Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

19

19 ) ஆவிகளின் சரணாலயம்.

தேன்மொழி கண் விழித்து பார்க்கும் போது அவள் ஒரு பாழடைந்த வீட்டில் இருந்தாள் .

" டேய்.. இந்த இடத்த கண்டு பிடிக்குறது கஷ்டம் . " பரணி phoneஇல் பேசிக் கொண்டு இருந்தான் .

" ... "

" ஆமா டா.. ருத்திர கவுண்டம்பதி தான் . "

"..."

" சரி டா . வா . நான் வச்சர்ரேன் . " என்று கூறி விட்டு வைத்து விட்டான் .

( ருத்திர கவுண்டம்பதியை Googleஇல் தேட வேண்டாம் .  அதை நான் இன்னும் Google இடம் சொல்லவில்லை . Google இடம் கூறிய பிறகு சொல்கிறேன் ‌ . கேட்டுக் கொள்ளுங்கள்😜😂😂😂 )

" என்ன பண்றிங்க . கட்ட அவுத்து விடுங்க.. " என்று கூறிக் கொண்டே கட்டை அவிழ்க்க முயற்சித்துக் கொண்டே கூறினாள் .

" என்ன டி செல்லம்.. கட்ட அவுக்க try பண்றியா??  " பரணி .

" please விடுங்க.. "

" உன்ன விடுறதுக்கா கடத்திட்டு வந்தேன் . என்ன தேனும்மா.. இன்னும் சின்ன குழந்தையாவே இருக்க . "

" ப்ச்ச் . விடுங்க . அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியும் இல்ல . "

" என்ன ஆகும்டா குட்டி . சொல்லேன்.. தெரிஞ்சுக்குறேன் . என்ன ஆகும்.. "

" please விட்ருங்க.. "

" என்ன தேனும்மா.. இப்டி பண்றியேம்மா.. "

அப்போது அங்கு வந்தான் பரணியின் நண்பன் .

" என்ன டா.. நான் குடுத்த idea எப்டி.. "

( ஆமா.. பண்றது கேவலமான வேலை.. இது பெருமை வேர😤..
பழமொழி சொல்வாங்கல்ல.. மேய்க்குரது எருமை இதுல பெருமை வேரன்னு.. அது போல தான் இதுவும்😜.. அதுக்குன்னு எருமை மேய்க்கரத பத்தி நான் தப்பா சொல்லங்க.. பழமொழிய தான் சொன்னேன் . )

" super idea மச்சி . " பரணி .

இருவரும் பேசிக் கொண்டே அமர்ந்து இருந்தனர் .

( சென்னைல இருந்து ருத்திர கவுண்டம்பதி வரதுக்கு ஒரு நாள் ஆகும் . அப்போ , தேன்மொழி காணாம போய் ஒரு நாள் முடிஞ்சுருச்சு . )

தேன்மொழி கண்களில் நீருடன் அமர்ந்து இருந்தாள் .

.
.

" என்ன நிறுத்திட்ட .  " நிஷா .

" எனக்கு தூக்கம் வருது . " என்று கூறிய அவன் சென்று படுத்துக் கொண்டான் .

மணி :- 10:00 .

" போச்சு . இனி , நாளைக்கு 6:00 மணிக்கு தான் இவன் எந்திரிப்பான் . " நிஷா புலம்பினாள்.

" விடு . நம்ம போய் கிஷோர தேடுவோம் வா . " என்று கூறி அவளை அழைத்துச் சென்றாள் ஸ்னேஹா .

.
.

கிஷோர் இங்கு நடு ரோட்டில் படுத்து கிடந்தான் . வாகனங்கள் தொடர்ந்து ஹாரன் அடிக்க , கிஷோருக்கு செம்ம கோபம்.... அவன் தூங்கும் நேரத்தில் தொந்தரவு செய்கிறார்களாம்...

அதை கேட்டு கோபமடைந்தவன் , அங்கு நின்று இருந்த வாகனங்களை பார்த்து முறைத்து விட்டு , அனைத்தையும் தூக்கி வீச தொடங்கினான் . வாகனங்கள் அனைத்தும் பறந்தது . அதனுள் இருந்தவரகளிர் அலறல் சத்தம் அவனுக்கு சங்கீதமாக கேட்க , அனைத்து வாகனங்களையும் பந்தாட துவங்கினான் அவன் .

இதை பார்த்த நிஷாவிற்க்கும் ஸ்னேஹாவிற்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை . அதிர்ச்சியில் நின்று இருந்தனர் .

" ஸ்னேஹா.. நான் ஆவிகளின் சரணாலயம் போறேன் . நீ விக்கிய வெளிய போக விடாம பாத்துக்கோ . " என்று ஸ்னேஹாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு , இவள் ஆவிகளின் சரணாலயம் சென்றாள் .

.
.

ஆவிகளின் சரணாலயம் ( சென்னை )

அனைவரும் படபடப்புடன் அமர்ந்து இருந்தனர் .

ஆவிகளின் சரணாலயத்தை நடத்துவது ஒரே நிறுவனம் தான் . அது JW எனும் நிறுவனம் தான் . சொல்ல போனால் உலகெங்கும் ஆவிகளின் சரணாலயம் இருக்கிறது . ஆவிகளின் சரணாலத்தை துவங்கியவர் பெயர் " James " அவரது தாயை ஆவி ஒன்று கொன்று விட , அதை தடுக்கவென்று தான் ஆவிகளின் சரணாலயம் உருவாக்கினார் . அதற்கு அவர் பட்ட பாடு அதிகம் . WHOவிடம் ( World Health Organisation )  இருந்து approval வாங்க வேண்டி இருந்தது . உலகத்தில் இருக்கும் மக்களுக்கு எந்த தொந்தரவும் இதனால் வந்துவிட கூடாது என்பதில் WHO கவணமாக இருந்தது . ஆவிகளின் சரணாலயத்தால் உலகில் வாழும் மக்களுக்கு ஆபத்து என்றால் , ஆவிகளின் சரணாலயத்தை மூட வேண்டி வரும் . 

இது தான் rules . இதை நினைத்து Project Maker கவலையுடன் அமர்ந்து இருந்தார் . ஆவி தப்பித்த செய்தி WHOவிற்கு தெரிந்தால் , பல ப்ரச்சனை வரும் .  ஆவிகளின் சரணாலத்தை மூட வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம் ‌ . அப்படி ஆவிகளின் சரணாலயம் மூடப்பட்டால் , உலகெங்கும் வேலை செய்யும் தொழிலாளர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள் . Jamesஇன் மகன்  Garry தான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் .

Katherineஉம்  Emmaவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர் .

" Emma.. " Katherine .

" சொல்லு Katherine " Emma .

" எனக்கு இவங்க செய்றது தப்புன்னு தோனுது . " Katherine

" புரியல . "

" நம்ம head officeக்கு சொல்லிடலாமா... " Katherine .

" சொன்னா என்ன ஆகும்.. "

" தெரியல.. " என்றவள் தனது phoneஐ எடுத்து head officeக்கு call செய்தாள் .

.
.

இவ தான் அறிவாளி மாதிரி head officeக்கு call பண்றா... என்ன நடக்க போகுதுன்னு தெரியல...😑

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro