
இணை பிரியாத நிலை பெறவே -1
காலை 6மணிக்கு எழுந்தாள் நம்முடைய கதாநாயகி பரபரப்பாக இருந்தாள்
நிரஞ்சனா :என்ன மேடம் நேத்து லேட்டா வந்திங்க இண்ணைக்கு சீக்கிரமா எழுந்துட்ட என்ன ஆச்சு இண்ணைக்கு லீவ் தானே
சீதா :இல்ல டி ஏதோ புது கிளையண்ட் வறாராம் அதான் ஒரு ப்ரெசென்ட்டேஷன் இருக்கு அதுக்குத்தான் நேத்து வேற ரொம்ப நேரம் ஆச்சு. பேசாம வேலையை விட போறேன் டி. பக்கத்துல இருக்கிற ஸ்கூலுக்கு வேலைக்கு போறேன்.
நிரஞ்சனா :என்ன டி விளையாட்டா 50,000 வேலையை விட்டுட்டு 5,000 வேலைக்கு போறேன்னு சொல்ற
சீதா :அட போடி தினமும் டென்ஷனான இந்த வேலைக்கு அந்த வேலை எவ்ளோவோ பெட்டெர். அதோட வீட்டு கடனை அடைக்கத்தான் வேலைக்கே போனேன் இப்போ என்னோட படிப்புக்கு வாங்குன கடனும் அடைச்சாச்சு அப்பா கடையும்(மளிகை கடை ) நல்ல நிலைமையில் இருக்கு அதான் யோசிக்கிறேன் வேலையை விட்டுரலாம்னு
நிரஞ்சனா :சரி விட்டுடு நானும் வேலையை விட்டுடறேன் எனக்கும் இந்த டென்ஷனான ஐ டி வாழ்க்கை பிடிக்கல நானும் டைலரிங் பண்ணலாம்னு இருக்கேன்
சேகர் :என்னமா காலையிலேயே வேலையை விடறதை பத்தி பேச்சு ஓடுது
சீதா :இல்லப்பா இது ரொம்ப மனஉளைச்சலை தருது அதான்பா வேலையை விட்டுடலாம்னு இருக்கோம்
நிரஞ்சனா :ஆமாப்பா வேலையை விட்டுடலாம்னு இருக்கோம்
சேகர் :சரிம்மா மனசுக்கு பிடிக்காத வேலையை செஞ்சா அது முழுமையா செய்ய முடியாம அரைகுறையா இருக்கும் நீங்க வேலையை விடறது பத்தி கவலை இல்ல இப்போ கடையிலயும் நிலைமை நல்லாத்தானே இருக்கு. உங்களுக்கு பிடிச்ச வேலையை பாருங்க. ஆனா வேலை பாருங்க படிச்ச படிப்பு நாலு பேருக்கு பயன்படட்டும் அம்மாகிட்டயும் ஒரு வார்த்தை கேளுங்க
சுப்ரதா :நான் எப்போவோ வேலையை விட சொன்னேன் நீங்கதான் லேட்
சீதாவும் நிரஞ்சனாவும் தங்கள் பெற்றோரை கட்டிப்பிடித்து நன்றி கூறினர். பணம் மேல ஆசையே இல்லமா இருக்குற பெத்தவங்க கிட்ட வளந்த இவங்களுக்கு பணம் மேல ஆசை வருமா நெவெர். சேகர் ஏழையா இருந்தாலும் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை கொடுத்தார். அவர்களும் பெற்றோரின் துன்பத்தை அறிந்து படித்து இன்று ஐ டி கம்பனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர். இப்போது குடும்ப நிலமை சரி ஆனதால் மனஉளைச்சல் தரும் வேலையை உதற முடிவு செய்து விட்டனர்
சுப்ரதா :இனி சீதாவுக்கு கல்யாணம் பண்றத பத்தி யோசிச்சா போதும்
வழக்கம் போல கல்யாணம் வேண்டாம்னு சொல்லாத ஏற்கனவேவே உனக்கு 24 வயசு ஆகுது உன் தங்கச்சிக்கு 23 ஆகுது உனக்கு முடிச்சால் தானே அவளுக்கு முடிக்க முடியும்
சீதா :அம்மா என் தாய்குலமே நீங்க நாளைக்கே கல்யாணம் பண்ணிகோன்னாலும் நான் ரெடி இப்போ வேலைக்கு நேரம் ஆகுது நான் கிளம்பவா
வேலைக்கு கிளம்பினாள் சீதா
சீதா :அம்மா கோவிலுக்கு போணும் லேட் ஆகுது நான் ஆபீஸ் போய் சாப்ட்டுக்குறேன்.
சுப்ரதா :டீயாவது குடிடி
சீதா :சரி சீக்ரம் குடுங்க
சேகர் :பொறுமையா மா
சீதா :சரிப்பா போய்ட்டு வறேன்
நிரஞ்சனா :என்னோட ஸ்கூட்டில போ
சீதா :நன்றி உடன் பிறப்பே
நிரஞ்சனா :சரி சீக்கிரம் வந்துடு நம்ம சாயங்காலம் எங்கயாவது போலாம்
சீதா :சரி போயிட்டு வறேன்
குடும்பத்திடம் இருந்து விடை பெற்று கோவிலுக்கு சென்றாள் சீதா. தொடக்கம் முடிவு தோல்வி வெற்றி எதுவாக இருந்தாலும் எந்த முடிவும் இந்த சிவன் கோவிலுக்கு சென்றே எடுப்பாள்
சீதா இறைவன் முன் நின்று அமைதியாக வேண்டினாள்
சீதா (வேண்டுதல் மனதிற்குள் ):சிவனே என்னோட வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க ஆனா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு எத்தனையோ பேர் என்னை காதலிக்கிறேன்னு சொன்னப்போ திரும்பி கூட பாக்காம இருந்தது அவருக்காகத்தான். உனக்கே தெரியுமே சிவபெருமானே என்னோட கற்பனையில் வரைந்து வச்சிருக்குற என்னோட கணவனை நான் எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு. அவருக்குத்தான் என்னோட மொத்த அன்பையும் தரணும். அழிஞ்சு போற அழகும் பணமும் இல்லன்னா கூட பிறவாயில்லை ஆனா அன்பு நிறைய இருக்கணும். தப்பு செஞ்சாலும் மன்னிக்கணும் பொறுமையா புரிய வைக்கணும். சிரிச்ச முகமா இருக்கணும். மத்தவங்க மனசு புரிஞ்சு நடந்துக்கணும் (me:வாய்ப்பே இல்ல மா )
இப்டி பல வேண்டுதல்களை நினைத்தவள் சாமி கும்பிட்டு குங்குமபிரசாதம் வாங்கி திரும்பினாள் அப்பொழுது ஒருவன் சீதாவின் மீது தொலைபேசி பேசியபடி வந்து மோதினான் அவளின் குங்குமம் அவன் சட்டையில் இருந்தது. சீதா நிமிர்ந்து பார்ப்பதற்குள் அந்த பனைமரம் பேச ஆரம்பித்தது. (நம்ம ஹீரோதாங்க )
ராம் :ஹே உனக்கு அறிவு இல்ல இப்டி இடையில வர்ற
சீதா ஏதோ பேச வாயெடுக்க அவளை பேச விடமால் இவனே பேசினான்.
ராம் :சாரி சொல்லணும்னு கூட தோணல உனக்கு. கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாம இடியட் போ என் முன்னாடி நிக்காத
என்று திட்டிவிட்டு நகர்ந்தான்
சீதா :எக்ஸ்கியூஸ் மீ mr. Whatever கோவிலுக்குள்ள போன் பேசக்கூடாதுன்றது கூட தெரியாம இப்டி போன் பேசிட்டு வந்து இடிச்சிட்டு என்னையே திட்ற உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருக்கும். என்மேல நீங்க வந்து இடிச்சிட்டு என்னையே திட்றிங்க உங்களுக்குமட்டும் நாகரிகம் பொங்கி வழியுதா. நீங்கதான் என்மேல இடிச்சிங்க சோ என்ன திட்ட உங்களுக்கு அருகதை இல்லை
ராம் :ஹே நீ யாருகிட்ட பேசுறேன்னு தெரியுமா
சீதா :பார்த்த உடனே தெரிய நீங்க என்ன தோனியா இல்ல சச்சின்னா.என்னை பொறுத்தவரைக்கும் நீங்க ஒரு திமிருபுடிச்ச ஒருத்தர்
ராம் :என்கிட்ட இதுவரைக்கும் யாரும் இப்டி பேசுனது இல்லை
சீதா :எப்படி பேசுவாங்க. உங்க கிட்ட சண்டை போட்டா எனக்கு தான் டைம் வேஸ்ட்
சொல்லிட்டு வேகமாக சென்றுவிட்டாள் சீதா. ராம் கோவத்தில் நிற்க அவனது அருகில் வந்தான் ஜெய்
ஜெய் :என்னடா உன்ன ஒரு பொண்ணு இப்டி திட்டிட்டு போறா நீதான் மத்தவங்க கிட்ட பேசுனா டைம் வேஸ்ட்ன்னு சொல்வ ஆனா இவ உன்கூட பேசுறதை டைம் வேஸ்ட்ன்னு சொல்றா நீ என்னனா சும்மா இருக்க கோவிலுக்கு வந்தா சாருக்கு அமைதியும் வந்துடுமோ சரி இல்லையே.
ராம் :நீ வேற அம்மா சொன்னாங்கன்னுதான் வந்தேன் இங்கே தேவை இல்லாத டென்ஷன்
கோவிலுன்னு பார்த்தேன் இல்லன்னா
ஜெய் : இல்லனா ஒண்ணும் பண்ணியிருக்க மாட்ட நான் தான் பார்த்தேனே அந்த பொண்ணை முறைக்கிறேன்னு சைட் அடிச்சதை
ராம் :அது நீ பண்ற வேலை இப்போ மீட்டிங் போலாமா
ஜெய் :போலாம் ஆனாலும் ஜோடி நல்லா இருந்துது டா
ராமிடம் இருந்து இதற்காக முறைப்பை பரிசாக பெற்று கொண்டான்
ராம் :இவளை மாதிரி பொண்ணு என்னோட வாழ்க்கையில் சின்ன இடம் கூட இல்ல (பொறுத்திருந்து பாப்போம் )
சீதா வழக்கம் போல வேலைக்கு சென்றாள் தன்னுடைய ப்ரெசென்ட்டேஷனை முடித்தவள் அனைவரது பாராட்டையும் பெற்றாள் பின்பு தான் வேலையை விடுவதாக கூறி அனைவர்க்கும் அதிர்ச்சியும் அளித்தாள் பலவாறாக பேசி தன்னுடைய வேலையை விட்டாள்.
வழக்கம் போல வீட்டிற்கு வந்தாள்
சீதா :ஹே நிரஞ்சனா இனி நான் நிம்மதியா இருப்பேன். (me:நான் விடமாட்டேன் உனக்கு எவ்ளோ பெரிய வேலை இருக்கு 😏😁😁)
சில நாட்களுக்கு பிறகு
குருஜி முன்பு கவலையே உருவாக அமர்ந்திருந்தனர் ஜானகி -பாலகிருஷ்ணன் தம்பதி
ஜானகி :குருஜி ராம்க்கு 28வயசுல கண்டம் வரும்னு சொன்னிங்க இப்போ அவனுக்கு 27 வயசு இன்னும் ஒரு மாசத்துல 28 வயசு ஆக போது எங்களுக்கு பயமா இருக்கு எதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க
குருஜி :அதை பற்றி பேசத்தான் நான் வர சொன்னேன் உங்க பையன இந்த கண்டத்துல இருந்து காப்பாத்தணும்னா அவனுக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணனும் அதோட உங்க பையனுக்கு ஏற்ற பொண்ணோட ஜாதகம் நேத்து எனக்கு கிடைச்சிச்சு. பொண்ணு வீட்டு வசதி இல்லை ஆனா ரொம்ப தங்கமான குடும்பம் உங்களுக்கு சரினா அவங்ககிட்ட நான் பேசுறேன்
பாலகிருஷ்ணன் :எங்களுக்கு வசதி முக்கியம் இல்ல நாங்களும் ஏழ்மையான இருந்து உழைச்சு 30 வருஷம் உழைச்சுதான் இந்த சாம்ராச்சியத்தை உருவாக்கினோம். அதனால நல்ல பொண்ணு போதும்
ஜானகி :ஆமா குருஜி நல்ல பொண்ணு போதும். அவங்க கிட்ட நீங்க பேசுங்க இண்ணைக்கே நாங்க பொண்ண பாத்து அவங்க பெத்தவங்க கிட்ட பேசுறோம்
குருஜி :சரி நான் அவங்க கிட்ட சொல்றேன்
Enna friends intha part ok va. Comment pannunga
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro