
15
15 ) ஆவிகளின் சரணாலயம் .
" என்ன ப்ரச்சனை . "
" அந்த ஆவி தப்பிச்சுருச்சுன்னு வெளிய தெரிஞ்சா , ஆவிகளின் சரணாலயமே close... " project maker
" அப்படி என்ன ஆச்சு இங்க . " Katherine .
" என்ன ஆச்சா?? Katherine... இங்க இருந்து ஒரு ஆவி தப்பிச்சு போயிருக்கு . "
" அதுக்கு . We can handle this . " Katherine .
" முடியாது... நம்மனால இத handle பண்ண முடியாது . "
" எப்டி சொல்றிங்க . முடியாதுன்னு . " Emma .
" அது அப்படி தான் . இத நம்ம தான் deal பண்ணனும் . "
Emma கோபத்தில் ப்ச்ச் கொட்டி விட்டு அங்கிருந்து சென்றாள் .
.
.
நிஷா விக்கியை ( மகி ) பார்த்து முறைத்துக் கொண்டு நின்று இருந்தாள் .
" என்ன டி வேணும் உனக்கு . " விக்கி ( மகி )
" நீ யாரு . உன்ன பத்தி சொல்லு . எப்டி நீ செத்து போண . " நிஷா .
அவனுக்கும் வேறு வழி இல்லாததால் தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தான் .
.
.
சுல்லென வெயில் சுட்டெரித்துக் கொண்டு இருந்தது .
" என்ன baby , இப்டி வெயில் சுட்டெரிக்குது . "
" நானும் உன் கூட தான இருக்கேன் . " விஷு என்னும் விஷாலினி .
" ஷாலு , அங்க பாரு டி . உன்னோட ரோமியோ... " என்று மகியை காண்பித்தாள் .
அங்கு மகி ஷாலுவை பார்த்த படி நின்று கொண்டு இருந்தான் .
அவனருகில் அவனது தோளில் கையை போட்டுக் கொண்டு நின்று இருந்தான் பரணி .
விஷாலியும் கார்திகாவும் பஸ் ஸ்டாபில் நின்று இருந்தனர் .
" டேய் . ஸைட் அடிச்சது போதும் . வா வீட்டுக்கு போகலாம் . " என்று பரணி கூற , இருவரும் வண்டியில் ஏறி , வீட்டிற்கு கிளம்பினார்கள் .
விஷாலி - 21
மும்பையில் பிறந்து வளர்ந்தவள் , இப்போது மெட்ராஸில் ( சென்னை )
வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள் . வசதி அதிகம் தான் . இருந்தும் மற்றவர்களை மதிக்கும் நல்ல பெண் . அமைதியின் மறு உருவம் . கோபம் வந்தால் காளியின் மறு உருவமும் இவளே . தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும் உறவுகளிடமும் மட்டும் சரளமாக பேசுவாள் . தெரியாதவர்களை கண்டால் ஒதுங்கி விடுவாள் . புரம் பேசுபவர்களை கண்டால் கோபம் உச்சந்தலைக்கு ஏரும் . ஆனாலும் தன்னை சமன் படுத்திக் கொண்டு அமைதியாக கடந்து விடுவாள் .
மகேந்திரன் - 23
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்தவன் . இப்போது மெட்ராஸில் ( சென்னை ) வேலை செய்கிறான் . தங்கை என்றால் உயிர் . தன் உறவுகளிடத்தில் இவன் ஒரு அமைதியானவன் . உர்ரென இருப்பவன் . தனது நண்பர்களிடத்தில் இவன் வாய் பேச ஆரம்பித்தால் நிருத்தவே மாட்டான் .
விஷாலிக்கு நேர் எதிர் குனம் . கோபம் வந்தாலும் , எதிரில் இருப்பவரை பொருத்து அவனின் கோபத்தின் அளவு இருக்கும் . நெருக்கமான நண்பர்களிடமும் உறவுகளிடமும் மட்டும் தான் தன் கோபத்தை அதிகமாக காட்டுவான் . கேட்டால் , " நமக்கு பிடிச்சவங்க கிட்ட கோபத்த காட்டாம வேற யார் கிட்ட காட்டுறது??? " என்று கேட்பான் .
கடந்த இரு மாதங்களாக விஷாலியை பின் தொடர்ந்து வருகிறான் . காதல் என்று கூற முடியாது . அவள் மீது ஒரு ஈர்ப்பு மட்டுமே . ஈர்ப்பு காதலாக மாறுமா என்பது சந்தேகம் தான் . பார்ப்போம் .
பரணி - 23
மாம்பழத்திற்கு பெயர்போன சேலத்தில் பிறந்தவன் . மதுரையில் காலேஜ் முடித்து விட்டு , மெட்ராஸில் ( சென்னை ) வேலை செய்கிறான் . மகியின் நண்பன் . குறும்பு அதிகம் . வாய் ஓயாமல் பேசுவான் . பெணகளிடம் பேசுவது மட்டும் அவனுக்கு பாகற்காய் சாப்பிடுவது போல் கசக்கும் . அவன் பேசும் ஒரே பெண் என்றால் , அது தேன்மொழி தான் . ( மகியின் தங்கை ) அவனுக்கு தேன்மொழி என்றால் அவ்வளவு பிடிக்கும் . அதற்கு பெயர் காதல் என்று அவனே ஒரு பெயரை வைத்துக் கொண்டான் . பார்ப்போம்
..
தேன்மொழி - 19
மகியின் பாசமிகு தங்கை . நல்ல பிள்ளைப்பா . அனைவரிடமும் அனுசரித்து செல்லும் குனம் . சிறிது அதட்டினாலும் கண்களில் இருந்து கண்ணீர் துளி அனையை கடந்து விடும் . அமைதியான அறிவான பெண் . ஆனால் , அதிகம் படித்ததில்லை . படிக்க வேண்டும் என்ற ஆசை அவளிடம் அதிகமாக இருந்தாலும் , வீட்டினர் அவளை படிக்க விடவில்லை . பெண்பிள்ளை அதிகம் படிக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர் அவளது பெற்றோர் .
ராஜா - 21
விஷாலியின் கூட பிறக்காத சகோதரன் . இருவரும் நண்பர்கள் தான் என்றாலும் , ஷாலுவை சகோதரியாக தான் நினைத்துக் கொண்டு இருக்கிறான் . இவனது பூர்வீகம் திருப்பூர் . ஷாலுவை தவிர மற்ற அனைவருக்கும் அவன் கோபக்காரன் தான் .
.
.
மகி தனது வீட்டிற்குள் நுழையும் போது , தேன்மொழி பாத்திரம் கழுவி கொண்டு இருந்தாள் .
" என்ன டா பண்ற??? " மகி .
" பாத்திரம் கழுவுரேன் அண்ணா . " தேன்மொழி .
" சரி டா . " என்று கூறி விட்டு உள்ளே நுழைந்தான் .
அங்கு அவர்களது தாய் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தார் .
( பொண்ண பாத்திரம் கழுவ விட்டுட்டு அம்மா சீரியல் பாக்குறாங்க . என்ன கொடுமை டா சாமி😕 )
" அம்மா..,. " மகி .
" என்னப்பா??? " என்று சிரியலில் இருந்து கண்ணை எடுக்காமல் கேட்டார் பாக்கியா .
" ம்ம்மா , காஃபி வேணும் . " மகி .
" அடியேய் தேன்மொழி . உங்க அண்ணன் காஃபி கேக்குறான் பாரு . போட்டு குடு . " இப்போதும் அவர் சீரியலில் இருந்து கண்ணை எடுக்காமல் கூறினார் .
" இதோ வந்துட்டேன் அம்மா . " என்றவள் , பாத்திரம் கழுவுவதை நிறுத்தி விட்டு காஃபி போட வந்தாள் .
காஃபியை எடுத்துக் கொண்டு வரும் போது , காஃபி அவளது காலில் விழுந்து விட , " அம்மாஆஆஆ . " என்று கத்தினாள் தேன்மொழி .
அவர் அதிர்ந்து போய் திரும்பி பார்த்தார் . மொத்த காஃபியும் கீழே கொட்டி இருந்தது .
" அடியேய் அறிவில்ல . பாத்து வர மாட்டியா . " என்று கேட்டவர் பளாரென்று கன்னத்தில் அறைந்தார் .
சூடான காஃபி காலில் கொட்டியது மட்டும் இல்லாமல் அவர் திட்டியதிலும் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு கீழே விழுந்தது .
" ஆனா ஊனா அழ ஆரம்பிக்குற . போ , போய் இந்த காஃபியை தொட . " என்று விரட்டினார் அவர் .
இதை பார்த்துக் கொண்டு இருந்த மகி தன் தாயை நினைத்து வருத்தப் பட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான் .
.
.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro