் கணைகளை தொடுத்தவனுக்கு பதில் உள்ளத்தில் மழையாய் பொழிந்தாலும், தாய் தந்தையின் இழப்பிற்கு கூட அழுகையில் கறையாதவன் இன்று தன் முன்னே விழி நீர் வடிப்பது அந்த கல் நெஞ்சு காரனுக்கு சொல்ல முடியாத துக்கம் ஏற்பட்டது... 

சில அடிகளை ஆதியை நோக்கி எடுத்து வைத்தவன், "நான் உன் எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன் ஆனா நீ எனக்கு ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லு" 

அவன் என்ன கேட்க போகின்றான் என்று அறிந்திருந்த ஆதி இயலாமையில் பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தான்...

"வேண்டாம் உதய் ஏற்கனவே உன்ன பிரிஞ்சு தெனம் தெனம் நரகத்தை அனுபவிச்சிட்டு இருக்கேன் இதுல அந்த கேள்வியை மட்டும் கேட்டுறாத டா"

அவன் கூறியதை எல்லாம் கேட்டு அமைதியாகி விட்டால் அது உதய் அல்லவே தீர்க்கமான பார்வையோடு தன்னுடைய உயிர் நண்பனின் நிலையை அளந்தவன் வேகமாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டும் ஆதியை நேர் பார்வை பார்த்து

"எதுக்குடா என் நம்பிக்கையை ஒடச்ச?"

கால்கள் வலுவிழந்து தரையில் 'பொத்'தென்று விழுந்தான் ஆதி, எந்த கேள்வியை இந்தனை வருடங்களாய் தன்னை பார்த்து கேட்காமலே இருந்தானோ அந்த கேள்வியை இன்று கேட்டு விட்டான்... இந்த ஒரு கேள்விக்கு அஞ்சியே பனிரெண்டு வருடங்களாக நெருப்பில் நடந்தவன் இன்று அதன் வெப்பம் தாளாமல் தீயிலிட்டு புழுவாய் துடித்து போனான்...

கைகளை தரையில் ஊன்றி பின்னுக்கு சென்றவனது முதுகு பின்னால் இருந்த மரத்தில் மோதி வெட்டுக் காயத்தில் பட்டு ரத்தம் கசிய துவங்கியது. அதை துளியும் பொருட்படுத்தாமல் வழிந்த கண்ணீரை துடைக்கவும் மனம் இல்லாமல் மடிந்துக்கொண்டிருந்தான்...

"என்ன விட உன்ன அதிகமா நம்புனேனேடா எதுக்கு என்ன இப்புடி அநாதை ஆக்குன..." கண்களில் வலியை விட ஏமாற்றமே இருந்தது உதயனுக்கு...

"சரி அத விடு இதுக்கு மட்டும் பதில் சொல்லு... உன் கண்ணு முன்னாடியே எல்லாமே நடந்துச்சே அப்ப ஆவது நீ நெனச்சிருந்தா தடுத்துருக்கலாமே ஏன் எதுவுமே பண்ணல?" - உதய்

"நான் வேணும்னே எதுவும் பண்ணல உதய்..." மேலும் பேசாதே என்று தடுத்த உதய், "பேசாத... விளக்கம் குடுக்கவோ, உன் நிலைய நியாயப்படுத்தவோ உனக்கு உரிமை இல்லை..." 

"என்னைக்குமே நா என்ன நியாய படுத்தமாட்டேன் டா அதுக்கு தண்டனையை தான் இத்தனை வருசமா அனுபவிக்கிறேன்... நீ என்ன அடிச்சுக் கூட கொல்லு ஆனா எனக்காக எங்கையும் நீ தப்பு பண்ணிடாத உதயா... கண்ட கண்ட ஈத்தரைப் பயலுக எல்லாம் அத பயன்படுத்துறாங்க, எனக்காக நீ எங்கையும் பலவீனம் ஆகிட கூடாது... ரொம்ப கஷ்டமா இருக்குது... உனக்காக என்ன வேணாலும் பண்றேன் இதெல்லாம் விட்டுடு ப்ளீஸ்" சிறுபிள்ளையாய் அழுது தேய்ந்தவனது வெளீர் நீல நிற சட்டையில் ரெத்தம் அப்பட்டமாய் தெரிந்தது...

"எனக்காக நீ ஒன்னும் பண்ண வேணாம் நீ உன் பாதைல போ. என் வாழ்க்கைல நீ வரவே வராத..." அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த தூரத்தை சுட்டிக்காட்டியவன், "இந்த தூரம் நமக்குள்ள இருக்குறது தான் எனக்கு புடிச்சிருக்குது... எனக்கு நீ வேணாம் டா போய்ட்டு" இறுதி வாக்கியத்தை கடினப்பட்டு கூறினான் உதய்...

"நமக்குள்ள எல்லாமே சரி ஆகிடுக்குகிற நம்பிக்கைல தான டா இத்தனை வருஷம் வாழ்ந்துட்டு இருந்தேன்... ஏண்டா இப்புடி சொல்லிட்ட" 

மனதின் வலியை எவ்வாறு அவனுக்கு எடுத்துரைப்பது என்று தெரியவில்லை என்ன கூறினால் தன்னை பழைய நிலையை போல் கட்டி அணைப்பான்? என்ன செய்தால் மன்னிப்பு கிடைக்கும்? இது போன்ற கேள்விகள் மட்டுமே ஆதியின் மொத்த உடலிலும் இருந்தது.

தாயை பிரியும் குழந்தை போல் வாடி தவித்தவன் போல் தரையில் சரிந்தவனது உடலில் உதய்யின் கண்கள் பட அந்த சட்டையில் தெரிந்த குருதியை பார்த்ததும் பதறி போனான், "டேய் சட்டைல ரத்தம் வருது எந்திரி..." என்றான்.

ஆனால் அதனை கவனத்தில் கொள்ள ஆதி நிலையில் இல்லை...

"என்னடா பாத்துட்டு இருக்கீங்க கூட்டிட்டு ஹாஸ்பிடல் போங்க" தமிழையும் கௌதமியும் பார்த்து கர்ஜித்தான் உதய்... 

அவர்கள் ஆதிக்கு மேல் அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்தனர் இத்தனை வருடங்கள் ஆதி மனதார சிரித்து பார்த்தது இல்லை. ஆனால், நேற்று இரவு உதய்யின் வருகையை அறிந்தவன் உதடுகளில் ஒரு மெலிய புன்னகை... அவ்வளவு இனிமையாய் இருந்தது மனதிற்கு, அது இன்று சுக்கு நூறாக கண்முன்னே சிதறி கிடந்தது...

சிலையாய் நின்றவர்களை பார்த்து கோவத்தில் சிவந்தவன், "ஜெயன் இவனை தூக்கி வெளிய போடுங்க" கத்தினான்...

தயக்கமும் பயமும் ஒரு சேர ஜெயன் முகத்தில் தாண்டவமாட செய்வதறியாமல் நின்றான், அதை கவனித்த உதய் மீண்டும் ஆதியிடம் சென்று, "இப்ப நீ எந்திரிக்க போறியா இல்லையா?" நிச்சயம் கோவம் எல்லை மீறி சென்றதை அவன் குரலிலே அறிந்தான் ஜெயன்... 

"சார் நான் போக சொல்றேன்" என்று வந்த ஜெயன் ஆதியின் கையை தூக்கி எழுப்ப முயற்சி செய்ய ஆதியின் அழுத்தம் அவன் முகத்தில் தெரிந்தது... 

ஜெயனின் தோற்றத்திற்கு சுலபமாய் அவனை நகர்த்தி விடலாம் ஆனால் உறுதியாய் இருந்தவனை என்ன செய்தும் அசைக்க முடியவில்லை.

ஜெயனின் பிடியிலிருந்து விடுபட்டவன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் "நீ உன் வீட்டுக்கு போ அதுக்கு அப்றம் நான் வெளிய போறேன்" என்றான் ஆதி.

"இது தான் என் வீடு... உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னை ஆர்டர் பண்றது இங்க செல்லாது... ஏதோ இத்தனை வருஷம் பழகுன பழக்கத்துக்காக என் வீட்டுக்கு நடுல நிக்க வச்சு வேடிக்கை பாத்துட்டு இருக்கேன் இல்லனா தூக்கி வெளிய போட்ருப்பேன்" வார்த்தைகளில் விஷத்தை கக்கினான் உதய்...

அதுவரை பொறுமை காத்த கெளதம் பொறுமை இழந்து, "டேய் என்னை பெரிய இவனாட்டம் பேசிட்டு இருக்க இங்க ஒன்னும் அவன் உன்னோட பணக்கத்துக்காகவோ இல்ல உறவு கொண்டாடவோ வரல... பிச்சைகாரன் மாதிரி கெஞ்சிட்டு இருக்கான் மதிக்காம பேசிட்டே போற... என்னமோ நாயை தொரத்துற மாதிரி பேசுற... டேய் ஆதி வா டா இவன்ட நின்னு அவமான படப்போறியா... பேசுற பேச்ச பாரு மாறிட்டாண்டா... இவன் நம்ம உதய் இல்ல டா"

தன் தோளில் இருந்த கௌதமின் கையை கையை தட்டி விட்ட ஆதி, "என் உதய் அப்டிலாம் பேச மாட்டான் டா ஏதோ கோவத்துல பேசிருப்பான்"

"எல்லாம் நடிப்புடா நேத்து அவன் துடிச்சது பாத்து நான் கூட அப்டி தான் நெனச்சேன் ஆனா இப்ப நிக்கிறான் பாரு இவன் தான் உண்மையான உதய்... இவனுக்கு போய் நேத்துல இருந்து கால்ல சக்கரம் கட்டிட்டு சுத்துணியே நீ தான் டா முட்டாள்"

"ஆதி வா போகலாம்" தமிழ் ஆதியின் கைப் பிடித்து இழுத்தான் ஆனால் எதற்கும் மசியாதவன் திடமாய் மீண்டும் உதய்யிடம், "நீ வா உன்ன உன் வீட்டுல விட்டுட்டு போறேன்" என்றான்...

பொய்யான வெறுப்புடன், "இங்க பாரு உங்கள மாதிரி சும்மா ஒக்காந்து ஆபீஸ்ல சம்பளம் வாங்குற ஆளு நா இல்ல பாரு மணி 8க்கு மேல ஆச்சு... ஏற்கனவே உங்க ரெண்டுபேர் பேருல ஏகப்பட்ட கம்பிளைன்ட்ஸ்... போனா போகட்டும் நம்ம பசங்க... இந்த சம்பளம் இல்லனா பிச்சை காரனுக மாதிரி நடு ரோட்டுல நிப்பானுங்க வீட்டுல இருக்கவங்களுக்கு யாரு சோறு போடுவாங்கன்னு ஒரு இரகத்துல..." 

உதய் மீதி பேசி முடிக்கும் முன் கெளதம் ஆதியின் கணத்தில் ஓங்கி அரைத்திருந்தான். அந்த அரை உதய்யின் பேச்சையே தடுக்கும் அளவிற்கு இருந்தது... உடலில் இருந்த இறுக்கம் எல்லாம் தளர்ந்து நின்றவனை ஆதுரமாய் பார்த்து, "உன் உழைப்பு மொத்தமும் இரக்கம்னு பேருல செத்துருச்சுடா... வா போகலாம்"

"பேசுறது அவன் இல்லடா இவன் வேணும்னே பன்னுறான்... உதய் வா உன் வீட்டுக்கு போகலாம்" கூறியதையே மீண்டும் ஒருமுறை கூறினான் சுற்றி இருந்தவர்கள் வார்த்தை எதையும் மனதிற்கு எடுத்து செல்லாமல்.

"யார்ரா இவன் பைத்தியம் மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி பேசிட்டு இருக்கான்... ஜெயன் எதாவது மெண்டல் ஹாஸ்பிடல்க்கு போன் போடுங்க வந்து தூக்கிட்டு போகட்டும். இவனால எனக்கு தேவ இல்லாம அரைமணி நேரம் வேஸ்ட்... அதான் நா மொத மாதிரி இல்லனு தெரிஞ்சு போச்சுல பின்ன எதுக்கு பின்னாடியே வால் மாதிரி தொரத்திட்டே இருக்க இதனை வருஷம் நிம்மதியா இருந்தேன் என்னைக்கு ஆபீஸ்க்கு வந்தானோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு" - உதய்

"நீ என்னே வேணாலும் பண்ணிட்டு போ ஆனா உன் வீட்டோட சேந்து இருடா இப்புடி தனியா இருக்க என்ன அவசியம்" - ஆதி

"எல்லாத்துக்கும் காரணம் நீ தான்... நீ மட்டும் தான்... அன்னைக்கு நீ பண்ணுன காரியம் தான் இன்னைக்கு என் மொத்த குடும்பமும் எனக்கு எதிரா இருக்குது... இன்னைக்குன்னு இல்ல கடந்த பத்து வருசத்துக்கு மேல இதே நிலைமை தான் எல்லாரும் என்ன விட்டுட்டு தூரமா போய்ட்டாங்க நா போகவே முடியாத இடத்துக்கு போய்ட்டாங்க... 

என் தம்பி நீ செத்தா கூட பரவால்ல என் முகத்துல முழிக்காதான்னு சொல்றான்... எதுனால? எல்லாம் உன்னால... உன்னால மட்டும் தான்... சந்தோசமா இருந்த குடும்பத்தை பிரிச்சு இப்புடி தூள் தூளா ஆக்குன உன்ன எப்டி மன்னிக்கனும்னு ஆசை படுற? நா செத்தாலும் அப்டி நடக்காது... நா அனுபவிச்ச கஷ்டத்துல ஒரு பத்து பர்ஸன்ட் கூட நீ அனுபவிக்காம இருந்தா எனக்கு என்ன மரியாதை?? 

அதான் உங்க சொந்த வீட்டை உங்க அப்பா கடன் வாங்கிருக்காருன்னு பொய் சொல்லி நானே உன்ன அந்த வீட்டை விட்டுட்டு வெரட்டுனேன்... வேணும்னே உன்னோட பார்ட் டைம் ஜாப்ஸ் எல்லாத்துலயும் உன்ன வேலைய விட்டு தொரத்துனேன்... எல்லாத்துக்கும் மேல நீ ஆசை ஆசையா விளையாடுவியே புட்பால் அதுல தமிழ்நாடு டீம்ல நீ செலக்ட் ஆகாம நா தான் பண்ணுனேன்... என்ன போதுமா இல்ல இன்னும் வேற எல்லாத்தையும் சொல்லட்டுமா?"

*********************

♪ அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் 

"கிழிச்சுச்சு" கடு கடு குரலில் ஆதியின் கோவம் கண்களில் தெரிய வெறித்த பார்வையோடு தனது முழு கோபத்தையும் அந்த வண்டியின் வேகத்தின் காண்பித்தான் அதிலும் அந்த பாட்டின் வரிகள் இன்னும் கோவத்தை தூண்டி விட்டன...

"எவன் டா சந்தோசமா இருக்கது மனுஷனுக்கு கோவம், வெறுப்பு மட்டும் தான் வருது... வாழுற ஆசையே விட்டு போச்சு மச்சான் அப்புடியே போய் கார அந்த லாரில ஏத்தணும் போல இருக்கு" 

வண்டியின் வேகத்தை உயர்த்தி அவர்களை விட நானூறு மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த லாரியை நோக்கி செலுத்த அவன் அருகில் அமர்ந்திருந்த தமிழுக்கும் பின்னிருக்கையில் அமர்ந்து பவித்ராவிடம் காதல் வளர்த்துக்கொண்டிருந்த கௌதமிற்கும் தூக்கி வாரி போட்டது...

"ஆத்தி டேய் ஸ்பீட்ட கம்மி பண்ணுடா" - கெளதம்

"வண்டிய நிறுத்துடா" ஜன்னல் வழி வெளியே குதித்து விடுவோமா என்ற நினைவில் வெளியே எட்டி பார்த்த தமிழுக்கு ஆதி முந்தி சென்ற வாகனங்கள் தெரிய உயிரே நடுங்கியது...

"கன்னி கழியாமல் உயிரே நீங்க போகின்ற என்னுடைய சாபம் உனக்கு ஏழு பிறவிகளுக்கும் நீடிக்கும்" பாதி சொர்கத்திற்கு சென்றிருந்த தமிழின் சாபம் ஆதியை துளியும் அசைக்கவில்லை...

"அறிவு கெட்டவன் சாகுறதா இருந்தா தனியா உன் வண்டிய எடுத்துட்டு போய் சாகுடா ஏண்டா இப்புடி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க" 

ஆதியின் தலையில் கெளதம் அடிக்க, சற்று வேகத்தை குறைந்தவன் ஒரு ஓரம் வண்டியை நிறுத்தி வேகமாக பின்னிருக்கையில் அமர்ந்துக் கொண்டான்...

"அது எப்புடிடா பண்றது எல்லாத்தையும் கச்சிதமா பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி போய் ஒக்காந்துக்குற?" 

ஆதியை அர்ச்சித்துக்கொண்டே வண்டியை எடுத்தான் தமிழ், "ஆனாலும் நான் சாபத்தை திருப்பி வாங்க மாட்டேன்... அப்பனே முருகா... ஞாயானபண்டிதா... எனக்கு பிள்ளை பொறந்ததும் உன் கோவிலுக்கு வந்து மொட்டை போடுறேன்"

"அடிங்க நாயே வாய்மூடிட்டு வண்டிய ஓட்டல குறுக்குலயே ஏறி மிதிப்பேன் பாத்துகோ... லெப்ட் எடு" - ஆதி

"தம்பி வீட்டுக்கு ரைட்ல போகணும்... தண்ணி அடிக்காமயே போதைல இருக்கீங்கன்னு நெனக்கிறேன் இன்னைக்கு" - தமிழ்

"எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ மூடிட்டு வண்டிய ஒட்டு இல்ல நான் ஓட்டுறேன் நகரு"- ஆதி

"தலைவரே வழிய மட்டும் சொல்லுங்க எப்டி ஸ்மூத்தா ஓட்டுறேன்னு மட்டும் பாருங்க... ஒடம்புல சின்னதா அசைவு கூட இருக்காது" - தமிழ்

"பேசாம ஓட்டு டா"- ஆதி

கண்களை மூடி பின்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டேன் ஆதி... காலையில் உதய்யை பார்த்ததிலிருந்து ஒரு நிலையில் இல்லாதவன் முதுகில் ஏற்பட்ட காயத்தை கூட பொருட்படுத்தாமல் ஜடமாய் திரிந்தவன் நண்பர்களுடன் காலையிலிருந்து சென்னை முழுவதும் தெரு தெருவாக சுற்றி திரிகிறார்கள். எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை மனம் தாறுமாறாக வலியில் துடித்தது

"வழிய சொல்லுடா தூங்காத... ஆமா எங்க போறோம்?" - தமிழ்

"லெப்ட்-ல போய் அடுத்து ரெண்டாவது ரைட் அதுல ரைட்-ல இருக்க மூணாவது வீடு"

கெளதம் ஓரளவிற்கு யூகித்துவிட்டான் தமிழ் தான் ஒன்றும் புரியாமல் முன் கண்ணாடி வழியாக ஆதியை பார்த்தபடியே வண்டியை ஓடிக்கொண்டிருந்தான்... ஆதி கூறிய இடம் வந்த உடன், "ராசா வந்துருச்சு ஆமா இது யார் வீடுடா இம்மாம்பெருச்சா இருக்கு?"

அந்த இருளிலும் அந்த வீட்டின் பிரமாதமான தோற்றம் பிரகாசித்தது. அந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளும் சிறிய மாளிகை போலவே இருந்தது ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிலோமீட்டர் இடைவேளை இருக்கும் அந்த அளவிற்கு அதன் சுற்றுப்புறம் பறந்து விரிந்திருந்தது தமிழ் வண்டியை நிறுத்தி இருந்த இடம் ஒரு வீட்டின் பின்புறம், மணிமேகலையின் வீட்டின் முன் வாசலிற்கு சற்று பின்னால் நின்றது...

"பையன் ஆளுடா" கெளதம் ஆதி கூறிய அனைத்தையும் தமிழிடம் கூற ஆதி வண்டியில் இருந்து இறங்கி அந்த வீட்டையே வெறித்து பார்த்து நின்றான் ஒரு இதமான அமைதியில்...

"இந்த மணியை அடிக்க தான் நீ இப்புடி மூஞ்சிய தூக்கிட்டு இருந்தியா இத மொதையே சொல்லிருக்கலாம்ல... சரி வா வீட்டை பாதச்சுல கெளம்பு நேரமாச்சு தூக்கம் வருது"

♪ என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே ♪

காரில் பின்னணியில் ஓடிகொடிருந்த அலைபாயுதே படத்தில் பாடல் இதமாய் கதை குளிர்வித்துக்கொண்டிருக்க தமிழ் அமர்ந்திருந்த கதவினை திறந்து அந்த பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டான்...

"டேய் என்னடா பண்ணுற தெருல இருக்க எல்லாரும் எந்திரிச்சு வந்துருவாங்க லூசு கேன பயலே" கெளதம் ஒலியை குறைக்க மீண்டும் ஆதி அதை உயர்த்தி அவனை நோக்கி ஒரு பார்வை முறைத்து, மணிமேகலையின் வீட்டை நோக்கி பார்த்து நின்றான் சிறு புன்னகையுடன்...

"பரவால்லடா மான்குட்டியை வெளிய வர சொல்லு நான் சௌண்ட கொறச்சிடுறேன்"

♪ காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது

என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது

என் காதல் எனயென்ன உன் நெஞ்சு காணாது

ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ.... 

"மச்சி எவனாச்சு வர போறான் டா பிக்காளி பயலே... இந்த வீட்டை எல்லாம் பாத்தா கண்டிப்பா வீட்டுக்கு ஒரு போலீஸ் காரண காவலுக்கு வச்சிருப்பாங்க உன்னால மொத தடவ போலீஸ் ஸ்டேஷன் போக போறேன் போல" 

தமிழ் அவன் பங்கிற்கு புலம்ப ஆதி அதை கவனிக்காமல் இருந்த அந்த நேரத்தில் வெளி வந்தாள் அவன் மான்குட்டி...

எளிமையான இரவு உடையில் கண்களை கசக்கி பால்கனியில் வந்து நின்றவளை அந்த உடை மறைத்திருந்தது அதன் அளவு அவளுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி அவளுடைய குட்டி முகம் நிலவின் ஒளியில் அழகாய் பளிச்சிட்டது. கண்களை துடைத்து நின்றவளது பார்வை சத்தம் வந்த திசையில் நின்ற ஆதியை பார்த்ததும் பளிச்சிட ஆதி நீண்டதொரு மூச்சினை விட்டான் அந்த பார்வையை தாளாமல்...

"டேய் அந்த புள்ள வந்துருச்சுல பாட்ட ஆப் பண்ணு" கௌதமின் சொல் கேட்டு மணி மேகலையிடமிருந்து பார்வையை எடுத்தவன், "எப்டிடா இவனுக்கு இப்புடி சிக்குது... மச்சக்காரன்டா" என்றான் தமிழ் சிரித்தபடி...

"ஆனா இந்த ஒன்னுல மாப்பிள்ளை சீரியஸ் ஆஹ் இருக்கான்... வாழட்டும்" - கெளதம்

ஆதியை பார்த்த நொடி புன்னகை பூத்த முகமாய் அவனை நோக்கி கை அசைக்க ஆதியும் கை ஆசைதான் மென் முறுவலுடன்...

'என்ன இங்க?' சைகையில் அவள் அங்கிருந்து கேட்டாள்...

ஆதி தோளை குலுக்கி அழகாய் சிரித்தான்... மணிமேகலையாலும் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை...

'கீழ வா' என்றான் ஆதி.

கண்களை விரித்து நொடி தாமதிக்காமல் கோவில் மணியாய் தலையை ஆட்டியவள், மீசையை முறுக்குவதுபோல் செய்து கீழே காண்பித்தாள் அவள் தந்தையின் இருப்பை கூற...

"மச்சி இவளை கரெக்ட் பண்றதுக்கு பேசாம நீ அவளோட அப்பாவை கரெக்ட் பண்ணிடலாம்டா" கெளதம் சத்தமாய் அவளை பார்த்து சிரிக்க ஆதிக்கும் அது ஒட்டிக்கொண்டது... அவன் கூறியது சரி தானே என்று... நிமிடத்திற்கு ஒரு முறை அவளது தந்தையை பற்றி அவள் கூறிவிடுவாள்

கண்களை சுருக்கி 'ப்ளீஸ்' என்றான் கெஞ்சுவது போல்...

'எதுக்கு'

முகத்தில் இருந்த சிரிப்பு மறைத்து மீண்டும் 'ப்ளீஸ்' என்றான்...

நின்ற இடத்திலே நெளிந்தாள்... அவனிடம் செல்லவும் மனம் ஆசைபட்டது இந்த இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் தயக்கம் இருந்தது என்ன தான் ஆதியை பற்றி தெரிந்திருந்தாலும் இரவில் வீட்டை விட்டு செல்லும் அளவிற்கு அவன் பழக்கப்பட்டவன் இல்லையே ஆனால் ஒரு பக்கம் அவனது வாடிய முகம் ஏதோ வலியில் இருப்பதாய் கூறியது...

அவன் கண்களை பார்த்து நிராகரிக்க மனம் இன்றி தரையை பார்த்தவள் 'வரவில்லை' என்று தலை அசைத்தாள்...

அவளை பார்த்தவாறே பெருமூச்சொன்றை விட்டவன் தலையசைத்து ஏமாற்றத்துடன் வண்டியில் எற சென்றவனை அவள் கை தட்டி அழைத்தவள் ஒரு நிமிடம் என்று வீட்டின் உள்ளே சென்று மீண்டும் வெளியில் வந்து ஆதியை நோக்கி ஒரு கசங்கிய காகிதத்தை வீசினாள்...

அவளை கேள்வியாய் பார்த்தவன் அந்த காகிதத்தை எடுத்து பார்த்தான்... அதில் 'SORRY 😕' 

மறுப்பாக தலை அசைத்து வண்டியில் ஏறி அமர்ந்தவன், "என்ன மயிறு வாழ்க்கைடா இது" புலம்பியவாறே காரில் ஏறி அமர்ந்தான்... அவனது ஒரு பார்வைக்காக கண்களில் ஏக்கத்துடன் காத்திருந்த மணிமேகலைக்கு ஏமாற்றமே கிட்டியது...

காரில் மெயின் ரோட்டிற்கு வந்தவுடன் தமிழிடம் காரை நிறுத்த கூறி, "நான் நைட் லேட்டா வருவேன்னு சஹானாக்கு சொல்லிடு இன்னைக்கு உங்க வீட்டுலயே இருக்கட்டும்" 

"எங்கடா போற வா நாங்க இறக்கி விடுரோம்" 

"வேணாம் நீங்க போன நா பாருக்கு(bar) போறேன்... வீட்டுல சொல்லாத"

"அவனுக்காக உன் ஒடம்ப கெடுத்துக்காத ஆதி" - தமிழ்

இருந்த கோவத்தை எல்லாம் பொறுமையாக வைத்திருந்தவன் கத்திவிட்டான், "இப்ப நா அவனுக்காக தான் குடிக்கிறேன்னு சொன்னேனா எதுக்கு எல்லாத்துக்கும் அவனையே இழுத்துட்டே சுத்துறீங்க கிளம்புங்க ஒழுங்கா இல்லனா செருப்பு பிஞ்சிடும் பாத்துக்க" 

அவர்கள் பதில் கேட்காமல் இடத்தை விட்டு சென்றுவிட்டான் ஆதி... 

"வாடா அவன் வந்துருவான்" கெளதம் தமிழுக்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்து சென்றான்... 

அங்கு சஹானா தான் தமிழ் அழைத்தும் அவன் இல்லத்திற்கு செல்லாமல் தங்கள் வீட்டிலே அவள் சகோதரனை எதிர்பார்த்து வாசலையே நொடிக்கொருமுறை பார்த்தவாறே நின்றாள்... ஓரளவிற்கு யூகித்திருந்தாள் ஆதி ஏதோ பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டான் என்று அவனை ஒருமுறை நேரில் பார்த்தால் மட்டுமே கண்களுக்கு நிம்மதி. ஆனால், இன்றும் தமிழிடம் வந்த ஆதியின் செய்தியை கேட்டு கவலையுடன் துக்கத்தை தழுவ முயற்சி செய்து தோல்வியை மீண்டும் தழுவினாள்...




எப்டி இருக்கு? 

யாரும் உதய திட்டாதீங்க திட்டாதீங்க சொல்லிட்டேன்....

Aprm konjam story share panunga paa... views romba romba kamiaya irukuthu....

Please do vote⭐👇 and comment

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro